புதன், 7 நவம்பர், 2018

முத்தரையர் வரலாறு

தனஞ்சய முத்தரையர்

புதுக்குடியான ரா[ஜெ]ந்திர சொழமங்கலத்துக்‌ காணி உடைய கள்ளரில்‌ பெருமன்‌ அழகனான மணவாள முத்தரயன்‌





Journal of Oriental Research, Madras
Volume 3
1929

Muttaraiyar belonged to the Kallar caste and were such great warriors as to be eulogised by the poets. Tirumahgai mannan may be one of them,


 

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழறிஞர், சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர் நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார். இவரது நினைவாக தஞ்சாவூரில் 1992-இல் நாவலர் ந மு வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவப்பட்டது. இத்தகைய பெரும்புகழ் படைத்த நாட்டார் ஐயா 1923 ஆம் ஆண்டு எழுதிய " கள்ளர் சரித்திரம் " என்ற வரலாற்று நூலே கள்ளர் மரபினரின் வழிகாட்டியாகவும், சிறந்த வரலாற்று நூலாகும். இது தமிழக அரசின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல் ஆகும்.


இந்த நூலில் முத்தரையர் மன்னர்கள் கள்ளர் மரபினர் என்றே குறிப்பிடுகிறார்.

கள்வர் கள்வன்





மேலும்

தற்காலத்திய திருச்சி, தஞ்சை, புதுகோட்டை மாவட்டங்களில் பெரும் பகுதிகளை முத்தரையர்கள் ஆண்டு வந்தனர். இவர்களது நாடு முத்தரையர் நாடு என்றே கல்வெட்டுக்களில் குறிக்கப்பெறுகின்றது. 



திருக்காட்டு பள்ளி அருகில் உள்ள செந்தலை அல்லது ஐம்பது கல் நகரம் இவர்களது தலை நகரமாகும். இப்பொழுது ஐம்பது கல் நகரம் அம்பி நாரம் என்று அழைக்கப்படுகிறது. செந்தலைக்கு அருகில் உள்ள நாகத்தி, உமையவள் ஆற்காடு, வல்லம், தஞ்சை, முதலிய பகுதிகள் முத்தரையரின் தலை நகரத்தில் அடங்கி இருந்தது.

இன்றும் செந்தலையில் கள்ளர்களே வாழ்கின்றனர்.




திருகாட்டு பள்ளி நியமம், விஷ்ணம்பேட்டை, இளங்காடு கூடநாணல் கூழாக்கி ஆற்காடு, விண்ணமங்கலம், பொன்விளைந்தான் பட்டி ஆகிய பகுதிகளும் செந்தலையை சார்ந்திருந்தன. செந்தலைக்கு சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரும் வழங்கியது, தஞ்சை, வல்லம் முத்தரையர்களது தலைமை நகரங்களாக சில காலம் இருந்தன.


தஞ்சாவூருக்குத் தென் மேற்கே ஏழு மைல் தூரத்தில் வல்லம் உண்டு. இக் காலத்தில் அழிந்த அகழிகளேயன்றி, அதன் பழம் பெருமையை அறிதற்குரிய அடையாளம் ஒன்றும் அங்கு இல்லை. தஞ்சை மாநகரைச் சோழ மன்னர்கள் தலை நகராகக் கொள்வதற்கு முன்னே வல்லம் என்னும் கோட்டை, கள்ளரில் ஒரு வகுப்பாருடைய தலை நகரமாகச் சிறந்திருந்தது என்று தமிழகம் ஊரும் பேரும் - ரா. பி சேதுப்பிள்ளை - 1946 ஆம் ஆண்டு தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார்.

வல்லத்தரசு

வல்லத்தில் அரசு புரிந்த குடியினர் வல்லத்தரசு என்னும் பட்டம் பெற்றனர். வல்லம் சீரிழந்த பின்னர் வல்லத்தரசுகள் கள்ளர் முதுகுடியில் கலந்துவிட்டார்கள். வல்லக்கோன்  என்று அழைக்கப்பட்டவன் வல்லத்து அரசனாகிய சுவரன் மாறன்.

முத்தரையர் பட்டம் கொண்ட கள்ளர்கள்  பட்டுக்கோட்டை வட்டம்  ஆம்பலாபட்டிலும், பக்கத்து ஊர் கரம்பயத்திலும், பூதலூர் வீரமரசன்பேட்டை (தஞ்சை) உள்ளனர்.


கள்ளரில் முத்தரையன் பட்டம் தவிர 

செம்பியமுத்தரையன், மானமுத்தரையன், வங்காரமுத்தரையன், 
தஞ்சரையர், 
செம்பிய முத்தரசு 
செம்பியத்தரசு
வல்லத்தரசு (வல்லக்கோன்), 
தஞ்சரையர் (தன்சைக்கோன்)  

என்ற பட்டம் உள்ள கள்ளர் மரபினர் உள்ளனர். 
செம்பிய முத்தரசு
செம்பியத்தரசு









புரட்சியாளர் க.முத்துசாமி வல்லத்தரசு அவர்கள் கொப்பம்பட்டி வடமலைநாட்டை சேர்ந்தவர்.



கூடலூர் மிராசுதார் து. முத்துக்குமாரசாமித் தஞ்சைராயர் அவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கம் வளர்ச்சிக்கு துணைநின்றவர்.
கள்வர் கள்வன் - விளக்கம்


கள்வர் கள்வன் என்பது கள்ளர்களை வென்றவன் என்றும், களப்பிரர்களை வென்றவன் என்றும்,  பொருள் கூறுவது,   சிலரின் அறியாமையை காட்டுகிறது. ராஜராஜன் என்றால் மன்னர்களுக்கு மன்னர் என்று பொருள், புறநானூறு பாடலில் அறவர் அறவன், மறவர் மறவன், மள்ளர் மள்ளன் என்பதற்கு விளக்கமாக அறவோர்க்கு அறவோன்; மறவருள் சிறந்த மறவன்; மள்ளருள் சிறந்த மள்ளன்; பழம்பெருமை வாய்ந்த தொல் குடியிற் பிறந்தவன் என்று புலியூர்க் கேசிகன் விளக்கம் தருகிறார். அதை போல் கள்வர்களில் சிறந்தவன் என்று இதற்கு பொருளே தவிர வேறு பொருள் இல்லை.
கிபி 8-9 நூற்றாண்டுகளில் முத்தரையர்கள் வெளியிட்ட கல்வெட்டுகள் அவர்களின் வீரத்தையும் கொடைத்திறனையும் பாராட்டுகின்றன. 

செந்தலையில் கிடைத்த கல்வெட்டுகள் அவர்களின் வரலாற்றை புலவர் பாடியதை நமக்கு எடுத்துரைக்கின்றன. 

