திங்கள், 6 ஏப்ரல், 2020

காடவராயர் வரலாறு




"ஸ்வஸ்தி ஶ்ரீ கூடல் ஆளப்பிறந்தான் அழகிய பல்லவன் காடவராயன்".

கள்ளர் குலத்தில் இன்றும் காடவராயர் வம்சத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .

காடவராயன்பட்டி :- தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தவர்வ கோட்டை  வட்டத்தில் உள்ள காடவராயன்பட்டி,  காடவராயர்  பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

காடவராயர் தெரு :- தஞ்சாவூர் மாவட்டம்,  ஒரத்தநாடு வட்டத்தில் ஆர்சுத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள காடவராயர்  பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

தெற்கு காடவராயர் தெரு :- தஞ்சாவூர் மாவட்டம்,  பசுபதிகோவில், பாபநாசம் தாலுகாவில் உள்ள காடவராயர்  பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

காடவராயர் குளம் :- தஞ்சாவூர் மாவட்டம்,  தஞ்சாவூர் வட்டத்தில் மாரியம்மன் கோயில் ஊராட்சியில் அமைந்துள்ள  காடவராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.

புதுக்கோட்டை மாவட்டம் காடவன்பட்டி, நமல்பட்டி, தஞ்சை மாவட்டம் பஞ்சநதிக்கோட்டை, கருக்காக்கோட்டை, ஈச்சங்கோட்டை, ஆழிவாய்க்கால், சாமிப்பட்டி, மருங்குளம், புதுவூர் முதலிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர். 



தஞ்சாவூர் மாவட்டம் : -  1948 ஆம் ஆண்டு கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு நெல் உதவி செய்தவர்களில் கள்ளர் மரபை சேர்ந்த காடவராயர்கள்

பசுபதிகோயில் :- 

P. தியாகராச காடவராயர்

வெள்ளாம்பிரம்பூர் :- 

A. சந்திரகாசக் காடவராயர் 
A. ஏசைவராசுக் காடவராயர்




தியாகராச காடவராயர்

அய்யம்பேட்டை காந்தி நிலையம் 1947 ஆம் ஆண்டு கட்டட வேலைகள் தொடங்கப்பட்டு 1950 ஆம் ஆண்டு நிறைவடைந்து தற்போது 75 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இதை நிர்வகித்தவர்களில் ஒருவர் தியாகராச காடவராயர்.

தஞ்சை மாவட்டம் விண்ணமங்கலம் பெரும் புலவர் வி.அ. பரிமேலழகர் காடவராயர் மற்றும் முனைவர் பழனி அரங்கசாமி காடவராயர் 



மொழிபெயர்ப்பாளர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2018 ஆம் ஆண்டு முனைவர் பழனி அரங்கசாமி காடவராயர் பெற்றார்.









புதுகோட்டை மாவட்டத்தில் வதனக்கோட்டை சாமியப்பா காடவராயர் வழங்கிய கோவில் திருப்பணி 


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருவரம்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது நவல்பட்டு.  தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் நவல்பட்டு விஜி காடவராயர் 



கள்ளர் படைப்பற்று தலைவர் 
வசந்த் காடவராயர்






உடையார்கோவில் கோவிந்தராஜ் காடவராயர் 




இவர்கள் பல்லவர்களின் கிளை குலத்தினர். இவர்களை போன்று தொண்டைமான் அரசர்களும் பல்லவர் குலத்தினர் . பல்லவர்களுக்கு பல பெயர்கள் உண்டு அவற்றில்  

பல்லவதரையர்
பல்லவநாடர்
பல்லவர்.
காடவராயர்
காடுவெட்டி,
காடுவெட்டியார்.
தொண்டையர்
தொண்டைப்பிரியர்,
தொண்டாப்பிரியர்
தொண்டைமான்,
தொண்டைமார்
தொண்டைமான்கிளையார்
தொண்டையர்
பல்லவராயர் 
சேந்தன்


போன்றவை இன்றும் கள்ளர் குலத்தில் கிளை குடும்பங்களுடைய பெயர்களாக பட்ட பெயர்களாக உள்ளன.

