புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோவில் வட்டாரத்தில் அமைந்துள்ளது கிள்ளனூர். இந்த ஊரில் கிள்ளிநாச்சிமுத்து கிள்ளிக்கொண்டார் என்பவருக்கு சிலை வைத்து வணங்கி வருகின்றனர்.
இவரை பற்றிய ஆய்வில், அந்த பகுதி மக்களால் செவிவழி செய்தியாக கூறப்படுவது கிள்ளிநாச்சிமுத்து கிள்ளிக்கொண்டார் ஐந்து வெள்ளையர்களின் தலையை கூரிய ஈட்டியால் கொய்து ஊர் மந்தையில் வீசினாராம். வேறு விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
இதே பகுதியில் அமைந்துள்ள, கிள்ளுக்கோட்டையில் கள்ளர் குடியின் மழவராயருக்கு சொந்தமான ரிஷப காளைக்கு கள்ளர்கள் தங்களுடைய பொதுக்கோவிலில் சிலைவைத்து வழிபடுகிறார்கள். இக்காளை கலந்துகொண்ட ஜல்லிக்கட்டு போட்டியில் எங்குமே அகப்பட்டதில்லை.
குறுநில மன்னர் கள்வர் கள்வன் முத்தரையர் என்கிற கல்வெட்டும் இங்கே தான் உள்ளது.
கள்ளர் குடியின் தேவர் பட்டப்பெயர் கொண்டவரின் திருமண மகால் இங்கு சிறப்பு பெற்றது.
திருச்சிஉய்யக்கொண்டான் திருமலை, துளசிமாக நாடு பகுதியிலும் கிள்ளிக்கொண்டார் என்ற பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்ந்துவருகின்றனர். மேலும் கிளிகொண்டார் என்ற பட்டம் உடைய கள்ளர்களும் உள்ளனர்.
கள ஆய்வு : திரு. பரத் கூழாக்கியார்