செவ்வாய், 22 ஜனவரி, 2019

கள்ளர்கள் காவல் / படிக்காவல் / அரசு சுவந்திரம்



கள்ளர் குலத்து இப்பொழுது அரசராயும், குறுநில மன்னராயும் உள்ளாரது காவல் இங்கே எடுத்துக் காட்ட வேண்டுவதன்று. ஏனைய நாட்டாமைக்காரரை பற்றியே இங்கு கூறவது. இன்னோர் பண்டு அரசராயும், குறுநில மன்னராயும் விளங்கி இருந்தமையாலும் அம்மைக்காலம் வரையில் குறுநில மன்னர்களாய் இருந்திருத்தலாலும் இவர்களது செல்வாக்கிற்கு பிற வகுப்பினர் பெரிதும் கட்டுப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாட்டாமைக் காரர் அல்லது அம்பலக்காரர் காவலில் பற் பல ஊர்கள் அடங்கியுள்ளன. 



Source : The kallars by Black burn

18நூற்றாண்டு இறுதியில் கள்ளர்களின் காவல் உரிமையின் மீதான ஆங்கிலேய ஏகாதிபத்திய போர் உசாத்திற்கு சென்று கொண்டிருந்த நேரம் அது.

கிபி1861ஆம் ஆண்டு பிரிட்டிஸ் இந்திய சட்டம் 5ன் கீழ் கொண்டு வரப்பட்ட indian Imperial police சேவையை, ஆங்கில அரசு இந்தியா முழுவதும் விரிவுபடுத்தியது.

இச்சட்டம் இந்தியா முழுவதும் உள்ள அரச மற்றும் போர்குடிகளின் அடிப்படை தொழிலான காவல் உரிமையை பறிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளர்ச்சி ஏற்பட்டது.

மதுரை
திருச்சி
தஞ்சை
நெல்லை
ஆற்காடு

போன்ற பகுதிகளில் ஆங்கில அரசு நேரடியாக இரும்பு கரம் கொண்டு பூர்வ காவல் சேவையை அடக்கிக் கொண்டிருந்தது.

அச்சமயத்தில் அடிப்படை காவல் உரிமைக்காக தஞ்சை கள்ளர்கள் சீர்காழியில் உள்ள பிரிட்டிஸ் அரசின் சிப்பாய்களை கொன்று குவித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அதுமட்டுமில்லாமல் பட்டுக்கோட்டையில் ஆங்கில அரசால் உருவாக்கப்பட்ட தலைமை ஆனையர் காவல் அலுவலத்தை தீக்கிரையாக்கினர். மேலும் பட்டுக்கோட்டை காவல் ஆனையாளரின் வீட்டை சூரையாடியும் தங்கள் எதிர்ப்பினை வரலாற்றில் பதிவு செய்தனர்.

மேலூர், அழகர்கோவில், வெள்ளளூர், உசிலம்பட்டி, தேவதானப்பட்டி, கம்பம், குச்சனூர், பழனி, திண்டுக்கல், தேனி மண்டல பகுதிகளில் கள்ளர்கள் தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த சமயத்தில் கிபி1896ல் குச்சனூர் பகுதி காவல்காரரான பிறமலைக் கள்ளர் “பிரிட்டிஸ் மேஜிஸ்ட்ரேட் முன்பு காவல தவிர விவசாயத்தை நம்ம மக்கள் எப்படி பார்த்தாங்கனா சில நீதிபதிகள் காவல் தொழிலை விட்டுட்டு விவசாயம் பண்ணுங்க அப்படின்னு சொன்னதுக்கு குச்சனூர் பிரமலைக்கள்ளர் காவக்காரர் சொல்லி இருக்காரு நான் நீண்டகாலம் பார்த்துவந்த சர்க்கார் வேலையை விட்டுட்டு அதாவது காவல் வேலைய அவங்க என்ன சொல்லிருக்காங்கனா சர்க்கார் வேலைன்னு சொல்லிருக்காங்க சர்க்கார் வேலைய விட்டுட்டு கலப்பையை போய் எப்படி பிடிப்பேன் அதாவது ஏர்புடிச்சு எப்படி உழுவேன் நீதிபதி கிட்ட விவசாயத்தை தன்னுடைய கண்யத்துக்கு குறைவானதாகும் காவல் தொழிலை கௌரவமிக்க நிர்வாகப் பணியாகவும் அவங்க நினைச்சு சொல்லி இருக்காங்க இவருடைய அந்த நிலைப்பாடு இவருக்கு மட்டுமில்லாமல் அந்த பகுதியில் பெரும்பாலுமான காவல் காத்த காவல்காரங்களுக்கும் இதே நிலைப்பாடுதான் இருந்திருக்கிறது
.