எடுத்துகாட்டாக புதுகோட்டை தொண்டைமான் அரசகுடும்பத்தை கூறலாம். இவர்களும் பல்லவர்களின் கிளை குலத்தவர்கள் தான். இவர்களும் கள்ளர்கள் என்பதை உலகம் அறியும்.

















மறவன் காடவராயன்


கள்ளன் கச்சிராய வீரன்


காடவராயர்கள் பல்லவர் வழியில் ஒரு கிளையினர் : 

திருமுனைப்பாடி நாட்டுக் கூடலூரையும் சேந்த மங்கலத்தையும் தலை நகராகக் கொண்டு சோழர்களின் கீழ் அதிகாரிகளாக இருந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் சோழ அரசர்களிடம் பேரன்பு உடையவர்களாய் உற்றுழி உதவியும் வந்துள்ளனர். சிம்ம விஷ்ணுவை முதலாகக் கொண்ட பல்லவமரபினர் தம்மைக் காடவர் என்று கூறிக் கொள்ளவில்லை எனினும், இரண்டாம் நந்திவர்மனது முன்னோர்கள் காடவர்குலத் தோன்றல்கள் என்று தம்மைக் குறிப்பிட்டுக் கொண்டார்கள்.


சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு முனையரையர் மரபு மன்னர்களும், பிற்காலப் பல்லவர் எனப்படும் காடவராயர் மரபு மன்னர்களும் அரசோச்சியுள்ளனர். எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டளவில் நரசிங்க முனையரையர் என்னும் மன்னர் ஆட்சி புரிந்தார் , பதின்மூன்றாம் நூற்றாண்டில் கோப் பெருஞ்சிங்கக் காடவராயன் என்னும் மன்னர் ஆட்சி புரிந்தார்.




இவன் மேற்குறித்த காடவர் மரபில் தோன்றியவன்; கூடலூர் என்ற நகரில் வாழ்ந்தவன். இவன் அரச நாராயணன் ஆளப்பிறந்தானான வீரசேகரக் காடவராயன் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளான். இவன் மூன்றாம் குலோத்துங்கனுடைய 9-ஆம் ஆட்சி யாண்டில் திருநறுங்கொண்டை நாற்பத் தெண்ணாயிரப் பெரும் பள்ளித் தேவர்க்குத் திருநாமத்துக் காணியாக நிலமளித்துள்ளான் (381 of 1902); அக்குலோத்துங்கனுடைய 13-ஆம் ஆட்சி யாண்டில் திருவண்ணாமலையுடைய நாயனார்க்குச் சாத்தியருள ஏகாவலி வடம் ஒன்று அளித்துள்ளான் (531 of 1902). மேற்படி குலோத்துங்கனின் 25-ஆம் ஆட்சியாண்டு (கி. பி. 1203)க்குரிய திரு வெண்ணெய் நல்லூர்க் கல்வெட்டில் (312 of 1902 s.I.I.VI.1941) இவன் கூடலூருடையான் வீரசேஅதிகைமான் என்று குறிப்பிடப்பெறுகிறான்- னால் இவன் அதிகைமானை வென்றிருத்தல் கூடும் என்று அறியப்பெறும். சகரயாண்டு 1108-க்குரிய (கி.பி. 1186) விருத்தாசலம் கோயிலில் கண்ட பாடல் சாசனத்தில் (74 of 1918; S. 1. . Vol XII No 263) இவன் முன்னேர்கள் சிலருடைய வரலாறுகள் கூறப்படுவதோடு, இவன் அதிகைமானை வென்றமையும் கூறப்ட்டுள்ளது.

'கண்டராதித்தன் வாசலுக்கு மேற்கே புறப்பட்டுக் டக மாராயன் கூடலும் அதிகைமானாடும் அழித்து வெற்றிக்கொடி யுயர்த்தி அனுமனும் பொறித்தான்' 

என்ற கல்வெட்டுப் பகுதி. 

