ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

சோமாசியார் மரபினர்



வரலாற்றில் சோமாசியார் என்ற பெயர் பல கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. சோமாசியார் என்ற பட்டம் உடைய கள்ளர்கள் சிறப்புடன் சோழமண்டலத்தில், தஞ்சாவூரில் உள்ள அதிராப்பட்டணம், மன்னார்குடி பகுதியில் வாழ்கின்றனர். 


தஞ்சையில் புகழ்பெற்ற மருத்துவர் 

டாக்டர் குணசேகரன் சோமாசியார்







வரகுணராம பாண்டியன் கி.பி. 1613 முதல் 1618 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். வரகுண குலசேகரப் பாண்டியன் என்ற சிறப்புப்பெயரினையும் வேத விதிப்படி வேள்விகளைச் செய்த காரணத்தினால் வரகுணராம குலசேகர பாண்டியன் , குலசேகர சோமாசியார் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டார் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான்.





சோமன் என்றால் சந்திரன்  சோமாசியார்கள் என்பதற்கு சோழட்ச்சியார் என்றும், சந்திர (சோமா) ஆட்சியர் அதாவது பாண்டிய ஆட்சியர் என்றும், நாயன்மார்களில் சோமாசி மாற நாயனார் என்று ஒருவர் இருக்கிறார் அவர் சோம யாகத்தை வாரம் தவராமல் செய்த சிறப்புடையவர். அந்த வகையில்  சோம யாகத் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். இதற்கான தரவுகள் ஏதும் இல்லை.


கல்வெட்டில்  சோமாசியார்

தஞ்சாவூர்



திருக்கோயில் - செங்கல்பட்டு வல்லம் - இரண்டாவது குடைவரைக் கோயில்

இடம் - முகப்பு உத்திரம்

காலம் - முதலாம் மகேந்திரவர்மர் (கி.பி. 590 - 630)

கல்வெட்டு முதன்முதலில் வெளியான இதழ் - வரலாறு இதழ் 1

கல்வெட்டுப் பாடம்

1 லக்க சோமாசியார் மகள்
2 தேவகுலம்



செல்லியம்மன் கோவில் கல்வெட்டு 


தமிழகத்தில் முதல் கோவில் கட்டியதற்கான கல்வெட்டு, திருவள்ளூர் மாவட்டம், சிற்றம்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல்லவர் காலத்தில் தான், மண், மரம், சுதை இல்லாமல், கல்லால், குடைவரை கோவில்கள் அமைக்கும் பழக்கம் துவங்கியது. பின், கற்கோவில்கள் எழுப்பப்பட்டாலும், தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் கோவிலுக்கான சான்றுகள் கிடைக்காமல் இருந்தன. இந்நிலையில், தற்போது, கி.பி., 7ம் நுாற்றாண்டை சேர்ந்த கோவில் கல்வெட்டு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தும் என, கூறப்படுகிறது.

கல்வெட்டை கண்டுபிடித்த, 'ஆலயம் கண்டேன்' அமைப்பின் நிறுவனரும், வரலாற்று ஆய்வாளருமான, பத்மபிரியா பாஸ்கரன் கூறியதாவது:

தென்கரணை என, அழைக்கப்பட்ட சிற்றம்பாக்கத்தில் உள்ள, பல்லவர் கால கும்பேஸ்வரர் கோவில், சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. அதன் அருகில் தான், சிறிய செல்லியம்மன் கோவில் உள்ளது. அங்கு, மிக பழமையான, பல்லவர் கால தமிழ் கல்வெட்டு, கவனிப்பாரின்றி, கோவிலின் படிக்கல்லாக பயன்படுத்தப்படுகிறது.


பல்லவர் காலத்தில், பல்லவர் கிரந்தம், சமஸ்கிருத எழுத்துகள் தான் அதிகம் வெட்டப்பட்டன. ஆனால், வல்லம் குகையில் உள்ள, முதலாம் மகேந்திர வர்மன் கல்வெட்டு, திருக்கழுக்குன்றத்தில் உள்ள, முதலாம் நரசிம்மவர்மன் கல்வெட்டுகள், தமிழில் உள்ளன. சிற்றம்பாக்கம் செல்லியம்மன் கோவில் கல்வெட்டும், தமிழில் உள்ளது சிறப்பு.