கள்ளர் காவலில் பற் பல ஊர்கள் அடங்கியுள்ளன. உதாரணமாக தஞ்சை ஜில்லாவின் மேற்கு பக்கத்தில் உள்ளவர்களில் காங்கய அம்பலக்காரரை முதன்மையாகக் கூறலாம் . அவர்கட்கு சென்னப்பட்டினம் வரையில் காவற் கிராமங்கள் இருந்தன என்பர். அடுத்து, 

ராயமுண்டார் , 

சோழகர், 
சோழங்கதேவர், 
மேல்கொண்டார், 
நாட்டரையர், 
சொம்பியமுத்தரசு, 
வன்னிமுண்டார், 
கொடும்புராயர், 
கண்டியர் 

முதலானவர்களைக் கூறலாகும். 


இதிலிருந்து இன்னார்க்கு இன்னின்ன கிராமங்கள் என இவர்கள் பங்கிட்டுக்கொண்டிருந்தனர் என்பது விளங்கும். காவர் கிராமம் என்பதில் இவர்களுடைய உரிமையும், கடமையும், என்னவென்று பார்ப்போம். ஓர் அரசனுக்கு குடிகள் வரிசெலுத்துவது போன்றே கிராமத்தார்கள் இவர்கட்கு ஆண்டுதோரும் வரி செலுத்துவர். வரி தனித்தனியாவேனும், கிராமத்தார் ஒன்று சேர்ந்து மொத்தமாக வேனும் செலுத்துவதுண்டு. மற்றும் அம்பலக்காரர் வீட்டில் கல்யாணம் முதலிய நடக்குங்காலங்களில் காணிக்கை செலுத்துவதுண்டு. இவ்வுரிமையை பெற்றுக்கொள்ளும் அரசு காவலர் தமது காவலில் உள்ள ஊர்களில் எவ்வகை களவும், கொள்ளையும், நிகழாமல் பார்த்துக்கொள்ளும் கட்டுப்பாடுடையர். களவு நிகழாமல் பார்ப்பதென்றால் தாம் சென்று காத்து நிற்பதில்லை; ஆட்களை அனுப்பி காப்பதும் இல்லை. தம் வலிமையாலும் ஆணையாலும் பாது காப்பாராவர். 


இன்னாருடைய அரசு காவலில் உள்ள ஊர் என்று தெரிந்தால் திருடர்கள் அவ்வழிச் செல்லமாட்டார்கள். ஒரு கால் ஏதேனும் களவு நிகழ்ந்து விடின் கிராமத்தார் அம்பலக்காரருக்கு செய்தி தெரிவிப்பர். அம்பலக்காரர் தம் ஆட்களை பல இடங்களுக்கு அனுப்பி களவு போன பொருளை எவ்வாற்றாலேனும் மீட்டுக் கொடுப்பர். சில சமயங்களில் அம்மபலக்கார் தம் கைப்பொருள் செலவு செய்து மீட்க நேரும். இதில் கிராமத்தார்க்கு எவ்வளவு நன்மையிருக்கிறதென்று பாருங்கள். சில சமயங்கள் அரசு காவலர் சிலர் தவறான வழிகளில் நடத்தலும் நிகழக்கூடியதே. அது குறித்து அம்முறையே வெறுக்கத்தக் கதாகது. 


தற்காலத்தில் நாட்டின் சாதன பாது காப்புக்கு போலீஸ் படை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நூற்றில் 90 ஊர்களுக்கு அதன் சம்பந்தமே இல்லை. அவ்வூர்களில் ஏதேனும் நிழந்து விட்டால் அவர்கள் நகரங்களில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவிக்க , அன்னோருத்தரைவைப் படிப்படியாகப் பெற்றுப் போலீசுக்காரர் வந்து பாத்து ஏதேனும் எழுதிக் கொண்டு போகின்றனர். இதில் எவ்வளவு நம்மையை நாம் எதிர் பார்க்கமுடியும்? இதனோடு ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுதுதான் பழைய அரசு காவலின் பயன் விளங்கா நிற்கும் . அம்பலகாரர்கட்கு அன்னோர் காவலுட்பட்ட கிராமத்து மக்கள் தாம் ஆண்டுதோறும் செலுத்தும் வரி முதலியவற்றைக் குறிப்பிட்டுப் பாட்டயங்களும், முறிகளும் எழுதிக் கொடுத்திருக்கின்றனர் அரசாங்கத்தினர் அவற்றில் பல பட்டயங்களைக் கைப்பற்றி விட்டனரென்றும், பட்டயம் பெற்றிருந்த சிலரிடம் அவைகளை வாங்கிக்கொண்டு அவர்கட்க உபகாரச் சம்பளம் கொடுத்து வந்திருக்கின்றன ரென்றும் அறிகின்றோம். 


