- வளரி வரலாறு 👈Click above
- திருமங்கையாழ்வார் வரலாறு👈Click above
- அம்பலகாரர் / அம்பலம் வரலாறு👈Click above
- வாண்டையார் வரலாறு👈Click above
- பல்லவராயர் வரலாறு👈Click above
- மழவராயர் வரலாறு👈Click above
- தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு👈Click above
- கல்லணை, கல்லணை வரலாறு👈Click above
- தேவர் வரலாறு👈Click above
- அறந்தாங்கி தொண்டைமான்👈Click above
- காடவராயர் வரலாறு👈Click above
- சோழர்கள் சாதி👈Click above
"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
வெள்ளி, 24 ஜனவரி, 2025
வரலாற்று பக்கங்கள் - II
சனி, 11 ஜனவரி, 2025
கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை - 2
அத்திரியன்
சாமந்தர்
சாமந்தர் என்றால் அமைச்சர், படைத்தலைவர், அரச தலைவர்.
தோளர் பட்டம் :
வத்தனாக்கோட்டை பகுதியில் தோளர் என்று பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்கின்றனர். சங்க இலக்கிய பாடல்களில்
" நெற்றியிற் கண்ணர் காற்பெருக் தோளர் - நீறணி மேனியர் அனேகர்" பெரிய தோளர்- தோள்களைக் கொண்டவர்களுக்கும்.
"மைகொள் கண்டர்எண் தோளர்" கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும், எட்டுத் தோள்களையும்
தமிழ் வீர மறவர்கள் கல்லெனத் திரண்ட தோளர்; கட்டம்மைந்த மேனியர்; முறுக்கு மீசையர்; தருக்கு மொழியினர்; வறிய நடையினர்; சறிய விழியினர் என்று வீரர்கள் போற்றப்படுகின்றனர்.
தோளர் என்பது வலிமையான தோள்களை உடையவர் என்ற பொருளில் அமைந்த பட்டம் ஆகும்.
கீருடையார் - பட்டம் :
உடையான் என்றால் உடையவன் என்று பொருள். கீர் உடையான் என்றால்
கீரம் என்பதற்குச் சொல் ' என்பது பொருள் மேலும் சீரம் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பால் என்பது பொருள். அச்சொல் தமிழில் கீரம்" என்று கூறப்படும். பால் வளம் உடையவர் அல்லது சொல் வளம் உடையவர் என்ற பொருளை தருவது கீருடையான்.
தமிழ் காத்த புலவரே நக்கீரர் என்பவர். . நக்கீரம் என்ப தற்கு நல்ல சொல் என்பது பொருள். இவர் நல்ல சொற்களை அமைத்துப் பாட்டு இயற்று வதில் வல்லவர். ஆதலின் நக்கீரர் என்ற பெயரைப் பெற்ருர் என்று சிலர் கூறுவர். நக்கீரம் என்பதற்கு இனிய பால் என்பது பொருள். நக்கீரர் இனிய பாலைப் போன்ற சுவையான பாட்டுக்களை இயற்றும் புலவர். ஆதலால் நக்கீரர் என்ற பெயரைப் பெற்ருர் என்று சிலர் கூறுவர்.
கீரனூர், கீரமங்கலம், கீரன்குடி, எனப் பெயர் கொண்டு பல ஊர்கள் சிறந்து இன்றும் விளங்குகின்றன
மன்னசிங்காரியர் அல்லது மன்னசிங்காரி :
மன்னசிங்கரி யர் (எ) மன்னசிங்காரியர்
மன்னசிங்கரி = மன்ன (மன்னன்) + சிங்கரி ( சிங்கம்)
"மன்ன எம்பிரான் வருக என்எனைமாலும் நான்முகத் தொருவன்"
மன்ன - மன்னனே, எம்பிரான் - எம் தலைவனே, எனை வருக என் - என்னை வருக என்பாய்; மாலும் நான்முகத்து ஒருவனும் - திருமாலும் நான்கு திருமுகங்களுடைய ஒப்பற்றவனாகிய பிரமனும்.
மிகப்பிரபலமான நரசிம்மர் தலம் சிங்கரி கோவில், வைணவ மடத்தின் முதல் ஜீயருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு. நரசிம்மர் மற்றோரு பெயர் சிங்கரி.
மன்னசிங்காரியர் - மன்னரில் சிங்கம் போன்றவர்கள் என்று பொருள்
அரையர்களில் சிங்கமங்கலத்தை அரசாக கொண்டு பல கள்ளர் அரையர்கள் வாழ்ந்துள்ளனர். மழவராயன், சிவலோகமுடையானான தெற்கிலரையன், ஆயிரவனான அயிலாளயன், வடக்கிலரையன் தேவன் சாந்தன் போன்றோர் கிபி13ஆம் நூற்றாண்டு வரை இருந்துள்ளனர். சோழர் வீழ்ச்சிக்கு பின்பு முறையே பாண்டிய பேரரசின் கட்டுப்பாடில் இருந்துள்ளனர்.
பட்டங்கட்டியார் :
மாவெட்டியார் :
மதயானைகளைத் அடக்கிக் கீழ்ப்படுத்தித் தம்வசத்தில் வைத்து நடத்துந் திறமுடையராய் அவற்றிற்கு மாவெட்டி யென்னுங் கருவி பயன்பட்டது. அந்த மத யானைகளை அடக்கிக் கீழ்ப்படுத்தித் தம்வசத்தில் வைத்துக்கொள்ளக்கூடிய மாவீரர்களுக்கு உடைய பட்டம் " மாவெட்டி " . அம்மாபேட்டை, அரசிவபுரம் கிராமத்தில் மாவெட்டியார் பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.
கவிராயர் :
கவிராயர் என்ற பட்டம், அதற்கு அர்த்தம் என்னவென்று கேட்டால், கவிபாடுவதில் வல்லவர் என்பர். கல்வெட்டை கொஞ்சம் அலசியதில் அவர் வீட்டுக்கு அருகேயுள் நாடு பெயர் கவிர்நாடு, கவிர்நாட்ரயர் மருவி கவிராயராக மாறிவிட்டது - ஆய்வு . திரு. யாஊயாகே பார்த்தி
அச்சுதபண்டாரம் :
கள்ளர்களின் அச்சுதபண்டாரம் என்ற பட்டம் அரிசி கிடங்கின் பாதுகாவலர்களின் பட்டம் ஆகும். பண்டைய காலங்களில் கருவூலம் காப்பவர்களின் பட்டமாக பண்டாரத்தார் பட்டம் இருந்தன.
பண்டு என்றால் பொருள். தஞ்சை சோழர்கால சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம் எனவும் இந்நூலகத்தில் பணி புரிந்தவர்கள் சரசுவதி பண்டாரிகள் எனவும் வழங்கப்பட்டனர்.
அச்சுதக் களப்பாளன், அச்சுத விக்கிரந்தன், அச்சுத ராயன் என்ற பெயருடைய மன்னர்கள் வாழ்த்திருந்தாலும் கள்ளர்களின் பட்டமான அச்சுதம் என்பது அரிசினை குறிப்பதற்காக அமைகிறது.
மங்கல அச்சுதம் - மங்கலமாகிய அறுகும் அரிசி யும்
பண்டாரம் என்பதற்கு அகராதி தரும் விளக்கம்
1. பொக்கிஷம். தன்னடியவர்க்கு மூலபண்டாரம்வழங்குகின்றான் (திருவாச. 36, 5).
2. பொக்கிஷசாலை பண்டாரங்காமன் படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123).
3. Granary; களஞ்சியம் Cm.
4. இராசாங்கம் பண்டாரத்தோட்டம்.
5. இனிய தின்பண்டம் (W.)
6. பல்பண்டம். (சூடா.)
7. பூசாரிகள்பிரசாதமாகக்கொடுக்கும் மஞ்சள்நிறப்பொடி. (W.)
8. பரதேசி
9. சைவமடத்தைச் சார்ந்த துறவி
10. பூக்கட்டி விற்கும் ஒருவகைச் சாதியார்.
கீரம் என்பதற்குச் சொல் ' என்பது பொருள் மேலும் சீரம் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பால் என்பது பொருள். அச்சொல் தமிழில் கீரம்" என்று கூறப்படும். பால் வளம் உடையவர் அல்லது சொல் வளம் உடையவர் என்ற பொருளை தருவது கீருடையான்.
