சனி, 27 ஜூன், 2020

சிவகங்கை சமஸ்தானத்துக்கு போர் உதவி செய்தத கள்ளர் நாடுகள்


சிவகங்கை சமஸ்தானம் ஆதரவோடு கிபி 1840ல்  வெளியிடப்பட்ட சிவகங்கை சரித்திர கும்மி மற்றும் அம்மானையில் சமஸ்தானத்துக்கு போர் உதவி செய்ததாக கூறப்பட்டுள்ள கள்ளர் நாடுகள் :-

தென்னிலை நாடு
சிலம்பா நாடு
முத்து நாடு
கண்டதேவி நாடு
எழுவங்கோட்டை நாடு 
கண்டர்மாணிக்கம் நாடு
பாகனேரி நாடு
பட்டமங்கலம் நாடு
தேர்போகி நாடு
இரவுசேரி நாடு 
கப்பலூர் நாடு
அஞ்சுக்கோட்டை நாடு
மேலூர் நாடு
மல்லாக்கோட்டை நாடு
சிறுகுடி நாடு

இந்த கள்ளர் நாடுகள் அனைத்து தனியே தங்கள் வசம் இராணுவத்தை வைத்திருந்ததை சிவகங்கை அம்மானை வரிகள் மூலம் அறியமுடிகிறது.






தொகுப்பு : திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

காலிங்கராயர் / காளிங்கராயர் / கலிங்கராயர் மரபினர் (Kallingarayan linege)





SOUTH INDIAN PENINSULA


தமிழ் அகராதி 



காளிங்கராயன் ஓடை - கள்ளர் மரபினரின் காளிங்கராயர் பட்டம் உடைய கள்ளர்கள் வாழும் பகுதி

காலிங்கராயன்பட்டி: குன்றாண்டார் கோயில் வட்டத்தில் உள்ள ஒர் கிராமம். கள்ளர் மரபினரின் காலிங்கராயன் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் ஊர்.

காலிங்கராயர் சுதந்திர போராட்ட வீரர்கள்



கலிங்க நாடு( இன்றைய ஒடிசா) ஸ்ரீ ராச ராச சோழத்தேவர் காலத்தில் கைப்பற்றப்பட்டு சோழ தேசத்துடன் இணைக்கப்பட்டது. வெற்றியை குறிக்கும் வண்ணம் மகேந்திரகிரி எனும் மலைப்பகுதியில் சோழர்களின் வெற்றித்தூண் அமைக்கப்பட்டது. இப்போரில் பங்கு பெற்று வெற்றிக்கொடி நாட்டிய சோழர்களின் தளபதிகள் கலிங்கராயர் எனும் சிறப்பு பட்டத்தினை எய்தினர்.

1097 இல் கலிங்கப் படை கிழக்கு சாளுக்கிய அரசு மீது படையெடுத்தது. அப்போது சாளுக்கிய அரசு சோழப் பேரரசிற்குக் கீழ்ப்பட்டிருந்தது. கலிங்கப் படைகள் கொலானு, ஏலூரு தலைவர்களால் உதவியளிக்கப்பட்டனர். விக்கிரம சோழன் பெரும் படையை ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடிக்க அனுப்பினான். பாண்டிய அரசப் பிரதிநிதி பராந்தக பாண்டியன் தலைமையிலான படைகள் சோழப் படைகளுக்கு உதவின. கலிங்கப் படைகள் தோற்கடிக்கப்பட்டு, பின்வாங்கிய படைகள் கலிங்கம் வரை விரட்டியடிக்கப்பட்டன. போர் முடிந்ததும் கலிங்கம் சோழருக்குக் கீழ்ப்பட்டது.





பல்லவராயன், கலிங்கராயன், முனையதரையன் முதலான ஸ்தானப் பேர்கள் கொண்ட பள்ளிப் பீடங்களும், மந்திரிப் பதவிகளும் இருக்தன.