தாங்கள் பரம்பரையாக அடைந்து வந்து வருவாயை இழந்த காரணத்தால் அம்பலகாரரிற் சிற்சிலர் தத்தம் பெருந்தன்மையை இழக்கவும் நேர்ந்தது. இப்பொழுது பெரும் பான்மை அரசு பாவர் ஒழிந்துவிட்டது. சிற்சில இடங்களில் பழமையை நினைவுகூர்ந்து, அன்புபள்ளி ஒருவகையான சம்பந்தம் வைத்துக்கொண்டிருக்கின்றனர். 


இனி, அம்பலகார்கள் அரச காவல் முறையை நாடுவது பொருத்தமாகத் தோன்றவில்லை, இவர்கள் தம்முடைய நிலங்களை நன்கு பயிரிட்டுத் தம் உழைப்பினார் வருகின்ற பொருள் கொண்டு தம்ட் வாழ்க்கையை நடாத்தி ஏனையர்க்கும் இயன்ற உதவிசெய்து கொண்டு அறநெறியில் நிற்பார்களாயின் எவ்வளவோ சீரும் சிறப்பும் எய்துவார்கள். பழைய நாளில் இவர்கள் அரசு காவல் முறி பெற்றமைக்குச் சில சான்றுகள்


பினவருபவை, விணணனூர்ப் பட்டி, திருவாளர் மு. கந்தசாமிச் சோழங்க தேவர் அவர்களிடமிருந்து எமதருமை மாணவர் திரு. வீ. உலகதாசக் கொடும்புராயர் வாயிலகக்கிடைத்த பழைய (ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளின் முந்திய ) ஏடுகளிற் கண்டவை:-


1. 'ஈசுவர u ஆனி t 152 வாலிகொண்டாபுரம் சீமை வெண்பா னாட்டில் கூரையூரைச் சேர்ந்த வடவின்னம் பூண்டியிலுக்கும் இருசப்ப நாயனார், முத்துக் கருப்ப உடையார் நாங்களிருவரும் ஏரிமங்கல நாட்டில் விண்ணனூர்ப்பட்டியிலிருக்கும் பலபத்திரச் சோழகனார் குமாரர் குஞ்சான் சோழகனார்க்கு மேன்காவர் பொருப்பு முறிகொடுத்தப்படி .முறியாவது வடவிண்ணம் பூண்டி மாகாணத்தில் ராயத்துடையார் கிராமம் உட்பட்ட நம்முடைய கிராமம் 12 . இந்த பன்னிரண்டு கிராமத்துக்கு ம் வருடம் ஒன்றுக்குப் பொருப்பு கெட்டி 12 பொன் கொடுத்துக்கொண்டு வருவோமாகவும். இந்த மேன்காவல் கல்லுங் காவேரி புல்லும் பூமி உள்ளவரை ஆண்டு அனுபவித்துக் கொண்டு சுகத்திலே இருப்பீராகவும் .


2. அக்ஷய uதை t 72 முத்துலிங்க ரெட்டியார் கிராமமான துறைமங்கலம் அகரங்குடியான (பொளை) ? துறைமங்கலத்தில் இருக்கும் லெட்சுமணரெட்டியர் நல்லப்ப ரெட்டியார், காளத்தி ரெட்டியார், எறமரெட்டியார், பூசாரிசின்னத்தம்பி உடையார், கலிதீர்த் உடையார், ரெட்டை பச்சை உடையார், அகரத்தில் இருக்கும் மகாஜனங்கள் கொண்டையா, நரசைய்யா, லிங்கய்யா, மன்னக்கோன், மறவைக்கோன், பெருச்சிக்கோன் நாங்கள் அனைவரும் ஏறிமங்கள நாட்டிலிருக்கம் கருத்த காங்கையர் , வேலாயுத சோழகர் இவர்களுக்கு மேன் காவல் முறிஎழுதிக் கொடுத்தோம் . இதற்கு வருடம் ஒன்றுக்கு பொருப்பு மதுரை சக்கரம் 10 இந்த 10 பொன்னுக்கு கருத்த காங்கயர் பாதிக்கு 5 பொன்னும் வேலாயுத சோழகர் பாதிக்கு 5 பொன்னம் வருஷா வருஷம் கொடுத்துவருவோமாகவும். இந்த படிக்கு சம்மதித்து நாங்கள் அனைவரும் காவல் முறிகொடுத்தோம்.சாக்ஷிகள்:- சிறுவாச்சூர் நல்லப்ப ரெட்டியர், பெருமாயிலூ நல்லப்பரெட்டியர்... .நாட்டுக்கணக்கு ரெங்கநாதபிள்ளை