தமிழ் காத்த புலவரே நக்கீரர் என்பவர். . நக்கீரம் என்ப தற்கு நல்ல சொல் என்பது பொருள். இவர் நல்ல சொற்களை அமைத்துப் பாட்டு இயற்று வதில் வல்லவர். ஆதலின் நக்கீரர் என்ற பெயரைப் பெற்ருர் என்று சிலர் கூறுவர். நக்கீரம் என்பதற்கு இனிய பால் என்பது பொருள். நக்கீரர் இனிய பாலைப் போன்ற சுவையான பாட்டுக்களை இயற்றும் புலவர். ஆதலால் நக்கீரர் என்ற பெயரைப் பெற்ருர் என்று சிலர் கூறுவர்.
கீரனூர், கீரமங்கலம், கீரன்குடி, எனப் பெயர் கொண்டு பல ஊர்கள் சிறந்து இன்றும் விளங்குகின்றன
மன்னசிங்காரியர் அல்லது மன்னசிங்காரி :
மன்னசிங்கரி யர் (எ) மன்னசிங்காரியர்
மன்னசிங்கரி = மன்ன (மன்னன்) + சிங்கரி ( சிங்கம்)
"மன்ன எம்பிரான் வருக என்எனைமாலும் நான்முகத் தொருவன்"
மன்ன - மன்னனே, எம்பிரான் - எம் தலைவனே, எனை வருக என் - என்னை வருக என்பாய்; மாலும் நான்முகத்து ஒருவனும் - திருமாலும் நான்கு திருமுகங்களுடைய ஒப்பற்றவனாகிய பிரமனும்.
மிகப்பிரபலமான நரசிம்மர் தலம் சிங்கரி கோவில், வைணவ மடத்தின் முதல் ஜீயருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு. நரசிம்மர் மற்றோரு பெயர் சிங்கரி.
மன்னசிங்காரியர் - மன்னரில் சிங்கம் போன்றவர்கள் என்று பொருள்
அரையர்களில் சிங்கமங்கலத்தை அரசாக கொண்டு பல கள்ளர் அரையர்கள் வாழ்ந்துள்ளனர். மழவராயன், சிவலோகமுடையானான தெற்கிலரையன், ஆயிரவனான அயிலாளயன், வடக்கிலரையன் தேவன் சாந்தன் போன்றோர் கிபி13ஆம் நூற்றாண்டு வரை இருந்துள்ளனர். சோழர் வீழ்ச்சிக்கு பின்பு முறையே பாண்டிய பேரரசின் கட்டுப்பாடில் இருந்துள்ளனர்.
மாவெட்டியார் :
மதயானைகளைத் அடக்கிக் கீழ்ப்படுத்தித் தம்வசத்தில் வைத்து நடத்துந் திறமுடையராய் அவற்றிற்கு மாவெட்டி யென்னுங் கருவி பயன்பட்டது. அந்த மத யானைகளை அடக்கிக் கீழ்ப்படுத்தித் தம்வசத்தில் வைத்துக்கொள்ளக்கூடிய மாவீரர்களுக்கு உடைய பட்டம் " மாவெட்டி " . அம்மாபேட்டை, அரசிவபுரம் கிராமத்தில் மாவெட்டியார் பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.
கவிராயர் :
அச்சுதபண்டாரம் :
கவிராயர் என்ற பட்டம், அதற்கு அர்த்தம் என்னவென்று கேட்டால், கவிபாடுவதில் வல்லவர் என்பர். கல்வெட்டை கொஞ்சம் அலசியதில் அவர் வீட்டுக்கு அருகேயுள் நாடு பெயர் கவிர்நாடு, கவிர்நாட்ரயர் மருவி கவிராயராக மாறிவிட்டது - ஆய்வு . திரு. யாஊயாகே பார்த்தி
கள்ளர்களின் அச்சுதபண்டாரம் என்ற பட்டம் அரிசி கிடங்கின் பாதுகாவலர்களின் பட்டம் ஆகும். பண்டைய காலங்களில் கருவூலம் காப்பவர்களின் பட்டமாக பண்டாரத்தார் பட்டம் இருந்தன.
பண்டு என்றால் பொருள். தஞ்சை சோழர்கால சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம் எனவும் இந்நூலகத்தில் பணி புரிந்தவர்கள் சரசுவதி பண்டாரிகள் எனவும் வழங்கப்பட்டனர்.
அச்சுதக் களப்பாளன், அச்சுத விக்கிரந்தன், அச்சுத ராயன் என்ற பெயருடைய மன்னர்கள் வாழ்த்திருந்தாலும் கள்ளர்களின் பட்டமான அச்சுதம் என்பது அரிசினை குறிப்பதற்காக அமைகிறது.
மங்கல அச்சுதம் - மங்கலமாகிய அறுகும் அரிசி யும்
பண்டாரம் என்பதற்கு அகராதி தரும் விளக்கம்
1. பொக்கிஷம். தன்னடியவர்க்கு மூலபண்டாரம்வழங்குகின்றான் (திருவாச. 36, 5).
2. பொக்கிஷசாலை பண்டாரங்காமன் படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123).
3. Granary; களஞ்சியம் Cm.
4. இராசாங்கம் பண்டாரத்தோட்டம்.
5. இனிய தின்பண்டம் (W.)
6. பல்பண்டம். (சூடா.)
7. பூசாரிகள்பிரசாதமாகக்கொடுக்கும் மஞ்சள்நிறப்பொடி. (W.)
8. பரதேசி
9. சைவமடத்தைச் சார்ந்த துறவி
10. பூக்கட்டி விற்கும் ஒருவகைச் சாதியார்.
சேனாதிபதி / சேனைவரையர் / சேனையாண்டார்
பன்னிரு சேனைகொண்ட பிரிவுக்குத் தலைமை தாங்கும் தலைவர்களை சேனைவரையர், சேனையாண்டார் என்பர். எதிரி நாட்டு சேனைகளை வென்றவர்கள் சேனைக்கொண்டார் என்ற பட்டத்தினை பெற்றனர். போர்ப்படைகளுக்குத் தலைமை தாங்கியவன் சேனாதிபதி என்ற பட்டம் பெற்றான்.
முதலாம் இராசேந்திரசோழன் சீனத்தரையன், சேனாதி, சேனாதிபதி என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்
தனக்குக்கீழ் இருக்கும் சேனைகளுக்குத் தேவையான ஆயுதங்களை ஆயுதவாரியிடமிருந்து பெற்றுத்தரும் பொறுப்பு சேனைவரையரைச் சார்ந்தது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மூர்க்க விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுதந்திரப் போராட்டத் தியாகி மறைந்த கோபால்சாமி சேனைக்கொண்டார் .
நேதாஜி சேனைக்கொண்டார்
இவரது மகன் தினத்தந்தியின் மூத்த பத்திரிகையாளருமான ஜி. நேதாஜி சேனைக்கொண்டார் ஆவார். . நேதாஜி சேனைக்கொண்டார் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஆம்பல் அ. பழனியப்பன் சேனாதிபதி ( துணை ஆட்சியர் )
கள்ளர் இனபற்றாளர் சகோதரர் குமணன் சேனாதிபதியார் அவர்களின் அண்ணன் மகன் பிறப்பு சான்றிதழ்
உஞ்சனை நாடு இன்றும் கள்ளர் நாட்டு பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. கிபி 14 ஆம் நூற்றாண்டில் மாத்தூரான வீரபாண்டிய புரத்தில் வாழ்ந்த, காத்தான் நகர சேனாதிபதி என்பவன் உஞ்சனை கோயிலுக்கு நிலத்தை கொடையாக அளித்துள்ளார். அவர் அளித்த நிலத்தின் ஒர் எல்லையாக தொண்டைமான் புன்செய் குறிக்கப்பட்டுள்ளது.
களத்தில்வென்றார் :
கள்ளர்களின் களத்தில்வென்றார் என்ற பட்டம் பற்றி நாம் விளக்கவேண்டிய அவசியம் இல்லை. இது எளியோருக்கும் புரியும்.
தஞ்சை திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள களத்தில்வென்றார் பேட்டை , கள்ளர்களின் களத்தில்வென்றார் வாழும் பகுதியாகும். பஞ்சாட்சர மும்மாலை அந்தாதி எழுதியவர் குழந்தைக் களத்தில்வென்றார். ஒரத்தநாட்டில் இருந்த உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் இலவச படிப்பகம் மற்றும் நூல் நிலையத்தின் மேற்பார்வையாளர் பொன்னண்ணா களத்தில்வென்றார், இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் தலைவர் ஏ.ஆர்.சாந்தமோகன் களத்தில்வென்றார் போன்றவர்கள், களத்தில்வென்றார் மரபினரில் சிறப்புபெற்றவர்கள்.