150 ஆண்டுகளுக்கு தஞ்சை கள்ளர்களின் பிரபலமான பட்டங்களில் சிலவற்றில் காளிங்கராயர். (A manual of the district of tanjore in the madras presidency/ k venkasamy row / 1883)



நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மன்றாயர் அவர்களின் தாயாரின் தந்தை சின்னசாமி காலிங்கராயர்


 
கோவிந்தராசு காலிங்கராயர் 



திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்த்தவர். இவர் 1971 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், கந்தர்வக்கோட்டை தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Punalvasal Jamin. Mr.M.Ponnusamy Kalingarayar

Punalvasal village one of jamin in thanjavur district. Now jamin families few in punalvasal-vadikkadu. Jamin. Mr.M.Ponnusamy Kalingarayar. Now his son Jamin. Mr.Pon.Ramakrishnan Kalingarayar . He was built Sri Meiyanga Vinayagar Temple with Sir Muthumariambal, Sri Durgaiambal, Sri Anjaneyar, Sri Murugaperumal, Sri Dhatsanamoorthy temples. He was done many temple in punalvasal every street one temple. He built Big entrance for Lord Ganesh.

அரியாணிப்பட்டி கள்ளர் மரபில் காலிங்கராயர் வகையறாவிற்கு பாத்தியப்பட்ட முனியாண்டவர் சன்னதி:-

அரணிப்பட்டி முதல்கரை-காலிங்கராயர்






ஆர். காமராஜ் காளிங்கராயர்  2011, 2016 ஆண்டு சட்டப்பேரவைக்கு நன்னிலம் தொகுதியில் தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் உணவுத் துறை அமைச்சராக பணியாற்றி வருகின்றார்.

ஆர். காமராஜ் காளிங்கராயர்


மொழிப்போர் தியாகி வீரராசன் காலிங்கராயர்



தஞ்சாவூர் டேனியல் கல்வி அறக்கட்டளை






திராவிட இயக்க உணர்வாளர். இளைஞராகத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். துடிப்பான செயல்வீரர். அதனால், மக்களின் பேரன்பைப் பெற்று, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டக் கவுன்சில் உறுப்பினர், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் என பல தேர்தல்களில், மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றவர். வடக்கூர் தலைவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் 
துரை.பாலகிருஷ்ணன் காலிங்கராயர்.









நத்தமாங்குடி



திருச்சி, தந்திநாட்டு நத்தமாங்குடி, லால்குடிக்கு 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது நத்தம் என்ற கஜாரண்யத் தலம். திருச்சியிலிருந்து ஆலங்குடி மகாஜனம் வழியாகவும், புள்ளம்பாடியிலிருந்து வெங்கடாசலபுரம் வழியேயும் இத்தலத்தினைச் சென்றடையலாம். 

பாண்டிய மண்டலத்தில், மதுரையில் கள்ளர் மரபினர் வாழும் ஊர் நத்தம். அதை போல் சோழமண்டலத்தில் கள்ளர் மரபினர் வாழும் பகுதி நந்தை என்ற ‘ஸ்ரீநந்தையூர்’ எனப் பெயர் பெற்றிருந்தது, நத்தமாங்குடி தற்போது நத்தம், ஆகிவிட்டது. 

நத்தம் மற்றும் மாங்குடிக்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் சேரும் சிறுநதி நந்தியாறு பாய்கிறது.

இங்கே ‘ஆதிமூலப்பெருமாள்’ என்ற திருநாமத்துடன் கஜேந்திரவரதப் பெருமாள் காட்சி தருகிறார். பள்ளிகொண்ட திருக்கோலத்தில், கஜேந்திரனின் தலைமீது கரம் வைத்து ஆசிதரும் பாவனையில் பெருமாள் சயனித்திருக்கிறார். தாயார், ஆதிலட்சுமி என்ற திருநாமத்துடன் தனிச் சந்நதி கொண்டுள்ளார். யோக நரசிம்மர் சந்நதியும் இங்கே உள்ளது

கோயிலின் விமானத்தையும் இதன் முன் திருமண்டபத்தையும் செந்தாமரை கண்ணணான மழவராயன் என்பவர் கட்டியதாக குறிப்பிடப்படுகிறது.