இதில் கண்டராதித்த வாசல் என்பது இந்தக் கல்வெட்டிருக்கும் கோபுரமாகக் கருதப்படுகிறது. இதில் கண்ட கூடல் என்பது சேலம் மாவட்த்திலுள்ள தீர்த்தாமலை என்னும் ஊர் என்பர். இந்தக் கல்வெட்டின்படி ஒன்று திருவெண்ணெய் நல்லூர்க் புரீஸ்வரர் கோயிலிலேயும் காணப்படுகிறது. (464 21: S I Vol xi No 264). இவ்விரு கல்வெட்டுக்களிலிருந்து இவன் ஆளப்பிறந்தான் என்ற சிறப்புப் பெயரை உடையவன் என்றும், அதிகைமானை வென்றவன் என்பதும், கூடல் என்பது கற்கடக மாராயனுக்கு உரிது என்றும், இவனுடைய கொடி அனுமக்கொடி என்றும் அறியலாம்.

இவ்வீர சேகரக் காடவராயனின் மகனாகக் கருதப்படுபவன் கூடல் ஏழிசைமோகன் மணவாளப்பெரு வாணிலை கண்ட பெருமாளாகிய இராஜராஜக் காடவராயன்.

ஏழிசை மோகன் என்பது இவன் முன்னோர்களும் கொண்டிருந்த சிறப்புப் பெயர்களுள் ஒன்று. ஏழிசைமோகன் திருமண்டபம் என்று ஒருமண்டபம் இரண்டாம் குலோத்துங்க சோழனது 15-ஆம் ஆட்சியாண்டில் கட்டப்பட்டதாக ஒரு கல்வெட்டு விருத்தாசலத்தில் கானப்படுகிறது. எனவே ஏழிசைமோகன் என்பது இவன் குலத்தோருக்குரியசிறப்புப்பெயர் என அறியலாம். இராஜராஜக் காடவராயன் என்பது இவனது இயற்பெயராகும்.

வானிலை என்பது புறப்பொருள் துறைகளில் ஒன்று. ’செற்றார்மேல் செலவமர்ந்து, கொற்றவாணாட் கொண்டன்று’ என்பது கொளு. இக் கொளுவிற் கண்டவண்ணம் வாளைப் புறவீடு செய்வித்துப் பகைவர்மேற் சென்று வாள்கொண்டு வெற்றி யெய்தியமையின் இவனுக்கு வாணிலை கண்ட பெருமாள் என்ற சிறப்புப் பெயர் வந்திருக்க வேண்டும். அதுவும் மூன்றாம் குலோத்துங்கன் நிகழ்த்திய போர்களில் செற்றார் மேல் சென்று வென்றமையின் இவன் இங்ஙனம் பாராட்டப் பெற்றான். இவனுக்குரிய இச்சிறப்புப்பெயர் மூன்றாம் குலோத்துங்கனின் 17-ஆம் ஆட்சியாண்டிற் குரிய (கி.பி. 1195) திரு வெண்ணெய் நல்லூர்க்கல்லெழுத்திலும் (313 of 1902), இச்சோழனுடைய 28-ஆம் ஆட்சியாண்டிற்குரிய விருத்தாசலம் கல்வெட்டிலும் (133 of 1900) குறிக்கப்பெற்றுள்ளன.