மாவலியார்
திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் கள்ளர்களின் மாவலியார் மரபினர் வாழும் மாவலியார் தெரு உள்ளது. மாவலியார் மரபினர் தஞ்சையின் பலப்பகுதியில் செறிந்து வாழ்கின்றனர். தஞ்சை மாவட்ட விவசாய பிரிவுத் தலைவர் கணபதி மாவலியார், திருவையாறு தமிழிசை மன்றத் தலைவர் ம. வேலு மாவலியார் போன்ற மாவலியார் மார்பினார்கள் இன்று சிறப்புடன் விளங்குகின்றனர்.
வரலாறில் மாவலியார் விளக்கமாக அமைவது
மாவலான் : குதிரையேற்றத்தில் வல்லவன் , குதிரைப்பாகன், யானைப்பாகன்
மாவலி மன்னன் : மாவலி என்னும் மன்னன் உலகினைத் தூக்கும் ஆண்பன்றி போன்ற வலிமை படைத்தவன்
மாவலிபுரம் : மாமல்லபுரம், பல்லவ சிற்பங்களால் பேர்பெற்றதுமான மாவலிபுரம் என்ற ஊர்.
மாவலி வாணன் : மாவலி வாணர் என்னும் வாணர்குலத்து அரசர்கள். ஒரு காலத்தே தமிழ்நாட்டுச் சிற்றரசர்களாகச் சிறப்புற்று விளங்கினர், விசயநகர வேந்தர்கள் காலத்தில் இவர்களின் சிறப்பு, சில சமயங்களில் பாண்டியரைக் காட்டினும் கூடியிருந்ததும் உண்டு. புகழ்பெற்ற பாண்டியவரசை அழித்துப் 'பாண்டிய குலாந்தகன் என்ற விருதையும் சூடிக்கொண்டனர் "வந்தக் கரும்புறத்தார்க் கெல்லாம் அரசரணா மாவலிவா னா! (211) இதன்பாற் குறிப்பிடப்படும் வாணன் 'திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன்' என்பர்.
களுத்திரையார்
இலங்கையில் உஉறுகுணை இராச்சியத்தின் எல்லைகளாக வடக்கில் மகாவலி ஆறும் வடமேற்கில் களு ஆறும் உள்ளன. இராஜேந்திர சோழன் காலத்தில் இந்த பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அந்த பகுதியை கைப்பற்றிய வீரமரபினர் களுத்திரையார் இன்று அழைக்கப்பட்டனர். புதுக்கோட்டை பகுதியில் களுத்திரையார் மரபினர் வாழ்ந்துவருகின்றனர்.
களுத்திரையார்
இலங்கையில் உஉறுகுணை இராச்சியத்தின் எல்லைகளாக வடக்கில் மகாவலி ஆறும் வடமேற்கில் களு ஆறும் உள்ளன. இராஜேந்திர சோழன் காலத்தில் இந்த பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அந்த பகுதியை கைப்பற்றிய வீரமரபினர் களுத்திரையார் இன்று அழைக்கப்பட்டனர். புதுக்கோட்டை பகுதியில் களுத்திரையார் மரபினர் வாழ்ந்துவருகின்றனர்.
மாமுனைக்காரன் / மாமுனைக்காரர்
மாமுனைக்காரன் என்றால் (முனையில் நின்று தோற்கடிப்பவன்) இராசேந்திரன் சோழனால் வழங்கப்பட்ட பட்டம்.
தஞ்சை கள்ளர் நாடான தந்தி நாடு நத்தமாங்குடி நடுக்காட்டு அய்யன்கோவில், மதுரைவீரன், வீரராகவப்பெருமாள் தெய்வங்களை குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் வாழ்ந்துவரும் மாரிமுத்து மாமனைக்காரர் பேரனும், லெட்சுமணன் மாமனைக்காரர் பேரனும் TVS.தாமு.தாமோதரன் (திமுகஇளைஞர்அணி) குடும்பத்தார்கள்.
குங்கிலயர்
குங்கிலயர் பட்டம் உடைய கள்ளர்கள் சோழமண்டலத்தில் வாழ்கின்றனர். திருச்சி திருவெறும்பூர் பகுதியில் வாழ்கின்றனர்.
குங்கிலியக்கலய நாயனார் என்பவர், சைவ சமயத்தவர்கள் நாயன்மார்கள் எனப் போற்றும் 63 சிவ பக்தர்களுள் ஒருவர்.அமிர்தகடேசருக்கு, பாலன் மார்கணடருக்காகக் காலனை காலால் உதைத்த கருணையை நினைத்து, விதிப்படி தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலயக்கலயர் என்று அழைத்தனர்.
திருப்பனந்தாளில் வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனி, தாடகை என்ற அரச மாதுக்கு அருளும் பொருட்டு சாய்ந்தது. சாய்ந்தவாறே இருந்தது. அதனைச் சாய்வுபோக்கி கண்டு கும்பிட வேண்டுமென்று ஆசை கொண்ட சோழமன்னன் யானைகளையும் சேனைகளையும் பூட்டித் திருமேனியினை நிமிரப்பண்ண முயன்றனன். இறைவர் நேர் நிற்கவில்லை. இதனைக் கேள்வியுற்ற கலயநாயனார், நாதனைக் நேர்காணும் பணியில் நின்ற அரசனை விரும்பித் திருக்கடவூரின்றும் சென்று திருப்பனந்தாளிற் சேர்ந்தனர்.இறைவரது திருமேனிப் பூங்கச்சிற்கட்டிய பெரிய வலிய கயிற்றினை தம் கழுத்திற் பூட்டி இழுத்து வருந்தலுற்றார். இவர் இவ்வாறு செய்து இளைத்த பின் இறைவர் சரிந்து நிற்க ஒண்ணுமோ? இவர் தமது அன்பின் ஒருமைப்பாட்டினைக் கண்டபோது அண்ணலார் நேரே நின்றார்.
உலகளந்தான் / உலங்கத்தார்
உலங்கத்தார் என்ற கள்ளர் பட்டம் உலகளந்தான் என்பது மருவி வந்தது. மின்னாத்தூர், புதுக்கோட்டை பகுதியில் என்றும் வாழ்கின்றனர்.
உலகளந்தான் கோல் என்பது சோழர் காலத்திய ஓர் நில அளவைக்கான ஒரு கருவியாகும். நிலத்தை அளந்து நிலவரி விதிக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது. சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குறவர் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராச சோழன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு மாபெரும் பணியாகும்.
உலகளந்தான் கோல் மூலம் அறியப்படும் சில அளவு விவரங்கள்
24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு
25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்
33”அங்குலம்(இஞ்ச்)ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு முழமாகும்.
இரும்பர் :
"இரும்பனை வெண்தோடு மலைந்தோன் - சேரன். "
வாரைவளர் வாராப்பூர் நாட்டு இரும்பர் வகையரா: ( பாலடிகருப்பர் கோயில்: வாராப்பூர்)
இரும்பாடி, சின்ன இரும்பாடி, மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். கள்ளர்கள் வாழும் ஊராகும்.
தேட்டாளர் :
தேட்டாளர் என்பதற்கு செல்வ வசதியுடையவர் என்று பொருள்
வஞ்சித் தாழிசை : குறளடி (இரு சீர் அடி), நான்கு கொண்ட செய்யுள்கள் மூன்று ஒரு பொருள்மேல் அடுக்கி வருவது.
பாட்டாளர் நலம்பேணாத்
தேட்டாள ராய்வாழ்வார்
மாட்டாத மரமென்ன
நாட்டாரால் நகையுண்பர்
(பாட்டாளர் = உழைப்பாளி; தேட்டாளர் = செல்வ வசதியர்; எனப் புலவர் குழந்தை இதற்குச் சான்று காட்டுகின்றார்.
வள்ளையார்
ஒரத்தநாடு கண்ணுகுடி மையம் பகுதியில் வள்ளையர் பட்டம் உடையவர்கள் வாழ்கின்றனர்.
காஞ்சிபுரம் திருப்போரூர் முருகப்பெருமானின் கோயிலுக்கு முன்னே இன்றும் வள்ளையர் ஓடை, சரவணப் பொய்கை எனும் பெயரில் வற்றாத தீர்த்தமாக உள்ளது.
வள்ளையார் பட்டம் வள்ளைக்கொடியோடு தொடர்புடையதாக இருக்கலாம். வள்ளைக்கொடி மிக விரைவாகவும், எளிதாகவும் வளர்கின்ற காரணத்தால் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் மட்டுமல்லாது, உணவு தட்டுப்பாடு ஏற்படும் போர்காலத்தில்கூட வள்ளைக்கீரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாடாவி
கள்ளர்களில் நாடாள்வான், நாடன் என்ற பட்டங்களை போல் நாடாவி பட்டம் உடைய மரபினரும் உள்ளனர்.