இங்கு கிடைத்த 3 கல்வெட்டுகள் முத்தரைய மன்னர்களை கள்வர் கள்வன் என குறித்துள்ளது.

இந்த கல்வெட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ள இந்திய தொல்லியல் துறை 1915-1916 காலகட்டத்தில் Epigraphica indica vol 13 ஐ வெளியிட்டுள்ளது.  அதில்  முத்தரைய மன்னர்கள் தங்களை கள்வர் கள்வன் என குறித்துள்ளனர்.  இதன்படி முத்தரைய மன்னர்கள் கள்ளர் மரபினர் என அரசாங்கமே அறிவித்துள்ளது.  















8 ஆம் நூற்றாண்டில் கிடைத்த புதுக்கோட்டை கல்வெட்டில் (IPS 236) ல் கள்வர் கள்வன் பெரும்பிடுகு சுவரன் மாறன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டை வெளியிட்ட தமிழக அரசு கள்வர் கள்வன் என்பது கள்ளர் மரபின் தலைவனான முத்தரயைரை குறிக்கிறது என அறிவித்துள்ளது.














கிபி 893 ல் ஆதித்த சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட கல்வெட்டில்,  மார்பிடுகு திருக்கோஷ்டியூர் கள்வனான அமரக்காலன் என குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த கல்வெட்டை ஆராயந்த தொல்லியல் துறை இது முத்தரைய மன்னர் வம்சத்தவர் என்றும் கள்வர்  இனத்தவர் என்றும் அறிவித்துள்ளது. 










மேலே கூறப்பட்ட கல்வெட்டுகளை ஆதாரமாக கொண்டு முத்தரைய மரபினர் கள்ளர் இனத்தவர் என அறிவித்த வரலாற்று நூல்கள் :-

Studies in south indian jainism, Ramasamy ayyangar (1922), சென்னை பல்கலைக்கழகம் 






History of pallavas of kanchi(1928), சென்னை பல்கலைக்கழக வரலாற்றுத்துறை

ஆழ்வார்கள் காலநிலை (1928), மு இராகவயங்கார், தமிழ் கல்விச்சங்கம் வெளியீடு

Ancient india,  south indian history and culture , Oriental book agency 1941 



பல்லவர் வரலாறு (1944), ம. ராசமாணிக்கனார், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம்

பாண்டியர் வரலாறு, ராஜசேகர தங்கமணி (விகடன் வெளியீடு)

முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு , அ சவரிமுத்து

விடியலை நோக்கி களப்பிரர் வரலாறு, அ சவரிமுத்து 









மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 








Central Archaelogical library



தஞ்சை மன்னரும் சரஸ்வதி நூலகம்


9 ஆம் நூற்றாண்டோடு ஆட்சியை இழந்த முத்தரையர் தங்களது அடையாளத்தை இழந்து கரைந்து போயினர்.  பிற்காலத்தில் முத்தரையர் பட்டம் பல அரையர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இருந்துள்ளது.

இதற்கு ஒர் எடுத்துக்காட்டாக கிபி 1338 ஆம் ஆண்டை சேர்ந்த பெரம்பலூர் கல்வெட்டில்,  பள்ளி விக்ரம சோழமுத்தரையன், மரகத சோழ முத்தரையன், முடிகொண்ட சோழ முத்தரையர்  என மன்னர்களால் அளிக்கப்பட்ட முத்தரையர் பட்டங்களை கொண்டிருந்துள்ளனர். 





இதைப்போலவே வட தமிழக பகுதிகளை ஆட்சி செய்த காடவராயர்கள் கூட தங்களது பெயரோடு முத்தரையர் பட்டத்தை இணைத்துள்ளனர். இதனால் பல்லவ மரிபினரான காடவர்கள் முத்தரய மரபினர்கள் ஆகமுடியாது. 

கிபி 18 ஆம் நூற்றாண்டு ஒலை ஆவணங்களில் நாயக்கர் சமூகத்தினரும் கூட முத்தரையர் பட்டத்தை உபயோகப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 





முத்தரையர் பட்டம் பல தரப்பினராலும்  சூட்டப்பட்டு வந்துள்ளதால் ஏற்பட்ட குளறுபடிகளை பயன்படுத்தி சில வரலாற்று திரிபுகள் ஏற்பட்டுள்ளது.  உண்மையான வரலாற்றை நீண்ட நாள் மறைக்க இயலாது. வன்னியர், முத்தரையர், அம்பலகாரர், தேவர் என்பது பட்டமே. இவற்றை சாதியாக குறிப்பிடமுடியாது. 

வலையர்களுக்கு இருக்கும் முத்தரையர் பட்டம் தொன்று தொட்டதல்ல, அதுவும் அவர்களுக்கான பிற்கால பட்டமே.


வலையர், முத்திரியர் , நாயுடு என்ற 29 சாதிகளை முத்தரையர் என்று 1996 ஆம் ஆண்டு அரசு ஆணை வழங்கியதாக குறிப்பிடுகிறார்கள். 




மூன்று வேந்தர்களை வென்றவர் அதனால் முத்தரையர் என்றனர் சிலர், இல்லை முத்து+அரையர் என்றனர் சிலர் ஆனால் முத்தரையர் (senior lineage) என்றால் மூத்தோர் மூத்த +அரையர் என்பதே சரியான விளக்கமாக அமைகிறது.

முத்தரையரின் குலம் சிலர் கங்கர்கள் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். பல்லவர்கள் என்கின்றனர் சில ஆய்வாளர்கள்.

யானை (களபம்) சின்னம் கங்கர்களின் சின்னம் களப சின்னத்தை முத்தரையர் பயன்படுத்தி உள்ளனர்.

முத்தரைய மன்னர்கள் கள்வர் கோமான் புல்லியின் வழிவந்தவர்கள்... தற்கால மழவராயர்கள் அனைவரும் கள்வர் குடியினரே......

நன்றி:- சென்னை பல்கலைக்கழகம் வரலாற்றுத் துறை ( அரசு ஆவணம்)


முத்தரைய அரசர் பரம்பரையில் பேர் பெற்ற சில அரசர் இருந்தார்கள். அவர்களுடைய சாசனங்கள் சில செந்தலை, நாரதத்தமலை, திருமய்யம், குன்னாண்டார் கோயில் முதலிய இடங்களில் கிடைத்துள்ளன. இங்கு எல்லாம் இப்பொழுதும் கள்ளர் குடியினர் கீழ் உள்ளது.

திருமெய்யம் பகுதியில் பூவனைக்குடியில் பூதி களறி அமருன்றி என்னும் முத் தரையன் குடைவித்த புஷ்பவனேசுவரர் கோயிலுண்டு . பூனையர் என்ற பட்டப் பெயர் மேலும் சான்றாக அமையும். பூவனைக்குடி கள்ளர்களின் பட்டமாகிய பூவனையரையர் என்ற பட்டம் இன்று பூனையர் என்று திரிந்து வழங்குகிறது.

