கள்ளர் என்றால் திருடன் திருடன் என்று கத்தினார்கள், ஆனால் தமிழரின் வெட்சி போரின் சிறப்பு பற்றி தொல்காப்பியம் காட்டும் பதினான்கு துறைகள்
- ஆ நிரைகளை கவர எழும் படையின் பேரரவம்
- படைகள் தம்மூரைக் கடக்கையில் ஊரிடத்து நிகழும் நற்சொல்லைக் கேட்டல்
- பக்கத்து உள்ளோர் அறியாதவாறு செல்லுதல்
- பகை ஒற்றர்களின் கருத்து கெடுமாறு தாம் பகைவரை ஒற்றறிதல்
- ஒற்றறிந்த பின் பகைவேந்தனை சூழ்ந்து தாக்குதல்
- போர் முற்றியபின் பகைவர் ஊரை அழித்தல்
- ஊரின் பசுக்கூட்டத்தை கவர்தல்
- பின்பற்றி வந்து தாக்கும் பகைவரை எதிர்த்து போரிடல்
- கவர்ந்த பசுக்கூட்டங்களை அவை நோகாதவாறு ஓட்டி வருதல்
- தம் சுற்றத்தார் கவலையுடன் நிற்கும் இடத்துக்கு (பொதுவாய் ஊரின் வெளிப்பக்கம்) வந்து சேருதல்
- கவர்ந்து வந்த ஆ நிரைகளை தம் ஊரில் கொண்டுவந்து நிறுத்துதல்
- வீரர்கள் அப்பசுக்களை தம்முள் பகிர்ந்து கொளல்
- வெற்றி களிப்பில் மதுவுண்டு ஆடுதல்
- தாம்பெற்ற பசுக்களை பிறருக்கும் கொடையளித்து மகிழ்தல்
இதனால் கள்ளர் என்பதற்கு இறைவன், அரசன், வெட்சி வீரர் , கருமையானவன் என்று அகராதியில் விளக்கம் கண்டவுடன் இப்போது பல பொய் கதைகளை தவறாக எழுதிப் பரப்பி வருகிறார்கள்.
1 ) கள்ளர்களை தீண்டதாகவர்கள் என்று பொய்யாக பரப்புரை செய்து வருகிறார்கள்.
அவர்கள் ஆதாரம் என்ற பேரில் பரப்பிய தகவலை ஆராய்ந்து பார்த்த போது , அதாவது untouchable by Anand என்கிற புத்தகத்தில் J.H.Huton என்கிற ஆய்வாளர் கள்ளர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும் அவர்கள் தங்கம்,வெள்ளி அணியக்கூடாது என்றும், ஆண்கள் முட்டிக்கு கீழ் கீழாடையும்,இடுப்புக்கு மேல் மேலாடையும் அணியக்கூடாது என்றும், பாத்திரங்களில் சமைக்ககூடாது என்றும் J.H.Huton கூறியதாக சொல்கிறார்கள்.
ஆனால் உன்மையாக J.H.Huton அவருடைய புத்தகமான caste in India கூறியது என்னவென்றால் கிபி1931 ஜீன் மாதத்தில் இராமநாத புரத்தில் உள்ள தீண்டதாக ஜாதிகளுக்கு எதிராக கள்ளர் சமூகத்தினர் போடப்பட்ட கட்டளை தான் மேலே போடும் போலி ஆதாரங்கள்.
கீழ் சாதி மக்கள்
1. தங்கம்,வெள்ளி நகைகள் அணியக்கூடாது
2.ஆண்கள் இருப்புக்கு ஆடையும்,முட்டிக்கு கீழ் ஆடையும் அணியக்கூடாது
3.ஆண்கள் சட்டை அணியக்கூடாது
4.ஆண்கள் முடி வெட்டக்கூடாது
5.மண் பானையை தவிர வேறு உலோக பொருட்களை பயன்படுத்த கூடாது.
6.பெண்கள் மேலாடையோ,தாவணியோ,ரவிக்கையோ அணியக்கூடாது
7.சமையலுக்கு எண்னெய் பயன்படுத்த கூடாது.
8.மழை,வெயில் வந்தால் கூட கொடை பிடிக்கக்கூடாது.