‛நாடாவி‛ உற்சவத்திற்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் ஐயங்கார்குளம் கிராமத்தில் விஜய நகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட, பழமையான, புகழ்பெற்ற சஞ்சீவராயர் கோவில் இந்த பகுதியில் அமைந்துள்ளது; அதே போல், கைலாசநாதர் கோவிலும் உள்ளது. அதை தவிர, நடவாவி கிணறு என்று அழைக்கப்படும் பாதாள கிணறு இந்த பகுதியில் உள்ளதால் இந்த ஊர் மேலும் சிறப்பு பெற்று விளங்குகிறது. சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் இங்குள்ள ஆஞ்சனேயர் கோவில் மற்றும் நடவாவி கிணற்றுக்கு எழுந்தருள்வார்.நடவாவி திருவிழாவின் போது, இந்த பகுதி மக்களும் மற்றும் சுற்றுப்புற மக்களும் ஆயிரக்கணக்கில் அந்த கிராமத்தில் கூடுவர்.
பத்தாளன்
பத்தாளன்கோட்டை, பத்தாள பேட்டை, பத்தாளன்பட்டி என்னும் ஊர்களில் இன்றும் வாழ்கின்றனர்.
ஈழத்து வாழ்வும் வளமும் - K. Ganapathy Pillai - 1962 ல் எழுதிய நூலில், ஒவ்வொரு காணிக்கும் ஒவ்வொரு சீவற்காரன் இருப்பான். அவனைப் 'பத்தாளன்” என்றழைப்பார் .
அவனே, அக்காணிக்குள் வரும் வருமானம் யாவற்றையும் எடுக்க அக்காணிக்காரனுக்கு உதவி செய் பவன் என்கிறார்.
மேலும் பல்லவராச்சியம் என்ற நூலில் கி.பி. 1344ல் இலங்கை வந்தார் இபின் பதுரதா, அவர் குறிப்பிலிருந்து கடற்பயணத்தில் ஒன்பதாம் நாளில் இலங்கைத் தீவின் பத்தளாகரையை அடைந்தோம். ஆரியச்சக்கரவர்த்தி என்னை வரும்படி ஆளனுப்பினான். நான் அவனது தலைநகரான பத்தளத்தில் அவனிடம் சென்றேன். இதில் பத்தளம் என்பது இபின் பதுரதா காலத்தில் ஆரியச்சக்கரவர்த்தி மன்னன் மார்த்தாண்ட சிங்கையாரியன் ஆட்சி செய்த புத்தாளம் ஆகும். ஆரியச்சக்கரவர்த்தி விருதுப்பெயர்கள் சிங்கையாரியன், சேதுக்காவலன், கங்கையாரியர், கூழங்கைச் சக்கரவர்த்தி, கோன் ஆகும்.
இன்று கள்ளரில் காணப்படும் பத்தாளர், கங்கைராயர், சிங்காரியர், சிங்காரிக்கர், கூழாக்கியார், கோன்றி என்ற பட்டங்கள் இவற்றுடன் தொடர்புடையவையாக இருக்கலாம்.
சாமுத்திரியர் :
சாமுத்திரியர் என்ற பட்டம் சேரநாட்டு போர் வெற்றியோடு தொடர்பு உடையதாக அமைகிறது. துளசி மகாநாடு துவாக்குடியில் சாமுத்திரியர் பட்டமுடைய கள்ளர் மரபினர் வாழ்ந்துவருகின்றனர்.
அரேபியாவில் உள்ள கடற்கரை நகரான ஜாபரில் அப்துல் ரஹ்மான் சாமுரி என்பவரின் கல்லறை உள்ளது. மலபாரைச் சேர்ந்த இஸ்லாமியராக மாறிய ஒரு இந்து அரசனின் கல்லறை அது என்று கூறப்படுகிறது. இக்கல்லறை உள்ளூர் மக்களால் மிகவும் மதிக்கப்படுகிறது. சாமுரி என்பது சாமுத்ரி என்பதன் திரிபாகும். சாமுத்ரி என்பது கேரள அரசர்களுக்கு வழங்கப்படும் பெயர் என்று மாப்பிள்ளாக்கள் கூறுகிறார்கள் என்கிறார் லோகான். (மலபார் மேனுவல் பக்கம் 196)
கோழிக்கோட்டை ஆண்டுவந்த சாமுத்திரியர், போர்த்துகீசியர்களுடனான போர் 16-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்தது
நாயக்கர்:
கள்ளரில் நாயக்கர் பட்டமுடையவர்கள் அரியலூர் நாயக்கர் பாளையம் ஜமீன் அய்யம்பேட்டை சாவடி நாயக்கர்கள். மேலும் தஞ்சாவூர் பகுதியில் பல ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
வில்லவராயர்
செயங்கொண்டார், சயங்கொண்டார் , ஜெயங்கொண்டப்பிரியர்
சாமுந்தர்
சாமுந்தர் என்றால் (இந்தியில்) கடல் என்றும் பாரசீக மொழியில் புராணங்களில் வரும் தவளை இனம் என்றும் பொருள்படும். இச்சொல் பாரசீகத்தில் பிர் என்று எழுதப்பட்டுள்ளது; இதற்கு கேணி என்று பொருள்.
வீரவல்லாளன், வீரபாண்டியன் ஆகிய இருவரையும் பிர் என்ற சொல்லினால் குறிக்கும் குஸ்ரு பின்னர் பிர்துல் என்பதை வீரபாண்டியனின் தலைநகர் எனக் குறிப்பிடுகிறார்.
செம்பொன்கொண்டார்
அலங்காரப்பிரியர்
👇👇👇👇👇👇👇👇👇
கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை - 1
கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை
மாராயம் என்பது சிறந்த படைவீரனுக்கு வழங்கப்பட்ட சங்ககால விருது. தொல்காப்பியம் இந்த விருதைப் பற்றிக் கூறுகிறது. ஆனிரைகளைக் கவர்ந்து வந்த வீரனுக்கு இது வழங்கப்பட்டது. அரையன் < அரசன் என வருவது போலவும், அரசன் > ராசன் என வருவது போலவும் மா-அரையன் என்னும் சொல் மாராயன் என மருவும்.
"பஞ்சவ மாராயன்......கொங்காள்வான்" எனபது கல்வெட்டில் வரும் தொடர். அரசன் பெறும் விருது. மாராயம் பெற்றவன் நெடுமொழி கூறுவான். சங்ககாலத்தில் அரசன் போரில் சிறந்து விளங்கிய வீரனை ‘மாராயம்’ என்னும் விருது வழங்கிப் பாராட்டுவது வழக்கம். இப்படி மாராயம் பட்டம் பெற்றவன் அரசனின் பெருமையை எடுத்துப் பேசுவதோடு மட்டுமன்றித் தன் பெருமையையும் எடுத்து கூறுவது வழக்கம். இதற்கு நெடுமொழி கூறல் என்று பெயர். வஞ்சிப் போரில் வெற்றியைத் தேடித்தந்த வீரனுக்கு மாராயம் பட்டம் வழங்கப்பட்டதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மாராயம் பெற்றவன் மாராயன். மாராயன் விருதை மன்னவன் தகைமை இல்லாத ஒருவனுக்கு வழங்காமல் இருப்பது நன்று என அறநூல் கூறுகிறது.
பண்டைய தமிழர் வரலாற்றில் தொழில், கலை, வீரம் முதலானவற்றில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டதைக் காணமுடிகிறது. இந்த விருதுகள் அரசவையில் வழங்கிப் போற்றப்பட்டன.
எட்டி – சிறந்த வணிகர்
காவிதி – சிறந்த உழவர்
கிழார் – ஊர்த்தலைவர், புலவர்
கிழான் – ஊர்த்தலைவன், சிற்றரசன்
தலைக்கோல் - சிறந்த அவைக்கூத்து நாட்டியக்காரி
தாமரை (விருது) – சிறந்த தெருக்கூத்து விறலி
மாசாத்துவன் – தரைவணிகரின் தலைவன்
மாநாய்கன் – கடல்வணிகரின் தலைவன்
மாராயம் – சிறந்த படைவீரன்
சங்ககால வேந்தர்கள் அறிவு வலிமை, சான்றோமை, வீரவலிமை பெற்ற தம் குடிமக்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தமை சங்ககாலத்திற்கு பின்பும் இச்சிறப்புப் பெயர் மரபு தொடர்ந்து வந்துள்ளது. குறிப்பாக கள்ளர் குலம் இப் பட்டங்களை தங்களின் உயிர் காக்கும் கேடயமாக உணர்ந்து பாதுகாத்து வருகின்றனர்.
