புதன், 23 ஜனவரி, 2019

பொ. ஆ 1755 - மருதநாயகமும் கள்ளர்களும்



1750 களில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இந்தியாவில் நாடுபிடிக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. 

18ம் நூற்றாண்டு முழுவதும், குறிப்பாக நாயக்க மன்னர்களின் வீழ்ச்சியின் போதும், கள்ளர்களுக்கும் மதுரையை நிர்வகித்த பிரிட்டிஷாருக்கும் பகைமை முற்றியது. 1755 லிருந்து ஐந்து முறை பிரிட்டிஷ் பட்டாளங்கள் மேலூர் கள்ளர்களுடன் மோதியதாகவும், இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மடிந்துள்ளதாகவும் மானுடவியலாளர் ஆனந்த் பாண்டியன் (அமெரிக்க பல்கலைக் கழகம்) தெரிவிக்கிறார்.



ஆர்காடு நவாபான முகமது அலி, தனது உரிமையை மீட்க வெள்ளையர்களின் உதவியை நாடினான். வெள்ளையர்கள் முகமது அலிக்கு ஆதரவாக கர்னல் ஹரான் தலைமையில் படையனுப்பி உதவினர். இவரது படையில் முகமது அலியின் அண்ணன் மாபூஸ் கான் , கான்சாகிப் ஆகியோர் இருந்தனர்.  பெரும்படையுடன் வந்த கர்னல் ஹரான் சந்தா சாகிப் வசமிருந்த மதுரையை கைப்பற்றினான். மதுரையின் கவர்னராக இருந்த " மயன்னா" அங்கிருந்து தப்பித்து கோயில்குடி என ஊரில் தஞ்சம் புகுந்தார். கோயில்குடியை தாக்கியது. 

கோயில்குடியில் கள்ளர்கள் வழிபடும் கோயிலை சூரையாடினார்கள் பிறகு கிபி 1755, மார்ச் 4 அன்று கர்னல் ஹரான் தலைமையிலான படை திருநெல்வேலி வருவதை அறிந்த பொல்லாப்பாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டிவிடுவதாக வேண்டுகோள் விடுத்தார்.  திருவிதாங்கூர் வசம் இருந்த களக்காடு கோட்டை மற்றும் நத்தக்கோட்டை ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. மீதம் இருந்த சிறு பாளையங்களும் அடிபணிந்தன. 
(Tinnevelly gazetter 1917 pg 376/387) 

பூலிதேவரின் நெற்கட்டுச்செவ்வல் நோக்கி  சென்றவர்கள், அவரிடம் எந்த வரியும் வசூலிக்க முடியவில்லை. பிறகு அங்கிருந்து திரும்பியவர்களை கள்ளர் படையினர் நத்தம் கால்வாய் பகுதியில் தாக்கினர்.

பொ. ஆ. 1755 கள்ளர்களின் நத்தம் தாக்குதல் 

வரலாற்றை அறிய கீழே  உள்ள தலைப்பின் மீது சொடுக்கவும் (click here) 👇👇👇👇

பொ 1755 இல் ஆங்கிலேய படைக்கு எதிராக நத்தம் போர்

மாபூஸ்கானை துணைக்கழைத்து வந்த வெள்ளைக்காரன் கர்னல் ஹெரான் மாமன்னர் பூலித்தேவரிடம் தோற்று ஓடினான்.  

மதுரைப் பகுதியில் இருந்த சில பாளையக்கார்களும் பூலித்தேவர் அணியில் இணைந்தனர். தங்களுக்கு எதிராக பூலித்தேவர் உருவாக்கும் கூட்டணி பற்றிய தகவல் ஆர்காடு நவாப் மற்றும் கும்பினியாரை சென்றடைந்தது.
மாபூஸ்கானின் மேல் நம்பிக்கையை இழந்த கும்பினியார், கான்சாகிப் தலைமையில் ஒரு பெரும்படையை திரட்டி அனுப்பினர்.

1755 ஆம் ஆண்டுகளில் மதுரை, நெல்லை பாளையக்காரர்களை அடக்குவதற்காகத் தளபதி அலெக்சாண்டர் கெரானுடன் , யூசுப்கான் (மருதநாயகம்) அனுப்பிவைக்கப்பட்டான் .

