ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

வளரி ஆயுதம் : வளரி வரலாறு / Valari History In Tamil







வளரி என்பது தமிழர்கள் ஆயுதமாக குறிப்பிட்டாலும், குறிப்பாக இதை பயன்படுத்தியவர்கள் முக்குலோத்தோர் மற்றும் வலையர்கள் மட்டுமே.

1) காடும் காடு சார்ந்த இடமும் முல்லை, முல்லைத் திணை தலைவன் மால் எனப்படும் மாயோன் 'கள்வன்'. அவன் ஆயுதம் வளரி. (கலித்தொகை)

2) மால் எனப்படும் சோழன் “வளரி படை” உடையவன். (சிலப்பதிகாரம்)

3) கள்ளர்களின் பெயராலேயே “கள்ளர் தடி” என்றே அழைக்கப்பட்டது. (தமிழ் அகராதி)

4) வளைதடி - கள்ளர்களின் திருமணத்தில் முக்கிய அம்சமாக இருந்தது (British archaeologist Robert Bruce)

5) ஆங்கிலேயர்கள் கள்ளர்களின் பெயராலேயே "COLLERY” என்று அழைத்தனர். (Mr.Welsh)

6) கள்ளர்களின் நடுகல்லில் வளரி 

7) புதுக்கோட்டை மன்னர்களிடம் வளரி படை என்று தனி படை இருந்தது. (புதுக்கோட்டை வரலாறு)

8) ஆங்கிலேயர்களுக்கு எதிராக வளரியை கொண்டு கள்ளர்கள் "பெருங்காம நல்லூரில் " தாக்கியனர். (தமிழ் ஆய்வுக் கட்டுரை)

9)கள்ளர்கள் என்பார் எய்யும் ‘பூமராங்’ என்பது  திரும்பி மீண்டுவரும் - தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

“வளரியை உருவாக்கியவனும், வீசியவனும், அதை இந்த மண்ணை விட்டு மறைய செய்தவனும் கள்ளனே”


இதற்க்கான ஆதாரங்கள் என்ன என்பதை ஒவ்வொன்றாக கீழ் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.


திகிரி, கள்ளர் தடி, வளரி, வளைதடி, பாராவளை, எறிவளை என்ற பெயரால் தமிழகத்தில் வழங்கப்பட்ட ஆயுதமே பூமராங் என்பதாகும். பூமாராங் எனும் ஆயுதமானது கையால் வீசியெறியக்கூடிய வகையில் வளைந்த வடிவத்துடன், ஏறக்குறைய பிறை வடிவமாக இருக்கும். ஒரு முனை மிகவும் கனமாகவும் மறுமுனை கூர்மையாகவும் இருக்கும். இதனை மரம், இரும்பு, யானைத்தந்தம் போன்றவற்றால் செய்த வளரி வேட்டையாடுதலுக்கும் இரும்பால் செய்த வளரிப் போர் புரிவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வளரியை கனமற்ற நுனியைக் கையில் பிடித்துக் கொண்டு தோளுக்கு மேலே பலமுறை வேகமாகச் சுழற்றி விரைவாக இலக்கினை நோக்கி எறிந்திட அது இலக்கினைத் தாக்கிவிட்டு எறிந்தவரிடமே திரும்பவும் வந்து சேரும். எதிரியைத் தாக்கிவிட்டு வீசி எறிந்தவரிடமே வந்து சேரக்கூடிய அற்புதமான ஆயுதம். திரும்ப வரும்பொழுது கவனமாகக் கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வீசியெறிந்தவரைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது. (தமிழாய்வுக் கட்டுரைகள் (தொகுதி I) ப.31).