மேலே கூறிய விருத்தாசலம், திருவெண்ணெய் நல்லூர்க் கல்லெழுத்துக்களினின்று இவனுக்கு மணவாளப் பெருமாள் என்ற சிறப்புப் பெயர் இருந்தது என்று தெரியவருகிறது. இவனுடைய போர் வீரத்தையும் பேராற்றலையும் கண்ட மூன்றாம் குலோத்துங்கசோழன் இவனுக்கு மகள் ஒருத்தியைத்திருமணம் செய்வித்துச் சிறப்புச் செய்தான். அந்நாள் முதல் இவன் மணவாளப்பெருமாள் என்று வழங்கப் பெற்றனன் என்று ஆய்வாளர் பகர்வர் (திரு. பண்டாரத்தார், சோழர் வரலாறு பாகம் 2, பக்கம் 179-180). வாணிலை கண்ட பெருமாள் என்ற சிறப்பு எய்துவதற்கு முன்னதாகவே மணவாளப் பெருமாள் என்ற சிறப்பை இவன் எய்தியிருத்மல் கூடும். இதனை 'மணவாளப் பெருமாளான ரிலே கொண்ட பெருமாளான ராஜராஜக்காடவராயர்’’ என்ற கல்வெட்டுத் தொடரில் கண்ட முறை யினின்று கூர்ந்து அறியலாம். இவனை முதற் கோப்பெருஞ் சிங்கன் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் குறுநில மன்னர்கள் தத்தம் நாட்டுப் பகுதிகளைச் சுதந்திரம் பெற்றே ஆண்டு வந்தார்கள். ஒரோவழித் தங்களுக்குள் முரண்பட்டுப் பேரரசுக்கு இடையூறு விளைவித்தவரும் உண்டு. அவ்வமயங்களில் சோழப் பேரரசின் நன்மையின் பொருட்டும் சோழப் பேரரசின் பெருமைக்கு இழுக்கு வாரா திருத்தற் பொருட்டும், பலரும் ஒருங்கு சோழ அரசனுக்கு அடங்கியிருப்பதாக உடன்படிக்கை செய்து கொள்வதுண்டு. அரசனது ஆணையை மீறி நடந்தால் அரசனிடம் அன்புடையவர்கள் எல்லோரும் ஓருங்கு சேர்ந்து பேரரசனைப் பகைத்த குறுநில மன்னன் இடம் தாமும் பகைமை பூண்டு உடன்படிக்கை செய்து கொள்வதுமுண்டு.

அங்ஙனம் செய்த உடன்படிக்கைகளில் மூன்றாம் குலாத்துங்கனுடைய 27-ஆம் ஆட்சியாண்டுக்குரிய திருவண்ணாமலைக் கல்வெட்டில் பதின்மர் தலைவர்கள் ஒருங்கு சேர்ந்து அரசியலுக்குக் கேடு சூழ்ந்த சிலருடன் பகைமை கொள்ள உடன்படிக்கை செய்து கொண்டது ஒன்று. கேடு சூழத் தொடங்கியவர்கள் குலோத்துங்க சோழ வாணகோவரையன், மகதை நாடாழ்வானான வாணகோவரையன் என்பவர்களோடு, இராஜராஜக் காடவராயனும் காணப்படுகின்றான். மேற்படி உடன்படிக்கையின் சில பகுதிகள் வருமாறு:-

“நாங்கள் ஒரு காலமும் இராஜ காரியத்துக்குத் தப்பாமே நின்று, சேதிராயர் அருளிச் செய்தபடியே பணி செய்யக் கடவோமாகவும். இப்படிச் செய்யுமிடத்துக் குலோத்துங்க சோழ வாணகோவரையனும், மகதை நாடாழ்வானான வாணகோவரையனும், இவர்கள் பக்கல் ஆளாதல் ஒலையாதல் போகக் காட்டுதல் உறவு பண்ணுதல் செய்யக் கடவோம் அல்லாதோம் ஆகவும்... ... ... எங்களிலே ஒருவுரை வாணகோ வரையராதல், இராஜ ராஜக் காடவராயராதல் வினை செய்தாருண்டாகில் படையும் குதிரையும் முதலுக்கு நேராகக் கொண்டு குத்த கடவோமாகவும் (S. I. I. Vol VIII No. 106).

இப்பகுதியினின்று, இராஜராஜக் காடவராயன் தன்னலம் கருதி அரசனுக்கு முரண்பட்டவனுகக் கருதப்பட்டானென அறிய வருகிறது. இவன் செய்த அடாத செயல்களே பின்னர்ச் சோழப் பேரரசின் அழிவுக்கு வழி கோலியன. தன்னலங் கருதிச் செய்த செயலானது ஒரு பேரரசுக்கே முடிவு கோலியதாயிற்று!




