சனி, 29 ஜூன், 2024

கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை - 2


அத்திரியன்  



சாமந்தர் 

சாமந்தர் என்றால்  அமைச்சர், படைத்தலைவர், அரச தலைவர்.



தோளர் பட்டம் :

வத்தனாக்கோட்டை பகுதியில் தோளர் என்று பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்கின்றனர். சங்க இலக்கிய பாடல்களில் 

" நெற்றியிற் கண்ணர் காற்பெருக் தோளர் - நீறணி மேனியர் அனேகர்"  பெரிய தோளர்- தோள்களைக் கொண்டவர்களுக்கும்.

"மைகொள் கண்டர்எண் தோளர்" கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும், எட்டுத் தோள்களையும்  


தமிழ் வீர மறவர்கள் கல்லெனத் திரண்ட தோளர்; கட்டம்மைந்த மேனியர்; முறுக்கு மீசையர்; தருக்கு மொழியினர்; வறிய நடையினர்; சறிய விழியினர் என்று வீரர்கள் போற்றப்படுகின்றனர்.

தோளர் என்பது வலிமையான தோள்களை உடையவர் என்ற பொருளில் அமைந்த பட்டம் ஆகும்.



கீருடையார் - பட்டம் :


உடையான் என்றால் உடையவன் என்று பொருள். கீர் உடையான் என்றால்

கீரம் என்பதற்குச் சொல் ' என்பது பொருள் மேலும் சீரம் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பால் என்பது பொருள். அச்சொல் தமிழில் கீரம்" என்று கூறப்படும். பால் வளம் உடையவர் அல்லது சொல் வளம் உடையவர் என்ற பொருளை தருவது கீருடையான்.

தமிழ் காத்த புலவரே நக்கீரர் என்பவர். . நக்கீரம் என்ப தற்கு நல்ல சொல் என்பது பொருள். இவர் நல்ல சொற்களை அமைத்துப் பாட்டு இயற்று வதில் வல்லவர். ஆதலின் நக்கீரர் என்ற பெயரைப் பெற்ருர் என்று சிலர் கூறுவர்.  நக்கீரம் என்பதற்கு இனிய பால் என்பது பொருள். நக்கீரர் இனிய பாலைப் போன்ற சுவையான பாட்டுக்களை இயற்றும் புலவர். ஆதலால் நக்கீரர் என்ற பெயரைப் பெற்ருர் என்று சிலர் கூறுவர். 

கீரனூர், கீரமங்கலம், கீரன்குடி, எனப் பெயர் கொண்டு பல ஊர்கள் சிறந்து இன்றும் விளங்குகின்றன


மன்னசிங்காரியர் அல்லது மன்னசிங்காரி : 

மன்னசிங்கரி யர் (எ) மன்னசிங்காரியர்

மன்னசிங்கரி = மன்ன (மன்னன்) + சிங்கரி ( சிங்கம்)

"மன்ன எம்பிரான் வருக என்எனைமாலும் நான்முகத் தொருவன்"

மன்ன - மன்னனே, எம்பிரான் - எம் தலைவனே, எனை வருக என் - என்னை வருக என்பாய்; மாலும் நான்முகத்து ஒருவனும் - திருமாலும் நான்கு திருமுகங்களுடைய ஒப்பற்றவனாகிய பிரமனும்.

மிகப்பிரபலமான நரசிம்மர் தலம் சிங்கரி கோவில், வைணவ மடத்தின் முதல் ஜீயருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு. நரசிம்மர் மற்றோரு பெயர் சிங்கரி.


மன்னசிங்காரியர் - மன்னரில் சிங்கம் போன்றவர்கள் என்று பொருள்

அரையர்களில் சிங்கமங்கலத்தை அரசாக கொண்டு பல கள்ளர் அரையர்கள் வாழ்ந்துள்ளனர். மழவராயன், சிவலோகமுடையானான தெற்கிலரையன், ஆயிரவனான அயிலாளயன், வடக்கிலரையன் தேவன் சாந்தன் போன்றோர் கிபி13ஆம் நூற்றாண்டு வரை இருந்துள்ளனர். சோழர் வீழ்ச்சிக்கு பின்பு முறையே பாண்டிய பேரரசின் கட்டுப்பாடில் இருந்துள்ளனர்.

