மண்ணவேளார் மரபினர்
வைத்தூர் திருப்பனங்காட்டு உடையார் கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது.
முதல் மரியாதை: இக்கோயிலில் முதல் மரியாதை பெறுபவர் கள்ளர் குடியின் மண்ண வேளார் குடும்பத்தினர். செம்பட்டி எனும் ஊரில் வாழ்கின்றனர். சித்திரை திருவிழாவில் குதிரை மேல் அமர்ந்து மண்ண வேளார் முதல் மரியாதை பெறுவது வழக்கம். மண்ண வேளார் குடும்ப முன்னோர்கள் தொண்டைமான் படையில் தளபதிகளாக இருந்துள்ளனர். பெருங்களூர் பல்லவராயர்களோடு மண உறவில் இணைந்தவர்கள். கல்வெட்டுகளில் புதுக்கோட்டை பல்லவராயர்கள் பெருங்களூர் அரசு மற்றும் வைத்தூர் அரசு என குறிக்கப்பட்டுள்ளனர்.
மண்ணவேளார்கள் அம்பு நாட்டை சேர்ந்த கள்ளர்கள், தொண்டைமான் படையில் முக்கிய ரெஜிமண்ட் மண்ணவேளாருடையது. இவர்கள் தொண்டைமான்களுடன் தொடர்ச்சியான திருமண உறவில் இணைந்திருந்தனர்.
ஆண்டப்பன் ஊரணி. குடுமியான்மலை புதுக்கோட்டை சாலையில் ஊரை ஒட்டி. ஒருபர்லாங் தூரத்தில் சாலைக்கு வடக்காக ஒரு பழைய் இடி. பாடுற்ற தெப்பக்குளம் உள்ளது. தொண்டைமான்கள் காலத் தில் ஆண்டக்குளம் ஆண்டப்ப மன்னவேளார் என்று ஒருவர் இருந்துள்ளார். இவர் பெயரில் ஆண்டப்ப மன்ன வேளார். குறவஞ்சியும் உள்ளது. ஒருவேளை இவராலோ அல்லது. இவர்காலத்தில் கட்டியதாலோ இப்பெயர் ஏற்பட்டது. குளத்தின் மைய மண்டபத்தில் இரண்டு நாயக்கர் தலைவர். ( குடுமியான் மலை கல்வெட்டு பகுதில் உள்ளது )
வைத்தூர் திருப்பனங்காட்டு உடையார் கோயில் பல்லவராயர் சிற்பம்: :