சேந்த மங்கலத்துள் “சகலபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ மணவாளன் பெருமாளுடையார்க்கு யாண்டு அஞ்சாவது“ என்று தொடங்கி ஒரு கல்வெட்டுள்ளது (S. I. I. Vol VIII No. 850). ஸ்ரீ மணவாளன் பெருமாளுடையார் என்பது இங்கு எடுத்துக்கொண்ட தலைவனாகவே கருதல் தகும். இம் மணவாளன் பெருமாள் சேந்த மங்கலத்துள் ஊரும் படைவீடும் செய்து, வாணிலை கண்டீசுரமுடைய நாயனாரை எழுந்தருளப் பண்ணி அப் பெருமானுக்கு ஏழிசை மோகன் சந்தி என்ற நாள் வழிபாட்டையும் தொடங்கி நிபந்தம் விட்டான் என்று அக் கல்வெட்டில் உள்ளது. ’ஊரும் படை விடும் செய்து’ என்றதால் இவனே சேந்த மங்கலத்தை அரண் பொருந்திய ஊராக அமைத்தான் என்றும், ’வாணிலை கண்டீசுவர நாயனாரை எழுந்தருளப்பண்ணி’ என்றமையான் இவனே தன் சிறப்புப் பெயரால் கோயில் அமைத்து இறைவனை எழுந்தருள்வித்தான் என்றும், “இந்நாயனார்க்கு நாம் கண்ட ஏழிசைமோகன்சந்தி’ என்ற பகுதியால் இவன் தன் குலப்பெயராகிய ’ஏழிசை மோகன்’ என்ற பெயரால் நாள் வழிபாட்டை நியமித்து நிபந்தம் விட்டான் என்றும் அறிய வருகிறது.

இதுகாறும் கூறியவற்றால் இவனும் இவன் முன்னோரும் சிறந்த சிவபக்திச் செல்வம் வாய்ந்தவர்கள் என்பதும், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவனுக்கடுத்து வந்த மூன்றாம் இராசராச சோழன் காலத்திலும் இவன் திகழ்ந்தவன் என்பதும், முதலில் மூன்றாம் குலோத்துங்க சோழனாலே அபிமானிக்கப் பெற்று அவனால் சிறப்பிக்கப் பெற்றவனென்பதும், இவனே பின்னர்ச் சகல புவனச் சக்ரவர்த்திகள் முதற் கோப்பெருஞ் சிங்கனாக விளங்கினானென்பதும் அறியலாம்.

இவன் கிட்டத்தட்ட கிபி 1216 முதல் 1242 வரை அரசாண்டவன். தஞ்சை மாவட்டம் நீடுரைச் சுற்றிய பகுதி கோப்பெருஞ்சிங்கனால் ஆளப்பெற்றதாய் குறிப்பிடுகிறது. கோப்பெருஞ்சிங்கனின் வீரம் வெவ் வேறு வகையான ஜந்து செய்யுட்களில் பாராட்டப்படுகிறது.

கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனி நாராயண நிருபதுங்கன், தொண்டைக்கும் மல்லைக்கும் மன்னன் என்றெல்லாம் பட்டங்கள் இருந்திருக்கிறது. கோப்பெருஞ்சிங்கனும் ஹொய்சாளர்களும் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர் என்பது கி.பி. 1236ல் துன்முகி ஆண்டில் காடவனுக்கு விரோதமான ஒரு படையெடுப்பில் வீர சோமேசுவரன் மங்கலத்தில் தங்கினான் என்று அறியப்படும் ஒரு குறிப்பால் தெளிவாகத் தெரிகிறது.

1216-ல் பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தபோது முதலாம் கோப்பெருஞ்சிம்மன் சேந்தமங்கலத்தில் ஒளிந்துக்கொண்டு தன் வலிமையைப் பெருக்கிக் கொண்டான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு காடவர்கள் தங்கள் ஆதிக்கத்தை சிறிது சிறிதாக அதிகரித்து வந்தனர். இறுதியில், இலங்கை மன்னன் இரண்டாம் பராக்கிரம பாகூவின் உதவியுடன் மூன்றாம் இராசராச சோழனைத் தோற்கடித்து சிறைப்படுத்தினான்.

எல்லாக் கோயில்களையும் கொள்ளையடிக்கும் படியும் ஏற்பாடு செய்தான்.