போர்புரியும் வீரர்கள் தம் கொண்டையில் வளரியைச் சொருகி வைத்திருப்பர். போர் மூளும்போது கொண்டையிலிருந்து உருவி வளரியின் மூலம் எதிரிகளைப் போரிட்டு வீழ்த்துவர். இத்தகுச் சிறப்புமிகு வளரியினைத் தற்போதும் கள்ளர் மற்றும் மறவர் இன மக்களின் பழைய குடும்பங்களில் காணலாம். பூசைக்குரிய பொருளாக வளரியைப் பயன்படுத்துகின்றனர்.

புறநானூற்றில் வளரி என்பது குறுங்கோல் வளைதடி என்பதைக் “குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் (புறம்.339:4)” எனும் அடி குறிப்பிடுகின்றது. ஐங்குறுநூற்றில் "மாலை வெண்காழ் காவலர் வீச நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும் (ஐங்குறு.421:1-2) எனும் அடி குறிப்பிடுகின்றது. வெண்காழென்றது மாலைக்காலத்து முயலெறியும் தடியை என்னும் வளரியாகிய வளைதடியாகும். இவ்வடியில் ‘காவலர்’ எனும் சொல்லினை ஆராய்ந்து நோக்குகையில் காவலர் என்பார் ஊர்க்காவலை மேற்கொண்டவராவார்.

மேலூர் -சிவகங்கை மற்றும் தஞ்சை பகுதிகளில் வாழும் கள்ளர்களின் கோவில்களிலும் வீடுகளிலும் மறைத்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வளரிகள் 
👇









தமிழர்கள் பழக்கமான முதுமக்கள் தாழியின் பெரிய வடிவம் தான் பெரும் இடு அல்லது பிரமிடு என்பது, எகிப்து பிரமிடு ஒன்றின் முகப்பில் உள்ள எழுத்து பெயர்ச் சொல்லைக் கண்டுபிடித்தார். அது கந்தன் எனப் படிக்கப்பட்டுள்ளது. எகிப்திய முதல் மக்கள் தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று ஆய்வாளர் பிலிண்டஸ் பெட்ரி கூறுவதும், சில ஆய்வுகள் சிந்துவெளி மக்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள். 




எகிப்திய பிரமிடு ல் வளரி




வட கிழக்கு ஆப்பிரிக்க  பழங்குடிகளிடம் தான் முதன் முதலில் விருத்த சேதனம் செய்யும் முறை இருந்ததை எகிப்தில் காணப்படும் பழங்கால குகை ஓவியங்களில் இருந்து அறியலாம். 



திருமாலின் திருநாமங்கள் - ஓம் கள்ளா மாதவ ஜெயஜெய

ஆப்பிரிக்காவில் வசித்து வந்த அதிமனிதனின் மரபணுவில் இருந்து ஒரு குறிப்பிட்ட கூறு, இன்றும்
“எம்130ஒய்’ என்கிற மரபணுக் கூறு விருமாண்டி தேவரிடமே உள்ளது.

எகிப்தில் உள்ள பெனி-ஹாசன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களில்
காளைப்போர் இடம் பெற்றுள்ளது".

எகிப்து மற்றும் சிந்துவெளி பகுதி மக்களின்
ஏறுதழுவல், விருத்த சேதனம், வளரி, மரபணு என்ற எல்லாம் கூறுகளும் கள்ளர்களிடேயே மட்டுமே உள்ளது.


1) காடும் காடு சார்ந்த இடமும் முல்லை, முல்லைத் திணை தலைவன் மால் எனப்படும் மாயோன் 'கள்வன்'. அவன் ஆயுதம் வளரி. (கலித்தொகை)


கள்வன்  - திருமால்








திருமால் ஆயுதமாகக் கலித்தொகை சுட்டுகிறது.