முதல் குடைவரை கோவிலுக்கான சான்றாக, கி.பி., 630ம் ஆண்டை சேர்ந்த, மகேந்திரவர்மன் கல்வெட்டு உள்ளது. நற்றம்பள்ளி கல்வெட்டின் காலம், முதலாம் பரமேஸ்வர வர்மனின், முதலாம் ஆட்சி ஆண்டான, கி.பி.,670. இக்கல்வெட்டு, 29 அங்குல நீளமும், 28.5 அங்குல அகலமும் உடையது.


கல்வெட்டில், இரண்டு வட்டங்கள் உள்ளன. அவற்றின் இடையே, மலரின் இதழ்கள் போன்ற உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அதைச்சுற்றி, ஆறு வரிகளில் எழுத்துக்கள் உள்ளன. செல்லியம்மன் கோவில் பெரிதாக இருந்த காலத்தில், அதன் சுவரில், இக்கல்வெட்டு இருந்திருக்கலாம்.




கல்வெட்டு வரிகளில் இருந்து, ஆலவாயிலை சேர்ந்த, சோமாசியார் மருமகன் குமரன் என்பவர் உருவாக்கிய கோவில் என, அறிய முடிகிறது. மதுரையை போல, தென்கரணைக்கும், ஆலவாயில் என்ற பெயர் இருந்திருக்கலாம். அங்கு, மேலும் ஆய்வு செய்தால், தொடர்புடைய கூடுதல், சான்றுகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


டம்பூர்  சிவன் கோவில் 


சிவன் கோவிலில், 500 ஆண்டு பழமை வாய்ந்த, விஜய நகர மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மறைமலை நகர் அடுத்த கடம்பூர் கிராமத்தில், ஒரு சிவன் கோவில் உள்ளது. இதை புதுப்பிக்கும் பணி நடந்தது. கோவிலை சுத்தம் செய்யும் பொருட்டு, சுற்றி இருந்த முட்புதர்களையும், செடி, கொடிகளையும் வெட்டினர். பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டிருந்தபோது, அங்கு கல்வெட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இக்கல்வெட்டு குறித்து, அரியலூர் அரசு கலை கல்லூரி பேராசிரியர் தியாகராஜன் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: கோவில் கருவறை தெற்கு சுவரில், விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரின் (1509-1530) கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. எட்டு வரிகளில் தமிழ் ஆங்கீரச வருடம் எழுதப்பட்ட இக்கல்வெட்டின் காலம், கி.பி., 1512. இதிலிருந்து கல்வெட்டு, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அறிய முடிகிறது. கல்வெட்டு, இவ்வூர் பெயரை கடம்பூர் என்றும், இது நந்திபுரம் சீர்மையில் அமைந்த கிராமம் என்றும், சிவன் கோவிலை, உடையார் கயிலாயமுடையார் கோவில் என்றும் குறிப்பிடுகிறது.


கடம்பூர் கீழைத் தெருவில், மடைவிளாகமும், நஞ்சை பற்றில் கோவிலை புதுப்பித்துக் கட்ட, 2,000 குழி நிலமும் இறையிலியாக கொடுக்கப்பட்டதை கல்வெட்டு குறிப்பிடுகிறது. மடைவிளாகம் என்பது கோவிலை சுற்றி பிராமணர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் வசிப்பதற்கு உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி. இந்நில கொடையை, கிருஷ்ண தேவ மகாராயரின் வாசல் அதிகாரியாக பணியாற்றிய, நாகண்ணநாகம நாயக்கரின் தம்பி கொடுத்துள்ளார். இது தவிர, நாகம நாயக்கர் மகன் லிங்கப்ப நாயக்கர், கொண்டம நாயக்கர், கப்பு நாயக்கர் ஆகியோருக்கும், இவர்களின் கோத்திரத்துக்கும் புண்ணியம் ஏற்பட வேண்டுமென்று வேண்டிக் கொண்டு, இக்கோவிலில் ஐப்பசி, தை மாத அமாவாசை நாட்களிலும், சோமவாரத்திலும் பூஜை வழிபாடு நடத்த தேவதானமாக, நாட்டேரி புதுக்குளம் என்ற கிராமமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

