ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

பாலாண்டார் வீட்டு தென்னை மர திருமணம்!




திருமண நாள் என்பது மகிழ்ச்சியான, மறக்க முடியாத நாளாக ஒருத்தருடைய வாழ்நாளில் இருந்து வருகிறது. அந்த திருமணத்துக்கு சொந்தங்களையும், நண்பர்களையும் அழைக்க, அழைப்பிதழ்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு.

சொல்லப்போனால் நம்முடைய அந்தஸ்தை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகவும் அழைப்பிதழ்கள் இருந்து வருகின்றன. பெரும்பாலும் அழைப்பிதழ்களில் சாமி படங்கள், மலர்கள், கட்சித் தலைவர்கள், அன்பை வெளிப்படுத்தும் கார்ட்டூன்கள்தான் இருக்கும்.


ஆனால், நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் ஒன்றை, திருமண அழைப்பிதழில் பிரசுரித்து அங்கீகரிப்பது அரிதிலும் அரிதாக நடக்கக்கூடிய விஷயம். இத்தகைய சூழலில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டரில் உலாவும் இன்றைய இளம் தலைமுறையினரை, வித்தியாசமாக செய்யும் திருமணங்கள் அதிகளவில் ஈர்த்து வருகின்றன. அப்படியொரு வித்தியாசமான திருமண அழைப்பிதழை அச்சிட்டு திருமணத்தை நடத்தியுள்ளனர், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள செல்லியம்பட்டி் சுப்பையா பாலாண்டார் குடும்பத்தினர்.

திருமண அழைப்பிதழின் முன்பக்கத்தில் 'தென்னை மரத்தை' இடம்பெறச்செய்து, தென்னைமேல் வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்தி, திருமணத்தை நடத்தியுள்ளனர்.

இத்திருமணம் குறித்து அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணி  பாலாண்டார் பேசும்போது, "எங்க குடும்பத்துல அண்ணன், தம்பிகள் மூணு பேரு. நான் இரண்டாவது பையன். எங்க அப்பாதான் ஏ.சி.சுப்பையா பாலாண்டார். எங்களுக்கு தென்னை விவசாயம்தான் முக்கியத் தொழில். இத 65 வருஷமாக செஞ்சிட்டு வர்றோம். எங்களுக்கு இன்னைய நாள் வரை சோறு போடுறது தென்னை விவசாயம்தான். தென்னையை  நாங்க வளர்த்தோம். அது எங்கள வளர்த்து விட்டிருக்கு.


தென்னை விவசாயத்தோடு தேங்காய் நார் மில்லும், குடோனும் வெச்சிருக்கோம். எங்க அண்ணனும், தம்பியும் தென்னை விவசாயம் செஞ்சிட்டு வர்றாங்க. தென்னை விவசாயத்தால எங்க குடும்பம் பெரியளவுல வளர்ந்திருக்கு. அதுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான், எங்க அண்ணன் மகன் கல்யாணத்துல, குலை தள்ளிய தேங்காயுடன் இருக்கிற தென்னை மர படத்தை முன்பக்கத்திலப் போட்டு, நன்றியை வெளிப்படுத்தியுள்ளோம்.

எங்க அண்ணன் மகன் அருள்மணி பாலாண்டார் எம்.பி.ஏ. முடிச்சிருக்கிறாரு. பொண்ணு எம்.சி.ஏ முடிச்சிருக்காங்க. இரண்டு பேருமே, எங்க வாழ்க்கைக்கு ஆதாரமா இருந்த தென்னை மர போட்டோவ பத்திரிகையில போடுறதுக்கு சம்மதிச்சாங்க. கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு எங்க தோப்புல விளைஞ்ச, தேங்காயைத்தான் அன்பளிப்பா கொடுத்தோம். சொல்லப்போனா, தென்னை மரம் இல்லாம, இந்தக் குடும்பம் இல்லீங்க" என நன்றிப் பெருக்குடன் சென்னார்.

தென்னை மரத்தால் உங்கள் குடும்பமும் வளர்ந்தது போல, மணமக்களின் வாழ்வும் தென்னையை போல் வளர்ந்து எல்லோருக்கும் பயனளிக்கட்டும்.

வாழ்த்துக்கள்...!

-ம.மாரிமுத்து

படங்கள்: சே.சின்னத்துரை
(மாணவ பத்திரிகையாளர்கள்)

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்