இடர்க்கலம்பை, வயலூர் பாடல்கள் இவனால் பாடப்பட்டவை எனக் கருதப்படுகின்றன. இப்பாடல்களின் இறுதியில் 'சொக்கசீயன் ஆணை'  எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

ஒரு பாடல்திறையிட்(டு) இருமின்கள் தெவ்வேந்திர் செம்பொன்துறையிட்ட பூம்புகார் வேந்தன் – சிறைகிடந்தகோட்டம் தனைநினைமின் கோப்பெருஞ்சிங் கன்கமலநாட்டம் கடைசிவந்த நாள்

ஹொய்சாள தண்டநாதர்களின் படையெடுப்பை பற்றி விவரமாகத் தெரிவிக்கும் திருவேந்திபுரம் கல்வெட்டு இராஜராஜனைத் தாக்கி சிறைப்பிடித்து பிறகு விடுதலை செய்த காடவச் சிற்றரசன், புகழ் பெற்ற கோப்பெருஞ்சிங்கனே என்று தெரிவிக்கிறது.  இந்த காலப்பகுதியின் வரலாற்றில் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிறைந்த இடம் உண்டு, தமிழ்நாட்டிலும் கன்னட நாட்டிலும் கிடைக்கும் ஏனைய கல்வெட்டுக்களும் இந்தச் செய்திகளை உறுதிபடுத்துகின்றன.

மகேந்திரவர்மன் I, நரசிம்மவர்மன் I, நரசிம்மவர்மன் II ஆகியோரின் பட்டப் பெயர்களுள் ஒன்றாகக் காடவன் என்பதுக் காணப்படுகிறது. பல்லவர்களைக் காடவர், தொண்டையார், காடுவெட்டி என்ற பெயர்களால் குறிப்பிடுவதைப் பல்வேறு நூல்களில் காணலாம். காடவர்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள உறவு குறித்து காஞ்சிபுரத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோப்பெருஞ்சிங்கனுக்கு சேந்தன் என்ற பட்ட பெயரும் இருந்தது. சேந்தன் என்பதும் இன்று கள்ளர்களின் ஒரு பட்டமாகும்





சேந்தமங்கலம் என்னும் சிறு நகரில் தலைமை அமைத்து மாவீரனாக மட்டுமில்லாமல் மக்களின் அபிமானத்தை பெற்ற மன்னனாகவும் விளங்கினான். சிவபெருமான் மீது கொண்ட பற்றினால்  தஞ்சையிலிருந்து ஆந்திர மாநிலம் திராட்சராமம்  வரை சோழர்களால்  நிர்மாணிக்கப்பட்ட பல்வேறு சிவாலயங்களுக்கு கொடைகளை வழங்கினான். சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலின் கீழை கோபுரத்தை கட்டியவன் இவனே.  

பாண்டியர்களின் நட்பை பெற்றிருந்த காடவராயர்கள் இன்று எதிரிகளாகி இருந்தனர். 1279-ல் பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் சோழ நாடு,திருமுனைப்பாடி, சேந்தமங்கலம் ஆகிய அரசுகளை வென்று பாண்டிய நாட்டுடன் இணைத்துக் கொண்டான். இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் வீழ்த்தப்பட்டான். காடவ குல ஆட்சியும் முடிவுக்கு வந்தது.

இன்றும் சோழமண்டலம் முழுவதும் காடவர் மரபினர் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வரலாறு


திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்
வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள் பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.
இத்திருமுறையில் ஐந்தாவது பிரபந்தமாகிய சேத்திரத் திருவெண்பாவை அருளியவர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார். இவர் திருத்தொண்டத் தொகையில் சுந்தரரால் `ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்` எனப் போற்றப் பெறுபவராவார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இந்நாயனாரின் வரலாற்றை விளங்க விரித்துரைத்துள்ளார்.


காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூஉ வாகும்.ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.

ஐயடிகள் உலகில் புகழ் நிலவ அரசு புரிந்த பல்லவர் குலத்தில் தோன்றினார். நாட்டில் வறுமையும் பகையும் குடிகளை வருத்தா வண்ணம் நீதிநெறியோடு ஆட்சி புரிந்தார். சிவநெறியைப் போற்றி வளர்த்தார்.

திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் பெருமையுடன் இனிதமரப் பிறபுலங்கள் அடிப்படுத்துத் தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேல் சைவமுடன்
அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில்
என இம்மன்னரது பெருவீரத்தையும் சிவநெறிப் பற்றையும் சேக்கிழார் விளக்கியுள்ளார்.