கிராமத்தில், ஏற்கனவே ஒச்சிலமத்தான் எல்லய சோமாசியார் என்பவருக்கு நிலம் கொடுக்கப் பட்டிருந்தது. அந்த நிலம் நீங்கலாக, மீதியுள்ள நிலங்கள் இக்கோவில் பூஜை வழிபாட்டுக்கு கொடுக்கப்பட்டது என, கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவ்வாறு கொடுக்கப்பட்ட நிலங்களுக்கும், ஊருக்கும் கூடுதலாக வரி வசூலிக்கக் கூடாது எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. கல்வெட்டின் இறுதிப்பகுதியில், இந்து தர்மத்துக்கு அகிதம் (தீங்கு) பண்ணினவர்கள் கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவர் என கூறப்பட்டுள்ளது.

கடம்பூரின் அருகில் காயரம்பேடு என்ற கிராமம் உள்ளது. சோழர் காலத்தில், இவ்வூர் காசிரம்மேடு நாடு என்ற நாட்டுப்பிரிவின் தலைநகரமாக இருந்துள்ளது. கடம்பூர் சிவன் கோவிலில், பல்லவர் காலத்து கலை பாணியில் வடிக்கப்பட்ட ஜேஷ்டா தேவியின் சிற்பம் உள்ளது. பல்லவர் காலத்திலேயே இவ்வூரும், கோவிலும் இருந்துள்ளது என்பது புலனாகிறது. 


பாதிரிப்புலியூர் (திருப்பாதிரிப்புலியூர்) கடலூர் மாவட்டம் கல்வெட்டு

அருள்மிகு பெரிய நாயகி அம்மை உடனுறை தோன்றாத்துணைநாதர் , இந்தக்கோயிலில் 21 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டுள்ளன, கோயில் புதுப்பிக்கப்பட்டபோது அவை அகற்றப்பட்டுச் சிதறிக்கிடக்கின்றன. கல்வெட்டுக்கள் இரண்டைத் தவிர மற்றவை யெல்லாம் சோழர்களுடையனவே. இவை பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டுவரையில் வெட்டுவிக்கப்பட்டவையாம். கோப்பரகேசரிவர்மன் காலத்தில் கி.பி. 969இல் சோமாசியார் 5 பிராமணர்களுக்குக் குடியிருக்க நிலம் தந்ததும், கி.பி.923இல் தாமோதக்கன் ஒற்றியூரான் ஒரு கமுகந்தோட்டம் கொடுத்ததும், நாராயணன் சேந்தன் திருவமிர்தத்திற்காக வேண்டும் முதல் கொடுத்ததும் கண்டிருக்கின்றன.பி றகு இராசகேசரி காலத்தில் (கி.பி.959) ஒரு நந்தா விளக்கிற்காக 96 ஆடுகள் கொடுக்கப்பட்டன. வீரராசேந்திரன் காலத்தில் (கி.பி.1057) மும்முடிச்சோழப் பேரியான் நுந்தாவிளக்கு வைத்ததும், காடன்தேவன் 80 கலம் நெல் தந்ததும் காண்கின்றன. குலோத்துங்கன் காலத்தில் கி.பி. 1076-ல் இராமேச்சுர முடையான் நுந்தா விளக்கிற்காக 20 காசு தந்ததும் இதில் கண்டிருக் கிறது. விக்கிரமசோழன் காலத்தில் (கி.பி. 1118, 1124,25) மூவேந்த வேளான் ஒரு விளக்கிற்காக 18 காசும் உலகளந்த மூவேந்த வேளான் 18 காசும் கொடுத்துள்ளார்கள். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1213) காலத்தில் தேவதானத்தில் எல்லை குறிக்கப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலில் சோழமன்னர்களுள் மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், இராஜராஜ ராஜகேசரிவர்மன் (முதலாம் இராஜராஜசோழன்), இராஜகேசரிவர்மனாகிய உடையார் வீர ராஜேந்திர தேவன், இராஜகேசரிவர்மனாகிய உடையார் இராஜ மகேந்திர தேவன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழதேவன் இவர்கள் காலங்களிலும், பாண்டியர்களில் பெருமாள் விக்கிரம பாண்டியன் காலத்திலும், விஜயநகரப் பரம்பரையினரில் வீரவிருப் பண்ண உடையார் காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