பட்டங்கட்டியார் :




பட்டஞ்சூடிய அதிகாரி, தலைவருக்குரிய பட்டம்.




மாவெட்டியார் :



மதயானைகளைத் அடக்கிக் கீழ்ப்படுத்தித் தம்வசத்தில் வைத்து நடத்துந் திறமுடையராய் அவற்றிற்கு மாவெட்டி யென்னுங் கருவி பயன்பட்டது. அந்த மத யானைகளை அடக்கிக் கீழ்ப்படுத்தித் தம்வசத்தில் வைத்துக்கொள்ளக்கூடிய மாவீரர்களுக்கு உடைய  பட்டம்  " மாவெட்டி " . அம்மாபேட்டை, அரசிவபுரம் கிராமத்தில் மாவெட்டியார் பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.

கவிராயர் :


கவிராயர் என்ற பட்டம், அதற்கு அர்த்தம் என்னவென்று கேட்டால், கவிபாடுவதில் வல்லவர் என்பர். கல்வெட்டை கொஞ்சம் அலசியதில் அவர் வீட்டுக்கு அருகேயுள் நாடு பெயர் கவிர்நாடு, கவிர்நாட்ரயர் மருவி கவிராயராக மாறிவிட்டது - ஆய்வு . திரு. யாஊயாகே பார்த்தி

அச்சுதபண்டாரம் :

கள்ளர்களின் அச்சுதபண்டாரம் என்ற பட்டம் அரிசி கிடங்கின் பாதுகாவலர்களின் பட்டம் ஆகும். பண்டைய காலங்களில் கருவூலம் காப்பவர்களின் பட்டமாக பண்டாரத்தார் பட்டம்  இருந்தன.

பண்டு என்றால் பொருள். தஞ்சை சோழர்கால சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம் எனவும் இந்நூலகத்தில் பணி புரிந்தவர்கள் சரசுவதி பண்டாரிகள் எனவும் வழங்கப்பட்டனர்.


அச்சுதக் களப்பாளன், அச்சுத விக்கிரந்தன், அச்சுத ராயன் என்ற பெயருடைய மன்னர்கள் வாழ்த்திருந்தாலும் கள்ளர்களின் பட்டமான அச்சுதம் என்பது அரிசினை குறிப்பதற்காக அமைகிறது.


மங்கல அச்சுதம் - மங்கலமாகிய அறுகும் அரிசி யும்


பண்டாரம் என்பதற்கு அகராதி தரும் விளக்கம்


1. பொக்கிஷம். தன்னடியவர்க்கு மூலபண்டாரம்வழங்குகின்றான் (திருவாச. 36, 5). 


2. பொக்கிஷசாலை பண்டாரங்காமன் படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123).


3. Granary; களஞ்சியம் Cm. 


4. இராசாங்கம் பண்டாரத்தோட்டம்.


5. இனிய தின்பண்டம் (W.) 


6. பல்பண்டம். (சூடா.)


7. பூசாரிகள்பிரசாதமாகக்கொடுக்கும் மஞ்சள்நிறப்பொடி. (W.)  


8. பரதேசி 


9. சைவமடத்தைச் சார்ந்த துறவி 


10. பூக்கட்டி விற்கும் ஒருவகைச் சாதியார். 


சேனாதிபதி / சேனைவரையர் / சேனையாண்டார்


பன்னிரு சேனைகொண்ட பிரிவுக்குத் தலைமை தாங்கும் தலைவர்களை சேனைவரையர், சேனையாண்டார் என்பர். எதிரி நாட்டு சேனைகளை வென்றவர்கள் சேனைக்கொண்டார் என்ற பட்டத்தினை பெற்றனர். போர்ப்படைகளுக்குத் தலைமை தாங்கியவன் சேனாதிபதி என்ற பட்டம் பெற்றான்.

முதலாம் இராசேந்திரசோழன் சீனத்தரையன், சேனாதி, சேனாதிபதி என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்

தனக்குக்கீழ் இருக்கும் சேனைகளுக்குத் தேவையான ஆயுதங்களை ஆயுதவாரியிடமிருந்து பெற்றுத்தரும் பொறுப்பு சேனைவரையரைச் சார்ந்தது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மூர்க்க விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுதந்திரப் போராட்டத் தியாகி மறைந்த கோபால்சாமி சேனைக்கொண்டார் .


