தனஞ்சய முத்தரையர்
புதுக்குடியான ரா[ஜெ]ந்திர சொழமங்கலத்துக் காணி உடைய கள்ளரில் பெருமன் அழகனான மணவாள முத்தரயன்
சோழர் ஆட்சி கால முத்தரையர் கல்வெட்டு.
காலம் : 1097
அரசு : சோழப் பேரரசு
அரசர் : கோவிராஜகேசரி ஶ்ரீ குலோத்துங்கசோழத் தேவர்
விளக்கம் : திருவெறும்பியூர் மலைமேல் தேவர் கோவிலுக்கு, அனையா சந்தி விளக்கு எரிக்க, திருவெறும்பியூர் திருமலகத்து நாட்டை ஆளும் நாடாழ்வாராகிய பாடிக்காவல் உடைய கள்ளன் ராஜேந்திர முத்தரையன் அளித்த கொடையை சொல்லும் கல்வெட்டு.
முத்தரையர் கள்ளர் இனத்தவர் என்பதற்கான கல்வெட்டுகளில், இக்கல்வெட்டானது ஒரு மைல் கல்லே!
மேலும் கள்ளரில் நாடாள்வார் என்ற 5 கல்வெட்டுகளோடு 6வது கல்வெட்டாக கிடைக்கப் பெறுகிறது என்பது கூடுதல் தகவல்.
Journal of Oriental Research, Madras
Volume 3
1929
Muttaraiyar belonged to the Kallar caste and were such great warriors as to be eulogised by the poets. Tirumahgai mannan may be one of them,
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழறிஞர், சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர் நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார். இவரது நினைவாக தஞ்சாவூரில் 1992-இல் நாவலர் ந மு வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவப்பட்டது. இத்தகைய பெரும்புகழ் படைத்த நாட்டார் ஐயா 1923 ஆம் ஆண்டு எழுதிய " கள்ளர் சரித்திரம் " என்ற வரலாற்று நூலே கள்ளர் மரபினரின் வழிகாட்டியாகவும், சிறந்த வரலாற்று நூலாகும். இது தமிழக அரசின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல் ஆகும்.
இந்த நூலில் முத்தரையர் மன்னர்கள் கள்ளர் மரபினர் என்றே குறிப்பிடுகிறார்.
கள்வர் கள்வன்
மேலும்
தற்காலத்திய திருச்சி, தஞ்சை, புதுகோட்டை மாவட்டங்களில் பெரும் பகுதிகளை முத்தரையர்கள் ஆண்டு வந்தனர். இவர்களது நாடு முத்தரையர் நாடு என்றே கல்வெட்டுக்களில் குறிக்கப்பெறுகின்றது.
திருக்காட்டு பள்ளி அருகில் உள்ள செந்தலை அல்லது ஐம்பது கல் நகரம் இவர்களது தலை நகரமாகும். இப்பொழுது ஐம்பது கல் நகரம் அம்பி நாரம் என்று அழைக்கப்படுகிறது. செந்தலைக்கு அருகில் உள்ள நாகத்தி, உமையவள் ஆற்காடு, வல்லம், தஞ்சை, முதலிய பகுதிகள் முத்தரையரின் தலை நகரத்தில் அடங்கி இருந்தது.
இன்றும் செந்தலையில் கள்ளர்களே வாழ்கின்றனர்.
திருகாட்டு பள்ளி நியமம், விஷ்ணம்பேட்டை, இளங்காடு கூடநாணல் கூழாக்கி ஆற்காடு, விண்ணமங்கலம், பொன்விளைந்தான் பட்டி ஆகிய பகுதிகளும் செந்தலையை சார்ந்திருந்தன. செந்தலைக்கு சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரும் வழங்கியது, தஞ்சை, வல்லம் முத்தரையர்களது தலைமை நகரங்களாக சில காலம் இருந்தன.
தஞ்சாவூருக்குத் தென் மேற்கே ஏழு மைல் தூரத்தில் வல்லம் உண்டு. இக் காலத்தில் அழிந்த அகழிகளேயன்றி, அதன் பழம் பெருமையை அறிதற்குரிய அடையாளம் ஒன்றும் அங்கு இல்லை. தஞ்சை மாநகரைச் சோழ மன்னர்கள் தலை நகராகக் கொள்வதற்கு முன்னே வல்லம் என்னும் கோட்டை, கள்ளரில் ஒரு வகுப்பாருடைய தலை நகரமாகச் சிறந்திருந்தது என்று தமிழகம் ஊரும் பேரும் - ரா. பி சேதுப்பிள்ளை - 1946 ஆம் ஆண்டு தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார்.