செங்கோல் சிறக்க செங்குருதி கொட்டியதற்காக சுமார் ஈராயிரம் பட்டங்களை சுமந்துள்ள கள்ளர் மரபு வரலாறு, உலக வரலாற்றில் ஒரு வரலாறாகும்.
சோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன. இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது.
முற்கால மெய்க்கீர்த்திகளின் நடை சிறப்பு, அமைப்பு போன்றவை மூலம் இவை எல்லாம் புலமை படைத்த சான்றோர்களால் எழுதப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் பட்டப் பெயர்களை நான்கு பிரிவுகளாக அறியமுடிகிறது.
1) பேராசர்கள் தங்களின் சிறப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தாங்களே சூடிக்கொண்ட பட்டங்கள். இராசகண்டியன், சிவபாதசேகரன், இரவி குலமாணிக்கம் போன்றவை.
2) பேராசர்கள் தங்களின் அரசுப்பிரதிநிதிகளாக இருந்த தானைத் தலைவர்களுக்கும், தம் உறவினர்களுக்கும் குலத்தவர்களுக்கும் சூட்டிய பட்டங்கள். கடாரம்கொண்டான், சோழங்கன், மாரையன் போன்றவை.
3) பேராசர்கள் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களுக்கும், அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் வழங்கிய பட்டங்கள். காலிங்கராயன், சேதிராயன், மழவராயன், நாடாள்வான் போன்றவை.
இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலே இன்னோர் பெயர்களிற் சிற்சில காணப்படுகின்றன. அவை:- கச்சியராயன், காடவராயன், காடுவெட்டி, காலிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான் , நந்தியராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன் முதலியன.
இவ்வாறே , வேறு சில பட்டங்களும் கல்வெட்டுகளில் உள்ளன. அவை:-
அனகராயன், களப்பாளராயன், குருகுலராயன், சம்புவராயன், தமிழதரையன், பங்களராயன், மன்றாடி, மீனவராயன், மூவராயர்கண்டன், மூவேந்தரையன், வங்கத்தரையன், வாளுவராயன், விலாடத்தரையன், விளுப்பாதராயன் முதலியன.
கள்ளர் குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும்.
4) பேராசர்கள் தங்களின் பல்வேறு கலைஞர்களுக்கும் (அரசியல் மற்றும் அதிகாரம் சார்பற்ற) வழங்கிய பட்டங்கள். கற்றளிப்பிச்சன், தலைக்கோலி, வாச்சிய மாராயன் போன்றவை.
கள்ளர் குல பட்டங்கள் ஏதோ 15 ஆம் நூற்றாண்டில் தான் கள்ளர்களுக்கு வந்தது போலவும் , கள்ளர்கள் பிற சாதியினர் பட்டங்களை திருடி விட்டார்கள் என்றும் பலர் புலம்புவதை காணமுடிகிறது. இவர்கள் இதற்கு ஆதாரமாக 1950 ஆம் ஆண்டுவாக்கில் பர்டன் ஸ்டெயின் (Burton Stein) எழுதிய, விஜய நகர வரலாறு என்ற நூலில் 15 ஆம் நூற்றாண்டில் தான் கள்ளர்களுக்கு பட்டங்கள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார் என்று கூறுகிறார்கள். இதற்கு அவர் எந்த ஆதாரமும் கொடுத்துள்ளாரா என்றால் அதில் எதுவும் இல்லை.
தஞ்சை வாழ் கள்ளர்கள் பல்வேறு வம்சங்களை தங்களுள் கொண்டுள்ளனர். இத்தகைய வம்சங்கள் பல்வேறு பட்டங்களால் அழைக்கப்படுகின்றது "
தஞ்சை கள்ளர்களின் பிரபலமான பட்டங்களில் சில :-
தஞ்சிராயர்
வன்னியர்
சேர்வைக்காரர்
மேனாட்டரையர்
சிறுநாட்டரையர்
சோழகர்
சோழங்கதேவர்
காலிங்கராயர்
வாண்டையார்
தென்கொண்டார்
அண்ணவிசாரர்
தொண்டைமான்
இராசாளியார்
பொன்னப்பூண்டார்
மழவராயர்
காடவராயர்
களாக்குடையார்
பல்லவராயர்
மாதுராயர்
பன்னிக்கொண்டார்"
சோழ தேச கள்ளர்கள் பல்வேறு வம்சங்களாக தங்களது பட்டங்களை சுமந்து பழங்கால பெருமைகளுக்கு சான்றாக வாழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு பட்டமுடையவர்கள் திருமண முறையில் இணைவதை காலங்காலமாக பின்பற்றி வருகின்றனர்.
கள்ளர்கள் பல்வேறு பட்டப்பெயர்களை சுமந்து வாழ்ந்து வருவதை 150 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களே தங்களது ஆவணங்களில் பதிவு செய்திருப்பது மிகச்சிறப்பிற்குரியது......
A manual of the district of tanjore in the madras presidency/ k venkasamy row / 1883
பல சாதியினருக்கும் பல பட்டங்கள் உள்ளன, அதில் ஒரே பட்டம் பல சாதியினர்க்கும் உள்ளது. ஆனால் கள்ளர்களுக்கு உள்ளது போல சங்க இலக்கியங்களிலும் , தொன்மையான தமிழ் வார்த்தைகளிலும் உள்ள பட்டங்கள் யாருக்கும் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை.
உதாரணமாக, இங்கே கீழே உள்ள சில பட்டங்கள் வேறு சாதியினருக்கு உண்டா என்றால் கண்டிப்பாக யாருக்கும் கிடையாது.
1) அம்பர்த்தேவன்
2) அம்பராண்டான்
3) அருவாநாட்டான்
4) உறந்தைராயன்
5) காவிரிநாடன்
6) மண்வெட்டிக்கூழ்வாங்கி
7) புத்திகழிந்தான்
8) முனையதரையன்
9) ஆர்சுத்தியார்
10) சிவலிங்கதேவர்
11) விழுப்பரையர்
12) நாட்டார்
13) களரி
14) பார்புரட்டியார்
15) நாயக்கவாடியார் (நக்கன்வாடி)
16) குடைகிழார்
17) ஆழியான்
17) ஆழியான்
இதைப்போல பழமையான தமிழ் சொல்லில் உள்ள பட்டங்கள் இன்னும் பல உண்டு. இதற்கான விளக்கத்தையும், சொல்லின் பழமையும் கீழே காண்போம்.
கள்ளர்களில் உள்ள ஒவ்வொரு பட்டங்களிலும் பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. ஒரே ஊரிலும் அல்லது அதே பட்டங்களில் 200 கிமீ அப்பாலும் உள்ளனர். கள்ளர் பட்டங்களின் பெயர்களால் பல ஊர்களே இன்று சிறந்து விளங்குகின்றன.
இவர்கள் சொல்வது போல கள்ளர்கள் 15 ஆம் நூற்றாண்டளவில் தான், இத்தனை பட்டங்களை அதாவது பழமையான தமிழ் சொல்லில் உள்ள பெயர்களை கூட, தங்கள் பட்டங்களாக தமக்கு தாமே சூட்டி கொண்டார்கள் என்றால் அது நகைப்புக்குரியது மட்டுமல்லாமல், அது அவர்களின் அறியாமை.
மூன்றாம் இராஜராஜ சோழன்
புதுக்குடியான ரா[ஜெ]ந்திர சொழமங்கலத்துக் காணி உடைய கள்ளரில் பெரும[£]ன் அழகனான மணவாள முத்தரயன்
கல்வெட்டில் பட்டங்கள் கள்ளன் என்பதற்கு - கல்லன் என்று எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டில் குறில் நெடில் என்று மாற்றி எழுதப்படும். அதைபோல் ‘ள’ கரம் ‘ல’ கரமாவது உண்டு . கல்லன் என்பதற்கு அகராதி தரும் விளக்கங்கள் தீயவன் என்று மட்டுமே. தீயவன் என்பது கல்வெட்டில் பொருந்தாது. ற-ர, ந-ண, ல-ள தவறுதலாக ஒன்றிற்க்கு ஒன்றை மாற்றி இலக்கண பிழையோடு எழுதியே வந்துள்ளனர். அதற்க்கான ஆதாரம் கீழே உள்ளன.
மொழி ஒப்பியலும் வரலாறும் என்ற நூலில்
தேவர் என்பதே தெவர் என்று குறிக்கப்பட்டுள்ளது
கிபி 1226!! காஞ்சீபுரம்!! சுந்தரபாண்டியன் கால கல்வெட்டில் உள்ள நமது கள்ளர் இன பட்டங்கள், நேரடியாகவே கல்லன் என்றே குறிக்கின்றது.