3. தாது u வைகாசி t 132 ஏறிமங்கல நாட்டிலிருக்கும் கருத்த காங்கைய அம்பலக்காரர் கீழத் துவாகுடியைச் சேர்ந்த செங்கிப்பட்டியிலிருக்கும் ஓந்தையா மேல்கொண்டார் அம்பலக்காரர், கருவிப்பட்டியிலிருக்கும் ராமையா மேல்கொணடார் அம்பலக்காரர் இவர்களுக்கு கூகையூர்ச் சீமை நாட்டார் செகநாத உடையார் மற்றும் உள்ள உடையார் கிராமத்துக் குடியானவர்கள் ஆகிய நாங்கள் மேன்காவல் பட்டையம் எழுதி கொடுத்தோம். மேன் காவலாவது கூகையூர், மாமந்தூர், வீரபயங்கரம், கருத்துளங்குறிச்சி இந்த கிராமம் நான்குக்கும் பொருப்பு மதுரைச்சக்கரம் பொன் 20. செந்து அளம்பளம் , கிருஷ்ணாபுரம், பெருமாள் பாளையம், சித்தேரி, நரையூர், வடபாதி, அரசங்குடி, சிறுபாக்கம், உறத்துர், திருவலந்துறை, பசும்பலூர், பாதாங்கி, ஐயனார்பாளையம், பில்லாங்குளம், சிறு நிலா, பெறுநிலா, பட்டாக்குறிச்சி, வடகரைப் பாதி, மாவிலிவகை, ஆண்டியமடம், ஆகிய இருபது கிராமத்துக்கு ம் பொருப்பு மதுரைச் சக்கரம் பொன் 90. இந்த 20 கிராமம் உட்பட கிராமம் 24 க்கும் பொருப்பு மதுரைச்சக்கரம் பொன் 10. இந்தப்படிக்குச் சம்மதித்து மேன்காவல் பட்டயம் கொடுத்தோம். . . . .

இதற்குச் சாட்சி:- 


சிகம்பூர் பெரியஉடையார், 


சிறுமதுரை திருமேனிப் படையாச்சி











காவல்கோட்டம் புத்தகத்தில் தாதனூர் கள்ளர்கள் பற்றி  

"கள்ளர்கள் காவல் காப்பதென்றால் சுற்றிசுற்றி வருவதல்ல. அவர்கள் வந்து சாவடியில் சும்மா குந்தி அமர்ந்திருக்கிறார்கள், அவ்வளவுதான். அவர்களின் ஆயுதங்களோ கைகால்களோ அல்ல கூடிய புலன்களே உண்மையான காவல்.


உதாரணமாக வெளியூரில் இருந்து வண்டி வண்டியாக தானியங்களுடன் வந்து மதுரைக்குள் இருட்டில் நின்றிருக்கிறார்கள் வெளியூர்க்காரர். தாதனூர் கள்ளன் அதைப் பார்த்து விசாரித்து விட்டு காவல் கூலி கேட்கிறார். உங்களூரில் என்ன தொகை என்று கேட்டு கொடுக்க முற்படும் வண்டிச் சொந்தக்காரர் ஒரு வண்டியைக் குறைத்து சொல்லிவிடுகிறார். கூரிருளில் வண்டிக்காளைகளின் கழுத்துமணி ஓசையை வைத்தே எத்தனை வண்டி என்று ஊகிக்கும் காவலன் கள்ளன். சரியாகக் கணக்கு சொல்லி எச்சரித்து வாங்கிச் செல்கிறான். இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் ஊரிலேயே திருட வருகிறார்கள் என்றால் அவர்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று வியப்பு கொள்கிறார் வண்டிக்காரர். இப்படி தான் கள்ளர்களின் காவல் இருந்தது. 



