சஞ்சய் சரவணன் பாண்டுரார். சொந்த ஊர் திருச்சி. அப்பா, எம்.ஏ.பி.சரவணன் பாண்டுரார். அம்மா, லட்சுமி. எனக்கு ரோல் மாடல் என்னோட தாத்தா எம்.ஏ.பி. பிச்சை பாண்டுரார். அவர் சுதந்திர போராட்டத்திலே கலந்துக்கிட்டவரு. 1932ம் வருஷத்திலே எங்க சொந்த இடத்திலே நாடக சபா ஒண்ணு தொடங்கி நடத்தினார். அந்த காலத்திலே இருந்த ஊமைப் படங்கள்ல அவர் நடிச்சு இருக்காரு. ”பக்த துருவன்”, ”சத்தியவான் சாவித்திரி”, ”சந்தனதேவன்” படங்கள்ல நடிச்சு இருக்காரு. அதை பட்சிராஜா பிலிம்ஸ் தயாரிச்சாங்க.
என் தாத்தாவோட போட்டோக்கள், விருதுகள், அவர் பயன்படுத்திய வீணை என பல நினைவு சின்னங்கள் என்னோட வீட்ல இருக்கு. அவரால சினிமாவிலே பெருசா சாதிக்கமுடியலே. அவர் பண்ண நினைச்சதை பேரனா இருந்து நான் எப்படியாச்சும் சாதிக்கணும்னு நினைக்கிறேன் .
இரண்டாம் உலகம்” ,”கவுரவம்” , ”பூலோகம்”, ”மீகாமன்”, இரும்புத்திரை, ”கவன்” நடிச்சிருக்கேன். “மடை திறந்தே 1945” ன்னு ஒரு படத்திலே இப்போ நடிச்சிருக்கேன். இந்த படம் தமிழ், தெலுங்குன்னு 2 மொழிலையும் எடுத்திருக்காங்க. ”ராபின்ஹுட்” படத்திலே நான் முக்கிய ரோல்ல நடிச்சிருக்கேன். இந்த படத்திலே மொட்டை ராஜேந்திரன் ஒரு முக்கிய ரோல்ல நடிச்சிருக்காரு. இதுவும் ஒரு வரலாற்று படம்தான்.
சினிமாவிலே நுழைஞ்சிருக்கிற நான், எல்லா ரோல்லையும் நடிக்கிற அளவுக்கு சிறந்த நடிகரா ஆகணும்னு எனக்கு ஆசை. அதுதான் என்னோட கோல். எந்தவொரு ரோல்லையும் நடிக்க நான் தயங்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அதுக்கு தேவையான எல்லா பயிற்சிகளையும் தொடர்ந்து செஞ்சுக்கிட்டு வர்றேன். ரொம்ப சீக்கிரமா அந்த இலக்கை அடைஞ்சிடுவேன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.