வெள்ளி, 9 நவம்பர், 2018

பொ. ஆ 1769 இல் ஆங்கிலேயருக்கு எதிராக உயிர்விட்ட 5000 கள்ளர்கள் (வெள்ளளூர் )




Alexanders east india and colonial magazine எனும் புத்தகம் கிபி 1835 ல் லண்டனில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில் பக் 220 ல் கேப்டன் ரூம்லே எனும் ஆங்கில தளபதியால் கொல்லப்பட்ட வெள்ளளூர் கள்ளர்களை பற்றிய தகவல் ஒரளவுக்கு விரிவாக உள்ளது.

நவாப் மற்றும் ஆங்கிலேயருக்கு எதிராக திரும்பிய யூசுப்கான் கிபி 1764 ல் கொல்லப்பட்டான். யூசுப்கானின் இறப்பிற்கு பிறகு மதுரை நவாபின் கட்டுப்பாட்டில் வந்தது, அடுத்த 5 ஆண்டுகளில் மற்ற பாளையக்காரர்களை நவாப் அடக்கினான்.

இந்த 5 வருடங்களில்(1764-1769) கள்ளர்கள் நவாபின் மேலாண்மையை ஏற்காமல், தன்னாட்சி புரிந்து வந்தனர். இதனால் கள்ளர்களை ஒடுக்க எண்ணிய நவாப் முதலில் மேலூரை குறி வைத்தான்.

ஆங்கில தளபதி கேப்டன் ரூம்லே தலைமையில் 5 Battalion சிப்பாய்களையும், 1500 குதிரைப்படை வீரர்களையும் அனுப்பினான் நவாப். மேலூரில் முகாமிட்ட ரூம்லே, மேலூர் நாட்டார்களுக்கு , அடிபணிந்து வரி செலுத்துமாறு தூது அனுப்பினான். இரு வாரங்கள் முகாமிட்டு இருந்தான். ஆனால் மேலூர் நாட்டார்கள் அடிபணிய மறுத்து விட்டனர். யாருக்கும் வரி செலுத்த முடியாது என கூறிவிட்டனர். வெள்ளையர் சிப்பாய்களின் மீதும் தாக்குதல்களை தொடங்கினர்.

இதன்பின் மேலூரை விட்டு அகன்ற ரூம்லே தன் படையுடன் வெள்ளளூர் நாட்டை அடைந்தான்.வெள்ளளூரை சுற்றி வளைத்து நாட்டார்களை தங்களிடம் வந்து அடிபணிந்து செல்லுமாறு மிரட்டினான்.
கிராமத்தை சுற்றியுள்ள முட்புதர்களில் கள்ளர் நாட்டார்கள் திரண்டனர். ஆனால் வெள்ளளூர் நாட்டார்கள் அடிபணிய மறுத்து, தங்களது இயல்பான முரட்டு தனத்துடன், வெள்ளையர்களை நோக்கி ஆவேசமாக குரல் எழுப்ப தொடங்கினர். தங்களது ஆயுதங்களை கொண்டு தாக்க தயாராயினர்.
முட்புதர்களையும், வீடுகளிலும் நெருப்பு வைத்தனர் ஆங்கிலேயர். வீடுகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வெளியேறி ஒரிடத்தில் திரண்டனர். இந்த சமயத்தில் கள்ளர்களை நோக்கி தாக்குதலை தொடங்கினான் கேப்டன் ரூம்லே. ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என 3000 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.
வெள்ளளூர் நாட்டின் முக்கிய நாட்டார்களை கைது செய்து கொண்டு சென்றனர். கைதிகளுடன் மேலூரை அடைந்தான் ரூம்லே. வெள்ளளூரில் நடந்த பெரும் படுகொலையை அறிந்து மேலூர் நாட்டார்கள், ரூம்லேயோடு ஒத்துழைக்க தற்காலிகமாக சம்மதித்தனர்.


மல்லாக்கோட்டை மற்றும் சிவகங்கை பிரதிநிதிகள் செலுத்தும் வரியின் அளவு மற்றும் சட்டங்களை தாங்களும் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தனர். பல நூற்றாண்டுகளாக தன்னரசாக திகழ்ந்த கள்ளர் நாடுகள் ரூம்லேயின் இத்தகைய கொடூர தாக்குதலுக்கு பின் அமைதியான வாழக்கை வாழ தொடங்கினர். ஆனால் இது நீண்ட நாள் நீடிக்கவில்லை.

சிறிது காலத்திற்கு பின் நவாபின் பிரதிநிதி முகமது கோலி என்பவன் மேலூர் நாட்டுக்கு அமில்தார் பதிவியில் இருந்தான். வெள்ளளூர் நாட்டில் சில ஆய்வுகளை செய்ய 10 பியூன்களை (Peon) அனுப்பினான் கோலி. வெள்ளையனுக்கு கட்டுப்பட்டு வாழ்வதை விரும்பாத கள்ளர்கள் கடுங்கோபத்தில் இருந்தனர் பழிவாங்க காத்திருந்தனர்.

இதையடுத்து வெள்ளளூருக்கு வந்த 10 பியூன்களையும் கள்ளர்கள் கொன்று விட்டனர். இந்த சண்டையில் கிராமம் தீக்கிரையானது. அங்கிருந்த கள்ளர்கள் வடக்கு நோக்கி நகர்ந்து, தொண்டைமான் சீமையில் குடியேற முயற்சித்தனர். அதற்குள் கள்ளர்கள் செய்த படுகொலையை அறிந்த ரூம்லே பெரும் படை ஒன்றை வெள்ளூர் நோக்கி அனுப்பினான்.

கள்ளர்களுக்கும் ரூம்லே படைக்கும் நடந்த மோதலில் 2000 வெள்ளளூர் கள்ளர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்குபின் கள்ளர் நாட்டில் அமைதி நிலவியது. மக்கள் சுமூக வாழக்கை வாழ தொடங்கினர். மேலூர் நாட்டில் இருந்து வெள்ளையர் படை விளக்கி கொள்ளப்பட்டது.

சில ஆண்டுகள் அமைதியாக இருந்தவர்களை மீண்டும் ஐதர் அலியின் தூண்டுதலில் மீண்டும் தாக்குதல்கள் தொடங்கினர்.


மதுரை, தஞ்சை கள்ளர்கள் matchlocks எனப்படும் துப்பாக்கியை எவ்வளவு மறைவான பகுதிகளில் இருந்தாலும் அவர்கள் குறிதவறாமல் சுடுவதில் வள்ளவர்கள், குதிரையை கடிவாளம் இல்லாமலே வேகமாக செலுத்தும் திறன் உடையவர்கள் என்றும், மேலூர் கள்ளர்கள் தங்களது கோட்டைகளில் மலபார் துப்பாக்கிகளை வைத்திருந்தனர், அவற்றை உபயோகிப்பதிலும் சிறந்து விளங்கினர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது (ஆண்டு: கிபி 1777).



ஆய்வு: திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்