மருதநாயகம் தன்னுடைய தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி படை, ஆற்காடு நவாப் படையுடன் தெற்கத்திய பாளையக்காரர்களை அடக்கி கப்பம் பெறும் முனைப்பில் இரத்தவெறியுடன் புறப்பட்டான்.

அப்படி மருதநாயகம், அவனுடைய படைகளும் தெற்குப்பகுதியில் செல்லும் போது தடையாக இருந்த்து மணப்பாறை கள்ளர் படைப்பற்றே. 1755ல் கான் சாஹிப் முதல் வரலாற்று சாதனையாக ஆய்வாளர்கள் கருதுவது “Storming of the Kallar Barrier அதாவது கிழக்கிந்திய படை மற்றும் நவாப் படையோடு கான் சாஹிப் மணப்பாறையில் உள்ள கப்பம் கட்ட மறுத்த தன்னரசு கள்ளர் நாட்டு படைப்பற்றை வென்றதே கருதப்படுகிறது.

மேலும் அந்த கள்ளர் படைப்பற்று திருச்சி எல்லையில் அரண் போல இருந்ததாகவும் குறிக்கிறார்கள்.

மேலும் அந்த படைப்பற்றின் அழிவை வைத்து மணப்பாறை தன்னரசு கள்ளர்களின் தலைவரை கப்பம் கட்ட கட்டாயப்படுத்தியுள்ளான்.

இந்த வெற்றிக்கு பின்னர் மருதநாயகம் மணப்பாறையில் தங்கி வரி பாக்கியை செலுத்துமாறு பாளையக்காரர்களுக்கு செய்தி அனுப்பினான். மணப்பாறை அருகில் இருந்த பாளையக்காரரான லட்சி நாயக்கர் வரி செலுத்த ஒப்புக்கொண்டான். பிறகு தெற்கத்திய பாளையக்காரர்களையும் வெற்றிபெற்றான்.

இந்நிலையில் கும்பினியார் நெல்லை பாளையங்களை அழகப்ப முதலியார் என்பவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டனர். கும்பினியார் பெயரைச் சொல்லி வரி வசூல் செய்ய அழகப்பன் கிளம்பினார். இதனால் தனது அதிகாரம் குறைக்கப்பட்டதை உணர்ந்த மாபூஸ் கான், கும்பினியாரை வீழ்த்த பூலித்தேவரின் உதவியை நாடினார். 


திருவிதாங்கூர் மன்னர், சந்தா சாகிப்பின் பிரதிநிதிகள், மாபூஸ்கான், மற்ற பாளையக்காரர்கள் பூலித்தேவர் தலைமையில் ஒன்றிணைந்தனர். மாபூஸ்கான் சந்தா சாகிப்பின் பிரதிநிதியான மயானா, பக்ரத்துல்லா மற்றும் கள்ளர்களின் உதவியுடன், மதுரையை சுற்றியிருந்த யூசுப் கானின் பகுதிகளை தாக்கினர். இது பற்றி கூறும் கான் சாகிப் எழுதிய கடிதம், மதுரையில் உள்ள ஒர் கோட்டையில்  மாபூஸ் கான் இருப்பதாகவும், கோட்டையில் இருந்து இரவு நேரங்களில் கள்ளர்கள் திடீர் தாக்குதல்களை நடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.(Country correspondence 1756,records of st george fort)/(Yusuf khan : the rebel commendant 1914/ pg 56)

யூசப் கானுக்கு கிபி1759ல் மதுரை கவர்னராக பிரிட்டிஸ் கவுன்சில் அறிவித்து, ஒட்டு மொத்த மதுரையும் பிரிட்டிஸ் கம்பெனியின் காலடியில் கொண்டு வர அறிவுறுத்தியது.

