கே. மாயத்தேவர் (K. Maya Thevar) (பிறப்பு: 15.10.1934) எம் ஜி ஆர் புதிதாக துவக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, 1973-ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார்.
கே. மாயத்தேவர் (K. Maya Thevar) (பிறப்பு: 15.10.1934) எம் ஜி ஆர் புதிதாக துவக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, 1973-ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார்.
1973-ல் திண்டுக்கல் திமுக எம்பியாக இருந்த கூடலூர் பாப்பாபட்டி ஐயா. இராஜாங்கம் தேவர் மரணம் அடைந்தார்.
இதனால் 1973-ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதி இடைத் தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்று எம்ஜிஆர் நினைத்தார்.
அப்போது திண்டுக்கல் அருகே உள்ள சின்னாள பட்டியை சேர்ந்த புகழ் பெற்ற வழக்கறிஞர் மாயத்தேவரை (கள்ளர்) வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி உறுதி என்று அனைவரும் வலியுறுத்தினர். இதனால் மாயத்தேவரை எம்ஜிஆர் வேட்பாளராக நிறுத்தினார்.
அப்போது அதிமுக நிரந்தர சின்னம் இல்லாத சுயேட்சை கட்சியாகும். எனவே எம்ஜிஆர் "தீபம் சின்னத்தை" தேர்ந்தெடுக்க மாயத் தேவரிடம் கூறினார்.
ஆனால் மாயத்தேவரோ "இரட்டை இலையை" தேர்ந்து எடுத்தார். சென்னையில் இருந்த எம்ஜிஆரிடம் போனில் தொடர்பு கொண்டு கீழ் கண்டவாறு கூறினார்.
இரட்டை இலை சுவற்றில் வரைய எளிதாக இருக்கும். இரண்டு விரலை காட்டி ஓட்டு கேட்கலாம். விக்டரி என்னும் வெற்றி வார்த்தை இரண்டு விரலை குறிக்கும். மேலும் சூரியன் வெப்பத்தில் இருந்து இலை உங்களுக்கு நிழல் கொடுத்து காக்கும் என்று பிரச்சாரம் செய்யலாம் என்று கூறினார். எம்ஜிஆரும் சரி என்று ஏற்றுக் கொண்டார்.
மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்த உடனே வெற்றி உறுதியாகி விட்டது. இதனால் கடும்கோபம் அடைந்த திமுக குண்டர்கள் வத்தலகுண்டு எம்ஜிஆர் மன்ற தலைவர் ஆறுமுக கள்ளரை கொலை செய்தார்கள்.
எம்ஜிஆர் புகழ், மாயத்தேவரின் குணம், இரட்டை இலை சின்னம் இவற்றுடன் ஆறுமுக கொலையும் அனுதாப அலையாக மாறி அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது.
திமுக மூன்றாவது இனத்திற்கு தள்ளப் பட்டது.
ஐந்தாவது மக்களவைக்கு, 1973-ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பாக வென்றவர் . பின்னர் ஆறாவது மக்களவைக்கு 1997-ஆம் ஆண்டில் மீண்டும் அதே தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக நின்று வென்றவர்.
ஐயா மாயத்தேவர் கூறுவது
அப்போதெல்லாம் மதுரையில்தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அங்குதான் சின்னங்களை தேர்வு செய்ய வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு பயன்படக் கூடிய சின்னமாக இரட்டை இலை இருக்க வேண்டும் என்பதற்காக அதை தேர்ந்தெடுத்தார். அதை எம்ஜிஆரிடம் தெரிவித்த போது, திமுக உதயசூரியன் சின்னம் வைத்திருக்கும் போது இரட்டை இலை கருகிப் போய்விடுமே என விமர்சிப்பார்கள் என்றார். ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் இரட்டை விரலை காண்பித்து நிரந்தர வெற்றியை பெற்றார் தலைவரரே.. தாய்மார்களுக்கும் இரட்டை இலை சின்னம் பிடிக்கும் என சமாதானம் கூறப்பட்டது. இந்த விளக்கங்களை எம்ஜிஆர் ஏற்றுக் கொண்டார்.