சனி, 11 ஜனவரி, 2020

ஆதித்தமிழன் வரலாறு ஒரு ஆய்வு





இன்றை முகநூலில் அதிகமாக நடக்கும் வரலாற்று போர் என்னவென்றால் பாண்டியர் யார்...?, சோழர் யார்...? , சேரர் யார்..?, வேளிர் யார்..? என்பதை வைத்து அவரவர் தத்தம் சாதியை வைத்து ஆண்ட பரம்பரை வரலாற்றை பல ஆண்டுகளாக அரங்கேற்றி வருகிறார்கள்.

ஆனால் மூவேந்தர்கள், வேளிர்களின் தந்தையாக வரும் அந்த ஆதித்தமிழன் யார் என்பதை இந்தியா மட்டுமல்லாமல் உலக வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட மிகப்பெரிய வரலாற்று ஆய்வாளரான, பெருமதிப்பிற்குரிய ஐராவதம் மகாதேவன் IAS அவர்கள் எழுதிவிட்டார்.

ஐராவத மகாதேவனின் சிறுகுறிப்பு:-

அக்டோபர் 2, 1930 அன்று பிறந்த ஐராவாதம் மகாதேவன். சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை முடித்துவிட்டு, இந்திய ஆட்சிப் பணிக்கு படித்து தேர்வாகி, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றினார்.



1962-ல் தொல்லியல் துறை அறிஞர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கே.வி. சுப்ரமணிய ஐயர் ஆகியோரின் பழக்கம் கிடைத்தது. அப்போதிருந்தே தொல்லியல் துறையில் ஆர்வம் காட்டிவந்த ஐராவதம் மகாதேவன், 1980-ல் விருப்ப ஓய்வு பெற்ற பின் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் செயல் இயக்குனராக செயல்பட்டார். 1987 முதல் 1991 வரையில் தினமணியின் ஆசிரியராகச் செயல்பட்டார்.

ஐராவதம் மகாதேவன் கவனம் செலுத்திய இன்னொரு துறை சிந்துவெளி எழுத்துகள் குறித்தனவாகும். சிந்துவெளி நாகரிகத்தை ஆரியக் கலப்பில்லாத அதற்கு முற்பட்ட நாகரிகம் என நிறுவினார் ஐராவதம் மகாதேவன். “சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். ஆனால், ஆரியர்களுடைய நாகரிகமோ கிராமப்புறத்தைச் சார்ந்த மேய்ச்சல் நிலத்தோடு தொடர்புடைய நாகரிகமாகும். சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகள், முத்திரைகளில் பல்வேறுவிதமான விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதிலும் குதிரையின் உருவம் காணப்படவில்லை. குதிரை என்பது ஆரியர்களின் வருகைக்குப் பிறகே இந்தியாவில் அறிமுகமானது” என்று எடுத்துக்காட்டினார் ஐராவதம் மகாதேவன்.


சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினையில் காணப்பட்ட மிருகத்தை குதிரை எனக் கூறி அது ஆரிய நாகரிகம்தான் என்ற கூற்றை முறியடித்து பல்வேறு ஒப்பீட்டு சான்றாதாரங்களின் மூலம் அது காளை என்பதை நிருபித்தார். அதன்மூலம் சிந்துச் சமவெளி நாகரிகம், திராவிட நாகரிகமே என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் ஐராவதம் மகாதேவன்.


தமிழின் தொன்மையைத் தனது கடும் உழைப்பால், ஆய்வுத் திறத்தால் உலக அரங்குக்கு எடுத்துச்சென்றவர் ஐராவதம் மகாதேவன். 38 ஆண்டு காலம் உழைத்து அவர் உருவாக்கிய பழந்தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு நூல் (Early Tamil Epigraphy, Harward University press and CreA, 2003) இந்திய வரலாறு என்றாலே, அது வட இந்திய வரலாறுதான் என்றிருந்த நிலையை மாற்றுவதற்கு உதவியது. தமிழ் பிராமி என அவரால் அழைக்கப்படும் பழந்தமிழ் எழுத்துகளையும் ஆரம்ப கால வட்டெழுத்துகளையும் புரிந்துகொள்ள முழுமையானதொரு வழிகாட்டியாக அது விளங்குகிறது.

தன் இறுதி வாழ்நாள் வரை தமிழுக்காகவே தொண்டாற்றிய மாமனிதரை, இவ்விடத்தில் போற்றுகிறேன்.