வல்லத்தரசு
வல்லத்தில் அரசு புரிந்த குடியினர் வல்லத்தரசு என்னும் பட்டம் பெற்றனர். வல்லம் சீரிழந்த பின்னர் வல்லத்தரசுகள் கள்ளர் முதுகுடியில் கலந்துவிட்டார்கள். வல்லக்கோன் என்று அழைக்கப்பட்டவன் வல்லத்து அரசனாகிய சுவரன் மாறன்.
முத்தரையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் பட்டுக்கோட்டை வட்டம் ஆம்பலாபட்டிலும், பக்கத்து ஊர் கரம்பயத்திலும், பூதலூர் வீரமரசன்பேட்டை (தஞ்சை) உள்ளனர்.
கள்ளரில் முத்தரையன் பட்டம் தவிர
செம்பியமுத்தரையன், மானமுத்தரையன், வங்காரமுத்தரையன்,
தஞ்சரையர்,
செம்பிய முத்தரசு
செம்பியத்தரசு
வல்லத்தரசு (வல்லக்கோன்),
தஞ்சரையர் (தன்சைக்கோன்)
என்ற பட்டம் உள்ள கள்ளர் மரபினர் உள்ளனர்.
செம்பிய முத்தரசு
செம்பியத்தரசு
புரட்சியாளர் க.முத்துசாமி வல்லத்தரசு அவர்கள் கொப்பம்பட்டி வடமலைநாட்டை சேர்ந்தவர்.
கூடலூர் மிராசுதார் து. முத்துக்குமாரசாமித் தஞ்சைராயர் அவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கம் வளர்ச்சிக்கு துணைநின்றவர்.
கள்வர் கள்வன் - விளக்கம்
கள்வர் கள்வன் என்பது கள்ளர்களை வென்றவன் என்றும், களப்பிரர்களை வென்றவன் என்றும், பொருள் கூறுவது, சிலரின் அறியாமையை காட்டுகிறது. ராஜராஜன் என்றால் மன்னர்களுக்கு மன்னர் என்று பொருள், புறநானூறு பாடலில் அறவர் அறவன், மறவர் மறவன், மள்ளர் மள்ளன் என்பதற்கு விளக்கமாக அறவோர்க்கு அறவோன்; மறவருள் சிறந்த மறவன்; மள்ளருள் சிறந்த மள்ளன்; பழம்பெருமை வாய்ந்த தொல் குடியிற் பிறந்தவன் என்று புலியூர்க் கேசிகன் விளக்கம் தருகிறார். அதை போல் கள்வர்களில் சிறந்தவன் என்று இதற்கு பொருளே தவிர வேறு பொருள் இல்லை.
கிபி 8-9 நூற்றாண்டுகளில் முத்தரையர்கள் வெளியிட்ட கல்வெட்டுகள் அவர்களின் வீரத்தையும் கொடைத்திறனையும் பாராட்டுகின்றன. செந்தலையில் கிடைத்த கல்வெட்டுகள் அவர்களின் வரலாற்றை புலவர் பாடியதை நமக்கு எடுத்துரைக்கின்றன. இங்கு கிடைத்த 3 கல்வெட்டுகள் முத்தரைய மன்னர்களை கள்வர் கள்வன் என குறித்துள்ளது.
இந்த கல்வெட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ள இந்திய தொல்லியல் துறை 1915-1916 காலகட்டத்தில் Epigraphica indica vol 13 ஐ வெளியிட்டுள்ளது. அதில் முத்தரைய மன்னர்கள் தங்களை கள்வர் கள்வன் என குறித்துள்ளனர். இதன்படி முத்தரைய மன்னர்கள் கள்ளர் மரபினர் என அரசாங்கமே அறிவித்துள்ளது.
8 ஆம் நூற்றாண்டில் கிடைத்த புதுக்கோட்டை கல்வெட்டில் (IPS 236) ல் கள்வர் கள்வன் பெரும்பிடுகு சுவரன் மாறன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டை வெளியிட்ட தமிழக அரசு கள்வர் கள்வன் என்பது கள்ளர் மரபின் தலைவனான முத்தரயைரை குறிக்கிறது என அறிவித்துள்ளது.
கிபி 893 ல் ஆதித்த சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட கல்வெட்டில், மார்பிடுகு திருக்கோஷ்டியூர் கள்வனான அமரக்காலன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டை ஆராயந்த தொல்லியல் துறை இது முத்தரைய மன்னர் வம்சத்தவர் என்றும் கள்வர் இனத்தவர் என்றும் அறிவித்துள்ளது.