நேதாஜி சேனைக்கொண்டார்

இவரது மகன் தினத்தந்தியின் மூத்த பத்திரிகையாளருமான ஜி. நேதாஜி சேனைக்கொண்டார் ஆவார். . நேதாஜி சேனைக்கொண்டார் திருமணம் செய்து கொள்ளவில்லை.


ஆம்பல் அ. பழனியப்பன் சேனாதிபதி ( துணை ஆட்சியர் )


கள்ளர் இனபற்றாளர் சகோதரர் குமணன் சேனாதிபதியார் அவர்களின் அண்ணன் மகன் பிறப்பு சான்றிதழ் 



உஞ்சனை நாடு இன்றும் கள்ளர் நாட்டு பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. கிபி 14 ஆம் நூற்றாண்டில் மாத்தூரான வீரபாண்டிய புரத்தில் வாழ்ந்த, காத்தான் நகர சேனாதிபதி என்பவன் உஞ்சனை கோயிலுக்கு நிலத்தை கொடையாக அளித்துள்ளார். அவர் அளித்த நிலத்தின் ஒர் எல்லையாக தொண்டைமான் புன்செய் குறிக்கப்பட்டுள்ளது.



களத்தில்வென்றார் :






கள்ளர்களின் களத்தில்வென்றார் என்ற பட்டம் பற்றி நாம் விளக்கவேண்டிய அவசியம் இல்லை. இது எளியோருக்கும் புரியும்.





தஞ்சை திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள களத்தில்வென்றார் பேட்டை , கள்ளர்களின் களத்தில்வென்றார் வாழும் பகுதியாகும். பஞ்சாட்சர மும்மாலை அந்தாதி எழுதியவர் குழந்தைக் களத்தில்வென்றார். ஒரத்தநாட்டில் இருந்த உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் மற்றும்  தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் இலவச படிப்பகம் மற்றும் நூல் நிலையத்தின் மேற்பார்வையாளர் பொன்னண்ணா களத்தில்வென்றார், இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் தலைவர் ஏ.ஆர்.சாந்தமோகன் களத்தில்வென்றார் போன்றவர்கள், களத்தில்வென்றார் மரபினரில்  சிறப்புபெற்றவர்கள்.


மாவலியார் 



திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் கள்ளர்களின்    மாவலியார் மரபினர் வாழும் மாவலியார் தெரு உள்ளது.  மாவலியார் மரபினர்  தஞ்சையின் பலப்பகுதியில் செறிந்து வாழ்கின்றனர். தஞ்சை மாவட்ட விவசாய பிரிவுத் தலைவர் கணபதி மாவலியார், திருவையாறு தமிழிசை மன்றத் தலைவர் ம. வேலு மாவலியார் போன்ற  மாவலியார் மார்பினார்கள் இன்று சிறப்புடன் விளங்குகின்றனர்.

வரலாறில் மாவலியார் விளக்கமாக அமைவது 

மாவலான் : குதிரையேற்றத்தில் வல்லவன் , குதிரைப்பாகன், யானைப்பாகன்

மாவலி மன்னன் : மாவலி என்னும் மன்னன் உலகினைத் தூக்கும் ஆண்பன்றி போன்ற வலிமை படைத்தவன்

மாவலிபுரம் : மாமல்லபுரம், பல்லவ சிற்பங்களால் பேர்பெற்றதுமான மாவலிபுரம் என்ற ஊர்.

மாவலி வாணன் : மாவலி வாணர் என்னும் வாணர்குலத்து அரசர்கள். ஒரு காலத்தே தமிழ்நாட்டுச் சிற்றரசர்களாகச் சிறப்புற்று விளங்கினர், விசயநகர வேந்தர்கள் காலத்தில் இவர்களின் சிறப்பு, சில சமயங்களில் பாண்டியரைக் காட்டினும் கூடியிருந்ததும் உண்டு. புகழ்பெற்ற பாண்டியவரசை அழித்துப் 'பாண்டிய குலாந்தகன் என்ற விருதையும் சூடிக்கொண்டனர்   "வந்தக் கரும்புறத்தார்க் கெல்லாம் அரசரணா மாவலிவா னா! (211) இதன்பாற் குறிப்பிடப்படும் வாணன் 'திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன்' என்பர்.