“மல்லரைமறம் சாய்த்த மலர்த்தண்தார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்றுஓட உருத்துஉடன் எறிதலின்
கொல்யானை அணிநுதல் அழுந்திய ஆழிபோல்
கல்சேர்பு ஞாயிறு கதிர்வாங்கி மறைதலின்” (134:1-4)

கள்ளழகர் கையில் வளரி
👇


பொருள்: யானையின் முறத்தைப் போன்ற செவியை மறைவிட மாய்க் கொண்டு பாய்ந்து மாறுபாடு செய்த புலியைச் சினந்து, மறம் பொருந்திய நூற்றுவர் தலைவனான துரி யோதனனைத் தொடையில் உள்ள உயிரைப் போக்குகின்ற வீமனைப் போன்று, தன் நீண்ட கொம்பின் கூர்மையான முனையினால் குத்தி, புலியின் மார்பைப் பிளந்து பகைமை நீங்கிய யானை, அது மல்லரின் மறத்தை அழித்த திருமால் போல் கல் உயர்ந்த அகன்ற சாரலில் தன் சுற்றத்துடனே திரியும்.

"மால்" என்பது கள்ளர் பட்டங்களில் ஒன்று 



2) மால் எனப்படும் சோழன் “வளரி படை” உடையவன். (சிலப்பதிகாரம்)

சோழ மன்னன்

பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் 
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்; 
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால்

பொருள்: சோழ மன்னன் பொன்னால் செய்த அழகிய வளரி என்னும் போர்ப்படையை உடையவன்

பொன்புனை திகிரி
👇

காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு 
– இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் 1.5

பொருள்: காவிரியை உடைய சோழனது சக்கரம்போல் பொன்போல் தோற்றமளிக்கும்.

இவ்வளரியானது வேட்டைக் கருவியாகவும் பிறரைத் தாக்கும் கருவியாகவும் சங்க காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

வளரித்தடி என்னும்‌ வளரி பழங்கால ஆயுதங்களில்‌ ஒன்றாகும்‌. இவ்வாயுதம்‌ தாங்கிய படை எரிபடை என சோழர்‌ காலக்‌ கல்வெட்டுகள்‌ குறிப்பிடுகின்றன.


3) கள்ளர்களின் பெயராலேயே “கள்ளர் தடி” என்றே அழைக்கப்பட்டது. (தமிழ் அகராதி)



4) வளைதடி - கள்ளர்களின் திருமணத்தில் முக்கிய அம்சமாக இருந்தது (British archaeologist Robert Bruce)


பிரிட்டிஷ் தொல்லியல் நிபுணர் ராபர்ட் புரூஸ் ஃபுட் அவர்கள் கள்ளரின் மணமகள் மற்றும் மணமகன் குடும்பங்களுக்கு இடையில் வளரி பரிமாற்றம் செய்யப்பட்டது என்றும் வளைதடியை அனுப்பிப் பெண்ணைக் கொண்டு வரும் வழக்கமும் இவர்களிடையே இருந்துள்ளது என்றும் திருமணத்திற்கு முன் வளைதடியை இருவீட்டாரும் மாற்றிக் கொள்வதும் உண்டு என்றும் கூறுகிறார்.

பொதுவாக தமிழ் சமூகத்தில் உள்ள இனத்தவர்கள் திருமணம் நிச்சயிக்கும் போது தட்டு மாற்றிக் கொள்வது வழக்கம். அப்படி அவர்கள் தட்டு மாற்றி கொள்ளும் போது தட்டில் வெற்றிலை, பாக்கு, வாழை, புடவை, வேட்டி, சட்டை, குங்குமம் வைத்து இருவீட்டார்களும் தட்டை மாற்றி கொள்வர். ஆனால் நாட்டார் கள்ளர்களாகிய சிவகங்கை ஏழுகிளை கள்ளர் நாட்டார்கள் தங்களது திருமண நிச்சயத்தின் போது இருவீட்டார்களும் வளரியை மாற்றிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.


மேலும் இது அவர்களின் பண்பாட்டின் அடையாளமாக வளரியை நிச்சயத்தில் மாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதுபோக “send the valari and bring the bride👰” அதாவது வளரியை அனுப்பி பெண்னை கொண்டு வா என்று பெண் கேட்டுள்ளனர்.

