வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

ஆலங்குடி வங்கனார் (வங்கார்)



திருச்சி, லால்குடி அருகே, ஆலங்குடி மகாஜனம் கிராமத்திலுள்ள சிதைந்த சிவன் கோவிலில், சோழர் கால பழமையான நந்தி சிலை கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில், தமிழ்ப்பண்டிதர் மணிமாறன், சங்க கால புலவர் ஆலங்குடி வங்கனார் பிறந்த ஊர் பற்றி ஆய்வு செய்துள்ளார்.


அவர் கூறியதாவது: சங்கப்புலவர் ஆலங்குடி வங்கனார், திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள ஆலங்குடி மகாஜனம் என்ற ஊரில் தான் பிறந்துள்ளார் என்பதை, பல சான்றுகள் உறுதி செய்கின்றன. 

வங்கார் எனும் பட்டப்பெயர் கொண்ட கள்ளர்கள், அந்த கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக இன்றும் வசித்து வருகின்றனர். ஆலங்குடி மகாஜனம் கிராமத்துக்கு, ஆய்வுக்காக சென்ற போது, சிவன் கோவில் ஒன்று இருந்ததும், அந்த கோவில் கால வெள்ளத்தில் அழிந்து போனதும் தெரியவந்தது. கோவிலின் நந்தி மண்டபத்தில் அமைக்கப்படும் நந்தி சிலை ஒன்று, இங்கு காணப்படுகிறது; இந்த சிலை, சோழர் காலத்தைச் சேர்ந்தது. தற்போது, பழுதடைந்து காணப்படும் கோவில் சுவரில், "வெங்கிட' என்னும் எழுத்து, தெலுங்கு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த கோவில், பின், நாயக்கர்கள் காலத்தில் சீரமைக்கப்பட்டு இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. 

சோழர் காலத்தில், நடைமுறையிலிருந்த துல்லியமான நில அளவை முறையில், இன்றைக்கும் ஆலங்குடி மகாஜனம் கிராமத்தில், விவசாய நிலங்கள் அமைந்திருக்கின்றன. அத்துடன், சிவன் கோவில், நந்தி சிலையும் அவர்களது ஆட்சி அமைந்ததற்கு ஆதாரமாக உள்ளது. 

தர்மராஜ் வங்கார்

மருதுபாண்டிய வங்கார், தேசிய அளவில் சிலம்பாட்டத்தில் முதலிடம் பெற்ற விண்ணமங்கலம்  காடவராயர் நாச்சியார்  மற்றும் பரத் கூழாக்கியார்



வங்கனார், புதுக்கோட்டையிலுள்ள ஆலங்குடியைச் சேர்ந்தவர் எனவும், பாண்டிய மன்னனைப் பாடியதால் மதுரை மாவட்டம், திருமங்கலத்திலுள்ள ஆலங்குடியைச் சேர்ந்தவர் எனவும், பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. ஆனால், லால்குடி தாலுக்காவிலுள்ள ஆலங்குடி மகாஜனம் என, அழைக்கப்படும் ஊரே, சங்க கால புலவர் ஆலங்குடி வங்கனார் பிறந்த ஊர். இவ்வாறு அவர் கூறினார்.

ஆலங்குடி வங்கனார் என்பவர் பண்டைக்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும் தமிழ்ச் சங்கங்களில், கடைச் சங்கத்தைச் சேர்ந்த 49 புலவர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். ஆலங்குடி என்னும் இடத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கு இப் பெயர் ஏற்பட்டது என்பர். இத் தகவல்களைத் தவிர இவர் வாழ்க்கை பற்றிய வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. 

வங்கம் என்பது கப்பல் எனப் பொருள் தரும். எனவே இவர் கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்த கள்ளர் குடியைச் சேர்ந்தவர்.

இவர் பாடிய பாடல்கள் சங்கத் தமிழ் நூல்கள் சிலவற்றில் காணப்படுகின்றன. இவை மொத்தம் ஏழுஆகும். குறுந்தொகையில் இரண்டு பாடல்களும், நற்றிணையில் மூன்று பாடல்களும், அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் தலா ஒவ்வொன்றும் இவர் பாடியவையாகக் குறிப்பிடப்படுகின்றன.

வங்கனார் பாடிய பாடல்கள்தொகு

அகநானூறு 106 மருதம்

குறுந்தொகை 8 மருதம்

குறுந்தொகை 45 மருதம்

நற்றிணை 230 மருதம்

நற்றிணை 330 மருதம்

நற்றிணை 400 மருதம்

புறநானூறு 319 \ வாகை \ வல்லான் முல்லை

இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள் அனைத்தும் மருதத்திணைப் பாடல்களாக உள்ளன. தலைவி ஊடலும், அவள் ஊடலுக்குக் காரணமான நிகழ்ச்சிகளும் மருதத்திணை.

இன்று கள்ளர் குடியில் பிறந்த கவிப்பேரரசு வைரமுத்து போல், அன்று கள்ளர் குடியில் பிறந்த சிறப்பு பெற்று விளங்கிய ஒரு பெரும் புலவர்.

ஆலக்குடி, களிமேடு வாழ் வங்கார் பட்டந்தாங்கிய கள்ளர்களுடைய குலதெய்வகோவிலும் ஆலங்குடி மஹாஜனத்தில் உள்ள மதுரைவீரன்கோவில்தான்.

கூடநாணல் (விசங்கிநாடு)கிராமத்தில் உள்ள நாட்டார் பட்டந்தாங்கிய கள்ளர்களும் மதுரைவீரனைதான் குலதெய்வமாக வணங்குகிறார்கள்.இக்கோவிலும் புடிமண் எடுத்துதான் கோவிலை எழுப்பியுள்ளார்கள்.

நன்றி : தினமலர் செய்தி (03. Sep 2013)   

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்