களுத்திரையார்




இலங்கையில் உஉறுகுணை இராச்சியத்தின் எல்லைகளாக வடக்கில் மகாவலி  ஆறும் வடமேற்கில் களு ஆறும் உள்ளன.  இராஜேந்திர சோழன் காலத்தில் இந்த பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அந்த பகுதியை கைப்பற்றிய வீரமரபினர் களுத்திரையார் இன்று அழைக்கப்பட்டனர். புதுக்கோட்டை பகுதியில் களுத்திரையார் மரபினர் வாழ்ந்துவருகின்றனர். 

மாமுனைக்காரன் / மாமுனைக்காரர்



மாமுனைக்காரன் என்றால் (முனையில் நின்று தோற்கடிப்பவன்) இராசேந்திரன் சோழனால் வழங்கப்பட்ட பட்டம்.

தஞ்சை கள்ளர் நாடான தந்தி நாடு நத்தமாங்குடி நடுக்காட்டு அய்யன்கோவில், மதுரைவீரன், வீரராகவப்பெருமாள் தெய்வங்களை குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள்  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் வாழ்ந்துவரும் மாரிமுத்து மாமனைக்காரர் பேரனும், லெட்சுமணன் மாமனைக்காரர் பேரனும் TVS.தாமு.தாமோதரன் (திமுகஇளைஞர்அணி)  குடும்பத்தார்கள்.




குங்கிலயர் 

குங்கிலயர்  பட்டம் உடைய கள்ளர்கள் சோழமண்டலத்தில் வாழ்கின்றனர். திருச்சி திருவெறும்பூர் பகுதியில் வாழ்கின்றனர்.




குங்கிலியக்கலய நாயனார் என்பவர், சைவ சமயத்தவர்கள் நாயன்மார்கள் எனப் போற்றும் 63 சிவ பக்தர்களுள் ஒருவர்.அமிர்தகடேசருக்கு, பாலன் மார்கணடருக்காகக் காலனை காலால் உதைத்த கருணையை நினைத்து, விதிப்படி தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலயக்கலயர் என்று அழைத்தனர்.


திருப்பனந்தாளில் வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனி, தாடகை என்ற அரச மாதுக்கு அருளும் பொருட்டு சாய்ந்தது. சாய்ந்தவாறே இருந்தது. அதனைச் சாய்வுபோக்கி கண்டு கும்பிட வேண்டுமென்று ஆசை கொண்ட சோழமன்னன் யானைகளையும் சேனைகளையும் பூட்டித் திருமேனியினை நிமிரப்பண்ண முயன்றனன். இறைவர் நேர் நிற்கவில்லை. இதனைக் கேள்வியுற்ற கலயநாயனார், நாதனைக் நேர்காணும் பணியில் நின்ற அரசனை விரும்பித் திருக்கடவூரின்றும் சென்று திருப்பனந்தாளிற் சேர்ந்தனர்.இறைவரது திருமேனிப் பூங்கச்சிற்கட்டிய பெரிய வலிய கயிற்றினை தம் கழுத்திற் பூட்டி இழுத்து வருந்தலுற்றார். இவர் இவ்வாறு செய்து இளைத்த பின் இறைவர் சரிந்து நிற்க ஒண்ணுமோ? இவர் தமது அன்பின் ஒருமைப்பாட்டினைக் கண்டபோது அண்ணலார் நேரே நின்றார். 



உலகளந்தான் / உலங்கத்தார்







உலங்கத்தார் என்ற கள்ளர் பட்டம் உலகளந்தான் என்பது மருவி வந்தது. மின்னாத்தூர், புதுக்கோட்டை பகுதியில் என்றும் வாழ்கின்றனர்.


உலகளந்தான் கோல் என்பது சோழர் காலத்திய ஓர் நில அளவைக்கான ஒரு கருவியாகும். நிலத்தை அளந்து நிலவரி விதிக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது. சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குறவர் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராச சோழன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு மாபெரும் பணியாகும்.