கள்ளர்களுக்கும் காவலுக்கும் மிக தொன்மையான தொடர்பு உள்ளது. வேந்து தொழில், வேந்துறு தொழில், வேந்துவிடு தொழில் ஆகிய மூன்று சொல்லாட்சிகள் சங்கப்பாடல்களில் காணப்பெறுகின்றன.

வேந்துவிடு தொழில் : 


வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக்களவின்

ஆ தந்து ஓம்பல் மேவற்றுஆகும் -  என்ற நூற்பா, அரசனால் ஏவப்பட்ட போர் மறவர், பகையரசர் நாட்டுக்குள் சென்று, பசுக்கூட்டங்களைப் பகைவர் அறியா வண்ணம் கவர்ந்து கொண்டுவந்து பாதுகாத்தல் வெட்சிதிணை. 


வேந்து தொழில் : வேந்தற்குரிய செயல்


வேட்டல் - வேள்வி செய்தல்

ஓதல் - கல்வி பயிலுதல்
படை வழங்கல் - காத்தல்
குடியோம்பல் - தண்டஞ்செய்தல்


வேந்துறு தொழில்:  அரசர்க்கு ஓராண்டு வரையறைக்குட்பட்ட அயலகப் பணியாகும். (பொருள்.189) போர், தூது, நாடுகாவல் ஆகிய பிரிவுகள். கடந்து செல்லும் பொழுதும், போர்ப் பாசறைகளில் தங்கும் பொழுதும் தம் மனைவியர் உடன் இருப்பதற்கு இசைவு அளிக்கப்பெறவில்லை. (பொருள். 34, 175)



ஆநிரை கவர்தல் , காத்தல் , உளவு பார்த்தல் என்பது கள்ளர்களின் முதன்மை தொழில். 

மூவேந்தர் காலம், சுல்தான்கள் காலம், விசயநகர காலம் , பிற்கால தமிழ் மன்னர்கள் காலம், பிரிட்டீசார் காலம் என சென்ற நூற்றாண்டு வரை மிக்க அதிகாரத்துடன் கள்ளர்கள் வசம் இருந்துள்ளது. வரலாற்றுப் பக்கங்கள் கள்ளர்களுக்கும் காவலுக்கும் உள்ள பல சான்றுகளை தருகிறது. அவற்றில் சிலவற்றை காண்போம்.





திருச்சி சோழமாதேவியிலிருந்து தஞ்சாவூர் மெய்காவலுக்கு நால்வர் ராஜராஜர் காலத்தில் சென்றுள்ளனர். இங்கே உள்ள சோழமாதேவி கோவிலில் நான்கு குடும்பம் தான்ஊர் கரைக்காரர்கள். அவர்களுக்கே முதல்மரியாதை



கல்லணை, காவிரி கரை, தஞ்சை பெரிய கோவில் சோழர்களால் போரில் கொண்டுவரப்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் கட்டி உள்ளனர். கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம். கைதிகளை வைத்து செய்ய வேண்டும் என்றால், காவல் எவ்வளவு கட்டுகோப்பாக இருக்க வேண்டும். பாதுகாப்பு எவ்வளவு நேர்த்தியாக இருக்கவேண்டும். ஒரு நிமிடம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாமல் போய் விடும். எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகள் தாக்குதல் நடத்தலாம். ஆனால் எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால், எதிரி நாட்டு கைதிகளை வைத்து வேலை வாங்கி இருப்பார்கள்.




சுல்தான்கள் காலம் கிபி 14 ஆம் நூற்றாண்டு( ஹிஜிரி 769)



மதுரை சுல்தான்கள் ஆட்சி காலத்தில் உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் உள்ள கடத்தூர் எனும் பகுதியில் காங்கயநாட்டு முத்தூர் கோயில் பிராமணர்கள் அனுப்பிய ஒலையில் இக்கட்டான அந்த காலத்தில் கோயிலை காக்க கள்ளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுல்தான்களின் கொடுங்கோல் ஆட்சியில் கோயில்களையும் மக்களையும் காக்க கள்ளர்களை மக்கள் சரணடைந்ததற்க்கு இந்த கல்வெட்டு ஒர் சிறந்த எடுத்துக்காட்டு. ( கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் :- 64/2004






