செவ்வாய், 29 ஜனவரி, 2019

பொ. ஆ 1743 இல் ஐதராபாத் நிஜாம் படையை விரட்டியடித்த தஞ்சை கள்ளர்கள்


1719-ம் ஆண்டு முதல் அசாஃப் ஜா வம்சத்தைச் சேர்ந்த உள்ளூர் மன்னர்கள் நிஜாம் என்ற பட்டத்துடன் ஐதராபாத் அரசை ஆண்டு வந்தனர். 1713 முதல் 1721 வரை முகலாய மன்னர்களின் பிரதிநிதியாக தக்காணத்தை ஆண்டு வந்த முதலாம் அசாஃப் ஜா இந்த வம்சத்தை துவங்கினான். 1707-ல் அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பிறகு முகலாயப் பேரரசு சிதைந்தபோது அசாப் சா தன்னை தனிமன்னராக அறிவித்துக்கொண்டான்.

1743-ம் ஆண்டு ஐதராபாத் நிஜாம் நிஜாம் உல் முல்க் 80,000 குதிரைப்படை மட்டும் 200000 காலட்படை கொண்டு தென்னகத்தின் மீது படையெடுத்து வந்தான்.ஒரே நாளில் 18 குறுநில தலைவர்களை வென்று திக்விஜயம் செய்தான். இறுதியில் திருச்சியை தாக்கினான். திருச்சி அப்பொழுது மராத்தியரிடம் இருந்தது.திருச்சியை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்படையுடன் தாக்குதல் நடத்தி சூரையாடினான்.


திருச்சிராப்பள்ளி கோட்டையை கைப்பற்ற நிசாமின் படை கடுமையான தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.அந்த சமயத்தில் தஞ்சாவூரிலுள்ள குண்ணம்பட்டி ( புதுக்கோட்டை, தஞ்சை எல்லை)மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கள்ளர்கள், நிசாமின் போர்படை பற்றில் இரவு தாக்குதல்களை நடத்தினர். கள்ளர்களின் இந்த திடீர் தாக்குதலை எதிர்ப்பாராத நிசாமு படையினர் நிலைகுலைந்தனர். நிசாம் படையில் இருந்த மாடுகள், ஒரு யானை, 133 குதிரைகள் மற்றும் 40 ஒட்டகங்களை கொள்ளையடித்து சென்றனர். 

கள்ளர்களின் தாக்குதலால் பெரும் சேதத்தை சந்தித்த நிசாம் தனது தளபதியின் தலைமையில் பெரும்படை ஒன்றை அனுப்பி கள்ளர்களை தாக்கினான்.ஆனால் கள்ளர்களின் எதிர்தாக்குதலை சமாளிக்க முடியாமல் நிசாம் படை திணறியது.


நிசாம் நினைத்ததை போல் கள்ளர்களை எளிதாக சமாளிக்க இயலவில்லை. கள்ளர்களிடம் வெற்றி பெற இயலாத நிசாம் படை அவர்களிடம் இருந்து கிடைத்ததை( குதிரை, ஒட்டகம்) பெற்று கொண்டு, தோல்வியுடன் திரும்பினர். கள்ளர்களின் இரவு தாக்குதல்கள் தொடர்ந்ததால், நிசாம் மீண்டும் பெரிய படை ஒன்றை அனுப்பினான். ஆனால் கடைசிவரை கள்ளர்களை நிசாமால் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.

ஒரே நாளில் 18 குறுநில தலைவர்களை வென்ற, நிசாமின் பெரும்படையால் கள்ளர்களை ஒரு தடவை கூட வெல்ல இயலவில்லை என்பது நமக்கு விளங்கும்.. 

(General history of pudukkottai state 1916 pg 184)
(Letter of madurai mission to rome 1743)

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்