துறவுள்ளம்
மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம் மாமன்னர் அரசுரிமை தன் சிவனடித் தொண்டுக்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துத் தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவ தலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப் பெறுகிறது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் விளங்கக் காணலாம்.

இவ்வாறு ஐயடிகள் செந்தமிழால் சிவ நெறி போற்றியும் தமக்கு இயைந்த ஆலயத் திருப்பணிகள் ஆற்றியும் வாழ்ந்து முடிவில் சிவலோகம் எய்திச் சிவபிரான் திருவடிகளை அடைந்தார் என்பது பெரிய புராணம் உணர்த்தும் இந்நாயனார் வரலாறாகும்.

ஐயடிகள் யார்?
இந்நாயனார் பல்லவ மன்னர்களில் யாவர் என்பதையும் இவரது காலத்தையும் பேராசிரியர் திகு. க. வெள்ளை வாரணனார் விரிவாக ஆராய்ந்து தெளிவு செய்துள்ளார்.

சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் `கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்` எனக் குறிப்பிடப்பெறும் மன்னன் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டிய இராஜசிம்மப் பல்வனாவான் என்றும் அம்மன்னனது தந்தையாகிய முதலாம் பரமேசுவரவர்மனே ஐயடிகள் காடவர்கோன் ஆவார் எனவும் அவர் தெளிவு செய்துள்ளார்.

முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தில் பெரும் போர் ஒன்று நிகழ்ந்தது. சாளுக்கிய வேந்தனாகிய இரண்டாம் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் என்பான் தமிழ் மாநிலத்தைக் கைப்பற்றக் கருதி தமிழகம் வந்து இம் மன்னனோடு பெரும் போர் புரிந்து வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது பாண்டியன் நெடுமாறன் மகனாகிய கோச்சடையன் என்பானிடம் தோல்வியுற்றுத் திரும்ப நேர்ந்தது. இவ்வேளையில் அவனிடம் தோற்ற பல்லவனாகிய முதலாம் பரமேசுவரவர்மன் தன் படைகளுடன் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள பெருவளநல்லூரில் விக்கிரமாதித்தனோடு போரிட்டு வெற்றி கொண்டான். தோற்ற விக்ரமாதித்தன் ஒரு கந்தையைப் போர்த்திக்கொண்டு தன் நாடு திரும்பினான்.

விக்கிரமாதித்தனைப் பரமேசுவரவர்மன் வெற்றி கொண்டதைக் கைலாசநாதர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. சேக்கிழார் ஐயடிகள் காடவர்கோனின் பெருவீரத்தைக் குறிப்பிடும் பாடல் இப்போரைக் குறித்ததாகலாம். ஆதலின் அம்மன்னனே ஐயடிகள் என்பதையும் அறியலாம்.

பரமேசுவரவர்மன் கூரம் என்ற ஊருக்குப் பரமேசுவர மங்கலம் எனப் பெயர் சூட்டி அவ்வூரில் விச்சாவிநீத பல்லவ மன்ன பரமேசுவரக்கிருகம் என்ற சிவாலயத்தை முதன் முதல் கற்றளியாகக் கட்டிய பெருமைக்கு உரியவன். மாமல்லபுரத்தில் இவன் பாட்ட னாகிய நரசிம்மவர்மன் காலத்தில் தொடங்கி இம்மன்னனால் முற்று விக்கப்பட்ட ஆலயத்தில் காணும் கல்வெட்டால் இவன் வடமொழி தென்மொழிகளில் வல்லவன் என்பதை உணரலாம்.

இவ்வாறு பெருவீரனாகவும், சிவநெறியாளனாகவும் புலமையாள னாகவும் விளங்கிய பரமேசுவரவர்மன் தன் ஆட்சியைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துவிட்டு, தலங்கள் தோறும் சென்று வழிபட்டு வெண்பா மாலைகளால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்ததால் அவன் மகனாலும் குடிமக்களாலும் இம்மன்னன் `ஐயடிகள்` எனப் போற்றப் பெற்றான் என்று கொள்ளலாம். இவர் காலம் கி.பி. 670 முதல் 685 வரையாகும்.


சேந்தமங்கலம் கோட்டை













































































































வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்