உலகளந்தான் கோல் மூலம் அறியப்படும் சில அளவு விவரங்கள்


24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு

25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்

33”அங்குலம்(இஞ்ச்)ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு முழமாகும்.



இரும்பர் : 



"இரும்பனை வெண்தோடு மலைந்தோன் - சேரன். "





வாரைவளர் வாராப்பூர் நாட்டு இரும்பர் வகையரா: ( பாலடிகருப்பர் கோயில்: வாராப்பூர்) 





இரும்பாடி, சின்ன இரும்பாடி, மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். கள்ளர்கள் வாழும் ஊராகும்.


தேட்டாளர் :


தேட்டாளர் என்பதற்கு செல்வ வசதியுடையவர் என்று பொருள்


வஞ்சித் தாழிசை : குறளடி (இரு சீர் அடி), நான்கு கொண்ட செய்யுள்கள் மூன்று ஒரு பொருள்மேல் அடுக்கி வருவது.

பாட்டாளர் நலம்பேணாத்
தேட்டாள ராய்வாழ்வார்
மாட்டாத மரமென்ன
நாட்டாரால் நகையுண்பர் 

(பாட்டாளர் = உழைப்பாளி; தேட்டாளர் = செல்வ வசதியர்; எனப் புலவர் குழந்தை இதற்குச் சான்று காட்டுகின்றார்.


வள்ளையார்

ஒரத்தநாடு கண்ணுகுடி மையம் பகுதியில் வள்ளையர் பட்டம் உடையவர்கள் வாழ்கின்றனர்.


காஞ்சிபுரம் திருப்போரூர் முருகப்பெருமானின் கோயிலுக்கு முன்னே இன்றும் வள்ளையர் ஓடை, சரவணப் பொய்கை எனும் பெயரில் வற்றாத தீர்த்தமாக உள்ளது.


வள்ளையார் பட்டம் வள்ளைக்கொடியோடு தொடர்புடையதாக இருக்கலாம். வள்ளைக்கொடி மிக விரைவாகவும், எளிதாகவும் வளர்கின்ற காரணத்தால் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் மட்டுமல்லாது, உணவு தட்டுப்பாடு ஏற்படும் போர்காலத்தில்கூட  வள்ளைக்கீரை பயன்படுத்தப்பட்டுள்ளது. 



நாடாவி

கள்ளர்களில் நாடாள்வான், நாடன் என்ற பட்டங்களை போல் நாடாவி பட்டம் உடைய மரபினரும் உள்ளனர்.

‛நாடாவி‛ உற்சவத்திற்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் ஐயங்கார்குளம் கிராமத்தில் விஜய நகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட, பழமையான, புகழ்பெற்ற சஞ்சீவராயர் கோவில் இந்த பகுதியில் அமைந்துள்ளது; அதே போல், கைலாசநாதர் கோவிலும் உள்ளது. அதை தவிர, நடவாவி கிணறு என்று அழைக்கப்படும் பாதாள கிணறு இந்த பகுதியில் உள்ளதால் இந்த ஊர் மேலும் சிறப்பு பெற்று விளங்குகிறது. சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் இங்குள்ள ஆஞ்சனேயர் கோவில் மற்றும் நடவாவி கிணற்றுக்கு எழுந்தருள்வார்.நடவாவி திருவிழாவின் போது, இந்த பகுதி மக்களும் மற்றும் சுற்றுப்புற மக்களும் ஆயிரக்கணக்கில் அந்த கிராமத்தில் கூடுவர். 


பத்தாளன்

பத்தாளன்கோட்டை, பத்தாள பேட்டை, பத்தாளன்பட்டி என்னும் ஊர்களில் இன்றும் வாழ்கின்றனர். 




ஈழத்து வாழ்வும் வளமும் - K. Ganapathy Pillai - 1962 ல் எழுதிய நூலில், ஒவ்வொரு காணிக்கும் ஒவ்வொரு சீவற்காரன் இருப்பான். அவனைப் 'பத்தாளன்” என்றழைப்பார் .
அவனே, அக்காணிக்குள் வரும் வருமானம் யாவற்றையும் எடுக்க அக்காணிக்காரனுக்கு உதவி செய் பவன் என்கிறார்.
    