அப்படிப்பட்ட மாமனிதரின் ஆய்வில் இறுதியாக தமிழ் நாட்டில் இன்றுள்ள ஒரு மாபெரும் சமூகம் தான், தமிழ் இனத்திற்கே முன்னோர் என்றும், அவர்கள் வழி வந்த இரண்டு உட்பிரிவினர்களும் இந்தியாவின் அடையாளம் என்று தன்னுடைய ஆய்வின் இறுதி அத்தியாத்தை எழுதியுள்ளார்.

யார் அந்த சமூகம்...?,  அவர்களை மட்டும் கூற காரணம் என்ன..?, அவர்களை இலக்கியம் மூலமாக மூத்த குடி என்றாரா..?, இல்லை தொல்லியல் ஆய்வு மூலமாக கூறினாரா...?, இல்லை பண்பாடு,கலாச்சாரம் என்கிற மானுடவியல் மூலமாக கூறினாரா...?



Kallar from Thanjavur, born in Kudikadu, father of Ammakánnu (2), cook. Strong, tall man. Notice curly hair and pierced (very large) earlobes.
ref: http://forum.thiazi.net/showthread.php?t=162517



சிந்துசமவெளியில் கிடைத்த குறியீடு எழுத்துக்களின் வளர்ச்சியில் தமிழ் எப்படி உருப்பெறுகிறது என்பதை தமிழ்நாட்டில் உள்ள ஒரு பூர்வீக பழங்குடியின் பெயரையும் அவர்தம் பண்பாட்டின் அடிப்படையை வைத்து மிகவும் நேர்த்தியாக பினைத்துள்ளார்.

தமிழ் மொழி என்பது இயற்கையின் மொழி என உலக ஆய்வாளர்கள் அனைவரின் கூற்று:- அதனால் தான் தமிழ் மொழியை, தொல் மொழி என வர்ணிக்கின்றனர்.

தமிழ் மொழியில் வலிமையை உணர்த்தும் வார்த்தைகளை நாம் பட்டியல் எடுத்துக் கொண்டால், நம்மால் தவிர்க்க முடியாத வார்த்தை கள_கல_கழ என்பதாகும்.

மேற்கோள் காட்டிய வார்த்தையில் ள,ல,ழ என்பது எழுத்துகள் உருவாகும் முன்பு அது ஒலியின் அடிப்படையில் ஒரே வார்த்தையை குறிக்கும்...!

பிற்காலத்தில் எழுத்துகள் உருவாகிய போது அதுவும் 2000வருடத்திற்கு முன்பு தான் ல,ழ,ளகரம் கல்வெட்டுகளில் வருகிறது.

ஆக அடிப்படை வார்த்தையாக கள என்று எடுத்துப் பார்த்தால் அதிலுள்ள வலியையையும், நாகரிகத்தின் வேரையும் நாம் உணரலாம்.






கள் :- தமிழரின் ஆகச்சிறந்த உணவு,நடுகற்களில் வீரர்களின் கையில் இருக்கும்

களபம்:- வலிமையான உயிரினம் யானை

களம் :- நாகரிகத்தின் நிலைத்த தினை மருத நிலத்தின் வேளாண் நிலத்தின் பெயர்

களை :- மருத நிலத்தின் உயிர் நாடிச் சொல்

களைஞர் :- களை எடுப்பவர்

களரி :- போர்க்களம்,அரங்கம்

களர்:- நாகரிகத்தின் இடையில் கண்டுபிடிக்கப்பட்ட உப்பு நிலத்தின் பெயர்

களமர்:- களத்தில் உழுத மருத நில மக்களின் பெயர்

களவி :- உலகம் தொடர்ந்து இயக்க காரணமான தலைவன்,தலைவி கூடுதல்....!

களாசம் :- பிரம்பு

களி :- செருக்கு, இன்பம்

களேபரம் :- உடல்

கலகம் :- போர்

கலப்பை :- மருத நில வேளாண் கருவி

கலம் :- கப்பல்

கலவர் :- பரதவர்

கலியன் :- சனீஸ்வரர்

கழி :- கடல்

கழியர் :- பரதவர்

என நாகரிகத்தை வளர்த்தவர்களின் பெயர்களும், வலிமையின் பெயர்களும் கள, கல, கழ போன்ற சொற்களில் இடம்பெறும்...!

