சனி, 10 நவம்பர், 2018

மக்கள் தொண்டர் "மாணிக்கம் ஏற்றாண்டார்"


மக்கள் தொண்டர் மாணிக்கம் ஏற்றாண்டார் , திருச்சி மாவட்ட ஏற்றாண்டார் பட்டி (நடராசபுரம்) என்னும் சிற்றூரில் உயர் திரு பரிமணம் ஏற்றாண்டார் உண்ணாமலை அம்மாள் என்னும் கள்ளர் குல தம்பதியினற்கு மகனாக 1917ம் வருடம் மாணிகம் பிறந்தார். இவரது பெற்றோர் மிகுந்த வளமிக்க விவசாய குடும்பதை சார்ந்தவர்கள், ஏற்றாண்டார் என்றால்  சிறப்பு உடையோர் என்பதற்கு ஏற்ப,  இக்குடும்பம்  கிராமத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் கொண்ட பாரம்பரிய குடுபமாகும்.

தனது பள்ளிப்படிப்பை ஈ.ஆர் உயர் நிலை பள்ளியில் துவங்கிய இவருக்கு இவருடன் படித்த சக பிராமண மாணவர்களின் நய்யாண்டி செயல்கள் ஆரம்ப முதலே பிடிக்கவில்லை. நீ இவ்வளவு பணக்காரனாய் இருந்துகொண்டு ஏன் இங்கு படிக்க வரவேண்டும் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பாத மாணிக்கம் இப்பள்ளியை விட்டு நீங்கி லால்குடியில் இருந்த அரசு மேல் நிலை பள்ளியில் சேர்ந்து தனது கல்வியை தொடர்ந்தார். இங்கு இவருடன் கல்வி பயின்ற சக மாணவருள் அன்பில் தருமலிங்கமும் ஒருவர். வருமையில் வாழும் பிறருக்கு உதவி செய்வதில் அன்பில் தர்மலிங்கமும் அதிக ஆக்கமும் ஊக்கமும் உடையவர்.

வறுமையில் வாழும் பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்ட இருவரும் ஒன்று சேர்ந்து வசதி இன்றி சிரமப்படும் மணவர்களுக்கு உணவு வழங்கும் செயல்களில் ஈடுபட்டனர். பின்நாட்களில் இருவருமினைந்து வசதியின்றி தவிக்கும் கள்ளர்  குடியின்  மாணவர்கள் தங்கிப்படிக்கும் கள்ளர் மாணவர் விடுதி ஒன்றினை லால்குடியில் ஆரம்பித்தனர். இக்கள்ளர்  குடியின் விடுதியே பின்நாளில் மிகவும் பிரசித்த பெற்ற விடுதியாக லால்குடியில் விளங்கியது. இவ்விடுதியில்தான் ராஜ ராஜன் பண்பாட்டுக்கழக அமைப்பாளர் திரு. சந்திரகாசன் ஐ.ஏ.ஏஸ் தங்கிப்படித்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

இவ்வாறு மாணவர்களின் பணிகளை செய்து வந்த மாணிக்கம் ஏற்றாண்டார் ஆரம்பப் பள்ளியை நிறுவி ஏழை மாணவர்களுக்கு உதவினார். இந்திய விடுதலைக்கு முன்னர் கல்வி பயில வசதியற்ற மாணவர்களின் நிலை உணர்ந்து 1945ம் ஆண்டு திருவரும்பூரில் தனது உறவினர், நண்பர்கள், தன்னை அறிந்தவர்கள் மூலம் நிதி திரட்டி முக்குலத்தோர் பள்ளி என்று ஒரு கல்வி நிறுவணத்தையும் ஆரம்பித்தார். இப்பள்ளிக்கு நடிகர் திலகம் திரு சிவாஜிகணேசன் மன்றாயரும் நிதி அளித்தமை குறிப்படத்தக்கது. இக்கால கட்டங்களில் மாணிக்கம் ஏற்றாண்டார் உரிமை முரசு என்னும் வார பத்திரிக்கை ஒன்றையும் துவக்கி நிறுவனராகவும், ஆசிரியராகவும் செயல்பட்டார். இத்துடன் முக்குலத்தோர் சங்கத்தையும் ஏற்படுத்தி அதன் பொதுச்செயளராகவும் பணிபுரிந்தார்.

உரிமை முரசு ஓங்கி வளர்ந்த நிலையில் பள்ளியில் படிக்க வசதியின்றி படிக்கமுடியாமலும் உணவின்றி தவிக்கும் தாய், தந்தை இல்லாத குழ்ந்தைகளின் நிலைகண்டு வருந்தி இவர்களுக்கு உதவிடும் நோக்குடன் தமிழ் நாடு மாணவர் இல்லத்தினை திருச்சி கைலாசபுரத்தில் தோற்றுவித்து இலவச கல்வியையும், உணவினையும் ஏழை எளிய மணவர்களுக்கு அளித்து மாணவ சமுதாய வளர்ச்சிக்கு வித்திட்டார்.


பசும்பொன்முத்துராமலிங்க தேவர் ஆசியுடன், மூக்கையாதேவர், ஆண்டியப்பத்தேவர் முதலானோருடன் சேர்ந்து முக்குலத்தோர் சங்கத்தினையும் நிறுவி பொது செயளாளர் பதவியையும் ஏற்றார். மாணிக்கம் ஏற்றாண்டார் அந் நாட்களில் இருந்து வந்த பிராமண சாதி வெறியாளர்களை புறம் தள்ளி பிற்படுத்தபட்டவர்களின் முன்ணேற்றத்திற்கும், தீண்டாமைக்கு எதிராகவும் குரல் எழுப்பி தேசியளவில் விழிப்புணர்சியை ஏற்படுத்தினார். முக்குலத்தோர் சங்கம் இவரின் பணிகளை பாராட்டி முக்குலத்தோர் சங்க பொன் விழாவில் மக்கள் குலவேந்தர் என்ற கௌரவ பட்டத்தையும் வழங்கி இவரை கௌரவித்தது.


இவரின் அயராத உழைப்பிணை உணர்ந்து இவருடன் இணைந்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் புதுக்கோட்டை தியாகராச காடுவெட்டியார், பூண்டி வாண்டையார் ஆவார்கள். இவர்களின் பகளிப்பு பின்நாட்களில் முக்குலத்தோர் முன்னேற்றத்திற்கு ஈடு இனையற்றதாக விளங்கியது. 24 அக்டோபர் மாதம்1987ல் மக்கள் தொண்டர் மாணிக்கம் ஏற்றாண்டார் இயற்கை எய்தினார். இறுதி மூச்சுவரை அயராது உழைத்த இப்பெருமகனாரின் உடல் தமிழ்நாடு மாணவர் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.









வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்