இந்த கல்வெட்டில்
2) கடம்பராயன் கல்லன்
3) காங்கேயன் கல்லன்
4) மாகதராயன் கல்லன்
என்று உள்ளது. கல்லன் பாடகம் என்று வருகிறது. பாடகம் என்பது நில அளவை குறிக்கும். இதற்கான உதாரணமாக ஒரு கல்வெட்டு
குருவித்துறைக் கோவில் கல்வெட்டு
குருவித்துறைக் கோவில் கல்வெட்டு
1 சோழ குலாந்தகச்ச
2 (துர்வேதி) மங்கலத்(தி)ல் இ
3 ன்னாயனார் சிவநாமத்தா
4 ல் அனுபவித்து வருகிற
5 பாடகம் இருபதாலுள்ள
6 பாடிகாவல் ஸ்ரீ ஸுந்தர பா
7 ண்டிய தேவற்கு யாண்டு
8 20 ஆவது முதல் இன்னா
9 யனாற்கு அமுதுபடியாக
10 க்குடுத்தோம் இவ்வோ
பாடிகாவல் – ஊர், நாடு முதலியவற்றைக் காத்தல்; அதன்பொருட்டுத் தண்டும் வரி. அமுதுபடி – படையல் சோறு
மேற்படி சதுர்வேதிமங்கலத்து நாயனார் பெயரில் உள்ள இருபது பாடகம் அளவுள்ள நிலத்தின் விளைவிலிருந்து பெறப்படும் வரிவருமானம் பாடிகாவல் செலவினங்களுக்குத் தற்போது பயன்பட்டு வருகிறது. அவ்வருமானம் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவரின் இருபதாவது ஆட்சியாண்டிலிருந்து இக்கோயில் இறைவற்கு அமுதுபடிச் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படவேண்டும் எனக் கல்வெட்டு ஆணை கூறுகிறது. பாடகம் – ஒரு நில அளவு.
இது போல் காங்கேயன் கள்ளன் பாடகத்தில் (அளவுள்ள) நிலத்தின் விளைவிலிருந்து பெறப்படும் என்றே பொருள்.
விழுப்பரையர் (விழுப்பாதராயர்)
விழுப்பரையர் என்ற பெயரான போரில் பல விழுப்புண்களை பெற்ற அரையர் (சிற்றரசர்) என்று அர்த்தம். கோயிலிற் சுவாமி திருமுன்புகணக்கு வாசிக்கும் உரிமையுடைய மரபினன். பாண்டிபதினாலுக்கும் வேண்டிய விழுப்பாதராயர் (திருவாலவா. அரும்.).
இந்த விழுப்பரையர் சோழர்களின் சிற்றரசாகவும், முதன்மை தளபதியாகவும் கல்வெட்டுகளில் வருகிறார்.
மேலும் கிபி973ல் ஆட்சி செய்ய உத்தம சோழ மன்னர், விழுப்பரையரின் மகளான “கிழானடியை” திருமணம் செய்து கொண்டார், கிழானடியாரே சோழ நாட்டின் பட்டத்தரசியாக இருந்துள்ளார். இதன்மூலமாக சோழர்களின் வரலாற்றில் விழுப்பரையரின் முக்கியத்துவம் எவ்வளவு அளப்பரியது என அனைவரும் அறியலாம்.
சோழர் காலக் கல்வெட்டுகளில் விழுப்பரையரின் போர் வெற்றிகளையும், கொடைகளையும் பல இடங்களில் நாம் அறியலாம். அப்படிப் பட்ட விழுப்பரையரின் கல்வெட்டில் தன்னை கள்ளர் என்றே குறித்துள்ளார்.
ஆம் கிபி 1222 ல் மூன்றாம் இராசராச சோழர் காலத்தில் தொடையூரைச் சேர்ந்த நால்வர்களான கவுசியன் கண்ணன் பட்டன், கவுசியன் திருவரங்கமாளி பட்டன், சூரியதேவ பட்டன், வாச்சியன் என்போர் நத்த நிலங்களை 10,300 காசுக்கு,
கள்ளன் சதுரநான மழை நாட்டு விழுப்பரைருக்கு விற்றுக் கொடுக்கிறார்கள். இதில் தெளிவாக விழுப்பரையரை கள்ளர் என்றே குறிப்பிடுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஒப்பந்த கல்வெட்டில் தனது கையெழுத்தாக
“கள்ளன் சதிரனான மழை நாட்டு விழுப்பரையன்” என்றே குறிப்பிட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து அவருடன் கையெழுத்திட்ட மற்ற அதிகாரிகளும் தங்களை கள்ளன் என்றே கையொப்பம் இட்டுள்ளனர்.
“கள்ளன் பெரிய தேவன்”
“கள்ளன் பெருமாள்”
“கள்ளன் சீராளத் தேவன்”
இதில் இருவர் தேவர் பட்டம் தாங்கி நிற்பது மற்றொரு சிறப்பு.
சான்றோர்களின் பெயரில் நில அளவுமுறைகளை வைப்பது அக்கால நடைமுறை. இந்த காலத்தில் ஒருவரது பெயரில் நாணயம், ஸ்டாம்ப் போன்றவை வெளியிடுவது போல. இதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக புதுக்கோட்டையில் பல்லவராயர்கள் பெயரில், பல்லவராயர் படி எனும் அளவுமுறை கிபி 16-18 ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்துள்ளது.
கிழக்கிடையான் என்பது கள்ளர் பட்டமாகும். கிழக்கடையான் எனும் பட்டமானது இன்று திரிந்து கிளக்கடையார், கிளாக்குடையார் என கள்ளர் இன மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற நடிகை மனோரமா கிளாக்குடையார் வம்சத்தில் உதித்தவர். இப்பட்டமுடையவர்கள் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் வடக்குக்கோட்டை எனும் பகுதியிலும், பாபநாசம் வட்டத்தில் புலவர் நத்தம் எனும் பகுதியிலும் வாழ்கின்றனர்.
கள்ளர் இனத்தை சேர்ந்த ஒருவரின் பெயர் "'வன்னியர் மிசிரிகண்டன் பொன்னம்பலநாத தொண்டைமான்" என்று கல்வெட்டு ( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-845,ஆலங்குடி ) கூறுகிறது .
“ இந்த நாடுகளையும் அறியாமல் செங்கீரையில் பிள்ளன் விசையரையனும் புறம்பன் வன்னியரையனும் ஆலங்குடி மழவராயர் படையை அழைத்து வந்து நாட்டிலே ...'( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-818, திருமெய்யம் )
"அய்யம்பேட்டை அப்பு நாயக்க னென்கிற கள்ளனும், பெருமாக்கூர் அப்பு நாயக்க னென்கிற கள்ளனும், மேல்மாந்தை அப்பு நாயக்க னென்கிற கள்ளனும்".
நாவாய் மூலம் வணிகம் செய்யும் கடல் வணிகருக்கு நாவிகன், நாயகன் போன்ற பெயர்களும். சாத்துகள் மூலம் தரைவழி வணிகம் செய்யும் வணிகருக்கு சாத்தன் அல்லது சாத்துவன் என்ற பெயர்.
நாயக்கர் பாளையம் சாவடி நாயக்கர்கள், நாயக்க மற்றும் மரட்டிய மன்னர்களுக்கு போர் உதவி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பல சாதிகள் வரலாற்றில் உயர்வான பட்டங்களை, அதாவது வன்னியன், உடையான், முதலியான், முத்தரையன், என்ற பட்டங்களை தங்கள் சாதி பெயராக மாற்றிக்கொண்டார்கள். பள்ளி சாதியினர் வன்னியன் என்றும், வலையர், முத்துராஜா போன்ற 29 பிரிவுகள் முத்தரையன் என்றும் , இந்த நூற்றாண்டில் தங்கள் சாதி பெயராக மாற்றிக்கொண்டார்கள்.
முக்குலோத்தோரை தேவர் என்ற ஒற்றை சாதியாக தமிழக அரசு மற்றம் செய்ய தஞ்சை கள்ளர்கள் மற்றும் சிவகங்கை அகமுடையார் எதிர்ப்பு தெரிவித்ததால் மாற்றவில்லை.
நாயக்கர் பாளையம் சாவடி நாயக்கர்கள், நாயக்க மற்றும் மரட்டிய மன்னர்களுக்கு போர் உதவி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பல சாதிகள் வரலாற்றில் உயர்வான பட்டங்களை, அதாவது வன்னியன், உடையான், முதலியான், முத்தரையன், என்ற பட்டங்களை தங்கள் சாதி பெயராக மாற்றிக்கொண்டார்கள். பள்ளி சாதியினர் வன்னியன் என்றும், வலையர், முத்துராஜா போன்ற 29 பிரிவுகள் முத்தரையன் என்றும் , இந்த நூற்றாண்டில் தங்கள் சாதி பெயராக மாற்றிக்கொண்டார்கள்.