சரி இதற்கும் சிந்துசமவெளி நாகரிகத்திற்கும்,தமிழ் வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்.....? இந்த நாகரிகத்தை எடுத்த சென்ற மக்களின் வேராக இரண்டு தமிழ் பழங்குடிகள் அடையாளப்படுகிறார்கள்.


களவர், மழவர் - ஏன் இவ்விரு பழங்குடிகளை எடுத்தார் என்றால்...!

சிந்துசமவெளியில் கிடைத்த குறியீடு எழுத்துகளின் அதிகமாக உள்ள எழுத்துகளின் அடுத்த பரிணாமம். கள, மழ என்றே ஆரம்பிக்கிறது. அதற்கான குறியீடு விளக்கத்தை இனைத்துள்ளேன். இலக்கியரீதியாகவும் இரு பழங்குடிகளாக களவர், மழவர் அடையாளம் காணப்படுகிறார்கள்.

மூவேந்தர்களில் மூத்தவராக அறியப்படும் பண்டையனாகிய பாண்டியனை, ஆகோள் மூதூர் கள்வர் என்று அகநானூறில் பாண்டிய மன்னரை பசுக்களை கவர்ந்து செல்லும் கள்வர் தலைவர் என்று அகநானூறு குறிப்பிடுகிறது

கிபி50ல் வாழ்ந்த மதுரை கணக்காயர் “கள்வர் பெருமகன் தென்னன்” என்று பாண்டிய மன்னனை கள்வர் தலைவர் என்று பாடியுள்ளார். 

வேங்கடத்தை ஆண்ட வலிமைமிக்க மன்னரான புல்லி அரசரை “கள்வர் கோமான் புல்லி” என்று கள்வர் தலைவர் என்று அகநானூற்றில் அறியப்படுகிறார்.


களவர் தலைவராக புல்லி எப்படி வருகிறாரோ. அதேபோல் மழவர் தலைவராக ஓரி வருகிறார். அதனை அகநானூறில் “மழவர் பெருமகன் மாவள் ஓரி” என மழவர் தலைவராக ஓரி அடையாளம் காட்டப்படுகிறார்.

மேலும் அகநானூறு 61ல் மழவர்களுக்கென்று தனி நாடு இருந்ததை மழபுலம் என கூறுகிறது. இளம்பூரணாரும் மழவர் நாடு என்றே சுட்டிக்காட்டுகிறார். மழவர்களே வெட்சி மற்றும் கரந்தை எனப்படும் ஆகோள் பூசல்களில் ஈடுபடும் வீரர்களாக வருகிறார்.

அம்மழவர்களை அடக்கிய களவர் தலைவர் புல்லி என அகநானூறு உரைக்கிறது.

“மழபுலம் வணங்கிய மாவண் புல்லி”

மழவர் என்போர் இளையர் என தொல்காப்பியர் விளக்கம் கொடுக்கிறார்.


கள்வர் கோமான் புல்லி அகநானூறு 83ல்

“இளையர் பெருமகன் புல்லியாகவும் அறியப்படுகிறார்.



சோழனையும்:- இளையர் பெருமகன் - தொகுபோர்ச் சோழன்


ஆக களவர், மழவர் இருவரும் ஒரே புள்ளியில் தான் வருகிறார்கள்.

இன்றும் கள்ளர்களில் இளம்பூண்டார், மழவர், மழவரார், மழவராயர், அதியமார், கோவலர் பட்டம் உள்ளதை நினைவில் கொள்ளவும்.

இவ்விரு பழங்குடியின் கள, மழ என்ற சொல்லில் இருந்தே சிந்துசமவெளி நாகரிகத்தின் குறியீடு எழுத்துக்கள் பரிணாமம் அடைகிறது.

கள :- களம், களவர், களமர், களபம்
மழ :- மலை, மட்டி, மழவர்

இவ்விரு மக்களும் மனித நாகரிகத்தின் அடிப்படை தினைகளான குறிஞ்சி,முல்லையில் பெரும்பான்மையாக அடையாளப்படுகின்றனர்.

இலக்கியரீதியாக :- களவர்,மழவர்,கோவலர்,ஆயர் 

கலாச்சாரரீதியாக :- ஏறுதழுவுதல்,ஆநிரை கவர்தல்

இன்றும் தமிழ் நாட்டில் ஏறுதழுவுதல் 119 கள்ளர் நாடுகளிலும் தொடர்ச்சியாக இன்றும் விளையாடப்படுவது அனைவரும் அறிந்ததே...!