நத்தமாங்குடி காளியம்மன்



கள்ளர் மரபினரின் அறப்பணிகள்





அரிகண்ட வீரர் நடுகல்:-


யாஊயாகே குழுவினர் இந்த ஊரை பற்றிய ஆய்வு தகவல்.

இவ்வூரில் ஒரு நம்பிக்கை, அங்கு ஒரு கற்சிலை உண்டு. என்னசிலையென்று ஊரார் அறிந்திருக்கவில்லை, இச்சிலை எப்போதும் கவிழ்ந்தே கிடக்கும், ஊரில் தண்ணீர்பஞ்சம் வரும்போது, இச்சிலையை பிரட்டிவிடுவர். அன்று மழைபெய்யும், மறுபடியும் தண்ணீர் பஞ்சம் போய் வெள்ளக்காடாய் ஆனதும், மீண்டும் அச்சிலையை கவிழ்த்துவிடுவார்கள். அவ்வூரிலுள்ள ஓர் ஆசாரி குடும்பத்திற்கு குலதெய்வமாய் உள்ளார் இவ்வீரர். தண்ணீர்பஞ்சம் ஊரில் வந்தபோது இவர் தன்தலையை இறைவனுக்கு கொடுத்து பஞ்சம் போக்கியவர் என்பது ஊரார் கருத்து.





தலைப்பலிவீரரின் பாதி தலைவரை தார்ஊற்றி மிகவும் பரிதாபமாய் இருந்தார். நம் யாஊயாகே சார்பாய் குழுவினர் சென்று அவரை சுத்தப்படுத்தி, ஊரார் ஒத்துழைப்புடன் அங்குள்ள ஆதிமூலநாயகப் பெருமாள் கோவிலின் வாசலில் மேடையமைத்து நிரந்தரமாய் அவருக்கு ஓர் இடம் ஏற்ப்படுத்தி கொடுத்தோம். 

இச்சிலை கவிழ்ந்து கிடந்த அன்று, ஊரார் ஒத்துழைப்புடன் சிலையை கழுவமுயற்சித்தோம். நாங்கள் சென்ற பொழுது நல்ல வறட்சி, காவிரி, கொள்ளிடம் இரண்டும் வறண்டுபோய் பாலைவனமாய் இருந்தது. சிலையை நிமிர்த்திய சமயம், அங்கு சிறுவர்கள் குழுவாய் ஓடிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரிக்கையில் அவ்வூர் ஓடையில் தண்ணீர் வருவதாய் கூறிக்கொண்டு ஓடினர், ஒருகனம் வியப்பாகத்தான் இருந்தது எங்களுக்கு, காரணம் நாங்கள் அவ்வோடையைத்தாண்டி தான் இருசக்கரவாகனத்தில் வந்தோம்,

பலவருடமாய் அங்கு தண்ணீர் பாய்ந்த சுவடே இல்லை. காரணம் அது கொள்ளிடகரை ஓடை. கொள்ளிடத்திலேயே தண்ணீர் எப்போதாவதுதான் வரும். காவிரி பெருக்கெடுத்து ஓடி, அதன் உபரிநீரைத்தான் கொள்ளிடத்தில் திருப்புவர். காவிரியே வறண்டது, கொள்ளிடத்தின் ஓடையில் நீர் எப்படியென ஆச்சர்யம். தெரிந்த நண்பர்களிடம் விசாரித்ததில், குளித்தலை தாண்டி மாயனூர் கதவணை யில் தேக்கிய நீர், நீண்டநாட்களாய் இருந்ததால் அதனை வெளியேற்ற திறந்துவிட்டிருந்தனர். முக்கொம்பு பாலம் மதகு உடைந்திருந்தசமயம் வேறு. ஆகவே தண்ணீர் தேக்க வழியில்லாது, நேராக கொள்ளிடம் பாய்ந்து நத்தம் வந்தது தெரியவந்தது.

இதுதற்செயலோ, ஊராரின் நம்பிக்கையோ, அல்லது இறந்தவீரனின் உயிர்க்கொடையோ.