விருப்பண்ண உடையார் காலம் கிபி 1377 : -

விசயநகர மன்னர் காலத்தில் , திருக்குன்றக்குடி மக்கள் " கள்ள வேளைக்காரர் " என்பவரிடத்தில் சரணடைந்து தங்களது ஊரை காத்து வருமாறு காவல் உரிமை அளித்து அவருக்கு சிறப்புகள் செய்துள்ளனர். அவருக்கு மக்கள் அளிக்க வேண்டிய சலுகைகள் பற்றியும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. (புதுக்கோட்டை கல்வெட்டுகள் 689) வேளைக்காரர் படையை சேர்ந்த கள்ளர்கள் விஜயநகர மன்னர் காலத்திலும் ஊர்மக்களை காக்கும் பொறுப்புகளில் வகித்து வந்துள்ளனர் என்பதற்கு இந்த கல்வெட்டு ஒரு சான்றாகும்.









ஜடாவர்மன் பராக்கரம பாண்டியன் காலம்: கிபி 1483 


திருபுவனவீரபுரத்தை சேர்ந்தவர்களுக்கும் குளமங்கல நாட்டாருக்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை விளக்குகிறது கல்வெட்டு எண் 159 of 1911. குளமங்கல நாட்டு கள்ளர்கள் " ஊர் காவல்" உரிமையை பெற்றிருந்தனர். ஒப்பந்தத்தில் கள்ளர்கள் ஊருக்கு பாதுகாப்பு அளிக்கவும் , நியாயமாக நடக்கவும், யாரையும் துன்புறுத்த கூடாதென்றும், கள்ளர் மக்கள் வீட்டு திருமணத்தின் போது ஒரு சீலையை காவல் கூலியாக பெறுவார்கள் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர் காலத்திலேயே கள்ளர்கள் ஊர்மக்களை காக்கும் காவல் உரிமை பெற்று விளங்கியுள்ளனர். ( Topographic list of Inscriptions in madras presidency vol 2)






 இடையர்களின் காவலன் திருமலை பின்னத்தேவன் ( கிபி 1645) 


 திருமலை நாயக்கர்(கிபி 1623-1659) காலத்தில் திருநெல்வேலியில் இருந்த இடையர்களை அங்கிருந்த பாளையக்காரன் தொந்தரவு செய்து வந்தான். இதனால் அங்கிருந்த இடையர்கள் திருமலை நாயக்கரிடம் சரண் அடைந்தார்கள். திருமலை நாயக்கர் பின்னத்தேவரை அழைத்து ஆயிரம் வீட்டு இடையர்களுக்கு தலைவர்களாக நியமித்து, அவர்களை காத்து அருளுமாறு கேட்டுக்கொண்டார். மதுரையில் இராமாயணச்சாவடியில் இருந்து மாரியம்மன் தெப்பக்குளம் வரையிலும் இடையர்களுக்கு வீடுகளை கட்டித்தரும் பொறுப்புகளை பின்னத்தேவர் சிறப்பாக செய்து முடித்தார். 

அதன்பின் பின்னத்தேவனும் அவரது வாரிசுகளும் தொடர்ந்து இடையர்களை காத்து வந்துள்ளனர். திருமலை பின்னத்தேவரின் வாரிசுதாரர்களுக்கு பட்டம் கட்டும் உரிமையை இடையர்கள் பெற்றிருந்தனர்.மதுரை இராமாயணச்சாவடிக்கு மேற்கேயுள்ள இருக்கும் கிருஷ்ணர் கோயிலில் விழாக்காலங்களில் பின்னத்தேவர் வகையராக்களுக்கு பரிவட்ட மரியாதையும்,பாதக்காணிக்கையும், தீர்த்தம் துளசி மரியாதையும் உண்டு. இன்றும் இத்தகைய மரியாதைகள் அளிக்கப்படுகிறது.( மூவேந்தர் குல தேவர் வரலாறு : முத்துத்தேவர் பக் 216 /Gazettee of madura pg 96 / தருமத்துப்பட்டி செப்பேடு 3)








திருச்சிராப்பள்ளியின் அரசு காவலர்கள்:-( கிபி 1682)