இதற்கு முன்பாக ஏறுதழுவுதல் பதிவை பார்க்கவும்.

ஆக ஐராவதம் மகாதேவன் ஐயா அவர்கள் சிந்துசமவெளி நாகரிகம் என்ற ஆதித்தமிழர் நாகரிகம் தற்போது வாழும் கள்ளர் சமூகம் என்று ஆணித்தனமாக ஊன்றியுள்ளார்.

இதற்கு வழுசேர்க்கும் விதமாக ஆசியாவின் மிகப்பழமையான டிஎன்ஏவான M130y மதுரையில் உள்ள கள்ளர் சமூகத்திற்கு உள்ளதை அறிவியல்ரீதியாகவும் உறுதி செய்தது.

சரி களவர், மழவர் இன்னொரு பெயரில் அழைக்கப்பட்டனர்.

அது யார்...?

அதேபோல் களவரும்,மழவரும் தங்களுடைய வீரத்தால் இருவரும் மறத்தின் அடிப்படையில் மறவர் என அழைக்கப்பட்டனர்.

ஆகோள் பூசலில் ஈடுபட்ட பெரும்பாலான நடுகற்கள் களவர், மழவர் என்றே வழங்கப் பெருகிறது.


களவர்,மழவர் மறவர் என அழைக்கப்பட்டதன் இன்னொரு காரணமாக, முன்னாள் தொல்லியல் துறை இயக்குனர் இரா பூங்குன்றன் அவர்கள் அகநானூறு இலக்கிய பாடல் மூலமாக விளக்குகிறார்:-


ஆகோள் பூசலில் மழவர்கள் வெட்சி மழவராகவும்,கரந்தை மழவராகவும் நின்று போரிடுகிறார்கள். அப்பாடலில் மழவர்கள் நிரை கவர்ந்த போது மறவர்கள் அதனை மீட்டனர் என்று கூறுகிறது. மழவர் என்பதின் ழகரம் கெட்டு றகரமாக திரரிந்து மறவர் என வழங்கப் பெறுகிறது. ஆக மழவர் என்பதின் போலியாக மறவர் என்னும் சொல்லாடல் வருகிறது.














ஆகையால் ஆகோள் பூசலில் அதாவது வெட்சி,கரந்தையை மறவர்,மழவர் என்பதன் போலி உறுதிபடும் போது மழவரே ஈடுபட்டுள்ளார்கள் என்பது இங்கு உறுதியாகிறது.


பாடல் வரிகள்:-


நுழைநுதி நெடுவேல், குறும்படை மழவர்

முனைஆத் தந்து முரம்பின விழித்த
வில் ஏர் வாழ்க்கை விழுந்தொடை மறவர்

இதேபோல் அகநானூறு பாடலில்:-




ஆகோள் மூதூர் கள்வன் என பாண்டிய மன்னனை கள்ளர் குடியாக குறித்து பின்பு அதே பாண்டிய மன்னனை மறத்தினால் தென்னவன் மறவன் என்று அழைக்கப் பெறுகிறார்.

ஆக களவர்,மழவர் இருவரும் மறத்தினால், மறவராக அழைக்கப் பெற்று பின்பு மறவர் என்ற ஜாதி நிலைக்கப் பெற்றது என்ற ஐராவதம் மகாதேவன் ஐயாவின் கூற்று உறுதியுடன் ஊன்றி நிலைத்துவிட்டது.




அதேபோல ஆகோள் பூசலில் ஈடுபட்டு நடுகல்லில் நிற்கும் களவர்களை தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுகளையும் இனைத்துள்ளேன்.

மேலும் மூவேந்தவரின் முதற் போர் முறையான வெட்சி,கரந்தை போர்கள் இங்கு களவராகவும், மழவராகவும் அறியப்பெற்று, அவர்கள் மூதின் மறவராக உள்ளார்கள் என்ற இரா பூங்குன்றனாரின் கருத்து இங்கு மேலும் வலுப்பெறுகிறது.




அதுமட்டுமில்லாமல் ஆகோள் பூசலில் ஈடுபட்ட சோழ அரச மரபினருக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஶ்ரீகள்ளச்சோழன் என்றே 10ஆம்நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டில் கிடைக்கப் பெறுகிறது.




மழவர் என்போர் இலக்கியம் முதல் கல்வெட்டு வரை இன்றும் கள்ளராக அறியப்படுகின்றனர்.