புதன், 24 ஜூன், 2020

வீரர் கந்தசாமி சாளுவர்


என் பெற்றோர்களின் திருமணம் கூடநாணல் சக்கரை நாட்டார் இல்லத்தில் நடைபெற்றதாகவும், அதற்கு அப்போதைய தஞ்சை  நாடாளுமன்ற உறுப்பினர் சிங்காரவடிவேலு தலைமை தாங்கினார் என்றும் கூறுவார்கள் ..யார் அந்த சிங்காரவடிவேலு என்ற தேடல் என் மனதில் துளைத்தெடுத்து கொண்டே இருந்தது அதற்கான விடையை இன்றைய வாசிப்பில் கண்டேன்.!

ஆம் ஐயா ! சிங்காரவடிவேலுவின் தாத்தா ஒரு விடுதலை போராட்ட வேங்கை;
1939-ம் ஆண்டில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு புரட்சியாளர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போட்டியிடுவதாக அறிவித்து களம் காண்கிறார். நேதாஜியை எதிர்த்து காந்தி களம்காண எண்ணினார். காந்தி,நேரு அவர்களை சந்தித்து தான் போட்டியிட வேண்டிய அவசியத்தை கூறி தன் பெயரை முன்மொழியக்கூறினார்.இதனை ஏற்காத நேரு மெளலானா ஆசாத் பெயரை முன்மொழியக்கூறி,மெளலானா ஆசாத் நேதாஜியை எதிர்த்து போட்டியிட மறுத்து, அதன்பின்னர் காந்தியார் தன் வேட்பாளராக ஆந்திர மாநிலத்தை சார்ந்த பட்டாபி சீத்தாராமையாவைக் களத்தில் இறக்கினார்.

* அக்காலகட்டத்தில் நேதாஜியின் நம்பிக்கைக்குரிய களமாடும் வேங்கையாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழகம் முழுவதும் சுற்றிவந்து வாக்கு சேகரித்தார்..

*ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அப்பொழுது மூவருக்கு வாக்களிக்கும் தகுதி இருந்தது.. ஒன்று பூண்டி ஶ்ரீமான் கிருஷ்ணசாமி வாண்டையார் (துளசிய்யா வாண்டையாரின் தந்தை)...அடுத்து சிங்காரவடிவேலுவின் தாத்தா கந்தசாமி சாளுவர், மற்றொருவர் பெரியகோட்டை ஜமீன் தியாகராஜ சோழகர் ...தேவரை அப்போது இவர்களை சந்திக்க அழைத்து வந்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாத்தா கோபாலசாமி நாயக்கர்.

*சோழநாட்டில் நேதாஜிக்கு இரண்டு வாக்குகள் கிடைக்கின்றன ஒன்று திருவாளர்.சிங்காரவடிவேலுவின் தாத்தா கந்தசாமி சாளுவர் அளித்த வாக்கு மற்றொன்று பெரியகோட்டை ஜமீன் தியாகராசர் சோழகர் அளித்த வாக்கு.

அப்பொழுது சர்வ வல்லமை பெற்றவராக திகழ்ந்த காந்தியையே எதிர்த்து நேதாஜிக்காக வாக்களித்த சிங்காரவடிவேலுவின் தாத்தா ஒரு போர்வீரர் எனலாம்.... அவர்மரபுவழித்தோன்றல்தான் தியாகச்செம்மல் சிங்காரவடிவேலு சாளுவர்.

ஒரு இடைத்தேர்தல் மற்றும் மூன்றுமுறை (1980,84,89) தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தவர் அரசியல் வித்தகர் ,மனிதநேய மாண்பாளர் சிங்காரவடிவேலு சாளுவர். இக்கால அரசியலில் தன்னால் நிலைக்க முடியாக என உணர்ந்து விலகி தனித்துவம் காத்தவர் சிங்காரவடிவேலு சாளுவர் அவர்கள்.

என்றும் அன்புடன்

இ. பரத் கூழாக்கியார்

தஞ்சாவூர் சிங்காரவடிவேல் சாளுவர்



S. SINGARAVADIVEL M.A., B.L., 


[Congress (I)—Tamil Nadu, Thanjavur, 1989]: 

Son of S.K. Sivanandam Saluver;

Birth. at
March 7, 1934;
Eda-Melaiyur,
Thanjavur District,
Tamil Nadu,

Education. at
ST. Joseph’s College,
Law College, Madras;

Marriage :.

