கள்ளர் மரபினரின் வீரமரணமடைந்த இந்திய இராணுவவீரர்கள்
இளவரசன் காளிங்கராயர்
காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டார் பகுதியில், நேற்று முன்தினம் ஏற்பட்ட பனிச்சரிவில் புதையுண்டு, 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கண்ணந்தங்குடி கீழையூரைச் சேர்ந்த பூமிநாதன் காளிங்கராயர் - அமுதா தம்பதியரின் மகன் இளவரசன் காளிங்கராயர்.
பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள இவர், கடந்த 2012-ல் ராணுவத்தில் சேர்ந்து ஜம்மு- காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் 51 ராஷ்ட்ரீய ராயல் படைப் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குரேஷ் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து பேசிய ராணுவ அலுவலர், இளவரசன் காளிங்கராயர் பலியான தகவலை அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
உயிரிழந்த இளவரசனின் தந்தை பூமிநாதன் கூறும்போது, “கடந்த 4 நாட்களுக்கு முன் தொலை பேசியில் பேசிய இளவரசன் அடுத்த வாரத்தில் வருகிறேன் என்று தெரி வித்தார். இந்த முறை வரும்போது திருமணம் செய்துவைக்கத் திட்ட மிட்டிருந்தோம். இப்படி ஆகும் என கனவிலும் நினைக்கவில்லை. என் மகன் உடலை விரைந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
கண்ணந்தங்குடி கீழையூரைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. உயிரிழந்த இளவரசனுக்கு சகோதரி சுதா, சகோதரர் வினோத்குமார் உள்ளனர்.
சியாச்சின் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி குமார், 36, உடல் நேற்று சொந்த ஊரான குமணந்தொழுவில் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள குமணன்தொழுவைச் சேர்ந்த சீனித்தேவர்- பஞ்சம்மாள் மகன் குமார், 36. 17ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த இவருக்கு சமீபத்தில் அதிகாரி நிலையிலான 'ஹவில்தார்' பதவி வழங்கப்பட்டது.
இவருக்கு மனைவி கவிதா, 26, மகன் ரியாஸ், 5, உள்ளனர். பிப்., 3ல், பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். நேற்று முன்தினம் உடல் தனி விமானத்தில் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குமணன்தொழுவில் உள்ள மயானத்தில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சொக்கத்தேவன்பட்டியைச் சேர்ந்த கணபதித்தேவர்-ரஞ்சிதம் தம்பதியின் 2-ஆவது மகன் க. கணேசன் (26). இவர், தனது 18-ஆவது வயதில் ராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்தார். மெட்ராஸ் ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சியாச்சின் மலைப் பகுதியில் பணியாற்றி வந்தார். பனிச்சரிவில் சிக்கிய கணேசன்உயிரிழந்தார்.
சொக்கத்தேவன்பட்டியில் உள்ள அவரது வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த வீரர் கணேசனின் சடலத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். சென்னை ரெஜிமெண்ட், கோவை ரெஜிமெண்ட்டின் முதன்மை கமாண்டர்கள் தலைமையிலான ராணுவ வீரர்கள் ராணுவ மரியாதையுடன் மயானத்துக்கு வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தகன மேடை அருகே வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், சென்னை என்சிசி பிரிவு துணை இயக்குநர் வி.கே.கார்க், காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்று 21 முறை வானத்தை நோக்கி சுட்டு மரியாதைச் செலுத்தினர். பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்மாதிரி வீரர்: மறைந்த ராணுவ வீரர் கணேசனின் உறவினர்கள் கூறியதாவது:
சொக்கதேவன்பட்டியில் இருந்து இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் ராணுவத்தில் பணியாற்றி உள்ளனர். ஆனால், பணியில் இருந்த காலத்தில் இறந்தவர் கணேசன் மட்டுமே. இந்த வீரமரணம் மூலம் இந்த ஊருக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவரது தியாகம் எங்கள் ஊரைச் சேர்ந்த பல இளைஞர்களை ராணுவத்தில் சேரத் தூண்டியுள்ளது. இந்த ஊர் இளைஞர்களுக்கு அவர் என்றுமே ஒரு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார் என்றனர்.
கணேசனின் சகோதரர் சதீஷ்குமார் கூறியதாவது: கணேசனுக்கு விவசாயம் செய்வதில் அதிக ஆசை இருந்தது. ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் விவசாயம் செய்ய வேண்டும் என அடிக்கடி கூறுவார். அவர் பணியில் சேர்ந்து 7 ஆண்டுகள் முடிந்துள்ளது. அவருக்கு திருமணம் செய்வதற்கு பெண் பார்த்து வந்த நிலையில், இதுபோன்ற அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது என்றார்.
2020-07-24-ம் தேதி மாலை ஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டம் ஹிராநகர் எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த திருவாரூர் மாவட்டம் வடுவூர் சேர்ந்த ஹவில்தார் எஸ் திருமூர்த்தி புள்ளவராயர் துப்பாக்கி குண்டு தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்தார்.
குமார்த்தேவர்

கணேசன் தேவர்

திருமூர்த்தி புள்ளவராயர்