கிபி 1682 ல் சொக்கநாத நாயக்கர் காலத்தில், திருச்சியை நாயக்கர் ஆண்டபோது, அவர்களின் நண்பராக இருந்த, மராத்தியர்கள் திருச்சி கோட்டையை பிடிக்க திடீர் தாக்குதல் நடத்தினர். துரோகத்தை தாங்க இயலாத சொக்கநாத நாயக்கர் அதிர்ச்சியில் உயிர் இழந்தார்.அவரது வாரிசான ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் ரகுநாதராய தொண்டைமானின் உதவியை நாடினார். கோட்டை சுவர்களை வீரத்துடன் போராடி கடந்து கோட்டையை அடைந்து, எதரிகளை விரட்டியடித்தனர். இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்துவீரப்ப நாயக்கர் அம்புநாட்டு கள்ளர்களை ரகுநாதராய தொண்டைமான் தலைமையில் திருச்சியின் முக்கிய 12 பகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமித்தார்.ரகுநாதராய தொண்டைமான் திருச்சியின் அரசு காவலராக நியமிக்கப்பட்டார். மருங்காபுரி பூச்சிநாயக்கரின் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்:- ரகுநாதராய தொண்டைமான் திருச்சியின் அரசு காவலராக நியமிக்கப்பட்டுள்ளதால், " ஸ்ரீரங்கம் திருவானைக்கால் பகுதிகளில் உள்ள கடைகள் ஒரு காசும், ஒவ்வொரு வீடும் வருடத்திற்கு 2 பணமும்,பெரிய கிராமங்கள் வருடத்திற்கு 10 கலம் நெல்லும், சிறிய கிராமங்கள் வருடத்திற்கு 5 கலம் நெல்லும் ரகுநாதராய தொண்டைமானுக்கு அளிக்க கடமைபட்டிருந்தனர். புதுக்கோட்டை மன்னர்களாக உயர்ந்த தொண்டைமான்களும் ஒரு காலத்தில் காவல்காரனாக இருந்துள்ளது வியப்பளிக்கும் தகவலாகும்.(Manual of pudukkottai state vol 2 part 1 pg 759)




முத்துவடுகநாதருக்கு ஆதரவாக போர்களம் கண்ட கள்ளர் காவலர்கள்:- ( கிபி 1772)


இராமநாதபுரத்தை அடுத்து சிவகங்கையை நோக்கி திரும்பிய ஆங்கிலேயர் படை கிபி 1772 ல் ஜெனரல் ஸ்மித் தலைமையில் தாக்கினர். இந்த போரில் முத்துவடுகநாதர் வஞ்சகமாக கொல்லப்பட்டார். முத்துவடுகநாதருக்காக படை உதவி அளித்த கள்ள நாடுகளை பற்றி அம்மானை பாடுகிறது.




"தென்னிலை வளர்நாட்டு ஊரவரும், மேல் சிலம்பா நாட்டவரும் , சாவ முத்து நாட்டுத்தலைவர் வெகுசனமும் கண்டதேவி நாட்டு கனமான மன்னவரும் வண்டரெழுவங்கோட்டை மன்னருடன் கண்டமாணிக்கம் கனநாட்டு இராணுவமும் துண்டரிக்க னான துரை பாகனிச் சனமும் பட்டமங்கல நாட்டு பலசனங்கள் மெத்தவுமாய் திட்டமுட னாயுதங்கள் சேர்க்கை வெகு வாகவுமே, பள்ளத்தூர் நாடும், பாலைய நாட்டாரும் கள்ளற் சிலகுடியுங் காவலராரும் , நேரிய போரில் நிலையதனை விட்டகலா ஏரியூர் மல்லாக்கோட்டைக் கியல்புடைய சேதுபதியம்பலம் தீரன் வெகுசனமும் பேதமில்லா பெரியபிள்ளையம்பலமும்" (சிவ அம் பக் 122)



ஏழுவங்கோட்டை நாட்டார்கள், தென்னிலை நாட்டார்கள், சிலம்பா நாட்டார்கள், முத்து நாட்டு கள்ளர்கள் ஆகிய ஏழுகிளை கள்ளர் நாடுகளும் , பாகனேரிச் சனமும், பட்டமங்கல நாட்டார்களும்,கண்டதேவி நாட்டார், கண்டர்மாணிக்க நாட்டார் பள்ளத்தூர் நாடு, பாலையூர் நாடு, கள்ளர் காவல்காரர்களும், மல்லாக்கோட்டை நாட்டு சேதுபதியம்பலம் தலைமையிலான் படை, பெரியபிள்ளை அம்பலம் படை முதலான நாட்டார் படைகள் சிவகங்கை சமஸ்தானத்தை ஆபத்தில் இருந்து காக்க உதவியுள்ளனர். இங்கனம் கள்ளர் காவலர்கள் ஆபத்துக் காலங்களில் போர் களங்களிலும் களமாடியுள்ளனர் என்பதற்கு சிறந்த சான்றாக சிவகங்கை சரித்திர அம்மானை அமைகிறது. ( சிவகங்கை சரித்திர அம்மானை பக் 122).






