உடையப்பா என்ற இரா.வெ.உடையப்பத்தேவர்
பாலாபிஷேகம்,
கண்ணாமூச்சி,
குறத்தி மகன்,
புது வெள்ளம்,
தசாவதாரம்,
மிருதங்கச் சக்கரவர்த்தி,
”தாய் வீட்டு சீதனம்’
முத்தான முத்தல்லவோ [1976],
அனிச்ச மலர் [1981],
நவக்கிரஹ நாயகி [1985],
மணி மகுடம் [1968]
உள்ளிட்ட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் துணைக் கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் நடித்துள்ளவர்.
ஏ.பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்த பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். இசை நாடகத் திலகம் என்ற பட்டம் பெற்றவர்.
மதுரை தேவர் நாடக மன்றம் என்ற நாடகக் குழுவைச் சொந்தமாக நடத்தி வந்தார். இந்நாடகக் குழுவிலுள்ள நடிகர்கள் அனைவருக்கும் 1981-ஆம் ஆண்டு தான் தயாரித்த “அனிச்ச மலர்” என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். இப்படத்தில் மதுரை, சுரேந்திரன், எல்.ஆர்.அஞ்சலியுடன் இணைந்து “ஹரிச்சந்திரா” நாடகத்தில் சொந்தமாக பாடவும் செய்துள்ளார். இப்படத்தில் சத்யசித்ரா, ஜெய்பாபூ, பபூன் பக்கிரிசாமி ஆகியோரை அறிமுகம் செய்தார்.
உடையப்பத்தேவர் நாடக உலகில் பிரபலமாக இருந்து, 'அனிச்சமலர்' என்ற பெயரில் படம் தயாரித்து வந்தார். பாடல்களை மேத்தா எழுதவேண்டும் என்பது உடையப்பத்தேவரின் விருப்பமாக இருந்தது.
பாடல் எழுதுவதற்காக ஏவி.எம் ஒலிப்பதிவுக்கூடத்துக்கு வந்தார் மேத்தா. ஆஜானுபாகுவான உடையப்பத்தேவர் ஆளுயர மாலையை இவருக்கு அணிவித்து, 'இவர்தான் எங்கள் கவிஞர்' என்று இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். மெட்டு கொடுக்கப்பட்டது. புதியவரான மேத்தாவுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. 'அந்த ட்யூனை எனது தமிழால் தடவிப் பார்த்தேன்' என்று பின்னாட்களில் குறிப்பிடுகிறார். '
காத்து வீசுது புதுக்காத்து வீசுது...' என்று இவர் எழுதிய வரிகள் பாராட்டப்பட்டன.
உடையப்பத்தேவர் 1988-ஆம் ஆண்டு காலமானார்.
1976-இல் வெளி வந்த தசாவதாரம் படத்தில் பரமசிவனாக பிரகலாதன் வேடத்தில் நடித்த பேபி ராணியுடன் உடையப்பா
வி.கோபாலகிருஷ்ணனுடன் தசாவதாரம் படத்தில் உடையப்பா
“அனிச்ச மலர்” 1981 படத்தில் இரா.வெ.உடையப்பத்தேவர்
”மணி மகுடம்” 1968 படத்தில் உடையப்பாவுடன் எம்.என்.நம்பியார்
நன்றி : antrukandamugam.wordpress.com