செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய தேவர்


கள்வர் பெருமகன் தென்னன் என்னும்  பாண்டியர் வழிவந்த


வரலாற்று உலகில் உச்சம் தொட்ட பாண்டியத்தேவர்.


சித்திரை மாதத்து மூலநட்சத்திரம்...

பார்புகழும் பாண்டியர் பெருமையை மீட்டெடுத்த பாண்டியன்.

தமிழகத்தில்..

சோழர்களையும் சேரர்களையும் வென்று வடக்கே நெல்லூர் முதல் தெற்கே குமரி வரை கைப்பற்றி..

வடவேங்கடம் முதல் தென்குமரி வரை தமிழக நிலப்பரப்பு முழுவதையும் பாண்டியரின் ராஜ்யமாக கைக்கொண்டு செங்கோல் செலுத்தி ...


" எம் மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியத் தேவர்"


என்னும் பட்டம் பெற்ற பாண்டியன். 


கி.பி.1251 இல் பாண்டிய வேந்தனாக முடிசூட்டப்பட்டார்.


சேரநாட்டை அரசாண்ட

வீர ரவி உதய மார்த்தாண்டன் என்பவரை வீழ்த்தி கேரளாவை கைப்பற்றினார்.


திருவானைக்கா கோவில் கல்வெட்டு.

இவர் பிறந்த சித்திரை மாதத்து மூல நட்சத்திர நாள் .." சேரனை வென்ற திருநாள் " என்ற பெயரில் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.


சோழநாட்டின் கடைசி அரசனான மூன்றாம் இராஜேந்திரனையும் வென்று சோழத்தை தனதாக்கினார்.


சிதம்பரம் கல்வெட்டு இவ்வெற்றியை இவ்வாறு கூறும்..


" காரேற்றத் தண்டலை காவிரி நாடனை கானுலவுந் தேரேற்றி விட்ட செழுந்தமிழ் தென்னவன் "


சோழநாட்டில் முகாமிட்டிருந்த போசாளர்களின் ஆதிக்கத்தை முற்றிலும் நீக்கி பாண்டியத்தை நிறுத்தினார்


ஸ்ரீரங்கத்திலுள்ள கல்வெட்டு ..

கர்நாடக தேயத்து சோமனை வானுலகிற்கு அனுப்பிய பாண்டியன் என்னும் ஒரு செய்தியை பதிவு செய்கிறது.


பின்னர்..

சேந்தமங்கலத்தை ஆட்சி செய்த கோப்பெருஞ்சிங்கனையும் வென்றார்.


வானர்களின் மகதநாடு.. கொங்கு மன்னர்களின் கொங்குநாடு.. 

இவற்றையும் கைப்பற்றிய பாண்டியன்.


"கொங்குஈழம் கொண்டு கொடுவடுகு கோடுஅழித்து கங்கை இருகரையும் காவிரியும் கைகொண்டு வல்லாளனை வென்று காடவனைத் திறைகொண்டு தில்லை மாநகரில் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் செய்தருளிய கோச்சடைபன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள்" 


இலங்கையை வென்றதால் சுந்தரபாண்டியனுக்கு 

" இலங்கைய வென்ற இரண்டாம் ராமன் " என்னும் பெயரும் உண்டு.

 


விஜயகண்ட கோபாலனை கொன்று

காஞ்சியை கைப்பற்றி, பிறகு வடக்கே சென்று காகதீய மன்னனான கணபதியை வென்று நெல்லூரை கைப்பற்றி

அங்கே வீராபிசேகம் செய்தார்.


" வாக்கியல் செந்தமிழ் சுந்தரபாண்டியன் வாளமரில் வீக்கிய வன்கழற் கண்ட கோபாலனை விண்ணுலகிற் போக்கியபின் "


மொத்த தமிழ்நிலத்தையும் இலங்கையையும் கைகொண்டு..

எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியத்தேவர் எனவும், எல்லா தலையான பெருமாள் என்றும் பெயர் பெற்ற உச்சம் தொட்ட பாண்டியன்.


சிதம்பரம் மற்றும் ஸ்ரீரங்கம்கோவிலுக்கு பாண்டியன் அளித்த அறக்கொடைகள் ஏராளம். பொன்னால் வேய்ந்து..

 பொன் வேய்ந்த மகிபதி என்று பெயர் பெற்றார். சிதம்பரம் மேலைக்கோபுரத்தை எடுத்தவரும் இவரே.

சுந்தரபாண்டியன் கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது.


மதுரை மீனாட்சி 

அம்மன் கீழைக்கோபுரம் எடுத்தவரும் இவரே.

அவனி வேந்தராமன் திருக்கோபுரம் என்பது கல்வெட்டுப்பெயர்.


ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவர் அளித்த படகு துலாபாரம் உலகளவில் சிறப்பான வரலாற்று நிகழ்வு.


கடிகைகளில் தமிழ் பாடம் கற்பிக்க 

" முத்தமிழ் ஆசிரியரான தமிழ் கரைகண்ட சாத்தனார் " என்பவரை ஆசிரியராக நியமித்து அக்கடிகைக்கு பொய்யாமொழி மங்கலம் என்னும் ஊரை தானமாக அளித்த பாண்டியன்.


சிதம்பரம் கோவில் சரசுவதி பண்டாரத்திலுள்ள ஏட்டுச்சுவடிகளை மறுபிரதி எடுக்க 20 பண்டிதர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியமாக நிலம் வழங்கிய பாண்டிய்ன்..


ஆலயப்பணியும் அறப்பணியும் ஒருங்கே ஆற்றி.. ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த இப்பாண்டியனை... 


இவரது பிறந்த நாளுக்கான வாழ்த்துப்பா ஒன்றை திருப்புட்குழி திருமால் கோவில் கல்வெட்டு இவ்வாறு பதிவு செய்கிறது..


" வாழ்க கோவில் பொன்வேய்ந்த மகிபதி.

வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்.

வாழ்க மண்டலம் யாவையுங் கொண்டவன்.

லாழ்க சுந்தர மன்னவன் தென்னவனே.."


வாழ்த்துகள் பாண்டியரே...


சுந்தரபாண்டியன் திருநாளான சித்திரை மூலநட்சத்திர நாளை அரசு விழாவாகக் கொண்டாட ஆவண செய்யவேண்டும்.


நன்றி . திரு. மா.மாரிராஜன்.

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்