இதே போல் வட இந்தியாவில் இராஜபுத்திரர்கள் அங்குள்ள கீழ்சாதி மக்களுடன் அதே காலகட்டத்தில் சண்டையிட்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
Book : caste in India by J.H. Huton
2) மேற்கத்திய கள்ளர்களில் ஒரு கள்ளப்பெண் பத்து, எட்டு அல்லது இரண்டு கணவருக்கு மனைவியாக இருப்பாள் குழந்தைகள் எல்லோருக்கும் உரிமை உடையவர்கள் என்று எட்கர் தர்ஸ்டன் தன்னுடைய தென்னிந்திய குடிகளும் குலங்களும் என்ற நூலில் கூறியுள்ளார்.
இதனை பற்றி ஆய்வோமானால், இந்த நூலை மொழிபெயர்த்த திரு. கந்தையா , அதன் முன்னுரையில் இந்த நூல் எட்கர் தர்ஸ்டன் களஆய்வு செய்யாமல், பிறர் கூறியதைக்கொண்டு தனது நூலை எழுதி உள்ளார்.
மேலும் மேற்கத்திய கள்ளர் என்று குறிப்பிடும் பகுதியாக தமிழகத்தில் கள்ளர்கள் வாழும் பகுதியாக தேனி மாவட்டம் உள்ளது. எட்கர் தர்ஸ்டன், 1909 ஆம் ஆண்டு எழுதிய தென்னிந்திய குடிகளும் குலங்களும் என்ற நூலில் குறிப்பிடும் பழக்கம், அன்றைய நாளில் கள்ளர்களிடம் இருந்திருக்கவில்லை. 1870 ஆம் ஆண்டு வெளிவந்த நூலில் உள்ள குறிப்பு கள்ளர்களை நேரடியாக குறிக்கவில்லை. அன்றைய நாளில் வெளிவந்த எந்த ஆய்வு நூலிலும் இது போல தகவல் இல்லை.
மேலும் பாப்பாபட்டி பத்து பங்காளிகள், ஆரியபட்டி எட்டு பங்காளிகள், மானூத்தூ ஆறு பங்காளிகள் என்ற முறையை கள்ளர்கள் பயன்படுத்துவதை, தமிழ் மொழி சரியாக மொழி பெயர்ப்பு தெரியாமல், இதை புத்தகம் எழுதிய எட்கர் தர்ஸ்டன் பத்து, எட்டு, இரண்டு கணவர்கள் என்று எழுதியுள்ளார்.
உதாரணமாக பாப்பாபட்டி நாட்டின் பாகஸ்த்தர்கள் பத்து பங்காளிகள் ஆவார்கள் இவர்கள்தான் பாப்பாபட்டி பத்து தேவர்கள் எனப்படுகின்றனர். இவர்கள் தாய்வழியில் சீதனமாக பெற்ற சீதனகோயிலான ஒச்சாண்டம்மனையும் ஆச்சி கிழவி ஆண்டாயியையும் குலக்கோயிலாக வணங்குகின்றனர்.
ஆண்டரச்சான் தேவர் மகள் ஆண்டாயி, பகாத்தேவருக்கு
1.ஒச்சாத்தேவர்
2.மோளத்தேவர்
3.சுளி ஒச்சாத்தேவர்
4.கட்டக்காளை தேவர்
5.உடையாத் தேவர்
6.பொட்டுலுபந்தி தேவர்
7.ஆங்கத்தேவர்
8.மதியத்தேவர்
என எட்டு ஆண் பிள்ளைகளும்
கட்ராண்டி தேவர் மகன் வழி ஊரான பூசலப்புரம் பெண்ணிற்கும் கீரித்தேவருக்கும் பிறந்த
9.கீரித்தேவர்
10.கூலத்தேவர்
என்ற இரண்டு ஆண் பிள்ளைகளும் சேர்த்துதான் பாப்பாபட்டி பத்து தேவர் எனப்படுகின்றனர்.
மேலும் மேற்கத்திய உள்ள நீலகிரி மலைப்பகுதி தோடர் பழங்குடி பழக்கம் இது. இது போர்குடியான நாயர் பழக்கமாக இருந்தது. வரலாறில் பாஞ்சாலி ஒரு சான்று.
பலகணவர் மணம் அல்லது "பல்கொழுநம்" (Polyandry) என்பது ஒரு பெண் ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் மணஉறவு கொண்டு வாழ்தல் ஆகும். இம்முறை திபெத், நேபாளம், பூட்டான் போன்ற இமயமலையை ஒட்டிய நாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் பின்பற்றப்பட்டது. இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்திலும் தென்னிந்தியாவில் தோடர் இனத்திலும் இப்பழக்கம் காணப்படுகிறது.