கண்டதேவி செம்பொன்மாரி நாதர் ( சொர்ணமூர்த்தி ஈசுவரர்- பிற்காலப் பெயர்) கோயில் தேரோட்டத்தின் போது கள்ளர்கள் வளரி வீசும் போட்டி நடைபெறும். ஒருசிலர் வீசும் வளரி அந்த பெரிய குளத்தையே ஒரு சுற்று சுற்றிவரும். அந்த அளவிற்கு திறன் உள்ளவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.


5) ஆங்கிலேயர்கள் கள்ளர்களின் பெயராலேயே "COLLERY” என்று அழைத்தனர். (Mr.Welsh)





Hobson-Jobson: Glossary of Colloquial Anglo-Indian Words And Phrases
By A. C. Burnell, Henry Yule
👇



Hobson-Jobson: The Definitive Glossary of British India
By Henry Yule, A. C. Burnell
👇



Sahibs, nabobs and boxwallahs: a dictionary of the words of Anglo-India
👇









6) கள்ளர்களின் நடுகல்லில் வளரி 

நடுகல் கல்வெட்டில்

கூடலூரைச் சேர்ந்தவர்கள் ஆனிரையைக் கவர்ந்து செல்ல முயன்ற போது அந்தவன் என்பவன் ஆனிரையை மீட்டு அந்தப் பூசலில் இறந்து போன செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்ளர் குலத்தவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 



புறநானூறு பாடலில் ‘மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்’ என்று உள்ளது. கூடல் நகர் ஆட்சி செய்த அகுதை என்ற குறுநிலத் தலைவன் ‘பொன்புனை திகிரி’ (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (‘அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ’) கூறப்பட்டுள்ளது.

வீரத்தேவர், கழுவத்தேவர்

கிபி1311ல் பாண்டியர்களை வீழ்த்த டெல்லி சுல்தானாகிய அலவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்கபூர் மதுரைக்கு பெரும்படையுடன் வருகிறார். அப்படி மாலிக்கபூர் மதுரைக்குள் நுழையும் முன் எல்லையில் கள்ளர் குடியின் வீரத்தேவர், கழுவத்தேவர் இருவரும் மாலிக்கபூர் படையுடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்துள்ளனர். அப்படி உயிர் தியாகம் செய்த இருவருக்கும், போரில் பட்டு இறந்ததால் பட்டவன் என்கிற பெயரில் அந்த வட்டாரத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களும் நடுகல் எடுத்து கடவுளாக வணங்கி வருகின்றனர். அந்த நடுகல்லில் வீரத்தேவர்,கழுவத்தேவருக்கு வலது கையில் வாளும்,இடது கையில் வளரியும் வைத்துள்ளனர். 



இன்றும் மதுரை கீழக்குயில்குடி சென்றால் அங்குள்ள மலையடி அய்யனார்,கருப்பு கோவிலில் இவர்களுடைய நடுகல்லை பார்க்கலாம். இதில் இன்னொரு கவனிக்ககூடிய விடையம் என்னவென்றால் கோவிலில் பாண்டிய மன்னனின் பழமையான சிலையை அந்த ஊரில் உள்ள கள்ளர் பெருமக்கள் பாண்டியராஜன் சாமி என்று பூஜை செய்து வணங்கி வருகின்றனர்.


பிறமலைக்கள்ளர் அமைந்துள்ள தும்மக்குண்டு கள்ளர் நாட்டில் வாள்,வேல், வளரியுடன் இருக்கும் கள்ளர் குல வீரர், வீராங்கனைகள் ...

👇







கருமத்தூர் நாடு கோட்டையூர்



கையில் கள்ளர்களின் ஆயுதமான வளரி, இடக்கொண்டை,நீண்ட காது, நீண்ட நெற்றி, அகன்ற மார்பு, முறுக்கிய மீசை என கள்ளரின் ஒட்டுமொத்த குறியீடோடும் தந்தி நாட்டுக்கள்ளன் திருச்சி மாவட்டம், ஆலம்பாக்கம்.