Kasturibai, September 9, 1960,

1 Son . and 1 Daughter .; Lawyer, Agriculturist;

Previous Association with Political Parties:  

Chairman, CPP (I), Tamil Nadu, 1985—89;

Previous Membership:  

Sixth Lok Sabha, June 1979—August 1979,
Seventh Lok Sabha, 1980-84,
Eighth Lok Sabha, 1984-89;

(1980 - சிங்காரவடிவேல் - காங்கிரசு.
1984 - சிங்காரவடிவேல் - காங்கிரசு.
1989 - சிங்காரவடிவேல் - காங்கிரசு.)

Committee Experience:  


Member, Public Accounts Committee, 1985-86, 


Consultative Committee in the Ministries of Agriculture and Rural Development; Member, Committee on Papers Laid on the Table, August 20, 1990 and 

Consultative Committee, Ministry of Civil Aviation, 1990;

Favourite Pastime and Recreation:  

Games and sports;

Delegation to Foreign Countries:  

Member, Delegation to IPU Conference at Geneva, 1985;

Travels Abroad:  


Bulgaria, France, Kuwait, Malaysia, Singapore, Switzerland, Thailand;

Special Interests:  


Criminal Law, upliftment of poor and harijans;

Sports and Clubs:  


Volleyball and Badminton;

Other Information:  


Courted arrest twice and was detained in Central Jail, Trichur and in Central Jail, Madras in connection with the agitation against the Govt. of Tamil Nadu; Member, Coir Board, 1985-87;

Permanent Address:  


45, Yagappa Nagar, Thanjavur, Tamil Nadu

உசிலம்பட்டி




பாண்டிய மண்டலத்தில், உசிலம்பட்டி என்பது கள்ளர் மரபினரின் கோட்டை ஆகும். புத்தூர் நாட்டில் உசிலங்காட்டை திருத்தி உசிலம்பட்டி எனும் ஊர்கட்டிய (உருவாக்கிய) உசிலம்பட்டி ரெட்டை வீரத்தேவன், இன்று பட்டவன் சாமியாக வணங்கி வருகின்றனர்.

இங்கு கள்ளர் மரபினரின் குடும்ப பட்டம் "தேவர்". பழமையான மரபணுடைய பாண்டிய மரபினரின் வழித்தோன்றல்கள் .

உசிலை மரம் சங்ககாலத்தில் இதன் பெயர் சிலைமரம். இதுதான் உசிலை மரம் என்பதும் தெரிகிறது: உசிலம்பட்டிக்கு பெயர்க் காரணமாக இருந்ததும் இந்த சிலை மரம்தான். 

‘உசிலம்பட்டி பெண்குட்டி’ பாடலுக்கு கவிஞர் வைரமுத்து தேவருக்கு காலெடுத்துக் கொடுத்ததும் இந்த மரம்தான். சமீப காலமாக இந்த மரம், அரப்பு மரம் என்றும் ‘ஷேம்பு மரம்’ என்றும் கூட அழைக்கிறார்கள்.

தமிழ் மக்கள் இதனை 54 வேறுவேறு பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். இன்று உறுதியான மரம் என்று தாவரவியல் இன்று சொல்லுகிறது.


இதே கருத்தினை 2000 வருஷத்துக்கு முன்னாடி சொல்லியிருக்கிறார்கள். சங்க இலக்கியப் பாடல்கள் 'வில் அம்பு’ செய்ய உறுதியான மரம் என்று சொல்லுகின்றன.

“சிலை விற் பகழிச் செந் துவர் ஆடைக் கொலைவில் எயினர் தங்கை!.....’) – ஒதலாந்தையார்

 (ஐங்குறுநூறு – 363 வது பாடல்)


‘சிலை’ என்பது கருவாகை மரத்தைக் குறிக்கும். பகழி என்றால் அம்பு. ‘துவராடை’ என்றால் செந்நிற ஆடை. எயினர் என்றால் பாலை நிலத்தில் வசிப்பவர் என்று பொருள். பாலை நில மக்கள் கள்ளர்.