சில சமூகங்களில் ஒரு பெண் ஒருவனை மணந்தால் அவனுக்கு மட்டுமன்றி அவனுடன் பிறந்தோர் அனைவருக்கும் மனைவியாகிறாள். நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தோடர் பழங்குடி மக்களிடையே இம்முறையே நிலவுகிறது.
இலங்கையில் தற்போதும் நடைமுறையில் உள்ள கண்டிச் சிங்களவர் திருமணச் சட்டத்தில் ஒரு பெண் குடும்பத்தில் மூத்தவனை முறைப்படி திருமணம் செய்தாலும் அவள் அவனது சகோதரர் அனைவருக்கும் மனைவியாகிறாள். எனினும் அவ்வாறான சகோதரர் எவர் மூலமேனும் அவளுக்குக் குழந்தை பிறக்குமிடத்து, அக்குழந்தை மூத்தவனுடையதாகவே கருதப்படும். ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் அக்குடும்பத்திலேயே தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் நோக்கில் இது நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் கள்ளர்களுக்கு இந்த பழக்கமுறை இல்லை. கள்ளர்கள் தங்கள் சகோதர்கள் முறை உடையவர்கள் யார் என்று அறிய, மாமன் மைத்துனன் முறை அறிய, ஒவ்வொரு பகுதி கள்ளர்களும் தெளிவாக பட்டம் (சோழமண்டலம்), கரை ( சிவங்ககை), கோவில் முறை, கூட்டம் ( பாண்டியமண்டலம் ) என்று பிரித்துள்ளனர். இப்படி பல நூறுஆண்டுகளாக தங்கள் வழிவியல் முறையை வகுத்து வாழும் கள்ளர்களிடம் இப்படி ஒரு பழக்கம் உள்ளதாக எட்கர் தர்ஸ்டன் கூறியது, எந்த ஒரு அடிப்படை ஆதாரம் இல்லாதது மற்றும் வேதனைக்குரியது.
3) 1933-ல் கள்ளர் மறவர் உட்பட 170 -க்கும் மேற்பட்ட சாதிகள் அன்றைய சென்னை மாகாணத்தில் Schedule Caste ஆக இருந்தார்கள். பின்பு தான் BC MBC யாக மாற்றப்பட்டார்கள் என்று ஒரு பொய்யை பரப்பி வருகிறார்கள்.
தலித் சமூகத்தை சேர்ந்த தமிழவேள் என்ற நபர் "தமிழர் பெருளெி" பக்கம் 41, ஏப்ரல் மே ஜூன் 2017 நூலில் எழுதிய கதையை சில போலி தமிழ்
தேசியவாதிகள் மற்றும் போலி முகநூல் இப்பதிவை ஆராயாமல் தவறான நோக்கத்தில், போலியான வரலாறு பேசுகிறார்கள்.
G.O.No.794 Public (Services) 15Th SEPTEMBER 1933 என்று டைப் செய்யப்பட்ட ஒரு ஆவணத்தை ஆதாரமாக மேற்கோள்கள் காட்டித் தான் 170 -க்கும் மேற்பட்ட குடிகள் "Schedule Caste" ஆக இருந்தனர் என்று கூறுகிறார்.
அந்த ஆவணத்தில் G.O என்று எழுதப்பட்டதற்குக் கீழே Scheduled Classes" என்று தான் உள்ளதே தவிர, "Schedule Caste" என்று எழுதப்பட வில்லை.
அந்த 170-க்கும் மேற்பட்ட சாதிகளை 'Schedule caste' என அறிவித்து பிரிட்டிஷ் அரசு G.O எதுவும் வெளியிட்டதே இல்லை.
Scheduled Classes" என்பதற்குக் கீழே Others என்றும்
அதற்கும் கீழே Name and Districts என எழுதப்பட்டுள்ளது.
Scheduled Classes" என்றால் அட்டவணை வர்க்கத்தினர்/ வகுப்பினர் என்று பொருள்.
"Schedule Castes" என்றால்
அட்டவணை சாதி என்றும் பொருள்.
இரண்டும் வேறு, வேறு பொருளில் பயன்படுத்தப்படும்.
1933 ல் "Schedule Caste" என்ற ஒரு சாதி வகைப்பிரிவோ Nomenclature -ரோ ஏற்படவில்லை.