தந்தி நாட்டுக்கள்ளன்
👇



உசிலம்பட்டி 
👇



வங்காருத்தேவன்
👇


திருச்சி முசிறி பகுதியில் நாட்டார், நாட்டாள்வார் பட்டமுடையவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு உள்ள கள்ளர்களின் குலதெய்வமாக புளியஞ்சோலை மாசி பெரிய சாமியும், கொல்லிமலையில் தலைமை இடமாக இருக்கும் மாசி பெரியண்ணன் சாமியும் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். அங்கு கொல்லிமலையில், அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு மரத்தடியில் உள்ள நடுகல் 

👇




7) புதுக்கோட்டை மன்னர்களிடம் வளரி படை என்று தனி படை இருந்தது. (புதுக்கோட்டை வரலாறு)




புதுக்கோட்டை மன்னர்கள் எப்போதும் தங்கள் ஆயுதக்கிடங்கில் வளரி ஆயுதங்களை இருப்பு வைத்திருந்தனர். புதுக்கோட்டை மன்னர்களிடம் வளரி படை என்று தனி படை இருந்தது.

👇

Castes and tribes of southern India (Volume 3) - Page 70


கள்ளர் குல தொண்டைமான் மன்னர்கள் பயன்படுத்திய வளரி
👇






வளரியை யார் கடைசிவரை வைத்திருந்தனர், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை எழுதி வைத்தது புதுக்கோட்டை தொண்டைமான் மரபினர் என்பது ஆணித்தனமான உன்மையே. ஏனென்றால் புதுக்கோட்டை அரசர்களான தொண்டைமான்கள் வளரியை எப்போதும் வைத்திருந்தார்கள் என்று ஆவணமாக உள்ளது.

கிபி 1886 ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தில், மன்னர் ராமச்சந்திர தொண்டைமான் முன்னிலையில் " வளரி வீசும் விழா " நடத்தப்பட்டுள்ளது








தொண்டைமான் அரசர்களின் பல ஆயுதங்களில் ஒரு வளரி மட்டும் எப்போதும் வைத்திருப்பார்கள், அந்தளவுக்கு வளரியின் பாரம்பரியம் தொண்டைமான் வம்சாவழியினருக்கு வழி வழியாக இருந்துள்ளது.


இராமச்சந்திர தொண்டைமான் இராஜா யானை தந்தத்தில் செய்த 2  வளரியை பரிசாக அளித்துள்ளார். ஒன்று 11473cm பரப்பளவு கொண்ட ஒருபுறம் குவிந்திருக்கும் வளரி மற்றொன்று 11534cm பரப்பளவு கொண்ட இருபுறமும் குவிந்த மேற்பரப்புகள் மற்றும் பரந்த முடிவும் இருக்கும்.


அது சென்னை மியூசியத்தில் இன்றும் உள்ளது (தொண்டமான் என்பதே யானையை அடக்குவர்கள் தானே). அது மட்டுமில்லாமல் புதுக்கோட்டை திவானாகிய விஜய இரகுநாத பல்லவராயர் வளரியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை எழுதியும் உள்ளார்.


1.வளரி என்பது மரத்திலும்,இரும்பிலும் செய்யக்கூடிய ஆயுதமாகும்.

2.வளரி ஆயுதம் பிறை வடிவில் இருக்கும்.
3.ஒரு முனையானது மறு முனையை விட கனமானதாக இருக்கும்.
4.வளரியை லேசான எடையுள்ள முனையை கையில் பிடிக்க வேண்டும்.
5.எறிவதற்கு முன்பாக வளரியை தோல்பட்டை அளவு தூக்கி நன்றாக சுழற்ற வேண்டும்.
6.சுழற்றிக்கொண்டிருக்கும் போதே குறிவைத்துள்ள பொருளின் மீது உத்வேகத்துடன் வீச வேண்டும்.