முக்குலோத்தோரை தேவர் என்ற ஒற்றை சாதியாக தமிழக அரசு மற்றம் செய்ய தஞ்சை கள்ளர்கள் மற்றும் சிவகங்கை அகமுடையார் எதிர்ப்பு தெரிவித்ததால் மாற்றவில்லை.
நஞ்சுண்டோன்” (திருவாலவா. 30:9), 2. கள்ளரில் ஒரு பிரிவினர்
தமிழ் பல்கலைக்கழக இணைய தளத்தில் சில பட்டங்களுக்கு தரும் விளக்கம், கள்ளர் இனத்தை மட்டுமே குறிக்கும் என்கிறது. அவை
4) அங்கராயர்
5) நாட்டார்
கீழே உள்ள பட்டம் கள்ளர்களுக்கும் மற்றும் பல சாதிகளுக்கு உள்ளதாக காட்டுகின்றது.
1) வன்னியன்
2) சோழகன்
6) மழவராயன்
7) காங்கேயன்
8) முத்தரையன்
9) கொங்கராயர்
கள்ளர்களின் பட்டங்கள் பழமையானது என்பதற்கு சில தரவுகள்
அம்பர்த்தேவன்:
அம்பர் என்பது மிகவும் பழமையான சொல். அம்பர்த்தேவன் என்ற பட்டம் எதன் அடிப்படையில் கள்ளர்களுக்கு வந்தது என்று அறிய முடியவில்லை. ஆனால் இலக்கியங்களின் வரும் மிகவும் பழமையான சொல்லாகும்.
அம்பர் என்பது மிகவும் பழமையான சொல். அம்பர்த்தேவன் என்ற பட்டம் எதன் அடிப்படையில் கள்ளர்களுக்கு வந்தது என்று அறிய முடியவில்லை. ஆனால் இலக்கியங்களின் வரும் மிகவும் பழமையான சொல்லாகும்.
அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் பெயர் ஆகும். மேலும் அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், குறிக்கப்படுகின்றது. அம்பர் பெருந்திருக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக் கோவில் பெயராகும்.
அம்பர் கிழான் அருவந்தை என்பவன் மிகவும் புகழ்பெற்றவன்.
அம்பர் கிழான் அருவந்தை என்பவன் மிகவும் புகழ்பெற்றவன்.
பாடியவர்: கல்லாடனார். பாடப்பட்டோன்: அம்பர் கிழான் அருவந்தை.
புறநானூறு - 385. காவிரி அணையும் படப்பை!
"காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்.
நல்அரு வந்தை, வாழியர்; புல்லிய
வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே"
பொருள் : காவிரி பாய்ந்துநெல் விளையும் அம்பர் அருவந்தை அவன் பெயர். புலவர் அவனை வாழ்த்தினார். அவன் நீண்டநாள் வாழவேண்டும். கள்வர் கோமான் புல்லி அரசன் ஆளும் வேங்கட மலையில் பொழியும் மழைத்துளியின் எண்ணிக்கையை விட அதிக நாள் வாழவேண்டும்.
சம்மட்டி
சம்மட்டிமக்கள் பெ, (1) உறவினரல்லாதாரோடு மணம் புரிந்து: கொள்ளும் கள்ளர் இனம் (சம்மட்டியைக் கொண்டவர்)
அருவாநாட்டான் :
காவிரியின் கழிமுகப் பகுதிக்கு வடக்கேயுள்ள பொண்ணையாற்று பள்ளத்தாக்கு அருவாநாடு என்று அழைக்கப்பட்டது. அதனை ஆண்டவர்கள் அருவாளர் எனப்பட்டனர். காலம் 2000 ஆண்டுகள் முந்திய பெயர். இன்றும் கள்ளர்களில் அருமைநாட்டார், அருவாநாட்டார் பட்டமுடையவர்கள் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
உறந்தைராயன் :
உறையூர் (சோழருறந்தை யவையத்து (புறநா. 39).) உறையூரின் பழமையான பெயர். தஞ்சை உறந்தைராயன் குடிக்காடு : இவ்வூரில் மக்கள் தொகையில் கள்ளர் பிரிவினரே பெரும்பான்மையினர். அங்கு உறந்தைராயர் பட்டமுடையவரே முதன்மையானவர்கள்.
காவிரிநாடன் :
கரிகால் பெருவளத்தான், காவிரிநாடன் எனும் சிறப்புப் பெயர்களை பெற்றிருந்தான். கள்ளர் குலத்தில் காவிரிநாடன் எனும் பட்டப்பெயர் இவன் சந்ததியினருக்கு வழங்கிவருவதையும் அறியமுடிகிறது. இப்பட்டம் தான் கள்ளர் குல பட்டங்களில் மிகவும் பழமை வாய்ந்தது என்று அறியவும் முடிகிறது.
"காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான்”-சிலம்பு-1-5,6
திருச்சியில் இன்றும் காவிரியார், காவிரிநாடான் பட்டம் உள்ளவர்கள் உள்ளனர்.
மண்வெட்டிக்கூழ்வாங்கி :
பசும்படியார் :
பசுபோகசோழன். ஆவூர் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பசுபதி என்றும்வழங்கலாயிற்று. பசுபதிமங்கை (பசுபதிகோயில்) என்னுமூர்களையும், பசுபோக ஆறு என்னும் சிற்றாற்றையும் உண்டாக்கி அரசு புரிந்தான். பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் அமைந்துள்ள இடம் கள்ளர் பசுபதிகோயில் என்றழைக்கப்படுகிறது.
பசும் (பொன்) + படி (உலகம்) + உடையார் = பசும்படியுடையார் (அ) பசும்படியார்.
திருக்குறளில் "படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும்" என்பதன் விளக்கமாக நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்
பசும்படியார் இன்றும் சோழமண்டலத்தில் சிறப்புடன் வாழ்கின்றனர். தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முதல்வர் அன்பு பசும்படியார் ஆவார். இவரது தலைமையில் தமிழக அரசின் அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தைப் பற்றிய அடிப்படை விவரம், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, சுத்த தங்கம் கணக்கிடும் முறை, தங்கத்தை அழித்து தரம் அறியும் முறை, அழிக்காமல் தரம் அறியும் முறை, உரைகல் முறையில் தங்கத்தின் தரம் கண்டறியும் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.
பாப்புரெட்டி & பாப்பரையன் :
மிக பழமையான தமிழ் சொல்
மிக பழமையான தமிழ் சொல்
இவர்களின் பட்டங்கள் பார்புரட்டியார் என்ற பட்டபெயரில் இருந்து திரிந்து பல்வேறு திரிபு பெயர்களை கொண்டுள்ளது. பார்புரட்டியார் என்றால் தம் வீரத்தால் பகைவரை தலைகீழாக புரட்டக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்று பொருள் படும். இப்பட்டம் உடையவர்கள் திருவையாறு, திருச்சின்னம்பூண்டி, இளங்காடு, வானரங்குடி, திருச்சி, தஞ்சாவூர் முதலிய ஊர்களில் வாழுகின்றனர். மண்ணுக்காக நடந்த மிகப் பெரிய யுத்தத்தின் கதைதான் மகாபாரதம் : மகா பார் அதம். மகா என்றால் பெரிய, பார் என்றால் நிலம் அல்லது பூமி, அதம் என்றால் போர்.
புத்திகழிந்தான், புற்றில்கழிந்தான்:
மிக பழமையான தமிழ் சொல்
மிக பழமையான தமிழ் சொல்
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் புத்திகழிச்சசோழன் ( அறிவு மிகுந்தசோழன்) . புத்திகழிச்ச : அறிவு மிகுந்த. புத்தி என்பது மருவி என்று புற்றி என்றாகிவிட்டது. கழி என்பதற்கு மிகுந்த என்றும் கழிந்தோர் என்பதற்கு வலிமையானவர் என்றும் அகராதி விளக்கம் தருகிறது
“புனையும் குழலாள் பரிந்தளித்த
பொங்கல் அமுதும் பொறிக்கறியும்
அனைய சவுரிராசருக்கே
ஆம் என்று அழுத்தும் ஆதரவின்
முனையதரையன் பொங்கல் “
திருக்கண்ணபுரம், இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். திருக்கண்ணபுரத்தின் சிறப்புப் பிரசாதம் ’முனையதரன் பொங்கல்’. இந்த சிறப்புப்பொங்கலுக்கு தனி வரலாறு உண்டு.