கள்வர் குல பெரும்பிடுகு முத்தரையர் என உரக்க உரைத்த தமிழ் அறிஞர் ' மு இராகவயங்கார்" 





முத்தரையர் மன்னர்கள்

1) தனஞ்சய முத்தரையர்

2) பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (கி.பி.655-கி.பி.680)

3) இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேஷ்வரன் (கி.பி.680-கி.பி.705)

4) பெரும்பிடுகு முத்தரையர் II என்கிற சுவரன் மாறன் (கி.பி.705-கி.பி.745)


இக்கல்வெட்டானது இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறனின் பட்டமான "கள்வர் கள்வன்", "சத்ருகேஸரி", "வாள்வரிவெங்கை" போன்ற பட்டத்தினை தாங்கியுள்ளது


5) விடேல்விடுகு சாத்தன் மாறன் (கி.பி.745-கி.பி.770)

6) மார்பிடுகு என்கிற பேரடியரையன் (கி.பி.770-கி.பி.791)

7) விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (கி.பி.791-கி.பி.826)

8) சாந்தன் பழியிலி (கி.பி.826-கி.பி.851)



சாத்தம் பழியிலியின் சாசன எழுத்து.


விஜயாலய சோழீஸ்வரம் கோவில், மற்றும் குடைவரைக் கோவில்கள் நார்த்தாமலை பகுதியில் உள்ளது. இது விசெங்கி நாட்டுக் கள்ளர்கள் வாழும் பகுதி. அக்கல் ராஜா’ என்ற விஜயநகரத்தைச் சேர்ந்தவன் விசெங்கி நாட்டுக் கள்ளர்களை வெற்றி பெற்று நார்த்தாமலை கோட்டையில் தங்கினானான். அப்பகுதியில் இருந்த பல்லவராயர் இளவரசியான 'அக்கச்சி' என்பவர் கச்சிரன் பட்டம் உடைய கள்ள வீரரிடம் 'அக்கல் ராஜாவின்' தலையைக் கொய்து வருமாறு பணித்துள்ளார். 




சோழீஸ்வரம் கோயிலின் வெளிப்புறச் சுவரில் காணப்படும் கல்வெட்டு மூலம் இக்கோயில் சாத்தன் பூதி என்பவரால் கட்டப்பட்டதாகவும், மழையினால் இது இடிந்துவிடவே, மல்லம் விதுமன் என்கிற தென்னவன் தமிழதிரையன் என்பவனால் இதை விஜயாலய சோழன் காலத்தில் புதுப்பித்தார் என்றும் அறியப்படுகிறது. விஜயாலயன் காலம் முதல் இக்கோயில் விஜயாலய சோழீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. தமிழுதரையர், மீனவராயர் என்ற பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் வாழ்கின்றனர். 


குடுமியான் மலை கோயில் கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது. முதல் விஜய ரகுநாத ராய தொண்டைமானுடைய முடிசூட்டு விழா குடுமியான் மலை ஆலயத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை மன்னர்களுடைய விழாக்கள் அனைத்தும் அந்த ஆலயப் பிரகாரத்தில் அமைந்துள்ள அறுகோண வடிவில் அமைந்த ஒரு பெரிய பாறையைத் தளமாகக் கொண்ட மண்டபத்தில் நடத்துவதுதான் வழக்கம். அதன்படி இவருடைய முடிசூட்டு விழா குடுமியான் மலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

கிபி1915ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை தலைவர்களான Dr.Sten Konow and Dr.Thomos அவர்களால் வரையறுக்கப்பட்டு வெளிவந்த Epigraphhia India என்கிற புத்தகத்தில் கள்ளர் பெருமக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று குறிக்கிறார்கள்.


அதாவது அன்றைய காலகட்டங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து கல்வெட்டுகளையும் கண்டுபிடித்து அதனை பல இந்திய ஆராய்ச்சியாளர்களுடன் ஆராய்ந்து 30க்கும் மேற்பட்ட பாகங்களாக தொகுத்து வெளியிட்டனர். அதில் 13வது பாகத்தில் 139  பக்கத்தில் ஒரு கல்வெட்டிற்கு விளக்கம் கொடுக்கிறார்கள். 








அதாவது ஶ்ரீகள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையர் என்ற கல்வெட்டுக்கு அதில் வரும் கள்வர் என்பது கள்ளர் சமூகம் என்றும்.

இந்த கள்ளர் சமூகம் என்பது (Glorious lion🦁to the enemy) நல்லாத் தூங்கிக்கிட்டிருக்க ஒரு யானையோட கனவுல திடீர்னு சிங்கம் வந்தால், அது கனவு என்பதை என்று கூடஉணராமல் அந்த யானை பதறியடிச்சு பிளிறிக்கொண்டு ஓடுவதை போல கள்ளர் பெயரை கேட்டால் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் என்று...... 

கள்ளர்களின் வாழ்நாள் எதிரியான ஆங்கிலேயர்களே குறிப்பிட்டது தான் வியப்பே.





1915-16 ஆண்டிலே சுப்பிரமணி அய்யர் மற்றும் ராவ் பகதூர் வெங்கய்யா இருவரும் ஆராய்ந்து முத்தரையர் கள்வர்கள்வன் என்பது மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை பகுதியில் வாழும் கள்ளர் குல மக்கள் என கூறி ஆங்கிலேய அரசே வெளியிட்டு விட்டது.

சுப்பிரமணி அய்யர் மற்றும் ராவ் பகதூர் வெங்கைய்யாவின் விளக்கம். இது தான்.

The glorious Title of Muthariyar kings are"They be the glorius cupid.He is ferocius lion to enemy.The chief of kalva of kalvar. he is truthful to brave who thought.Kalvar are the class of  people may be the varientkallars, a tribe of Madura and pudhukottai district

இன்றும் செந்தலை,தஞ்சை பகுதிகளில் இதே முத்தரையர், தஞ்சரையர், செம்பிய முத்தரையர் என்ற பட்டம் கொண்ட பெரும்பான்மையராக கள்ளர் மக்கள் தஞ்சையில் வாழ்கின்றனர்.





பொ. ஆ. 650 முதல் பொ. ஆ. 860 வரை முத்தரையர் என்போர் சோழ நாட்டில் தஞ்சைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியைச் செந்தலை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர்.


முத்தரையர்களில் குறிப்பிடத்தக்கவன் பெரும்பிடுகு முத்தரையன் (கி.பி. 655 – 680) என்பவன் ஆவான். இவனுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று ஸ்ரீ கள்வர கள்வன் என்பதாகும். இதனைச் செந்தலை மற்றும் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.



