செவ்வாய், 1 அக்டோபர், 2019

கொல்லத்தரையர் / கொல்லத்திரையர்


கொல்லம் என்பது சேரநட்டின் ஒரு பகுதியாகும். இராசராச சோழன் படை எடுத்து கொல்லத்தை வென்றான். இந்த வெற்றிக்கு தலைமை தாங்கிய மரபினர்களுக்கு அளித்த பட்டமே கொல்லத்தரையன், கொல்லமுண்டார் என்பதாகும். இராசமகேந்திரசோழன் கொல்லத்தரையன் என்னும் சிறப்புப் பட்டத்தை பெற்றிருந்தான் என்று கல்வெட்டுகள் உரைக்கிறன. இப் பட்டமுடைய கள்ளர்கள் திருவையாறு திருசென்னம்பூண்டி, தஞ்சை மாவட்டம் உஜ்ஜினி, உடுமலைப்பேட்டை காரத்தொழுவு முதலிய ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.



இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான் கொல்ல தேசம், கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டார். முடிகண்டநல்லூர் என்னும் ஊரில் நடைபெற்ற போரில் வெற்றி கொண்ட பகுதியை முடிகண்டநல்லூர் என்னும் பெயரில் ஒரு கிராமதை உருவாக்கினார். அப்பொழுது இராசராச சோழனுக்கு முடிகொண்டான் என பெயர் சூட்டப்பட்டது.



கொல்லங்கொண்டான் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கொல்லத்தினையும் சுற்றுப்புறப் பகுதிகளினையும் கைப்பற்றியதனால் 'கொல்லங்கொண்ட பாண்டியன்' என அழைக்கப்பட்டான் என திநெல்வேலி சேர மாதேவி கல்வெட்டு குறிப்பிடுகிறது.



இறையிலி தேவதானம்:- (கோவிலுக்கு தானம் கொடுத்தல்) அதில்கையொப்பமிட்ட கள்ளர்குல அரையர்கள் பலர்.  அதில் கொல்லத்தரையன் மரபினர்களும் உள்ளனர். 

கொல்லத்திரையர், தென்னவராயர் மற்றும் வங்காரமுத்தரையர் 

வங்காரமுத்தரையர் மகன் கொல்லத்தரையராக வருகிறார். கள்ளர் மரபில் இதை போல பண்டாரத்தார் மகன் சிங்கபுலியார் வருகிறார்.

புதுக்கோட்டை கல்வெட்டுகள் 








திவ்யதேசங்களுக்கு கைங்கர்யங்கள் செய்யும் கொல்லத்தரையர்கள்
திருவரங்கம்  வைகுந்த ஏகாதசி முதல் நாள் மாலை பெரியபெருமாள் அமுதுபடி சேர்த்தல் ஸ்ரீமான். வீ. எதிராஜ கொல்லத்தரையர் வகையறா (ஸ்ரீபராசரபட்டர் சிஷ்யர்கள்)

வைகுந்தஏகாதசிக்கு மறுநாள் துவாதசி ஸ்ரீ உடையவர் சன்னதி காலை அமுதுபடி மற்றும் மரியாதை ஸ்ரீமான்.எதிராஜ கொல்லத்தரையர் வகையறா (ஸ்ரீபராசரபட்டர்சிஷ்யர்கள்)

திருஅத்யன உற்சவம்20 நாட்கள் ததியாராதனை ஸ்ரீமான்.எதிராஜ கொல்லத்தரையர் வகையறா (ஸ்ரீபராசரபட்டர் சிஷ்யர்கள்)

திருப்பேர்நகர் நம்மாழ்வார் மோட்சம் மண்டகபடி மற்றும் மரியாதை ஸ்ரீமான்.எதிராஜ கொல்லத்தரையர் வகையறா  (ஸ்ரீபராசரபட்டர் சிஷ்யர்கள்)


திரு. ஆறுமுகம் கொல்லத்திரையர்

"ஆன்மிக அருட்தொண்டர்", "காந்தியவாதி" பொட்டுக்காரர் என்கிற தெய்வ அருள் திரு. ஆறுமுகம் கொல்லத்திரையர். இவர் தந்தையின் பெயர் சாமிய்யா கொல்லத்திரையர் அவருடைய தந்தையின் பெயர் கருப்பைய்யா கொல்லத்திரையர்.

பிராமணர்கள் தோற்றிட வேண்டும் இவரின் ஆன்மிகத்திலும், தூய்மையிலும். அயராத உழைப்பிற்கு சொந்தக்காரர். எல்லோரிடமும் அன்பு பாராட்டியவர், கூடநாணலில் எந்த ஒரு பொது நிகழ்விலும் முன்நிற்பவர். 

சுற்றுப்புற கிராமத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு திருமணம் முடித்தவர், அவரது கிராமத்தில் உள்ள வீட்டு மனைகளில் முக்கால் வாசி இவர் பூமி பூஜை செய்து வைத்து தொடங்கியதுதான். சிறந்த மிதவாதி, யாருக்கும் தீங்கு நினைக்காத மாமனிதர். இவர் பாடும் பக்திப்பாடல்களிலும், பூஜையினாலும் ஊரில் ஆன்மீக காற்று அடிக்கும்.

திரு.கந்தசாமி சென்னன்டார் அவர்கள் என் தாத்தா கருப்பைய்யா கொல்லத்திரையருக்கு உற்ற நண்பர். திருக்காட்டுப்பள்ளி பஞ்சாயத்து ஃபோர்டு தேர்தலில் கந்தசாமி சென்னன்டார் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டபொழுது அப்பொழுதெல்லாம் நான் சிறுவன். ஒன்பத்துவேலி திரு.சுயம்பிரகாசம் தொண்டைமார், கூடநாணல் திரு.கிருஷ்ணசாமி நாட்டார், திரு. ஆறுமுகசாமி கொல்லத்திரையர்இவர்கள் அனைவரும் இணைந்து சென்னன்டாருக்காக தேர்தலில் கடுமையாக உழைத்தனர். காலை 7 மணிக்கெல்லாம் சென்னன்டாரின் ப்ளசர் தாத்தாவை அழைக்க வந்துவிடும்.தாத்தா அதற்கு முன்பே வெள்ளன எழுந்து தயாராக இருப்பார். சாதாரண கதர் ஆடையோடு அவர்கள் செல்வதை காணக்கண்கோடி வேண்டும். இரவு 11 மணிக்குதான் வீடுதிரும்புவார்.


பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்று மீண்டும் அவர்கள் ஒருவரையொருவர் கண்ட இடம் கண்டமங்கலம் என்றும் கூடியது கூடநாணலில் என்றும் முன்னோர்களின் கர்ணபரம்பரைச் செய்தி உள்ளது. கூடநாணல் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள முதல் ஊராகும். இங்கு கொல்லத்திரையர் மரபினரே அதிகம் உள்ளனர்.  

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் இருந்து அகரம்பேட்டை வழியாக கல்லணை செல்லும் வழியில் அமைந்துள்ள உஞ்சினி கிராமம் . கொல்லத்தரையர் திருப்பணிகள்  











என்றும் அன்புடன் : பரத்  இராமகிருஷ்ணன் கூழாக்கியார்

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்