மேலே கூறப்பட்ட கல்வெட்டுகளை ஆதாரமாக கொண்டு முத்தரைய மரபினர் கள்ளர் இனத்தவர் என அறிவித்த வரலாற்று நூல்கள் :-
Studies in south indian jainism, Ramasamy ayyangar (1922), சென்னை பல்கலைக்கழகம்
History of pallavas of kanchi(1928), சென்னை பல்கலைக்கழக வரலாற்றுத்துறை
ஆழ்வார்கள் காலநிலை (1928), மு இராகவயங்கார், தமிழ் கல்விச்சங்கம் வெளியீடு
Ancient india, south indian history and culture , Oriental book agency 1941
பல்லவர் வரலாறு (1944), ம. ராசமாணிக்கனார், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம்
பாண்டியர் வரலாறு, ராஜசேகர தங்கமணி (விகடன் வெளியீடு)
முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு , அ சவரிமுத்து
விடியலை நோக்கி களப்பிரர் வரலாறு, அ சவரிமுத்து
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
Central Archaelogical library
தஞ்சை மன்னரும் சரஸ்வதி நூலகம்
9 ஆம் நூற்றாண்டோடு ஆட்சியை இழந்த முத்தரையர் தங்களது அடையாளத்தை இழந்து கரைந்து போயினர். பிற்காலத்தில் முத்தரையர் பட்டம் பல அரையர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இருந்துள்ளது.
இதற்கு ஒர் எடுத்துக்காட்டாக கிபி 1338 ஆம் ஆண்டை சேர்ந்த பெரம்பலூர் கல்வெட்டில், பள்ளி விக்ரம சோழமுத்தரையன், மரகத சோழ முத்தரையன், முடிகொண்ட சோழ முத்தரையர் என மன்னர்களால் அளிக்கப்பட்ட முத்தரையர் பட்டங்களை கொண்டிருந்துள்ளனர்.
இதைப்போலவே வட தமிழக பகுதிகளை ஆட்சி செய்த காடவராயர்கள் கூட தங்களது பெயரோடு முத்தரையர் பட்டத்தை இணைத்துள்ளனர். இதனால் பல்லவ மரிபினரான காடவர்கள் முத்தரய மரபினர்கள் ஆகமுடியாது.
கிபி 18 ஆம் நூற்றாண்டு ஒலை ஆவணங்களில் நாயக்கர் சமூகத்தினரும் கூட முத்தரையர் பட்டத்தை உபயோகப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தரையர் பட்டம் பல தரப்பினராலும் சூட்டப்பட்டு வந்துள்ளதால் ஏற்பட்ட குளறுபடிகளை பயன்படுத்தி சில வரலாற்று திரிபுகள் ஏற்பட்டுள்ளது. உண்மையான வரலாற்றை நீண்ட நாள் மறைக்க இயலாது. வன்னியர், முத்தரையர், அம்பலகாரர், தேவர் என்பது பட்டமே. இவற்றை சாதியாக குறிப்பிடமுடியாது.
வலையர்களுக்கு இருக்கும் முத்தரையர் பட்டம் தொன்று தொட்டதல்ல, அதுவும் அவர்களுக்கான பிற்கால பட்டமே.
வலையர், முத்திரியர் , நாயுடு என்ற 29 சாதிகளை முத்தரையர் என்று 1996 ஆம் ஆண்டு அரசு ஆணை வழங்கியதாக குறிப்பிடுகிறார்கள்.
மூன்று வேந்தர்களை வென்றவர் அதனால் முத்தரையர் என்றனர் சிலர், இல்லை முத்து+அரையர் என்றனர் சிலர் ஆனால் முத்தரையர் (senior lineage) என்றால் மூத்தோர் மூத்த +அரையர் என்பதே சரியான விளக்கமாக அமைகிறது.
முத்தரையரின் குலம் சிலர் கங்கர்கள் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். பல்லவர்கள் என்கின்றனர் சில ஆய்வாளர்கள்.
யானை (களபம்) சின்னம் கங்கர்களின் சின்னம் களப சின்னத்தை முத்தரையர் பயன்படுத்தி உள்ளனர்.
முத்தரைய மன்னர்கள் கள்வர் கோமான் புல்லியின் வழிவந்தவர்கள்... தற்கால மழவராயர்கள் அனைவரும் கள்வர் குடியினரே......