“சிலை மரத்தால் செய்த வில்லையும்

அம்புகளையும், சிவந்த ஆடையை அணிந்து,

கொலை புரிதலை தொழிலாக கொண்டவனின் தங்கையே..”

என்று சொல்லும் பாடல். 



சோழமண்டலத்தில் ஒரு உசிலம்பட்டி


திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது உசிலம்பட்டி கிராமம். இங்குள்ளது உசிலை வனநாதர் ஆலயம். இறைவி சொர்ணரேகா. உசிலை மரங்கள் நிறைந்த தோப்பில் அருள்பாலித்து வரும் இந்த ஆலய இறைவனின் மேனி உளி படாத திருமேனி. இறைவனின் திருமேனியில் பல வியக்கத்தக்க அதிசயங்கள் உள்ளன. இறைவனின் தலையில் இடதுபக்கம் சந்திரபிறை போன்ற பள்ளம் உள்ளது. தலைப்பகுதியின் பின்பக்கம் சடை போன்ற வரிகள் உள்ளன. இறைவனின் நெற்றியில் விபூதி பட்டை போல் மூன்று பட்டையான கோடுகள் உள்ளன. இறைவனின் இடையைச் சுற்றி தங்கரேகை போன்ற அமைப்பு உள்ளது. இறைவனின் இடதுபுறம் அம்பாளின் சின்னமான திரிசூலம் போன்ற அமைப்பும் உள்ளது. இப்படி அமைப்பு உள்ள லிங்கத் திருமேனி வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.


பாண்டிய மண்டல உசிலம்பட்டி 

பெருங்காமநல்லூர்  தியாகிகள்

வெள்ளையர்களை எதிர்த்து வீரமரணம் அடைந்த பெருங்காமநல்லூர்  தியாகிகளின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வீரத்தியாகளின் புகைப்படம்.

உறங்காப்புலி  ஐயா.பி.கே.மூக்கையாதேவர்


உசிலம்பட்டி மண்ணின் மைந்தர், உசிலம்பட்டி தொகுதியில் 25 வருடம் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் சபாநாயகராகவும், விளங்கிய கள்ளர் மரபில் தோன்றிய மாணிக்கம், ஏழை எழிய மக்களின் கல்வி  நலனுக்காக உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியும், பசும்பொன் ஐயா.உ.முத்துராமலிங்கதேவருக்கு வானுயர சிலை வைத்து அழகு பார்த்தவர், கச்சத்தீவு நாயகன், உறங்காப்புலி'  ஐயா.பி.கே.மூக்கையாதேவர்.


மலையாண்டித்தேவர்


சுந்தரவள்ளி அம்மன்


உசிலம்பட்டி  எட்டுக்கரங்களுடன் அசுரனை தலையில் மிதித்து ஆக்ரோசமாக நின்ற சுந்தரவள்ளி அம்மன்.மிகப்பெரிய அளவில் பலகைக்கல்லில் வடிக்கப்பட்டுள்ள அம்மன் நிசம்பசூதணியை ஞாபகப்படுத்துகிறது. கோயிலில் பைரவர் சிற்பமும் உண்டு.

கோயிலை வலம் வரும்பொழுது நடுகற்கள் இரண்டு இருந்தன. வாள் ஒன்றை உறையுள் இருந்து உருவுவது போன்ற அழகில் அமைக்கப்பட்டுள்ளது . திருமங்கலம் வட்டம் சித்தாலை- உறப்பனுர் இடையே சுந்தரவள்ளியம்மன் கோவில் அமையப்பெற்றுள்ளது.




அணைப்பட்டி , குறுக்குப்பாறை பாறை ஓவியங்கள். கள்ளர்களின் தொன்றுதொட்ட ஏறு தழுவலை நினைவூட்டும் மாடு பிடி காட்சி உள்ள இடம்.