500 கள்ளர்களை தூக்கிலிட்ட கான் சாகிப்

மதுரையின் கவர்னராக பதவியேற்ற கான் சாகிப், தனது கூட்டணிக்கு எதிராக கலகம் செய்தவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க ஆரம்பித்தான். இவன் கொடுக்கும் தண்டனை மற்ற பாளையக்காரர்களுக்கு பயத்தை உண்டு பண்ண வேண்டுமென திட்டமிட்டான். முதல்கட்டமாக 1759 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் மதுரையில் மாபூஸ் கானுக்கு ஆதரவாக போரிட்ட கள்ளர் தலைவனை தாக்கினான். பெரும்படைக் கொண்டு போரிட்டு கள்ளர் தலைவனையும், அவனோடு போரிட்ட 500 கள்ளர்களையும் திருப்பரங்குன்றத்தில் ஒரே நாளில் தூக்கிலிட்டு கொன்றான்.



கள்ளர்களை கான்சாகிப் கொன்று குவித்ததை கூறும் கான்சாகிப் பற்றிய கதைப்பாடல், பின்வருமாறு பாடுகிறது

" மதுரை மீனாட்சிக் கள்ளரை
கருவறுத்த தீரன் "

"அடங்காத பிறமலை நாட்டாரை வளைத்து
ஆறுபொதி தலை வெட்டியடக்கினான்
கானும்
ஒடுங்காத மயிலாடிக் கள்ளர் தன்னை
ஊருக்குயிரு பேரைகீர்த்தியாய் வைத்து
வண்டிக்கொண்டு குடமுட அடித்து "

என கள்ளர்களுக்கும் கான்சாகிப்புக்கும் நடந்த போர் விவரிக்கப்படுகிறது.

1759, ஜூலை 6 ஆம் தேதி நாட்டுக் கள்ளர்களை தாக்கி போரிட்டான். அவர்களை அனைவரையும் தண்டித்து, வரவேண்டிய வரி பாக்கியை, செலுத்துமாறு உத்தரவிட்டான். கள்ளர்களிடம் இருந்து ஆயிரம் மாடுகள் மற்றும் இரண்டாயிரம் ஆடுகளை பறித்துக்கொண்டு நெல்லை நோக்கி கிளம்பினான்.

இதனை மருத நாயகத்துடன் இறுதி வரை பயணம் செய்த பிரெஞ்சு வீரர் M.Marchant வாக்குமூலமாக அளித்துள்ளார்.

அப்படி அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியது:


மருத நாயகம் மதுரையின் கவர்னராக ஆனவுடன், பாளையக்காரர்களின் புரட்சியை அடக்க, மதுரையில் தன்னை எதிர்த்த கள்ளர் தலைவரையும், அவருக்காக சண்டையிட்ட 500கள்ளர்களையும்.....!


ஒரே நாளில் மருதநாயகம் தூக்கிலிட்டார், இந்த கொடுரூரமான சம்பவம் அனைத்து தென் பாளையக்காரர்களையும் அச்சுருத்தியது, பல பாளையக்காரர்கள் புரட்சியை கைவிட்டு அமைதிக்கு திரும்பினர் என்றும் வாக்குமூலம் அளிக்கிறார்.




அந்த கள்ளர் தலைவரை மதுரை பாளையக்காரர் என்று குறிக்கிறார், ஆனால் மதுரையில் எந்த பாளையமும் இல்லை, கள்ளர் தலைவரை அங்கு பாளையக்காரர் என்று குறிக்கிறார்.



தங்களுடைய சுயாட்சிக்காக கள்ளர்கள் அன்னிய அரசிற்காக எதிர்த்து போர் செய்ததற்காக ஒரே நாளில் ஒரே நேரத்தில் 500  பேரும் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 500  பேரை ஒரே நேரத்தில் பிரிட்டீஸாரால் இந்தியாவில் வேறு எங்கும் தூக்கிலிடப்பட்டதில்லை.

மேற்கோள் நூல்


Saints, goddesses and Kings

1759 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மாமன்னர் பூலித்தேவருக்கு எதிராக தொடங்கிய யுத்தம் டிசம்பர் 26 ஆம்தேதிவரை நடந்தது. பூலித்தேவரின் வாசுதேவநல்லூர் கோட்டையை , யூசுப் கான் தகர்க்க முயன்றபோது, கள்ளர்கள் பூலித்தேவருக்கு ஆதரவாக யூசுப் கானின் படைகளின் மீது திடீர் தாக்குதல்களை நடத்தினர்.

