சனி, 15 பிப்ரவரி, 2020

அத்தாணியார் இளைஞர் நற்பணி மன்றம்




அத்தாணியார் என்பது கள்ளர் பட்டங்களில் ஒன்று. அத்தாணியார் இளைஞர் நற்பணி மன்றம்" என்பது, மன்னார்குடி வட்டம் , திருவாரூர் மாவடடம், எட மேலையூர், கள்ளர் குடியினரால்  அத்தாணியார் தெருவில், சாதிமதமற்ற முறையில்  இளைஞர்களால் உருவாக்கப்பட்டு முறைப்படி அரசாங்கத்தில் பதிவிடப்பட்டு பதிவெண் 15/2017 என்ற எண்ணில் கடந்த இருபத்தொன்பது வருடமாக கிராம மக்களின் பேராதரவோடு அத்தாணியார் தெரு, எட மேலையூரில் இயங்கிவரும் ஒரு மக்கள் இயக்கமாகும்.


இன்றைய அரசியல் சூழ்நிலையில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற பெரும்பாலுமான மக்கள் முன்வருவதில்லை ஆனால் எங்களது இயக்கமானது இதைப்போன்ற பொது விஷயங்களை முன்னின்று எடுத்து அதை தக்க துறையில் முறையிட்டு பெற்று தருவது மற்றும் சில பல அத்திவாசியா தேவைகளை (தண்ணீர், மின் விளக்கு, பொது சுகாதாரம், குளம் பராமரிப்பு, கோயில் பராமரிப்பு மற்றும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை) போன்ற உதவிகளை எங்கள் அத்தாணியார் இளைஞர் நற்பணி மன்றமே முன்னின்று எடுத்து நடந்துகொண்டிருக்கின்றோம். 


2019ம் ஆண்டில் அத்தாணியார் இளைஞர் நற்பணி மன்றம் பெற்ற விருதுகள்.





2017-2020 வரையிலான கணக்கு விவரங்கள் பொதுமக்கள் முன்னிலையில் சமர்பிக்கபட்டது & இதுவரை நடைபெற்ற 37திட்டங்களின் விவரங்கள் புகைப்படத்துடன் திரையிடப்பட்டது.



04/01/2020 அன்று புதிய தலைமுறை தொலைகாட்சியின் நம்மால்முடியும் குழு நடத்திய பொள்ளாச்சியில் பசுமை பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொண்டாடிய தருணம்.






கிராம வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கும் அத்தாணியார் இளைஞர் நற்பணி மன்றம்.

1. ஊழலற்ற நிர்வாகம் நடைபெற ஊராட்சிக்கு உதவுதல்
2.பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்தல்
3. தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்தல்
4. அனைவருக்கும் தேவை அடிப்படையில் தொடர் பயிற்ச்சிகள் வழங்குதல்
5. தரமான சாலை / தெரு விளக்குகள் பராமரித்து சோலார் மின்விளக்கு அமைக்க ஏற்பாடு செய்தல்
6. அரசாங்க திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் கேட்டு பெறுதல்
7. சுற்று சூழல் / இயற்க்கை பாதுகாப்பு
8. அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்தல்
9. சாலை / தெருவோரும் நிழல் மற்றும் பலன் மரங்கள் நடுதல்
10. மழைநீர் கட்டமைப்பு உருவாக்குதல்
11. குளம் / வாய்க்கால் தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாத்தல்
12. இயற்க்கை விவசாயத்தை மேம்படுத்த முன்னுரிமை செய்தல்
13. சுகாதார வாழ்க்கை வாழ அனைத்து வீடுகளுக்கும் கழிவறை பெற்று தருதல்
14. பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து பொருளாதார மேன்மை அடைய செய்தல்
15. பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்தல், முகாம் அமைத்தல்
16. முதியோர்களுக்கு பயணளிக்கும் திட்டம் (அரசு மற்றும் அறக்கட்டளையின் உதவிடன்)
17. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்தல்
18. சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்ச்சி கூடம் அமைத்தல்
19. பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மண் புழு உரம் தயாரிக்கும் திட்டத்திற்கு ஏற்பாடு செய்தல்
20. சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தல்



அத்தாணியார் இளைஞர் நற்பணி மன்றம் ஓராண்டிற்கு முன் (அக்டோபர் 2018 வரை) நிறைவேற்றப்பட்ட திட்டங்களும் எதிர்கால திட்டங்களும்.




பெண்களுக்கு தையற்பயிற்சி தேர்ச்சி சான்றிதழ் வழங்கும் விழா.

முதற்கட்டசிறப்பு அம்சமாக..

1. தமிழக அரசின் பொங்கல் திட்ட துணிப்பை புராஜெக்ட் வழங்கப்பட்டுள்ளது
2. தேர்ச்சி பெற்ற 15 பெண்களுக்கும் தொழிர்கடன் ரூ.100000/- (35% மானியம்) பெற்று தருவது என தீர்மானிக்கப்ப்ட்டு அதற்கான மனு சமர்பிக்கப்பட்டுள்ளது.




புதுப்பொலிவுடன் எட மேலையூர், அத்தாணியார் தெரு பயணியர்நிழற்குடை.





மருத்துவ முகாம் 



அத்தாணியார் இளைஞர் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளை ஏற்று இன்று எட மேலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் எட மேலையூர் கிராமங்களின் வளர்ச்சி பணிகள் குறித்து விவரங்கள் தெரிந்துகொள்ள மண்டல ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள்.



இவர்களுக்கு தேவையான நிதி உதவியை கிராமப்புற அவசியங்களை விரும்பும் தங்களை போன்ற நண்பர்களிடம் நிதி உதவி பெற்று வருகிறோம். குறைந்தப்பட்ச தொகையாக ரூ.100 முதல் ரூ. 5000/- மற்றும் மேலும் உங்களால் முடிந்தவரை நிதி உதவியை வழங்கலாம். தாங்கள் அளிக்கும் நிதி உதவிக்கு உடனடியாக தகுந்த ரசீது வழங்கப்படும் (மெயில், Whats App அல்லது நேரடியாக) கொடுக்கப்படும். எங்களது மன்ற வங்கி கணக்கிலும் நீங்கள் பண பரிவர்த்தனை செய்யலாம். செய்துவிட்டு எங்களிடம் தெரிவித்தல் உடனடியாக ரசீது அனுப்பி வைக்கப்படும்.

இந்த இயக்கத்தின் மூலம் எட மேலையூரிற்க்கே எந்த மாதிரியான அடிப்படை மற்றும் தேவைக்கேற்ற பொது உதவிகள் அனைத்தையும் செய்து கொள்ளலாம் என்பது மன்றத்தின் அடிப்படை கொள்கையாகும்.

நிர்வாகம் மிகவும் வெளிப்படையான நிர்வாகம். மேலும் விவரங்களுக்கு எங்களது

Facebook : ”அத்தாணியார் இளைஞர் நற்பணி மன்றம்”
E-Mail : aycfedamelaiyur@gmail.com
Website : www.aycfedamelaiyur.com ல் தொடர்புகொள்ளவும்.

ACCOUNT DETAILS:

A/C Name: ATHANIYAR ILAINGAR NARPANI MANDRAM
A/C Number: 42500100004565
Bank & Branch: Bank of Baroda, Mannargudi
IFSC Code: BARBOMANTIR


வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்