இப்படியாக திவான் விஜய இரகு நாத பல்லவராயர் வளரியை எப்படி எறிய வேண்டும் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.


வளரியை புதுக்கோட்டை அரச தொண்டைமானார்கள் இறுதிவரை தங்களுடன் வைத்திருந்தனர்.

8) ஆங்கிலேயர்களுக்கு எதிராக வளரியை கொண்டு கள்ளர்கள் "பெருங்காம நல்லூரில் " தாக்கியதால் வளரி பயன்படுத்த நாட்டில் தடை விதிக்கப்பட்டது. (தமிழ் ஆய்வுக் கட்டுரை)

1801-ம் ஆண்டு ஆயுதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, `மக்கள் யாராவது போராயுதங்களை வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், பொதுவெளியில் தூக்கிலிடப்படுவார்கள்’ என்று அறிவிக்கப் பட்டது. எல்லா வகையான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அப்பொழுது கும்பெனியால் கைப்பற்றப்பட்டவை, 22 ஆயிரம் வளரிகள்.  ஆனால் அது முழுமையான தடைகள் இல்லை என்பதற்கு மதுரை மாவட்டத்தில் 1883-ம் ஆண்டு வளரி பயன்படுத்துவதை, தான் நேரில் பார்த்ததாக ஆர்.ப்ரூஸ்பூட் என்ற ஆங்கிலேயர் பதிவுசெய்துள்ளார்.


ஆயுதத் தடைச் சட்டம் கொண்டு வந்த 200-வது ஆண்டு, அதாவது, 2001-ம் ஆண்டு காவல் கோட்டம் என்ற நூலை எழுதியசு. வெங்கடேசன், நாவலின் தேவைக்காக வளரியைத் தேடி மதுரை மாவட்டத்தில் கோவிலாங்குளம் என்ற கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். ஒற்றை அறை மட்டும் தனித்து இருக்கும் ஓர் இடம் நோக்கி என்னை அழைத்துக்கொண்டு போய், ``இது பட்டசாமி கோயில்’’ என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தார்கள். அப்பொழுது பார்த்த காட்சி எனக்குள் ஏற்படுத்திய திகைப்பு இன்று வரை மறையவில்லை. என் கண்களுக்கு முன்பு சுமார் 200 வளரிகள். “இந்த பட்டசாமிக்கு வளரியைத்தான் படையலிட வேண்டும். எனவே, ஒவ்வோர் ஆண்டும் வளரியைப் படையலிடுகிறோம்” என்று சொன்னார்கள்.

பட்டசாமி கோயில்
👇 


ஆயுதத்தை மொத்தச் சமூகமும் முழுமுற்றாகக் கைவிட்டிருக்க வாய்ப்பு இல்லை. கும்பெனி படையின் வலிமை இங்கிருந்த பலவீனத்தின் மீது கட்டப்பட்டது. அதற்கு சமூகத்தின் அடியாழம் வரை போய் அழித்தொழிக்கும் முழுமுற்றான வல்லமை இருந்திருக்க முடியாது.


1920களில் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூர் கள்ளர்கள் போராடிய போது அவர்களை ஒடுக்குவதற்கு படைகளை குவித்தது ஆங்கிலேய அரசு. அப்போது அவர்களை எதிர்த்து தாக்க அம்மக்கள் வளரியையே பயன்படுத்தினர், பகையாளியை தாக்கிவிட்டு மீண்டும் அடித்தவரிடம் திரும்பும் அந்த ஆயுதத்தை பார்த்து ஆங்கிலேயர்கள் கலங்கி போயினர். 

இக்கிளர்ச்சியின்போது இம்மக்கள் பயன்படுத்திய ஆயுதம் வளரியாகும். இதன் காரணமாக இவ்வாயுதத்தைப் பயன்படுத்த ஆங்கில அரசு தடை விதித்தது. வீடுகளில் வளரி வைத்திருந்தால் அவர்களைக் குற்றவியல் தண்டனைக்கு உட்படுத்தினர். எனவே இதனை வழிபாட்டிற்குரிய பொருள்களுள் ஒன்றாகக் கோயில்களில் வைத்துப் பாதுகாத்தனர் (தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி I, மணிமாறன், 2016, ப.41).