மேலும் பல்லவராச்சியம் என்ற நூலில் கி.பி. 1344ல் இலங்கை வந்தார் இபின் பதுரதா, அவர் குறிப்பிலிருந்து கடற்பயணத்தில் ஒன்பதாம் நாளில் இலங்கைத் தீவின் பத்தளாகரையை அடைந்தோம். ஆரியச்சக்கரவர்த்தி என்னை வரும்படி ஆளனுப்பினான். நான் அவனது தலைநகரான பத்தளத்தில் அவனிடம் சென்றேன். இதில் பத்தளம் என்பது இபின் பதுரதா காலத்தில் ஆரியச்சக்கரவர்த்தி மன்னன் மார்த்தாண்ட சிங்கையாரியன் ஆட்சி செய்த புத்தாளம் ஆகும். ஆரியச்சக்கரவர்த்தி விருதுப்பெயர்கள் சிங்கையாரியன், சேதுக்காவலன், கங்கையாரியர், கூழங்கைச் சக்கரவர்த்தி, கோன் ஆகும்.





இன்று கள்ளரில் காணப்படும் பத்தாளர், கங்கைராயர், சிங்காரியர், சிங்காரிக்கர், கூழாக்கியார், கோன்றி என்ற பட்டங்கள் இவற்றுடன் தொடர்புடையவையாக இருக்கலாம்.



சாமுத்திரியர் :



சாமுத்திரியர் என்ற பட்டம் சேரநாட்டு போர் வெற்றியோடு தொடர்பு உடையதாக அமைகிறது. துளசி மகாநாடு துவாக்குடியில் சாமுத்திரியர் பட்டமுடைய கள்ளர் மரபினர் வாழ்ந்துவருகின்றனர்.


அரேபியாவில் உள்ள கடற்கரை நகரான ஜாபரில் அப்துல் ரஹ்மான் சாமுரி என்பவரின் கல்லறை உள்ளது. மலபாரைச் சேர்ந்த இஸ்லாமியராக மாறிய ஒரு இந்து அரசனின் கல்லறை அது என்று கூறப்படுகிறது. இக்கல்லறை உள்ளூர் மக்களால் மிகவும் மதிக்கப்படுகிறது. சாமுரி என்பது சாமுத்ரி என்பதன் திரிபாகும். சாமுத்ரி என்பது கேரள அரசர்களுக்கு வழங்கப்படும் பெயர் என்று மாப்பிள்ளாக்கள் கூறுகிறார்கள் என்கிறார் லோகான். (மலபார் மேனுவல் பக்கம் 196)



கோழிக்கோட்டை ஆண்டுவந்த சாமுத்திரியர், போர்த்துகீசியர்களுடனான போர் 16-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்தது

நாயக்கர்:
கள்ளரில் நாயக்கர் பட்டமுடையவர்கள் அரியலூர் நாயக்கர் பாளையம் ஜமீன் அய்யம்பேட்டை சாவடி நாயக்கர்கள். மேலும் தஞ்சாவூர் பகுதியில் பல ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

வில்லவராயர்



செயங்கொண்டார், சயங்கொண்டார் , ஜெயங்கொண்டப்பிரியர்




சாமுந்தர் 


சாமுந்தர்‌ என்றால்‌ (இந்தியில்‌) கடல்‌ என்றும்‌ பாரசீக மொழியில்‌ புராணங்களில்‌ வரும்‌ தவளை இனம்‌ என்றும்‌ பொருள்படும்‌. இச்சொல்‌ பாரசீகத்தில்‌ பிர்‌ என்று எழுதப்பட்டுள்ளது; இதற்கு கேணி என்று பொருள்‌.
வீரவல்லாளன்‌, வீரபாண்டியன்‌ ஆகிய இருவரையும்‌ பிர்‌ என்ற சொல்லினால்‌ குறிக்கும்‌ குஸ்ரு பின்னர்‌ பிர்துல்‌ என்பதை வீரபாண்டியனின்‌ தலைநகர்‌ எனக்‌ குறிப்பிடுகிறார்‌. 

செம்பொன்கொண்டார் 



அலங்காரப்பிரியர்





👇👇👇👇👇👇👇👇👇

கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை - 1


வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்