குதிரை வீரன் நடுகல்

 

உசிலை ஆனையூரில் ஐராவதீஸ்வர் சிவன்கோவிலில் இருக்கும் தவ்வை


உசிலை- தேனி சாலையில் தொ.விலக்கு தாண்டி வலதாக திரும்பினால் இந்த இடிந்த கோயிலைக்காணலாம். பாண்டியர் கலைப்பாணி  


















புத்தூர் முருகன் கோவில் 

புத்தூர் முருகன் கோவில் மிக உயரமான மரங்களர்டந்த இடத்தில் அமைதியா பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது.

பரிவாரக்கோயில்கள், நவக்கிரக சன்னிதிகள் உண்டாக்கப்பட்டு உள்ளன. சுற்றில் ஆவுடை இல்லாத பாணலிங்கம் மட்டும் இருப்பது சிறப்பு.

பலதரப்பட்ட காலங்களிலும் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. கருவறையும், அர்த்த மண்டபமும் பாண்டியர் காலகட்டம், மகா மண்டபம் நாயக்கர் காலமென்றும் கூறுகிறார்.

மகா மண்டபத்திற்க்கும் முன்பாக அமையப்பெற்றுள்ள மண்டபம் உபபீட தளத்தையே அடித்தளமாக கொண்டு கொடுங்கை அமைப்புடன் விளங்குகிறது. பிரஸ்தரத்தின் மேலிருக்கும் சிம்ம யாளி வரி மற்றும் வலபியில் இருக்கும் நாகதல அமைப்பு கண்டு இது பாண்டியர் கலைப்பணி என விளங்குகிறது.

கருவறையில்.வீற்றிருக்கும் முருகன் பாதரச்சை அணிந்திருக்கிறார் இடையில் வாள் உண்டு என்ற தகவலை சொல்லியபொழுது, காலில் செருப்பு அணிந்த வாள் கொண்ட முருகன் என்றே நான் கொள்வோம்.











பாண்டிய மன்னர்களின் இலைச்சினையான இரட்டைமீன்கள் செண்டுடன் காணப்படுகிறது. அரிதாகவே இப்படியான சூலக்கல் காணக்கிடைக்கிறது. ஆயிரம் ஆண்டு பழமையை கொண்டுள்ள பாண்டியர் சூலக்கல், உசிலம்பட்டி


பேரையூர் சாலையில் அமைந்திருக்கும் அய்யனார் கோவில். முழுவதும் செங்கலால் கட்டப்பட்ட கோயில். கோயில்கள் முன்பு செங்கல் தளிகளாகத்தான் இருந்தன அதனால் இதனுடைய காலத்தையும் அவ்ளோ பின்னோக்கி கொண்டு செல்ல மனமில்லை. உசிலம்பட்டி, அய்யனார்கோயில்.













பண்ணைப்பட்டி கண்மாய்க்கு கீழே இருக்கும் அய்யனார் கோவிலின் அருகே உள்ளது இந்த சதிகல்.


தே.கல்லுப்பட்டி- பேரையூர் சாலையில் உள்ள புலிக்குத்திக்கல். மக்களைக்காக்கும் பொருட்டோ.. ஆநிரைகளைக்காக்கும் பொருட்டோ.. புலியுடன் சண்டையிட்டு உயிர்நீத்த வீரனின் நினைவாக எடுப்பித்த கல் தான் புலிக்குத்திக்கல்.

தேவன்குறிச்சி மலையடிவாரத்தில் உள்ள அக்னீஸ்வரர் கோயிலின் பின்புறம் சிறிய மண்டபம் எழுப்பி அதனுள் இந்த புலிக்குத்திக்கல்லை வைத்து வணங்கி வருகின்றனர். 


உசிலம்பட்டி - முதலைக்குளம் கண்மாயில் இருக்கும் தூம்பு. மடை. வட்டெழுத்து பொறிக்கப்பட்டுள்ள தூம்பு கல். தென் கல்லக நாடு என்ற குறிப்பு இதில் உள்ளதால் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

சந்தனம், குங்குமம் , பூ , பொங்கலுடன் ஒரு சிறப்பான வழிபாட்டுடன் நடப்பட்டு இருந்தது.



நன்றி : 
உசிலை மரபு & தொல்லியல் ஆர்வலர் குழு

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்