கள்ளர்களை அழைத்து காவல் உரிமை அளித்த மருது பாண்டியர்கள் ( கிபி 1790) : 



பெரிய மருதுபாண்டியர் வெள்ளையன் அம்பலக்காரருக்கு அளித்த, பட்டயத்தில் குன்றக்குடியில் காடு செடி வெட்டி திருடர் பயம் நீக்கி காவல் காத்துவருமாறு கூறியுள்ளார். குன்றின் மேல் காடு நீக்கி கோயிலை உருவாக்க உதவ வெள்ளையன் அம்பலக்காரன் உதவ ஆணையிட்டார். வெள்ளையன் அம்பலக்காரனுக்கு அம்பல மரியாதையும், நிலங்களும் அளிக்கப்பட்டது. வெள்ளையன் அம்பலக்காரன் காவலுக்கு கூட்டி வந்த தொண்டைமான் புதுக்கோட்டை அம்புநாட்டு கள்ளர்கள் :சாத்துக்குட்டி சேர்வைக்காரன், செல்லக்குட்டி சேர்வைக்காரன், நல்லகுட்டிச் சேர்வைக்காரன் இந்த மூவரும் புதுக்கோட்டை மன்னரிடம் முறி( அனுமதி) வாங்கிக்கொண்டு கோயில் குளம் மடம் சத்திரம் காத்து வருமாறு ஆணையிடப்பட்டு அவர்களுக்கு மரியாதைகளும் நிலங்களும் அளிக்கப்பட்டது.மருதுபாண்டியர்கள் அம்புநாட்டு கள்ளர்களை குன்றக்குடி பகுதிக்கு குடியமர்த்தி கோயில் குளம் காத்து வருமாறு காவல் உரிமைகளை அளித்து பெருமை சேர்த்துள்ளார். இந்த கள்ளர்களின் வழியினர் இன்றும் குன்றக்குடி முருகன் கோயிலில் மரியாதை பெறுகின்றனர். ( குன்றக்குடி கோயில் ஒலை ஆவணம் : மருதுபாண்டிய மன்னர்கள் மீ மனோகரன்)






பாகனேரி நாட்டு கள்ளர் காவல்காரர்கள்  ( 18 ஆம் நூற்றாண்டு)



பாகனேரி கள்ளரான வயிரவன் என்பவர் வேம்பத்தூர், பாசாங்கரை, ஒக்கூர், மான்குழி, பெருங்குடி, திருமலை மற்றும் திருக்கோட்டியூர் சீர்மைகளில் தன்னிடம் இருந்த காவல் உரிமையை குரும்பன் என்பவருக்கு விற்பதற்கு இசைந்து ஒலை ஆவணத்தை கொடுத்துள்ளார். காவல் உரிமைக்கான விலை ஊர் சான்றோர் முன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கள்ளர்கள் காவல் உரிமைகளை பெற்று ஊரையும் உடமையையும் காத்து வந்துள்ளனர். ( பாகனேரி நாட்டு மக்களின் கலாச்சாரமும், மரபும்: முத்தையா) ஒலைச்சுவடி எண்: 8)




முடிமன்னர் காலம் முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலும் கள்ளர்கள் பெரும்பாலான தேசக்காவல் உரிமைகளை பெற்றிருந்தனர். இதற்காக பல கோயில் மரியாதைகள் மற்றும் நிலங்களை பெற்று வாழந்துள்ளனர். பாரம்பரியமிக்க காவல்முறையை வெள்ளையர்கள் ஒழித்து கள்ளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து , பொருளாதார ரீதியில் கள்ளர்களை வலுவிழக்க செய்தனர். காவல் தொழிலை இழந்த கள்ளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வலுக்கட்டயாமாக காவல் கூலி வசூலிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வரலாற்றில் சுழ்நிலையால் குற்றவாளிகளாகவும், குற்ற பரம்பரையாகவும் மாற்றப்பட்டவர்கள் கள்ளர்கள்.


ஆய்வு : திரு . சியம் சுந்தர் சம்பட்டியார்

நன்றி. திரு. சோழபாண்டியன்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்