அதற்கு முன்பு குறிப்பிட்ட சமூக மக்கள் "Depressed classes ", பஞ்சமர், அவர்னாஸ் (நான்கு வர்ணத்தில் சேராதவர்கள), தீண்டத்தகாதவர்கள் (Untouchables) என அழைக்கப்பட்டனர்.
காந்தியடிகள் ஹரிஜன் என அழைத்தார், (கடவுளின் குழந்தை) அதற்கு அண்ணல் அம்பேத்கர் மாற்றுக் கருத்து தெரிவித்தார், அவ்வாறு அழைப்பதை அண்னல் அம்பேத்கர் விரும்ப வில்லை.
மேலும் போலி நகழுடன் 1933யில் குறிப்பிட்டது போல் ஒரு G.O இருந்ததாகவோ அதில் முக்குலத்தோரை தாழ்ந்த குடிகளாக குறிப்பிட்டதாகவோ தகவல் இல்லை ஏன் என்றால் 1930-1935ஆம் ஆண்டு வரை Depressed classes அதன் பிரிவு தான் இருந்து, Schedule classes என்ற ஒரு பிரிவு எங்கும் குறிப்பிட்டதாக தகவல் இல்லை.
The_Depressed_classes_1931_1937
1931-35 ஆம் ஆண்டு வரை Schedule classes என்று பிரிவோ மற்றும் G.O. of public services schedule class என்ற சட்டமோ இருந்ததாக தகவல் இல்லை ஏன் என்றால் அப்போது தாழ்த்தப்பட்ட குடிகளாள சொல்லப்பட்ட சமுகத்தை Depressed classes என்று வரையரை படுத்தி அந்த Depressed classயை 1931-37 வரை மூன்றாக பிறித்து
1-Exterior caste
2-Harijanas
3-schedule caste(1936) என்று வகைபடுத்தப்பட்டதாக குறிப்பிடபட்டுள்ளது.
முதன்முதலில் 1936 ஏப்ரல் 30-ஆம் நாள், இன்றைய பிரிட்டிஷ் அரசின் 1935 ஆம் ஆண்டைய Govt of India சட்டத்தின் அட்டவனைகள் 1, 5, & 6 -ன விதிகளைப் பயன்படுத்தி
குறிப்பிட்ட வகைப் பிரிவினரை Scheduled Cast என அறிவித்து, பாராளுமன்றத்தில் வரைவு தாக்கல் செய்யப்பட்டு, பிரிட்டிஷ் மன்னரால் உத்தரவிடப்பட்டது.
அந்த உத்தரவு "The Government of India (Scheduled Castes) Order, 1936" என அழைக்கப்படுகிறது.
இந்த உத்தரவில் Schedule -I, Part I -ல் Madras Presidency- ல் Schedule Cast ஆக அறிவிக்கப்பட்ட 74 சாதிகளின் பெயர் இடம் பெற்றுள்ளன. அதில் இவர் சொல்வது போல் கள்ளர் மறவர், அகமுடையர், படையாட்சி என்ற சமூகங்களின் பெயர் இல்லை.
அதே போல் வட இந்தியா, பஞ்சாப், அஸ்ஸாம், பிகார், வங்காளம், ஒரிசா அனைத்துப் பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட சமூக மக்களை 9 அட்டவணை மூலம் ' Scheduled Castes' என அறிவிக்கப்பட்டது.
(Order enclosed).
அம்பேத்கார் தலித் (உருது வார்த்தை விளிம்பு நிலை மக்கள்) என அழைத்தார்.
மேலும் 'Protestant Hindus' 'Non conformist Hindus' என அழைக்கலாம் என்றும் கூறினார்.
1949-ல் அரசியலமைப்பு அவை 'Scheduled Casts' என்பதையே ஏற்றுக் கொண்டது.