செந்தலை



செந்தலையில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர்  கோவிலில் நாட்டார் , பீலியார் , மாதுரார் பட்டம் உடைய கள்ளர்கள் முதன்மையனவர்களாக விளங்குகின்றனர்.


கோவிலில் பாரத மண்டபம் (வசந்த மண்டபம்), விமான திருப்பணி அங்குள்ள கள்ளர்களால் திருப்பணி செய்யப்பட்டது.


செந்தலை கல்வெட்டு; (EI.VOI.XII SPI PP.134-149) "தஞ்சைகோன் வல்லகோன் ஸ்ரீ களவர் கள்வன் பெருபிடுகு முத்தரையர்." என்பதற்கு ஏற்ப தஞ்சரையர், வல்லவரையர், செம்பிய முத்தரையர்  பட்டங்கள் உடைய கள்ளர்கள் வாழ்கின்றனர்.


ஏரியூர் நாடு அல்லது ஏரிமங்கல நாடு என்ற கள்ளர் நாட்டில் மூன்றாவதுகரையார் :  சோழகர் மற்றும்  செம்பிய முத்தரையர், மேலும் இதில் உள்ளடங்கிய கிராமம்  சுரக்குடிப்பட்டியில்  உள்ளவர்களின் கள்ளர் பட்டம் - முத்தரையர், செம்பிய முத்தரையர் .




செம்பியன் களரியில் உள்ள நேத்ரபதீஸ்வரர் ஆலயம். அங்குள்ள வெள்ளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டது. வெள்ளாளர் 10 தலைக்கட்டுக்கும் மேல் உள்ளனர். இங்குள்ள வெள்ளாளர்கள் கோவில்மரியாதைக்காக சொரக்குடிப்பட்டியில் உள்ள செம்பியமுத்தரசுகளை அழைத்து வருகின்றனர்.




















செந்தலை என்னும் இத்திருவூர் தஞ்சாவூர் - கண்டியூர் - திருக்காட்டுப் பள்ளி சாலையில் திகழ்கின்றது. இவ்வூரின் மிகப் பழமையான பெயரே திருப்பெருந்துறை என்பதாகும். பின்னாளில் சோழப் பெருமன்னர்கள் காலத்தில் திருப்பெருந்துறை ‘சந்திரலேகை சதுர்வேதிமங்கலம்’ என்ற மற்றொரு பெயரினையும் பெற்று விளங்கியது. தமிழ்நாட்டிலேயே ஐம்பத்தெட்டிற்கும் மேற்பட்ட குடும்புகளை (வார்டு) பெற்ற ஊர்ச்சபையினைக் கொண்டதோர் பேரூராக இவ்வூர் திகழ்ந்திருந்தது என்பதனை சோழர் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன.

சந்திரலேகை என்ற கந்தர்வப் பெண் கண்வமகரிஷியின் தவத்தைக் கலைத்ததால் அவர் தம் சாபத்திற்கு ஆளானாளாம். அதன் காரணமாக அவள் பூமியில் சாபவிமோசனம் அடைதல் பொருட்டு முனிவரின் கட்டளைப்படி பிர்மாரண்யம் என்னும் இத்தலத்தை அடைந்து கடுந்தவம் புரிந்தாளாம். அவள் தவத்தின் கடுமையை அறிந்த சிவபெருமான் அர்த்தநாரி உருக்கொண்டு அவளுக்கு அருள்பாலித்தாராம்.


அவள் தம் வேண்டுகோளின்படி அவள் தவமியற்றிய பிர்மாரண்யத்திற்கு ‘சந்திரலேகை’ என்ற திருப்பெயரினை ஈசனே அருளினாராம் என்று அத்தலத்துப் புராணம் கூறுவதோடு, அவள் அருள்பெற்ற மாசிமாத சுக்லபட்ச சப்தமியில் அங்குள்ள காவேரி தீரத்தில் நீராடி அங்கு எழுந்தருளியிருக்கும் மகாதேவனை வழிபட்டால், வழிபடுவோர்க்கு மோட்சம் கிட்டும் எனவும் அத்தலபுராணமே இயம்புகிறது.


ஏழு நிலைகளையுடைய பெரிய இராஜகோபுர வாயில், கீழ்திசை வாயிலாகத் திகழ பெரிய கருங்கல் மதில் சுவருடன் ெவளித் திருச்சுற்று அமைந்துள்ளது. இத்திருச்சுற்றில் அமைந்துள்ள அம்மன் ஆலயத்திற்கு எதிர்புறம் தென் திசையில் நான்கு தூண்களுடன் ஓர் அம்பலம் அமைந்துள்ளது. அருேக பல்லவர் கால திருமேனிகள் சில இடம்பெற்றுள்ளன. இந்த அம்பல மேடைக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதனைக்கல்வெட்டுகளைப் படிக்கும்போது காண்போம்.




அம்மன் ஆலயத்து முன் மண்டபத்திலேயே ஈசனை நோக்கியுள்ள இவ்வாலயத்து பெரு இடபமும், பலிபீடமும் உள்ளன. இவை கடந்து இரண்டாம் திருவாயிலும் கடந்து உள்ளே சென்றால் முதல் திருச்சுற்று, முக மண்டபம், மகா மண்டபம், பரிவாராலயங்கள் ஆகிய அனைத்தையும் நாம் காணலாம். கணபதியார் கோயில் மிகப் பழமையானதாகும். எடுப்பான ஸ்ரீவிமானத்தோடு மூலவர் திருக்கோயில் அமைந்துள்ளது. அதனுடன் இணைந்து ஒரு சிறு மண்டபமும் காணப்பெறுகின்றது. அம்மண்டபத்தில் தாமரை மலரில் அமர்ந்தாராக நான்கு தலைகளுடன் காணப்பெறும் வாகீச சிவனாரின் அரிய திரு வுருவம் உள்ளது.




அவர் அருகில் நான்கு தலைகளுடன் கூடிய பிரமன் திருமேனியொன்றும் இடம் பெற்றுள்ளது. கருவறையின் வாயிலை இரண்டு அழகிய துவாரபாலகர் சிற்பங்கள் காத்து நிற்கின்றன. மூலவரின் தற்காலத்திய திருநாமம் சுந்தரேஸ் வரர் என்பதாகும். உமையம்மை மீனாட்சியம்மை என்ற பெயரால் அழைக்கப் பெறுகின்றார். மகாமண்டபத்திற்கு முன்புள்ள முகமண்டபத்தினை கி.பி. 15ம் நூற்றாண்டில் திப்ப தேவமகாராயர் புதிதாக எழுப்பித்தார்.




