ஞாயிறு, 20 ஜனவரி, 2019

ஜெயில் சின்னாத் தேவரின் - 6 தலைமுறையினர்



ஜெயில் சின்னாத் தேவரின் - 6 தலைமுறையினர் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்


அய்யனார் குளம் ஸ்ரீகடசாரி நல்ல குரும்பன் அழகம்மாள் என்ற அழகாத்தா குளத்தில் பிறந்து அங்கிருந்து கல்லூத்தில் வாழ்ந்து வந்த சின்னாத்தேவர், வெயிலடிச்சான் பட்டியில் (V.காமாட்சிபுரம்) வீரம்மாளை திருமணம் செய்தார்.

சின்னாத்தேவர் ஆங்கிலேயர் காலத்தில் ரேகை சட்டத்தை எதிர்த்ததினால் சிறையில் அடைக்கப்பட்டார். மக்களுக்காக போராடி சென்றதால் அவருக்கு ஜெயில் சின்னாத் தேவர் என்று பெயர் வந்தது.

அந்த பகுதியில் விக்ரமங்கலம் முதல் உத்தப்ப நாயக்கனூர் வரை பொது மக்களுக்கு பாதுகாப்பாகவும், வீரம்மாகவும், கம்பீரமாகவும், பெரும் மதிப்போடுவாழ்ந்து வந்தவர் தான் கல்லூத்து ஜெயில் சின்னாத் தேவர்.

ஜெயில் சின்னாத் தேவர் மகன் அய்யர்த் தேவர் மகனுக்கு சிறு வயதில் கண்ணில் செத்தை விழுந்தால், பக்கத்து ஊர் ஏரவார் பட்டியில் "செத்தை எடுக்கி" என்று அழைக்கப்படும் ஒரு மூதாட்டியிடம் அழைத்து சென்றார்கள். அவர்கள் யார் வந்தாலும் வரிசையாக தான் எடுப்பார். பக்கத்தில் உள்ளவர், நீ யார், எந்த ஊர், யார் மகன் என்று கேட்டபோது கல்லூத்து ஜெயில் சின்னாத் தேவர் பேரன் என்று சொன்னவுடன் அனைவரும் முதலில் அனுப்பி செத்தை எடுத்தார்களாம்.

ஜெயில் சின்னாத் தேவர், வீரம்மாள் தம்பதியருக்கு, 4 மகன்களும், 2 மகள்களும் உண்டு. இந்த வாரிசுகள் வெளிநாடு, வெளியூர்களில் ஆங்காங்கே வசித்து வருகின்றனர். இந்தநிலையில் ஜெயில் சின்னத்தேவரின் வாரிசுகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, உறவை மேம்படுத்தும் வகையில் ஒரு விழா எடுக்க முடிவு செய்தனர். அதன்படி காணும் பொங்கல் அன்று ஜெயில் சின்னாத்தேவரின் வாரிசுகள் 6 தலைமுறையினர் அனைவரும் உசிலம்பட்டியில் ஒரு மண்டபத்தில் ஒன்றுகூடினர்.

முதலில் அவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து ஒருவொருவர் தங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜெயில் சின்னாத்தேவரின் கடைசி மகனான ராசுத்தேவர் (வயது 97) மேடையில் நின்று அவரின் வாரிசுகளை வாழ்த்தி ஆசி வழங்கினார். அவர் கூறுகையில், எனது தந்தையின் 6 தலைமுறையை சேர்ந்த 361 வந்துள்ளனர். இப்படி எனது பேர பிள்ளைகளை ஒன்றாக நான் பார்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. ஆனால் இன்று அனைவரையும் ஒரே இடத்தில் பார்த்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி உறவுகளை வளர்த்துக் கொண்டால் ஏதாவது ஒரு வழியில் உறவுகள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கும். மேலும் முதியோர் இல்லம், ஆனாதை ஆசிரமம் போன்றவை குறைந்து விடும் என்றார்.

கண்ணுக்கு தெரியாத ஊர்களில் வசித்து வந்த உறவினர்கள் ஒன்றுகூடிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் இலங்கை, அந்தமான், சீனா போன்ற நாடுகளில் வசித்து வருபவர்களும், சென்னை, பெங்களூரு, சேலம், ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து வந்திருந்தனர்.





நன்றி. திரு. Sri Sai Ram

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்