நன்றி:- சென்னை பல்கலைக்கழகம் வரலாற்றுத் துறை ( அரசு ஆவணம்)
முத்தரைய அரசர் பரம்பரையில் பேர் பெற்ற சில அரசர் இருந்தார்கள். அவர்களுடைய சாசனங்கள் சில செந்தலை, நாரதத்தமலை, திருமய்யம், குன்னாண்டார் கோயில் முதலிய இடங்களில் கிடைத்துள்ளன. இங்கு எல்லாம் இப்பொழுதும் கள்ளர் குடியினர் கீழ் உள்ளது.
திருமெய்யம் பகுதியில் பூவனைக்குடியில் பூதி களறி அமருன்றி என்னும் முத் தரையன் குடைவித்த புஷ்பவனேசுவரர் கோயிலுண்டு . பூனையர் என்ற பட்டப் பெயர் மேலும் சான்றாக அமையும். பூவனைக்குடி கள்ளர்களின் பட்டமாகிய பூவனையரையர் என்ற பட்டம் இன்று பூனையர் என்று திரிந்து வழங்குகிறது.
கள்வர் குல பெரும்பிடுகு முத்தரையர் என உரக்க உரைத்த தமிழ் அறிஞர் ' மு இராகவயங்கார்"
முத்தரையர் மன்னர்கள்
1) தனஞ்சய முத்தரையர்
2) பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (கி.பி.655-கி.பி.680)
3) இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேஷ்வரன் (கி.பி.680-கி.பி.705)
4) பெரும்பிடுகு முத்தரையர் II என்கிற சுவரன் மாறன் (கி.பி.705-கி.பி.745)
இக்கல்வெட்டானது இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறனின் பட்டமான "கள்வர் கள்வன்", "சத்ருகேஸரி", "வாள்வரிவெங்கை" போன்ற பட்டத்தினை தாங்கியுள்ளது
5) விடேல்விடுகு சாத்தன் மாறன் (கி.பி.745-கி.பி.770)
6) மார்பிடுகு என்கிற பேரடியரையன் (கி.பி.770-கி.பி.791)
7) விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (கி.பி.791-கி.பி.826)
8) சாந்தன் பழியிலி (கி.பி.826-கி.பி.851)
சாத்தம் பழியிலியின் சாசன எழுத்து.
விஜயாலய சோழீஸ்வரம் கோவில், மற்றும் குடைவரைக் கோவில்கள் நார்த்தாமலை பகுதியில் உள்ளது. இது விசெங்கி நாட்டுக் கள்ளர்கள் வாழும் பகுதி. அக்கல் ராஜா’ என்ற விஜயநகரத்தைச் சேர்ந்தவன் விசெங்கி நாட்டுக் கள்ளர்களை வெற்றி பெற்று நார்த்தாமலை கோட்டையில் தங்கினானான். அப்பகுதியில் இருந்த பல்லவராயர் இளவரசியான 'அக்கச்சி' என்பவர் கச்சிரன் பட்டம் உடைய கள்ள வீரரிடம் 'அக்கல் ராஜாவின்' தலையைக் கொய்து வருமாறு பணித்துள்ளார்.
சோழீஸ்வரம் கோயிலின் வெளிப்புறச் சுவரில் காணப்படும் கல்வெட்டு மூலம் இக்கோயில் சாத்தன் பூதி என்பவரால் கட்டப்பட்டதாகவும், மழையினால் இது இடிந்துவிடவே, மல்லம் விதுமன் என்கிற தென்னவன் தமிழதிரையன் என்பவனால் இதை விஜயாலய சோழன் காலத்தில் புதுப்பித்தார் என்றும் அறியப்படுகிறது. விஜயாலயன் காலம் முதல் இக்கோயில் விஜயாலய சோழீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. தமிழுதரையர், மீனவராயர் என்ற பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் வாழ்கின்றனர்.
குடுமியான் மலை கோயில் கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது. முதல் விஜய ரகுநாத ராய தொண்டைமானுடைய முடிசூட்டு விழா குடுமியான் மலை ஆலயத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை மன்னர்களுடைய விழாக்கள் அனைத்தும் அந்த ஆலயப் பிரகாரத்தில் அமைந்துள்ள அறுகோண வடிவில் அமைந்த ஒரு பெரிய பாறையைத் தளமாகக் கொண்ட மண்டபத்தில் நடத்துவதுதான் வழக்கம். அதன்படி இவருடைய முடிசூட்டு விழா குடுமியான் மலையில் கோலாகலமாக நடைபெற்றது.
கிபி1915ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை தலைவர்களான Dr.Sten Konow and Dr.Thomos அவர்களால் வரையறுக்கப்பட்டு வெளிவந்த Epigraphhia India என்கிற புத்தகத்தில் கள்ளர் பெருமக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று குறிக்கிறார்கள்.