வளரி தடை செய்யப்பட்டது, வீட்டில் வைப்பது குற்றம் என்றதால் அதற்கு பிறகு அந்த ஆயுதம் கோவில்களில் வைக்கப்பட்டது.

9) கள்ளர்கள் என்பார் எய்யும் ‘பூமராங்’ என்பது திரும்பி மீண்டுவரும் 

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலில் டாக்டர் கே.கே.பிள்ளை 
👇


தென்னிந்தியாவுக்குத் தெற்கில் அமைந்திருந்த லெமூரியாவிற்றான் முதன்முதல் மக்களினம் தோன்றிற்று எனவும், அவ்வினமே தமிழ்நாட்டின் ஆதிகுடிகள் எனவும் லெமூரியக் கொள்கையினர் கருதுவர். லெமூரியக் கண்டத்தில் வாழ்ந்து வந்த மக்களின் வழிவந்தவர்கள் இப்போது தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், கிழக்கிந்தியத் தீவுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தென்னிந்திய மக்களுள் சில குலத்தினரும் மரபினரும் போற்றும் வழிபாட்டுச் சின்னங்களையும்  அவர்களுள் கள்ளர்கள் என்பார் எய்யும் ‘பூமராங்’ என்னும் மீண்டுவரும் வேட்டைக் கத்தியையும் இந்தோனேசீயாவிலும் பாலினீசியாவிலும் வாழும் ஆதிகுடிகளிடம் காணலாம். 

வளரியைப் பூமராங் எனும் பெயரில் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களான அபோர்ஜினியர்கள் பயன்படுத்தி வருவதாகச் கூறுகின்றன. ஆனால் அதற்கு முன்பாகவே தமிழ் நாட்டில் பயன்படுத்த பட்டது. திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வின் மூலம் இரண்டு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவ்விரண்டு மண்டை ஓடுகளை ஆராய்ந்த அறிஞர்கள் திராவிடரும் அபோர்ஜினியரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர் என்ற முடிவினைக் கருதியுள்ளனர். மேலும் இங்குக் கண்டெடுத்த மண்டை ஓடுகளில் ஒன்று திராவிடருக்கும் மற்றொன்று ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் முன்னோருக்கும் உரியது என ஜி.எலியட் ஸ்மித் கூறியுள்ளார்.

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் என்ற நூலில் எட்கர் தர்ஸ்டன் 
👇
கள்ளர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் வளரியைப் பயன்படுத்தியதாக எட்கர் தர்ஸ்டன் பதிவு செய்துள்ளார்.


தன்னரசு கள்ளர்



கிபி1650வாக்களில் திருமலை நாயக்கர் பாண்டியமன்னர்கள் முற்றிலும் அழிந்த காலத்தில் மதுரையை தனது முழுகட்டுப்பாட்டில் கொண்டு வர நினைக்கும் போது. மதுரை எல்லை அரணில் வாழ்ந்த கள்ளர் பெருமக்கள் நாயக்கருக்கு எதிராக கலகம் செய்தனர். அப்போது திருமலை நாயக்கரால் அவர்களை கட்டுப்படுத்தமுடியாத போது திருச்சி நாயக்கரிடம் உதவி கேட்டு வீரையன் சேர்வை மூலமாக ஒழிக்க நினைக்கிறார். இதனை பற்றி மதுரை வீரன் அம்பானை விளக்கும் போது வீரையன் சேர்வையை ஆனையூர் பத்து நாட்டு தனிக்காட்டு தன்னரசு கள்ளர் படைகள் வளரியும்,வேலையும் வைத்து சண்டையிட்டனர் என்று குறிக்கப்பட்டுள்ளது.