ஆனைமலை முருகன் கோயில் குடைவரைச் சிற்பங்கள்

ஒத்தக் கடை (ஒற்றைக் கடை) மதுரைக்கருகே அமைந்துள்ள ஊர் ஆகும். அவ்வூரின் அருகே உள்ள ஆனை மலையில் இரு குடைவரைகள் உள்ளன. ஒன்று நரசிங்கப் பெருமாள் கோயில். மற்றொன்று லாடன் கோயில் எனப்படும் முருகன் கோயில்.

மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை யில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஒத்தக்கடை. இங்குள்ள யானைமலையின் ஒரு பகுதியில் குடைவரையாகத் திகழ்கிறது லாடன் முருகன் கோயில். கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில், தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. லாட தேசத்திலிருந்து வந்த லாடன் சித்தர் தங்கியிருந்து வழிபட்ட தலமாதலால் அவரது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இன்றைய குஜராத் பகுதியே அன்றைய லாட தேசமெனவும் குறிப்பிடுகின்றனர்.

மதுரையை ஆண்ட பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் வட்டக்குறிச்சியைச் சேர்ந்த நம்பிரான் பட்டர் சோமாசியார் செய்வித்த குடைவரைக் கோயில் இது என கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. மேலும், இந்த யானை மலையில் சமண முனிவர்களின் கல்வெட்டுகளும், கற்படுக்கைகளும் காணப்படுகின்றன.




இந்த லாடன் கோயில் கருவறையில் தெய்வானை மட்டுமே உடனிருக்க, அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் முருகப்பெருமான். முருகனுக்கான பிரத்யேக குடைவரைக் கோயில் இது மட்டுமே என்கிறார்கள் பக்தர்கள். இங்கு முருகப்பெருமான் முப்புரி நூலும், போர்த் தெய்வங்கள் அணியும் சன்ன வீரம் எனும் அணிகலனும் அணிந்துள்ளார். ஆக, சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானையை மணமுடித்த பிறகான கோலத்தில் அருள்கிறார் எனலாம். தெய்வானை கையில் மலர்ச் செண்டு தாங்கி வீற்றிருக்கிறாள். அர்த்த மண்டபத்தில் சேவற் கொடியும், மயில் வாகனமும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. அதன் அருகிலேயே நம்பிரான் பட்டர் சோமாசியார் சிலையும், பாண்டிய மன்னர் சிலையும் காணப்படுகின்றன.


புடைப்புச்சிற்பங்களுக்கு உரிய வழிபாட்டு முறைகள் வித்தியாசமானவை. இவ்வகையான சிற்பங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுவதில்லை. இவ்வகையான கோயில்களில் உற்சவ மூர்த்திகளுக்கே அபிஷேக ஆராதனைகளைச் செய்வர். இந்த லாடன் கோயிலில் உற்சவ மூர்த்திகள் இல்லாத காரணத்தால், இங்கு பூஜை, திருவிழாக்கள் இல்லை. பக்தர்கள் கோயிலின் வெளி மண்டபத்தில் நெய் விளக்கு ஏற்றியும், கோயில் வாயிற்கதவுக்கு பூமாலை அணிவித்தும் வழிபடுகின்றனர்.


நன்றி : சோழபாண்டியன்

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்