நியமத்து காளாபிடாரி கோயிலின் தூண்களையும் கட்டுமானக் கற்களையும் பயன்படுத்தியுள்ளார். அதுபோன்றே ஏழுநிலை பெரிய இராஜகோபுரத்ைதயும், திருமதிலையும் இவரே எழுப்பித்தார். அதற்கெனத் தேவையான கற்களை வடபுலக் கொள்ளையர்களால் தரைமட்டமாக்கப் பெற்ற அமண்குடி சமண ஆலயத்துக் கற்களையும், ‘மீபிரம்பில்’ எனப்பெறும் கருப்பூர் சிவாலயத்துக் கட்டுமானக் கற்களையும் எடுத்துவந்து செந்தலை ஆலயத்தைப் புதுப்பித்தார். அவ்வாறு அவர் சமண ஆலயத்துக் கற்களை கோபுரக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தியபோது அவற்றில் இருந்த மகாவீரர், பார்சுவநாதர் போன்ற அமண் சமயத்து அருளாளர்களின் சிற்பங்களை அழிக்காமல் அல்லது அகற்றாமல் அப்படியே கட்டுமானத்தில் இடம் பெறச் செய்து அவற்றையும் காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




செந்தலை திருக்கோயிலில் பாதபந்தத் தாங்குதளத்துடன் அமைந்துள்ள விமானத்தின் கண்ட பாதங்கள் சிற்பங்கள் செதுக்கப்பெறாமல் வெறுமையாக அமைந்திருக்க, விமானத்திற்கு முன் அமைந்துள்ள மண்டபத்தின் ஒரு சில பாதங்களில் மட்டும் குறுஞ்சிற்பங்கள் காணப்படுகின்றன. விமானத் தாங்குதளத்தின் பாத அளவுகளும் மண்டபத் தாங்குதளத்தின் பாத அளவுகளும் கணிசமாக வேறுபடுகின்றன.


நேமம் கிராமத்தின்  தென்மேற்காக அமைந்த திடலில் தான் பல்லவர்காலத்து ஆயிரத்தளி என்ற சிவாலயம் இருந்துள்ளது. பல்லவப்பேரரசனின் குறுநில அரசனாக விளங்கிய பெரும்பிடுகு - முத்தரையன் காலத்தில் தான் இவ்வாலயம் தோற்றுவிக்கப் பெற்றிருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வுகளால் உறுதி செய்யப் பெற்ற தகவலாகும்.


இரண்டாம் நந்திவர்ம பல்லவன் இதே காவிரிக்கரையில் வீரசிங்கம் பேட்டை என்ற தற்போதைய ஊரில் ஆயிரம் சிவலிங்கங்களுடன் ஆயிரத்தளி என்ற கோயிலை எழுப்பித்ததோடு அந்நகருக்கு நந்திபுரம் எனவும் பெயரிட்டு தனக்குரிய சோழநாட்டுத் தலைநகரமாக்கினான். அதே காலக்கட்டத்தில் தான் நியமத்தில் அவனுடைய குறுநில அரசன் முத்தரையன் ஆயிரம் லிங்கங்களுடன் ஒரு ஆயிரத்தளியை அமைத்தான்.


ராஜராஜசோழன் தஞ்சைப் பெரிய கோயிலை எழுப்பித்தபோது நியமத்து ஆயிரத்தளி மிகச் சிறப்புடைய கோயிலாக இருந்திருக்கிறது.




அந்த ஆயிரத்தளிகோயிலிலிருந்து பூங்காலி, தேவி, ஆச்சம், சந்திரம், ஆடவல்லாள், பூமி என ஆறு நாட்டிய நங்கையர்களை அங்கு பணிபுரிய நியமித்தான் எனத் தஞ்சாவூரில் உள்ள அப்பேரரசனின் கல்வெட்டில் கூறப்பெற்றுள்ளது. பின்னாளில் வடபுலத்து கொள்ளையர்களால் ஆயிரத்தளி சிதைக்கப் பெற்றது. 1956-ல் ஏற்பட்ட காவிரி வெள்ளத்தின்போது அப்பகுதியில் ஏற்பட்ட காவிரிக்கரை உடைப்பை அடைக்க அரசுத் துறையினர் அத்திடல் பகுதியை கனரக இயந்திரங்களால் வெட்டி உடைப்பில் கொட்டும் போது அம்மண்ணோடு நூற்றுக்கணக்கான லிங்கங்களும் புதைந்து போயின. தற்போது மிகப் பிரம்மாண்டமான இரண்டு பல்லவர்கால லிங்கங்கள் மட்டுமே அங்கு எஞ்சி நின்று அருள்பாலிக்கின்றன.


ஆயிரந்தளியும், பிற சிவாலயங்களும் பின்னாளில் தரைமட்டமாக அழிந்தவை போன்றே புகழ்பெற்ற ‘‘நியமத்து மாகாளம்’’ எனப்பெறும் தேவி கோயிலொன்றும் அழிந்துபட்டது. அக்கோயிலின் எச்சங்களாக விளங்கிய நான்கு கல்வெட்டுத்தூண்களை பிற்காலத்தில் செந்தலை சுந்தரேஸ்வரர் கோயில் திருப்பணிக்காக எடுத்துச் சென்று அங்கு மண்டபமொன்றில் வைத்து கட்டிடம் எழுப்பியுள்ளனர். நான்கு புலவர்கள் பெரும்பிடுகு முத்தரையனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் அத்தூண்களில் காணப்பெறுகின்றன. கோயில் அழிந்தும் தமிழ் அழியாமல் நிலை பெற்றது ஆறுதலான தகவலாகும்.


அந்த நியமத்து காளாபிடாரிக்கு பெரும்பிடுகு முத்தரையன், மூன்றாம் நந்திவர்மபல்லவன், பாண்டியன் மாறஞ்சடையன், முதல் ஆதித்த சோழன் ஆகிய நான்கு மரபு மன்னர்கள் காலத்தில் அளிக்கப்பெற்ற கொடைகள் பற்றிய செய்திகளும் அந்த தூண்களிலேயே காணப்பெறுகின்றன. குறிப்பிடத்தக்க சிறப்பாக மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் தேவி கண்டன் - மாறன் பாவை ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு மாற்று குறையாமல் அளித்த 5 கழஞ்சு பொன் போன்றே நியமத்து காளாபிடாரிக்கு (தேவிக்கு) முன் நந்தாவிளக்கு எரிப்பதற்காக 12 கழஞ்சு பொன்னை முதலீடு செய்தான் என்பது நோக்கத்தக்கதாகும்.


இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் சக்திவாய்ந்தவராக  கருதப்படுகிறார்.  வட பிரகாரத்தில் பத்மநாபப் பெருமாள், மகாலக்ஷ்மி சன்னதி உள்ளது.  இத்தலத்தில் உள்ள கிணறு “அனந்த  தீர்த்தம்” என்றும் ஆதிசேஷன், பெருமாளின் தாகத்தை தணிப்பதற்காக ஏற்படுத்திய தீர்த்தம் ஆகும்.  ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று  இந்த தீர்தத்தை தலையில் தெளித்து கொண்டால் சர்வ பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை.


சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் புராணம் இத்தலத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவிளையாடல் என்று  தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.  பிரமராயன் என்ற பெயர், மாணிக்கவாசகரின் பட்ட பெயரான “தென்னவன் பிரமராயன்” என்று  கருதப்படுறது


ஒரு தாய் எருமை தன் கன்றை ஈனும் உயிரோட்டமான ஒரு சிற்பக் காட்சியைக் கூட சிதைக்காமல் அக்கோபுரத்தில் காப்பாற்றிய திப்ப தேவராயனின் பணி போற்றத்தக்கதாகும். முதல் திருச்சுற்றில் அம்மன் ஆலயத்திற்கு எதிரே ஒரு அம்பல மண்டபம் இருப்பதை முன்னரே குறிப்பிட்டோம். அந்த அம்பலம் பிற்காலத்தில் புதுப்பிக்கப்பெற்றதெனினும் அப்பகுதியில் பழம் சுவடுகள் பல அப்படியே உள்ளன. கி.பி. 880ல் இராஜகேசரிவர்மனான முதலாம் பராந்தக சோழன் காலத்தில் வெட்டுவிக்கப் பெற்றுள்ள இவ்வாலயத்து கல்வெட்டு சாசனம் ஒன்று அந்த அம்பல மண்டபம் பற்றிய சுவையான தகவலை அளிக்கின்றது. அக்கல்வெட்டு வாசகங்களை இனிக் காண்போம்.


‘‘ஸ்வஸ்திஸ்ரீ கோராஜகேசரி வர்மர்க்கு யாண்டு 6 ஆவது. ஆர்க்காட்டுக் கூற்றத்து பிரம்மதேயம் சந்திரலேகை சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி சபையோம் இவ்வூர் ஐம்பத்து மூன்றாம் குடும்பில் பாரத பங்குக் கோயிலான் நாகநந்தி விற்ற பங்கு 1. இவ்வொரு பங்கும் இவ்வூர் பிரம்மஸ்தானத்து மீய் செங்கிளி நாட்டு வெண்ணெயில் உடையான் வயிர மேக படாரன் எடுப்பித்த அம்பலத்து இருந்து நிசதியும் ஸ்ரீபாரதம் வாசிக்க பெரும்புலியூர் ஆத்ரேய கோத்திரத்து வைகானச சூத்திரத்து சிங்கி நந்தீஸ்வர பட்டனுக்கு இறையிலியாகக் கொடுத்தோம் சபையோம். இந்நிலம் பின்பு இப்பங்கு உண்பார் இவ்வூர் பிரம்மஸ்தானத்தே இருந்து நிசதியும் ஸ்ரீபாரதம் வாசித்து உண்பதாக.


இப்பங்கொன்றும் சந்திராதித்த வத் இறையிலியாகப் பணித்து கல்மேல் வெட்டிக் கொடுத்தோம் பெருங்குறி மகாசபையோம்.’’ இத்திருக்கோயிலில் வெண்ணாயில் என்ற ஊரினைச் சார்ந்த வயிர மேக படாரன் என்பான் ஓர்அம்பலத்தை எழுப்பிக்க அதில் நாள்தோறும் மக்களுக்காக பாரதம் வாசிக்க பெரும்புலியூர் சிங்கி நந்தீஸ்வரபட்டன் ஒப்புக் கொண்டு அப்பணிக்காக அவ்வூரில் நிலக்காணியைப் பெற்றான் என்பதும், பின்னாளில் அந்நிலத்தை யார் ஒருவர் அனுபவித்தாலும், அவர் அம்பலத்தில் பாரதம் சொல்லும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்நடைமுறை சந்திரன், சூரியன் உள்ளளவும் தொடர வேண்டும் என்பதும் சாசனம் கூறும் செய்தியாகும். ஒரு காவியமான மகாபாரதம் நாளும் மக்களுக்காக படிக்கப் பெற்ற ஆலயமே செந்தலை சிவாலயமாகும்.


பராந்தக சோழன் காலத்தில் இவ்வூர் அருகே வீரசிகாமணிப் பேரேரி என்ற ஒரு பெரிய ஏரி மன்னன் பெயரால் வெட்டப் பெற்றது என்பதும், அதன் பராமரிப்புப் பணியினை கனகஸேன படாரர் என்ற சமணத் துறவி ஒருவர் மேற்கொண்டதாகவும், ஆலய கோபுரத்திலுள்ள பராந்தக சோழனின் கல்வெட்டு கூறுகின்றது. அவ்வேரி தற்போது அல்லூர் அழிசிக்குடி ஏரி என்ற பெயரில் திகழ்கின்றது. பின்னர் இராஜேந்திர ேசாழனின் சேனாபதி ஜெயமூரி நாடாள்வான் என்பானும் அந்த ஏரியைக் காத்த திறத்தை செந்தலை ஆலய கல்வெட்டுகளே எடுத்துரைக்கின்றன.


செந்தலை சிவாலயத்து முக மண்டபம் நியமித்து களாபிடாரி கோயிலின் தூண்களால் எடுக்கப் பெற்றது என்பதை முன்பே கண்டோம். அத்தூண்களில் பெரும் பிடுகு முத்தரையனின் புகழினை பாச்சில் வேள் நம்பன், கோட்டாறு இளம் பெருமானார், பவதாயமங்கலத்து குவாவன் காஞ்சன், ஆசாரியர் அநிருத்தர் ஆகிய நான்கு புலவர் பெருமக்கள் புகழ்ந்து பாடிய பாடல்கள் அப்படியே அதில் பதிவு பெற்றுள்ளன. நியமத்து கோயில் அழிந்த போதும்கூட பின்னாளில் திப்ப தேவராயன் செய்த செயலால் பெரும் பிடுகு முத்தரையனின் பெரும் புகழும், வீரமும் அப்படியே அழியாமல் செந்தலையில் காப்பாற்றப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தையும், வரலாற்றையும் காத்த பெருமை அவனுக்குண்டு.