அவன் வெற்றி பெறுவான் என்று பிரிட்டிக்ஷ்காரன் நினைத்தான். அப்படி நினைத்த கான்சாகிப் இரண்டு முறை புறமுதுகிட்டு ஓடினான்.

மூன்றாம் முறையாக கான்சாகிப் 1761 மேமாதத்தில் மீண்டும் பெருமளவில் கும்பினிப் படைகளுடன், பீரங்கிகளுடன் போர் தொடுத்தான். மே 3 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி முடிந்தது போர். இப் போரில்தான் பூலித்தேவர் தோற்றார். வாசுதேவநல்லூர் கோட்டை, பனையூர் கோட்டை, நெற்கட்டும் செவல் கோட்டைகள் வீழ்ந்தன.

தெற்கத்திப் பாளையக்காரர்களை அடக்கி கப்பம் பெற கிழக்கிந்தியக் கம்பெனியரால் நியமிக்கப்பட்டான். அவர் வரிவசூலை மிகச் சிறப்பாகச் செய்ததால் திருநெல்வேலிக்கும் கவர்னராகப் பதவி உயர்வு பெற்றான்.

கிழக்கிந்திய கம்பெனி மதுரையிலும் திருநெல்வேலியிலும் வரிவசூல் செய்து வருடத்திற்கு 5 லட்சம் கொடுக்க வேண்டுமென கூறியது. யூசுப்கான் தெற்குசீமையின் தளநாயகனாக ஆட்சிபுரிய ஆரம்பித்தான். யூசுப்கானுக்கு மதுரையில் கள்ளர்கள் சவாலாக இருந்தனர். அவர்களது கலவரங்களை அடக்க பெரும் போராட்டத்தை சந்தித்தான். நத்தம் பகுதியில் நடந்த கலவரங்களை அடக்கியபோது 2000 க்கும் மேற்பட்ட கள்ளர்கள் இறந்தனர்.


போர் திறனால் மதுரையை கைப்பற்றிய மருதநாயகம் எனும் யூசுப் கான், கள்ளர் நாடுகளின் பலமறிந்து அவர்களிடம் மோதாமல், திருமலை நாயக்கர் பாணியில் அவர்களை நட்பு நாடுகளாக மாற்றிக்கொள்ள மேலூர் வெள்ளாளப்பட்டி போன்ற இடங்களில் கோட்டைகளை அமைத்து கொடுத்து கள்ளர் நாடுகளுடன் சுமூகமாக சென்றான். அவன் கள்ளர் நாடுகளிடம் இருந்து எவ்வித வரியையோ, சிறப்பு மரியாதையையோ எதிர்பார்க்கவில்லை!! கள்ளர் நாடுகளின் படைபலத்தை பயன்படுத்திக்கொள்வதிலேயே குறியாக இருந்துள்ளான்.


இறுதியில் புதுக்கோட்டை மன்னர் படையினர் , தஞ்சை படையினர் , கும்பினியருடன் 1763 செப்டம்பர் மாதம் காலோனல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்கினர்.

முதலில் நத்தம் கள்ளர் நாட்டில் பாதைக் காவல்கள் அனைத்தையும் கைப்பற்றினர். 1764 ஜூன் மாதம் கோட்டையை முற்றுகையிட்டனர். கோட்டைக்குச் செல்லும் உணவை நிறுத்தினர். குதிரையும், குரங்கும் உணவாக வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு குடிநீரை நிறுத்தினர். இதனால் கோட்டைக்குள் இருந்த படைகள் மற்றும் மக்களிடம் சோர்வும், குழப்பமும் ஏற்பட்டது. யூசுப்கான் தப்பிக்கும் முயற்சி வெற்றிபெறவில்லை.

1764 அக் 13இல் யூசுப்கான் கைதுசெய்து கும்பினிப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டான். அக் 15ஆம் நாள் மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டான்.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்