ஷாஜி போன்ஸ்லே பீஜப்பூர் சுல்தானிடம் படைத்தலைவராகப் பணியாற்றினார். ஷாஜி போன்ஸ்லேவுக்கு இரு மனைவியர். முதல் மனைவி துர்க்காபாய்க்கு கி.பி.1630இல் ஏகோஜி பிறந்தார். இரண்டாம் மனைவி ஜிஜாபாய்க்கு கி.பி. 1629இல் சத்திரபதி சிவாஜி பிறந்தார்.
ஏகோஜி கி.பி.1676 இல் தஞ்சையைக் கைப்பற்றி அங்கு முதன்முதலில் மராட்டியர் ஆட்சியை நிறுவினார். ஏகோஜியின் ஆட்சியில் தஞ்சை நாடு பல நிருவாகப் பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. தஞ்சை கள்ளர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். சண்டை சச்சரவு சம்பவிக்காமல் இருக்கும்படி தஞ்சை கள்ளர் பாளையக்காரர்கள் நியமிக்கப்பட்டனர். காவல் காக்கும் பொறுப்பையும், இறை (வரி) வசூலிக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தனர்.
மராட்டிய மன்னர் சிவாஜி அவர்கள், 1676ன் இறுதியில், 50,000 (30,000 குதிரைப்படை & 20,000 காலாட்படை) துருப்புகளைக் கொண்ட ஒரு மாபெரும் படையுடன் தென்னகத்தின் நோக்கி படையெடுக்கும் போது பீஜப்பூர் சுல்தானின் ஆதிக்கத்தில் இருந்த செஞ்சிக்கோட்டையையும், வேலூர்க் கோட்டையையும் கைப்பற்றினார். பின்பு கடலூருக்கு 20கி.மீ. தொலைவில் உள்ள திருவதிகை என்னும் ஊரில் இருந்து அரசாண்டு வந்த ஷெர்கான் லோடி என்பவனைத் தோற்கடித்தார். பின்பு அரியலூருக்கு அருகில் எதிரிகளை தாக்க முகாமிட்டுரிந்தார்.
அப்போது அவரது முகாமில் உள்ள கிட்டத்தட்ட 500 குதிரைகள் காணாமல் போய்விடுகிறது.
யார் இதை செய்கிறார்கள் என்பதை முகாமில் உள்ள இருவர் எதார்த்தமாக குதிரைகள் அடைத்திருந்த இடத்தில் ஒரு நண்பகல் பொழுதில் பார்வையிடும் போது, ஒரு நபர் மிகவும் முகாமிற்குள் நுழைந்து ஒரு சிறந்த குதிரையை தேர்ந்தெடுத்து அதன் காலில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை திடீரென அறுத்துவிட்டு, தன்னுடைய கையில் உள்ள தடியை குதிரையின் கடிவாளத்தில் வைத்து உடனே அதனுடைய பின்புறத்தில் ஏறி அதனை முகாமை விட்டு மின்னல் வேகத்தில் செலுத்துகிறார்.
இதனை பார்த்தவர்கள் முன்னெச்சரிக்கை எடுப்பதற்கு முன்பே மின்னல் வேகத்தில் காட்டிற்குள் மறைந்துவிடுகிறார். இந்த 500 குதிரைகளையும் கவர்ந்தவர்கள் வேறு யாரும் இல்லை அரியலூர் கள்ளர்கள் தான். குதிரையை கடிவாளம் இல்லாமல் கள்ளர்கள் இயக்குவதில் வல்லவர்கள் என்று 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிருத்துவ பாதிரியார் அளித்த குறிப்பும் இங்கு கவனத்தில் வருகிறது.
ஏகோஜி பெரும்படை ஒன்றைத் திரட்டிச் சென்று, கொள்ளிடத்தின் வடக்கே வாலிகொண்டாபுரம் என்னும் இடத்தில் இருந்த தனது சகோதரன் சிவாஜியின் படைகளைத் தாக்கிப் போர் புரிந்தார். தொடக்கத்தில் ஏகோஜி வென்றார். எனினும் இறுதியில் சிவாஜியின் படை ஏகோஜியின் படையைத் தோற்கடித்தது. பின்பு சிவாஜி, தான் தஞ்சையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வெற்றி கொண்டதாகவும், அவற்றை மனப்பூர்வமாக ஏகோஜிக்குக் கொடுப்பதாகவும் கூறினார். கி.பி.1680இல் சிவாஜி இறந்தார். அதன்பின்பு ஏகோஜி யாருடைய தலையீடும் இல்லாமல் சுயேச்சையாகச் செயல்பட்டுக் கி.பி.1684 வரை தஞ்சையைத் ஆட்சி செய்து வந்தார்.
மராட்டிய அரசர் துளஜா அவர்களுக்கும் - சுவாட்சு பாதிரியாருக்கும் நட்பு ஏற்பட்டு சிறுவன் இரண்டாம் சரபோஜி அவர்களின் உயிரை அமர்சிங்கிடம் இருந்து காப்பாற்றும் பொறுப்பை துளஜாவின் நண்பர் சுவாட்சு ஏற்று இரண்டாம் சரபோஜியின் உயிரை பாதுகாக்க அவர் கண்ணந்தங்குடியை தேர்ந்தெடுத்து ஏறத்தாழ 1788-1789 ஆம் ஆண்டு தலைமறைவாக வளர்த்து, கல்வி போதித்த இடம் கண்ணந் தங்குடி என்பது ஆவண குறிப்புகளிலும், பல்வேறு வரலாற்று ஆவணங்களிலும் நிரம்பவே உள்ளது.
தஞ்சையில் மராட்டிய மன்னர்களிடம் கண்ணந்தகுடியை சேர்ந்த கள்ளர்கள் காவலாக இருந்துள்ளனர். அந்த கள்ளர்களின் மனைவிகள் மராட்டிய அரசர் மற்றும் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு தாய் பால் கொடுத்து உள்ளனர். பள்ளி கூடம் தஞ்சாவூரில் அமைவதற்கு முன்பே கண்ணந்தங்குடியில் தான் அமைக்கப்பட்டது என்பது விந்தையான செய்தி ஆகும். இங்கு தான் இரண்டாவது பெரிய வேத பாடசாலை (கல்வி - கல்லூரி) ஆண் - பெண் இருவருக்கும் தனி தனியாக அமைக்கப்பட்டு இருந்தது. அவற்றுடன் நேரம் பார்க்க சூரிய கல் நிழற்கடிகாரமும் அமைக்கப்பட்டது. இவை அனைத்தும் சுவாட்சு பாதிரியார் கடலூர் வழியாக தஞ்சாவூரை அடையும் முன்பே இருந்தது. இங்கு அமைந்துள்ள தூய பவுல் ஆலயத்தில் கிருத்தவ மதம் மாறிய பட்டுக்கோட்டை அருகில் உள்ள அணைக்காடு கிராம மக்கள் (அணைக்காடு உறவின்முறை சங்கம்) ஆண்டுதோறும் வந்து வழிபடுகின்றனர்
அரியலூர் பாளையம் ஆங்கிலேயர் குறிப்பில் கள்ளர் என்று பதிவாகி உள்ளது. ஆனால் இன்று அவர்கள் பள்ளி சாதியினராக உள்ளனர்.
நன்றி : திரு. சோழபாண்டியன்