அங்குள்ள தூண்களில் பல்லவ கிரந்த எழுத்துகளில் சுவரன் மாறனின் பட்டப் பெயர்களான ஸ்ரீமாறன், ஸ்ரீசத்ரு கேசரி, ஸ்ரீகள்வர் கள்வன், ஸ்ரீஅதி சாஹசன், ஸ்ரீஅபிமான தீரன் என்ற பட்டப் பெயர்கள் எல்லாம் பொறிக்கப் பெற்றிருப்பதை நாம் காணலாம். மேலும் பல்லவன், பாண்டியன், முத்தரையன், சோழன் ஆகிய நான்கு மரபு மன்னர்கள் காலத்தில் நியமித்து காளாபிடாரிக்குச் செய்த கொடைகள் அனைத்தும் இங்குள்ள தூண்களிலேயே காணப்பெறுகின்றன. அற்புதமான செந்தலை சுந்தரேஸ்வரர் ஆலயம் அறநிலையத்துறையினரின் பராமரிப்பின்றி அழிவை ேநாக்கிச் செல்வது வேதனை அளிக்கின்றது.


வதனஸ்மர மாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா

மன்மதனுடைய மங்களகரமான அரண்மனைக்கு சமமான  முகத்தில், அங்கு கட்டப்பட்டிருக்கும் தேர்ச்சீலை போன்ற புருவங்களை உடையவள்.

"வக்த்ர லக்ஷ்மீ பரீவாஹ சலன் மீனாப லேசனா" தன் முக ஸெளந்தர்யம் என்கிற பிரவாகத்தில் ஓடும் மீன்கள்போன்ற கண்களை உடையவள். மீன், தன் குஞ்சுகளை, தன் பார்வையாலேயே வளர்ப்பதுபோல அம்பாள் சகல உலகையும் தன் கண்களினாலேயே ரட்சிக்கிறாள். அதனாலேயே அவள் மீனாட்சி, மீனலோசினி. "நவ சம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா" புதிதாக மலர்ந்திருக்கும் சம்பக புஷ்பத்தைப் போன்ற கூர்மையான நாசியை கொண்டு சோபை பெற்று விளங்குகிறவள்.


விடியலை நோக்கி களப்பிரர்" என்று பேராசிரியர் சவரிமுத்து எழுதிய வரலாற்றில் : கரிகாலன் தாய் வழியில்வந்த கள்ள மரபினரும், முத்தரைய கள்ளரும் ஒன்றாய் பல்லவன் சிம்ம விஷ்ணுவை எதிர்த்து மறைந்தது இருந்து தாக்க படைகள்  தங்கியிருந்த இடமே துவாக்குடி(இரண்டு குடி) என்கிறார்.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப் பகுதியில் உள்ள கள்ளர் ஜாமீன் முத்தரையர், சின்ன வன்னியனார் என்றும், வழுவாடித் தேவர் என்றும் பட்டம் புனைந்திருந்தனர்.



"கள்வர் கள்வன் " எனும் சொல்லாடல் : ஒர் ஆய்வு




கிபி 8-9 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் தஞ்சை, வல்லம் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்தவர்கள் முத்தரையர் எனும் மன்னர் வம்சத்தினர். இவர்கள் கல்வெட்டுகளில் தங்களை ஸ்ரீ கள்வர் கள்வன் என்றும் ஸ்ரீ களவர களவன் எனும் குறித்துள்ளனர். (Epigraphica indica vol 13)


இதற்கான விளக்கம் கள்ளர்களில் சிறந்த கள்வன் , கள்ளர்களுக்கு தலைமையான கள்வன் என இந்திய தொல்லியல் துறையும், தமிழக தொல்லியல் துறையும் தங்களது வெளியீடுகளில் குறித்துள்ளனர்.(Epigraphica indica vol 13 / Inscriptions of pudukkottai state : No 216/Studies in south indian jainism)


கள்வர் கள்வன் எனும் சொல்லாடலைப்போல வரலாற்று ஆவணங்களில் பயின்று வரும் மற்ற எடுத்துக்காட்டுகளை காண்போம்


பாண்டியரின் வேள்விக்குடி செப்பேடு( கிபி 8 ஆம் நூற்றாண்டு)


வேந்தர் வேந்தன்:-




கிபி 8 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேட்டில் பாண்டிய மன்னன் சேந்தன், என்பவர் வேந்தர் வேந்தன் என போற்றப்படுகிறார். வேந்தர் வேந்தன் என்பது பொருளாக வேந்தர்களில் சிறந்த வேந்தன், என பொருள்படுகிறது. வேந்தர்களுக்கு எதிரியான வேந்தன் அல்லாதவர் என பொருள் தராது. 


மன்னர் மன்னன்:-





வேள்விக்குடி செப்பேட்டில் பாண்டியன் கோச்சடையன், " மன்னர் மன்னன்" என போற்றப்படுகிறார். மன்னர்களுக்கெல்லாம் மன்னன் , மன்னர்களில் சிறந்த மன்னன் என போற்றப்படுகிறார். 


புறநானூறு

************
"ஒரு சிறை இருந்தேன்; என்னே! 'இனியே,

அறவர் அறவன், மறவர் மறவன்,


மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன்,


இசையின் கொண்டான், நசை அமுது உண்க' என"


-----புறநானூறு பாடல் 399----




மறவர் மறவன்:-


புறநானூற்றில் தாமான் தோன்றிக்கோன் " மறவர் மறவன் " என போற்றப்படுகிறார். மறவர் மறவன் என்பது மறவரில் சிறந்த மறவர், வீரர்களில் சிறந்த வீரர் என போற்றப்படுகிறார்.


அறவர் அறவன்:-


மேற்கூறப்பட்ட பாடலான புறநானூறு 399 ல், தாமான் தோன்றிக்கோன் " அறவர் அறவன்" என போற்றப்படுகிறார்.

அறவர் என்பதன் பொருள் " தருமம் செய்பவர் " என பொருள்.
இதன் பொருள் தருமவான்களில் சிறந்த தருமவான், அறம் செய்பவர்களில் சிறந்தவன் என பாராட்டப்படுகிறார்.

மள்ளர் மள்ளன்:-


தாமான் தோன்றிக்கோன், மள்ளர் மள்ளன் என புகழப்படுகிறார். மள்ளர் என்பதற்கு வலிய உடம்பினை உடையவர் என பொருள்படும். மள்ளர் மள்ளன் எனும் புகழ்மொழி மூலம் மள்ளர்களில் சிறந்த மள்ளர் என இவர் போற்றப்படுகிறார். 


பெரும்பாணாற்றுப்படை :-

***************************
‘தொண்டையோர் மருக!
மள்ளர் மள்ள! மறவர் மறவ! 
செல்வர் செல்வ! செருமேம் படுந’
- பெரும்பாணாற்றுப்படை-(454-458)

மள்ளர் மள்ளன்:-


பெரும்பாணாற்றுப்படையில் தொண்டைமான் இளந்திரையன் மள்ளர் மள்ளன், எனும் அடைமொழியில் போற்றப்பட்டுள்ளார். மள்ளர்களில் சிறந்த மள்ளர் என புகழப்படுகிறார். 