புல்லி அரசரை இளையர் பெருமகன் என்று மழவர் தலைவராக அறியப்படும், கள்ளர் பெருமகனாக வருகிறார்.



மேலும் கள்ளர் குல கொடும்பாளூர் வேளிர் தங்களின் மறத்தினால் ஒரு கல்வெட்டில் மறவன் என்று அழைக்கப்பட்டனர்.

ஆக களவர்,மழவர் இருவரும் கள்ளர் குடியாக நிலைக்கப் பெருகின்றனர்.


இன்றும்

மழவர்
மழவராயர்
அதியமார்
மலையமான்
இளம்பூண்டார்

என கள்ளர் பெருங்குடிகள் தங்கள் பட்டமாக வரலாறை தாங்கி நிற்கிறார்கள்.


முதல் ஆகோள் பூசல் கல்வெட்டான புலிமான் கோம்பை கல்வெட்டு ஆசியாவில் குடியேறிய முதன் மாந்தராக M130y அறியப்பெறும் பிறமலைக் கள்ளர்களின் பூமியிலே கிடைக்கப் பெறுகிறது.


மேலும் மதுரையில் கிடைத்த 2000வருடம் பழமையான ஜல்லிகட்டு ஓவியம் கூட பிறமலைக் கள்ளர் நாட்டில் வரும் மேட்டுப்பட்டியிலே கிடைக்கப் பெருகிறது.


பழமையான ஜல்லிக்கட்டு கூட உறங்கான்பட்டி,கரடிக்கல் ஜல்லிகட்டு என ஆவணங்களுடன் உயிர்ப்புடன் உள்ளது.


உறங்கான்பட்டி : மத்தம் மேல் நாட்டு கள்ளர்களும்

கரடிக்கல் : பிறமலைக் கள்ளர்களாலும் நடத்தப்படுகிறது.



ஆகோள் பூசலும், பூர்வகுடிகளும் .

உலகிலே பழமையான கிரேக்க இதிகாசங்கள் இலியட், ஒடிசியில் கடவுள்களும் மிகப்பெரும் மன்னர்களும் ஆகோள் பூசலில் ஈடுபட்டத்தை மிக பெருமையாக பேசியிருப்பார் ஹோமர். கிரேக்கர்களின் பெரிய கடவுள் ஸுசின் மகன் ஹெர்மிஸ்( Messenger of Gods), தன் தகப்பனிடம் தோற்றுப்போன சூரிய கடவுள்களில் ஒருவரான ஹைப்பர்ரியானிடம் மிக லாவகமாக மாடு திருடினார் என்றிருக்கிறது. டிராய் போரில் ஈடுபட்ட அனைத்து கிரேக்க மன்னர்களும் டிராய் குடிகளிடம் ஆகோள் பூசலில் ஈடுபட்டார்கள். ஆடு மாடுகள் அபகரிப்பது திருடுவது மீட்பது என்பது ஆதி கால கடவுள்களுக்கும் கடவுள்களுக்கும் ஆதி போர்குடி சமூகங்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று. இந்நாட்களில் அது இகழ்வாக பார்க்க படுகிறது கற்கால நெறிமுறைகள் தெரியாத குடிகளால்.
கள்ளர்களும் கொண்டையங்கோட்டை மறவர்களும் ஆகோள் பூசலில் முழு மெட்ராஸ் ப்ரெசிடென்சியில், அதாவது ஆந்திர ஒடிசா எல்லை வரை அவர்களுக்கு நிகராக யாரும் இல்லை என்கிறார்கள் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர்கள். அது அவர்களுக்கு நீங்காத சந்தோஷத்தை கொடுத்தது என்கிறார்கள். அது புறநானுற்றில் சொல்லப்பட்ட போர்குடி பழக்கம் என்பதால் பிற்காலத்திலும் ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. முழு உலகிலும்
பழங்கால கடவுள்களுக்கும் , அரசர்களும் மாவீரர்களும் மட்டுமே உரித்தான ஒரு போர் நெறிமுறை ஆகோள் பூசல். 







அதேபோல் களவரும், மழவரும் தங்களை தொழில் அடிப்படையில் அகம்படியர் என்றும் அழைத்துள்ளனர்.


அகம்படியர்:-


இச்சமூகத்தை பலரும் பல கருத்துகளை எழுதி வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய உன்மையான வரலாறாக சேரரிடம் இருந்து ஶ்ரீஅருண் மொழித் தேவர் காலத்தில் எளிதாக அறியப் பெறலாம்.