கள்ளர் நாட்டு சாமியாடி 
👇




வைத்தியலிங்க தொண்டைமான் :
👇

சின்ன மருது காளையார்கோவிலின் கோபுரத்தை பெரிதாக கட்டியபோது வைத்தியலிங்க தொண்டைமான் அழைத்து கோபுரம் எப்படி என கேட்க இவர் ஒரு பனைமரம் அளவே உள்ளது என வேடிக்கையாக கூறினார். அதற்க்கு மருது என்ன பனைமரம் அளவா எப்படி சொல்கிறீர்கள் என வினா எழுப்ப. ஒரு வளரியை வாங்கி தான் பனைமரம் அளவு வளரி வீசுவேன் என வைத்தியலிங்க தொண்டைமான் வளரியை கோபுரத்தின் மேல் வீசி அந்த கோபுரத்தை தாண்டி வீசி எறிந்து காட்டினார் என ஒரு சம்பவம் தெரிவிக்கின்றது.

சேதுபதி மன்னர்கள்

தளசிங்க மாலையில் சேதுபதிகள் முற்காலத்து எட்டன் எனப் பெயர் கொண்ட ஒருவனோடு வளரி போர் புரிந்து அவன் தலையையே தம் வீரக்கழலில் அணிந்து கொண்டனர் எனும் செய்தியைக் கூறுகின்றது.

“விஜய சேதுபதி (கி.பி.1710-1725) மன்னர் தனது மகள் அகிலாண்டேஸ்வரியைச் சிவகங்கைக்கு மணமுடித்து அனுப்பி வைத்தபோது சீர்களில் ஒன்றாகத் தம் குலமரபு ஆயுதமான வளரியையும் அனுப்பி வைத்ததாகக் கல்வெட்டு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி II, ப.43).


லண்டனில் ஒரு வளரித்தடி
***************************

"From the Marava Country (between Trichinopoly and the Sea. 'Collery' is from 'Kallar', the name of the people there"

தற்போது பிரிட்டீஷ் அருகாட்சியகத்தில் உள்ள வளரித்தடி கிபி 1879ல் Burnbull என்பவரால் அளிக்கப்பட்டது.  அதில் எழுதப்பட்டுள்ள வாசகங்களே மேலே கொடுக்கப்பட்டுள்ளது. 



அதாவது " இந்த வளரித்தடி திருச்சிக்கும் - கடல் பகுதிக்கும் இடையே உள்ள மறவர் நாட்டில் இருந்து பெறப்பட்டது என்றும் ,  கள்ளர்களின் பெயரால் இந்த ஆயுதம் ஆங்கிலத்தில் " collery stick" ( கள்ளர் தடி) என அழைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 

கடல் கடந்து ஐரோப்ப தேசத்தில் உள்ள வளரித்தடி கள்ளர் மறவரின் புகழை எடுத்துரைக்கிறது......
மருது சகோதரர்கள்
👇
ஆங்கிலேயத் தளபதி கர்னல் வெல்த் என்பவர் (1795இல்) சின்னமருதுவிடம் வளரி வீசும் பயிற்சியினைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 

வளரியை பயன்படுத்தி ஆங்கிலேயர்களுடன் மருது சகோதரர்கள் சண்டையிட்டார்கள்.


இவ்வாறு சிறப்புமிக்க ஆயுதமான வளரி தற்போதும் பாதுகாப்பாகவும் கண்காட்சியாகவும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இராமநாதபுரம் ராமவிலாசத்தில் தொல்லறிவியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் இவ்வளரி பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

நன்றி
திரு. சே. முனியசாமி - முனைவர்பட்ட ஆய்வாளர்
திரு. சர்மலான் தேவர் - Klang Valley Mukkulathor Association
திரு. சோழபாண்டியன், ஏழுகோட்டை நாடு
திரு.  சியாம் சுந்தர் சம்பட்டியார்


வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்