மறவர் மறவன்:-


தொண்டைமான் இளந்திரையனின் வீரம் " மறவர் மறவன்" எனும் அடைமொழிகளால் குறிப்பிடப்படுகிறது. மறவர்களில் சிறந்த மறவர் என போற்றப்படுகிறார்.


செல்வர் செல்வன்:-

தொண்டைமான் இளந்திரையனின் செல்வ வளம் இங்கு பாராட்டப்படுகிறது. செல்வர் செல்வன் என செல்வர்களில் மிக்க செல்வமுடையவன் என போற்றப்படுகிறார்.

வீரர் வீரன்




வட ஆர்க்காட்டில் கிடைத்த கிபி 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கூடலூர் ஆளப்பிறத்த காடவராயரின் கல்வெட்டில், ( 178 of 1921 ) , "தொண்டை மண்டலங்கொண்ட பல்லவாண்டாரான வீரர் வீரன் காடவராயர்" எனும் வரிகள், காடவராயரை வீரர் வீரன் என போற்றுகின்றன.


இங்கு வீரர் வீரன் என்பதன் பொருள் வீரர்களில் சிறந்த வீரன் என்பது எளிதாக விளங்கும். சங்க இலக்கியங்களில் மறவர் மறவன் என மன்னர்கள் போற்றப்பட்ட முறை பிற்காலத்திலும் தொடர்ந்துள்ளது.


கொற்றவர் கொற்றவன்


பழமையான தமிழ் நூலான வில்லிபாரதத்தில், பதினெட்டாம் போர் சருக்கத்தில்

" நெறிபடற கொற்றவர் கொற்றவன் தானும்" 
என துரியோதனன் போற்றப்படுகிறார்.

கொற்றவர் என்பதற்கு வெற்றியுடையோர், மன்னர் ஆகிய பொருட்கள் உள்ளன. மன்னர்களில் சிறந்த மன்னர், வெற்றியாளர்களில் சிறந்த வெற்றியாளர் என துரியோதனன் போற்றப்படுகிறார். 


தேவர் தேவன்


கிபி 9 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திருவாசகத்தில், திருப்பெருந்துறை கடவுள் " தேவதேவன்" என போற்றப்படுகிறார்.


இங்கு கடவுளர்கள், தேவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர். தெய்வங்களின் தலைவரான சிவபெருமான் தேவதேவர் என போற்றப்பட்டுள்ளார். அதாவது தேவர்களாகிய கடவுளர்களின் தலைவர் என குறிப்பிடப்படுகிறார். 


அல்லாள இளையான் செப்பேடு:-

கிபி 1662 ஆம் சேர்ந்த அல்லாள இளையான் செப்பேடு, வேட்டுவ குல மக்கள் காசி தம்பிரான் மடத்திற்கு அளித்த கொடை பற்றிய தகவலை தருகிறது. இச்செப்பேட்டில் கடவுள் " தேவர் தேவன்" என போற்றப்பட்டுள்ளார். தெய்வங்களின் தலைவரான தேவர் தேவன் என போற்றபடுவதை இந்த சொற்றொடர் உணர்த்துகிறது. 

மன்னரில் மன்னன்




கிபி 1732ல் புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் வெளியிட்ட துருவாசபுரம் செப்பேட்டில், " மன்னரில் மன்னன" எனும் அடைமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளார். மன்னரில் மன்னர், மன்னரில் சிறந்த மன்னர் என போற்றப்பட்டுள்ளார்.


மேலே கூறப்பட்ட சான்றுகள் நமக்கு உணர்த்துவது யாதெனில், கள்வர் கள்வன், மறவர் மறவன் போன்ற சொற்றொடர்கள் குறிப்பிட்ட குழுவையோ, பிரிவையோ சேர்ந்த ஒரு தலைவனை , அக்குழுவின் சிறந்த வல்லவனை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 


கிபி 893ல் முதலாம் ஆதித்த சோழன் கால கல்வெட்டில், மார்பிடுகு திருக்கோட்டியூர் கள்ளன் அமரக்காலன் எனும் ஆனையுடையான் அளித்த கொடை பற்றி கூறுகிறது. 


இந்த மார்பிடுகு அரையன் முத்தரைய மன்னர் வம்சத்தில் உதித்தவன் என தொல்லியல் துறை விளக்கியுள்ளது. (169 of 1928) 


கள்வர் கள்வன் என பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன், மாறன் ஆகிய மன்னர்கள் தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். இவர்களின் வழிவந்த மார்பிடுகு அரையன் அமரக்காலனும் தன்னை கள்வர் குலத்தவன் என குறித்துள்ளார். 


செம்பிய முத்தரையர் மற்றும் மான முத்தரையர் பட்டம் பூண்ட கள்ளர்கள் இன்றும் முத்தரையர்கள் ஆட்சி செய்த திருக்காட்டுப்பள்ளி வட்டாரத்தில் வாழ்ந்து வருகின்றனர். செந்தலை மற்றும் செம்பியன்களரி ஆகிய கோயில்களில் கள்ளர்களே முதல் மரியாதை பெறுகின்றனர்.


முத்தரைய மன்னர்கள் தங்களை தஞ்சைகோன், வல்லக்கோன் முதலிய பட்டங்களில் அழைத்துக்கொண்டனர். முத்தரையர் மன்னர் வழிவந்த கள்ளர்கள் இன்றும் தஞ்சரையர், வல்லத்தரசு முதலிய பட்டங்களை சுமந்து வாழ்ந்து வருகின்றனர். 


முத்தரைய மன்னர்கள் கள்ளர் மரபினர் என கூறும் நூல்களில் சில:-


* Epigraphica indica vol 13 ( 1915-1916) இந்திய தொல்லியல் துறை


* கள்ளர் சரித்திரம் , ந.மு.வே.நாட்டார்(1923), நாட்டுடமையாக்கப்பட்ட நூல்


* Studies in south indian jainism, Ramasamy ayyangar (1922), சென்னை பல்கலைக்கழகம் 


* History of pallavas of kanchi(1928), சென்னை பல்கலைக்கழக வரலாற்றுத்துறை


* ஆழ்வார்கள் காலநிலை (1928), மு இராகவயங்கார், தமிழ் கல்விச்சங்கம் வெளியீடு


* பல்லவர் வரலாறு (1944), ம. ராசமாணிக்கனார், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம்


* Inscriptions of pudukkottai state vol 1 (2002) தமிழக தொல்லியல் துறை


* பாண்டியர் வரலாறு, ராஜசேகர தங்கமணி (விகடன் வெளியீடு) 



ஆய்வு:- 
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு. பரத் கூழாக்கியார்
திரு . சோழபாண்டியன் 


நன்றி :  திரு. முத்துராஜா, திரு. செம்பியன் அரசன், திரு. கார்த்திக்  காலிங்கராயர் 

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்