ஏனென்றால் முதன் முதலில் அகம்படி என்ற வார்த்தையை பயன்படுத்தி, அதனை ஒரு தனித்துறையாக கட்டமைத்தவர் இராஜ இராஜ சோழரே...!


ஆம் அகம்படி அணுக்க வில்லி என இராஜ இராஜ சோழரின் மெய்காவல் அதிகாரிகளாக கல்வெட்டில் வருகிறார்கள்.


மேலும் அகம்படி நியாயங்கள் என்று ஒரு தனித்துறையை உருவாக்கினார் இராஜ இராஜ சோழர், அத்துறையில்:- நிர்வாகம் கோவில் கருவூல நிர்வாகம் கடற்படை வில்லிகளாகவும் வருகிறார்கள்.




ஏன் இவர்களுக்கு அருண் மொழித் தேவர் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்றால், சேர நாட்டை முழுமையாக கைப்பற்றியவுடன் பல சேர அரையர்கள் சோழ நாட்டில் படைத்தலைவர்களாகவும்,நிர்வாக அதிகாரிகளாகவும் தஞ்சை சோழ நாட்டில் ஐக்கியமாகினர்.




அவ்வாறு ஐக்கியமான அரையர்களும்,படைத் தலைவர்களும் தொழில் அடிப்படையில் தங்களை அகம்படி என்று அழைக்கப் பெற்றனர்.


மழவர் வழி வந்த மலையமான் வம்சத்தினர் சோழர்களிடம் அகம்படி தொழிலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகையால் அகம்படி மலையமான் என்று கல்வெட்டு கிடைக்கப் பெறுகிறது.


அதேபோல் பல்லவராயரில் ஒருவர் சோழரின் அகம்படியராக குறித்துள்ளார்.


ஏன் இராஜ இராஜர் அகம்படியர்களுக்கு இவ்வளவு சலுகைகளை கொடுத்தார் என்றால், அவருடைய தாய் அதே மழவர் குல தோன்றல் என்பதாலே மற்றும் தன்னுடைய கிளை மரபினர் என்பதாலே ஆகும்.


சரி இதற்கு களவர் குலத்திற்கும் என்ன சம்பந்தம் என்றால்...!


எந்த சேரர் குழுவினர் தங்களை சோழ நாட்டில் அகம்படி தொழிலில் நின்றார்களோ, அதே சேர குல மன்னன் தன்னை கள்வன் இனமான கோக்கண்ட ரவி என கள்ளர் இனமாகவே, கல்வெட்டு மெய்கீர்த்தியில் குறிக்கிறார்.




அதேபோல் பல்லவராயர் மரபு இன்றும் கள்ளராக பெருங்களூரில் வாழ்கிறார்கள்.....!




ஆகையால் தால் கள்ளர்,மறவர் கனத்ததோர் அகம்படியர் என பழமொழி உருவானது...!




இன்றும் சேர தலைநகரான கரூர் மற்றும் சேர மண்டலமான கோவை,திருப்பூரில் போர் மற்றும் அரசகுல தோன்றலான அகம்படியர்கள் தான் வாழ்கிறார்கள்.


மறவரும்,அகம்படியர்களும் கள்ளரில் இருந்து கிளைத்தவர்கள் என்பது என்னுடைய கூற்று மட்டும் அல்ல.


பல ஆய்வாளர்கள் மற்றும் அறிவியலின் கூற்றும் (M130y) அப்படித்தான்....!





இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் M130y விருமாண்டித் தேவரின் உறவினருக்கு பெரு நாட்டில் உள்ள மாயன் இனத்தை சேர்ந்தவரின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போவது கள்ளர்களின் உலகளாவிய நாகரிகத்தின் தொட்டிலாக வருவது, தமிழ் சமூகத்தின் பெருமை உலகளவில் கொடி கட்டிப் பறப்பது மகிழ்ச்சியே


நன்றி

அகநானூறு
கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்
தர்மபுரி மாவட்ட கல்வெட்டுகள்
விழுப்புர மாவட்ட கல்வெட்டுகள்
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்
Walking with the Unicorn
Social Organization and Material Culture in Ancient South Asia
Jonathan Mark Kenoyer Felicitation Volume
THE HINDU NEWS PAPER


ஐயா. சம்பந்தமூர்த்தி  மழவராயர் 
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு . திருச்சி பார்த்தி
திரு . ஆனான் கார்த்திக் 

அன்புடன்

சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்