As per Government of India 1935, list of schedule castes:-
1. ஆதி ஆந்திரா
2. ஆதி திராவிடா
3. ஆதி கர்நாடாகா
4. அஜிலா
5. அருந்ததியர்
6. பைரா
7. பகுடா
8. பண்டி
9. பரிகி
10. பட்டடா
11. பவுரி
12. பெல்லரா
13. சசாதி
14. சக்கிலியன்
15. சளுவாடி
16. சேமர்
17. சண்டாலா
18. சேருமான்
19. தந்தாசி
20. தேவேந்திர குலத்தான்
21. சேசி
22. காதகலி
23. காதாரி
24. காட்டா
25. பயகரி
26. கசங்கி
27. ஹட்டி
28. ஹசலா
29. ஹோலியா
30. ஜக்கலி
31. ஜம்புவலு
32. கல்லடி
33. கணக்கன்
34. கொடலோ
35. கூசா
36. குடும்பன்
37. குறவன்
38. மாதாரி
39. மடிகா
40. மய்லா
41, மலா
42. மலா தாஸா
43. மதங்கி
44. மொஹெர்
45. முச்சி
46. முண்டாலா
47. நலகியாவா
48. நாயாடி
49. பகடை
50. மயிலா
51. பைதி
52. பைண்டா
53. பகி
54. பள்ளன்
55. பம்படா
56. பாமிதி
57. பஞ்சமா
58. பணியன்
59. பறையன்
60. பரவன்
61. புலையன்
62. புதிரை வண்ணான்
63. இராணியர்
64. ரெல்லி
65. சமகரா
66. சபரி
67. செம்மான்
68. தோட்டி
69. திருவள்ளுவர்
70. வள்ளுவன்
72. வால்மிகி
73. வேட்டுவன்
74. பண்ணியாண்டி
இதில் தேவேந்திர குலத்தான், கணக்கன், குடும்பன், குறவன், பள்ளன், பறையன், புலையன், புதிரை வண்ணான், வள்ளுவன், திருவள்ளுவர், வேட்டுவன், பரவன் உட்பட 12 தமிழ் சாதிகள் மட்டுமே தமிழகத்தில் பட்டியல் இனமாக 1936ல் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்பு மொழிவாரி மாநிலம் பிரிக்கும் சமயத்தில், மாநிலங்களில் மொழி வாரி மக்களை பிரிக்கும் போது அதில் உள்ள பட்டியல் இனத்தவர்களை சரிசெய்து அதில் சில சாதிகளை சேர்த்து 1956 திருத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர் சட்டத்தின் மூலமாக வெளியிடப்பட்டது.
As per 1956 Schedule caste amendment act list:-
1. ஆதி ஆந்திரா
2. ஆதி திராவிடா
3. ஆதி கர்நாடாகா
4. அஜிலா
5. அருந்ததியர்
6. பைரா
7. பகுடா
8. பண்டி
9. பெல்லாரா
10. சக்கிலியன்
11. சலவாடி
12. சேமர் (அ) முச்சி
13. சண்டாலா
14. சேருமான்
15. தேவேந்திர குலத்தான்
16. டொம், டொம்பரா,பைதி (அ) பனோ
17. கதகலி
18. காட்டா
19. கசங்கி
20. ஹோலியா
21. ஜக்கிலி
22. ஜம்புவலு
23. கடையன்
24. கல்லடி
25. கரிம்பலன்
26. கூசா
27. குடும்பன்
28. குறவன்
29. மாதாரி
30. மடிகா
31. மயிலா
32. மலா
33. மாவிலன்
34. மொகிர்
35. நலகியவா
36. நாயாடி
37. முண்டலா
38. பகடை
39. பள்ளன்
40. பாம்படா
41. பஞ்சமா
42. பண்ணியாண்டி
43. பறையன்
44. புதிரை வண்ணான்
45. இராணியார்
46. சமகரா
47. செம்பான்
48. தோட்டி
49. திருவள்ளுவர்
50. வள்ளுவர்
51. சபரி
52. சம்பான்
கோவை மற்றும் சேலத்தில் வாழும்:-
53. பண்ணாடி
54. வாதிரியான்
மலபார் அதாவது தமிழக- கேரள எல்லையில் வாழும்:-
55. கவரா
56. மலையன்
57. பாணன்
58. புலைய வேட்டுவன்
தமிழக- கேரள எல்லையான நீலகிரி:-
59. கணக்கன் (அ) படமா
தமிழக - கர்னாடகா எல்லை மாவட்டங்களில் வாழும்:-
60. பதடா
61. ஹஸ்லா
62. நல்காடியா
63. பரவன்
தஞ்சாவூரில் மட்டும் வாழும்:-
64. கோலியன்
65. வேட்டையன்
என 65 தென்னிந்திய சாதிகளில் ஏற்கனவே இருந்த 12சாதிகளோடு புதிதாக சேலம் மற்றும் கோவையில் வாழும் பண்ணாடி,வாதிரியானும் கன்னியாகுமரியில் வாழும் பாணன்,கடையன் தஞ்சையில் வாழும் வேட்டையன் மற்றும் கடையப் உட்பட மொத்தம் 18சாதிகள் பட்டியல் இனத்தில் கொண்டு வரப்பட்டனர்.