ஆர்சுத்தியார் :
சோழர் அணிந்து கொள்ளும் பூ ‘ஆர்’. இந்த ஆர் என்னும் பூ ‘ஆத்திப் பூ
“நெடுந்தண் “ஆர”த்து அலங்கு சினை வலந்த
பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம்
தீந்தேன் கொள்பவர் வாங்குபு பரியும். நற்றிணை 292-௨
ஆர் மரத்தில் தொடுத்திருந்த தேனை எடுப்பதற்காக ஆர் மரத்தை வளைத்தனர். அப்போது ஆர் மரத்தைப் பற்றியிருந்த தமாலக்கொடி நழுமுத்தரையன்விட்டது.
புறப்பொருள் வெண்பா மாலை, மூவேந்தருக்குரிய அடையாளப் பூக்கள் சூடுதலைப் பற்றிக் கூறுகிறது. அதில் "அலங்கல் அமர்அழுவத் தார் " காவிரி நாடனான சோழன் ஆத்திமாலை சூடுவான்.
ஆர் என்பது ஆத்திப்பூவைக் குறிக்கும். சோழனுக்குரிய அடையாளப் பூ ஆத்தி. இதனைப் போர்க்காலத்தில் சூடுதல்.
சுற்றியார் : சூடிக் கொள்வது
குடர் நெடுமாலை சுற்றி - குடல்களாகிய நெடிய மாலையைச் சுற்றி
சோழனின் போர்மறவர்கள் ஆர் (ஆத்திப்பூவை) சுற்றி ( சூடி) போர்க்களத்திற்கு போவார்கள். அந்த போர்மரபினரின் வழிவந்தவர்கள் ஆர்சுத்தியார்கள்.
நரசிங்கதேவர், நரங்கியதேவர் :
பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில் கல்வெட்டு:
அரசு: வாணாதிராயர், ஆண்டு:14-ஆம் நூற்றாண்டு
செய்தி : செம்மயிர் பாடிகாவல் சண்டையில் நரசிங்க தேவர், சோழகோன், பல்லவராயர், பஞ்சவராயர்..........
மாவலி வானாதிராயர் காரியத்திர்க்கு..........செவ்வலூர் உரவரும் வடபற்று நாட்டவரான செவ்வலூரு பஞ்சவராயர், நரசிங்க தேவர் உள்ளிட்டோர்க்கும் சோழ்கோனார், பல்லவராயர் உள்ளிட்டார்க்கும் விரோதமான செம்மயிர் விரோதமாய் வெட்டி.......
இரண்டாவது கல்வெட்டில் குன்னாண்டார் கோவிலில் பொரிக்கப்பட்ட வாசகப்படி சோழவளநாட்டு வடகோனாட்டு பெரம்பூர் அரசு அடைக்கலங்காத்தவனான நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது.
கள்ளர்குல நரசிங்க தேவன் வழியினர் கிபி1686ஆம் ஆண்டு மத நல்லிணக்கத்திற்காக கிறித்துவர்களுக்கு தேவாலயம் அமைக்க ஆவூர் பகுதியில் அனுமதி கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை சமகாலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார் கட்டலூர்,பெரம்பூர் கள்ளர் அரசர் ஆவூரில் தேவாலயம் கட்ட அனுமத்தித்தார் என குறித்துள்ளார்.
பண்டாரத்தார் :
நூலகத்தைச் சோழர் காலத்தில் 'பண்டாரம்' என்று அழைத்தனர். பண்டாரம் என்றால் கருவூலம் என்று பொருள். சரஸ்வதி, கல்விக்கான கடவுளாகக் கருதப்படுவதால், நூல்கள் நிறைந்த இடம் 'சரசுவதி பண்டாரம்'. பண்டார வீதி என்றால் அரச வீதி என்று பெயர். பாளையவனம் மற்றும் கந்தர்வகோட்டை கள்ளர் குல அரையர்கள் பட்டமாக இன்றும் பண்டாரத்தார் பட்டமாக உள்ளது. 'கொற்றச் சோழர்' எனப் போற்றப்பட்டவர்கள் குடந்தை நகரில் அரசுச் செல்வத்தைப் பாதுகாத்தனர். இது பண்டைய கருவூலம் அதிகாரிகளின் பட்டமாக இருந்துள்ளது.
தமிழ் பல்கலைக்கழக இணைய தளத்தில் சில பட்டங்களுக்கு தரும் விளக்கம் :
சோழகன் :
கோயம்புத்தூர்க் காடுகளில் வசிக்குங் காட்டுச் சாதியான் மற்றும் கள்ளர் பட்டப் பெயர்களுள் ஒன்று.
பல்லவராயன் : சோழர் தம் சேனாபதிகளுக்கு அளித்துவந்த பட்டங்களுள் ஒன்று, கள்ளர் மற்றும் ஓச்சர் முதலிய சிலசாதிகளின் பட்டப் பெயர்.
அச்சுதப்பண்டாரம் :
கள்ளர் பட்டங்களுளொன்று.
அச்சுதப்பண்டாரம் : அரிசி கருவூல தலைவர்
அச்சுதம் - அரிசி
பண்டாரம் - கருவூலம்
கள்ளர் பட்டங்களுளொன்று.
அச்சுதப்பண்டாரம் : அரிசி கருவூல தலைவர்
அச்சுதம் - அரிசி
பண்டாரம் - கருவூலம்
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| அச்சுதம் | கெடுதலின்மை ; அழிவற்றது ; அறுகும் அரிசியும் கூட்டி அணிவது ; அட்சதை . |
முதலியான் :
சோழர் ஆட்சியில் தலைவர்களையும், உயரதிகாரிகளியும் முதலி என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. முதலி என்ற சொல்லுக்கு முதன்மையானவர் என்று பொருளாகும். இவர்களுள் சேனைமுதலி, படைமுதலி, அகம்படிமுதலி என் மூவகை முதலிகள் உண்டு. தேவார ஆசிரியர்களை மூவர் முதலிகள் என்று அழைப்பதுமுண்டு. முதலியான் காலப்போக்கில் திரிந்து முதலியார் என்று வழங்கலாயிற்று. இப்பட்டம் சோழர் படையுடன் தொடர்பு கொண்டதாக அறியப்படுகிறது. இப்பட்டமுடைய கள்ளர் இனத்தவர் தஞ்சை குருங்குலம், சுந்தராம்பட்டி, குளிச்சப்பட்டு, வாகரைகோட்டை,ஒரத்தநாடு ஈச்சங்கோட்டை, மன்னார்குடி மூவரக்கோட்டை, பெருகவாழ்ந்தான், கீழ்க்கரம்பையம், நீடாமங்கலம்,திருவரங்கநல்லூர், பட்டுக்கோட்டை கிளாமங்கலம் முதலிய ஊர்களில் வாழுகின்றனர். ஒரத்தநாடு முதலிப்பட்டி என்னும் ஊரில் முதலியார் பட்டமுடையோர் முத்ன்மையானவர்களாகவுமதிகமாகவும் வாழுகின்றனர்.
கள்ளரின பட்டங்கள் .(Trichy gazetteer --1907)
பூனையர்
திருமெய்யம் பகுதியில் பூவனைக்குடியில் பூதி களறி அமருன்றி என்னும் முத் தரையன் குடைவித்த புஷ்பவனேசுவரர் கோயிலுண்டு . பூனையர் என்ற பட்டப் பெயர் மேலும் சான்றாக அமையும். பூவனைக்குடி கள்ளர்களின் பட்டமாகிய பூவனையரையர் என்ற பட்டம் இன்று பூனையர் என்று திரிந்து வழங்குகிறது.
பூலுவர் / பாலுவர்
சானையர்
காலிங்கராயர்
சியாம் சுந்தர் சம்பட்டியார்,
சிவம் சோழங்கராயர்,
பரத் கூழாக்கியார்
நன்றி : உயர்திரு. ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste
ஆங்கிலேயர்கள், கள்ளர்களை சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- கள்ளர் நாடுகள் (32)
- தொண்டைமான் மன்னர்கள் (20)
- தொண்டைமான் (14)
- பல்லவராயர் (10)
- மழவராயர் (8)
- சோழர் (3)
- கள்ளர் (1)
- பல்லவர்கள் (1)
என்னைப் பற்றி
- கள்ளர் குல வரலாறு
- Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)


































.jpeg)





































_0171.jpg)























.jpg)
.jpg)





.jpg)