மீண்டும் 1976ல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து மீண்டும் பட்டியலில் தமிழகத்தில் சில சாதிகளை உள்ளே கொண்டு வரப்பட்டனர்.
1. ஆதி ஆந்திரா
2. ஆதி திராவிடா
3. ஆதி கர்நாடாகா
4. அஜிலா
5. அருந்ததியர்
6. பைரா
7. பகுடா
8. பண்டி
9. பெல்லாரா
10. சக்கிலியன்
11. சலவாடி
12. சேமர் (அ) முச்சி
13. சண்டாலா
14. சேருமான்
15. தேவேந்திர குலத்தான்
16. டொம், டொம்பரா,பைதி (அ) பனோ
17. கதகலி
18. காட்டா
19. கசங்கி
20. ஹோலியா
21. ஜக்கிலி
22. ஜம்புவலு
23. கடையன்
24. கல்லடி
25. கரிம்பலன்
26. கூசா
27. குடும்பன்
28. குறவன் சித்தனார்
29. மாதாரி
30. மடிகா
31. மயிலா
32. மலா
33. மாவிலன்
34. மொகிர்
35. நலகியவா
36. நாயாடி
37. முண்டலா
38. பகடை
39. பள்ளன்
40. பாம்படா
41. பஞ்சமா
42. பண்ணியாண்டி
43. பறையன்,பறையர்,சாம்பவார்
44. புதிரை வண்ணான்
45. இராணியார்
46. சமகரா
47. செம்பான்
48. தோட்டி
49. திருவள்ளுவர்
50. வள்ளுவர்
51. சபரி
52. மண்ணன்
53. கூத்தன்,கூடன்
54. பள்ளுவன்
55. பரவன் (குமரி,நெல்லை,செங்கோட்டை)
56. பரதர் ( குமரி,நெல்லை,செங்கோட்டை)
57. புலையர்,சேருமார்
58. சாம்பான்
59. செம்மான்
60. தண்டன்
61. வள்ளோன்
62. வண்ணான் ( குமரி,நெல்லை,செங்கோட்டை)
63. வாதிரியான்
64. வேலின்
65. வள்ளுவன்
66. திருவள்ளுவர்
67. வேடன்
68. வேட்டையன்
69. வேட்டுவன் ( குமரி,நெல்லை,செங்கோட்டை)
70. பாணன்
71. பஞ்சமா
72. பண்ணாடி
73. பண்ணியாண்டி
74. பதியன்
75. படணன்
இதில் புதிதாக குமரியைச் சேர்ந்த பரதர், வண்ணான், பாணன், வேட்டுவன், பள்ளுவன் மேலும் சேர்க்கப்பட்டனர்.
பிரமலைக் கள்ளர்களைப் பொறுத்த வரை
1911 குற்றப்பரம்பரைச் சட்டத்தின் படி
1918 -ல் Criminal Tribes = (CT) எனவும்
1943-ல் "Notified Tribes" = (NT)
(சட்டத் திருத்தம் மூலம் Criminal என்ற வார்த்தையை நீக்கி விட்டு Notified என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது)
1952 - ல் "De Notified Tribes" = (DNT)
(கு.ப.சட்டம் திரும்பப் பெறப்பட்டதால் இந்த சாதிகள் மேற்படி சட்டத்திலிருந்து விலக்கப்பட்டு விட்டார்கள் என்பதைக குறிக்க De notified என்று குறிப்பிடப் படுகிறது)
1961-ல் "De Notified Communities" = (DNC)
(Tribes என்ற வார்த்தையை நீக்கி Communities என்று மாற்றப்பட்டது
1989 - முதல் DNC/MBC
பிரமலைக் கள்ளர்களின் கடுமையான போராட்டத்தால் மீண்டும் தற்போது
மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டும் De Notified Tribes என அழைக்கப்படும் என்று Tamil Nadu அரசு அறிவித்துள்ளது.
68 DNT சாதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட பிரமலைக் கள்ளர்களுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மீட்சி அமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Tribes என்பதன் எளிய பொருள் நீண்ட நெடிய பண்பாட்டுக் கூறுகளை, காலம் கடந்தும் மாற்றமில்லாமல் தன்னகத்தே கொண்டுள்ள சமூகம்.
ஆய்வுகள் :
திரு : சோழபாண்டியன்
திரு : சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு : செந்தில்