செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

பாண்டிய மன்னன் பராக்ரமா பாண்டியனின் அதிகாரிகளின் சந்ததியினர் புத்தூர் பாண்டியர்கள்


சோழவளநாட்டில் தஞ்சை பகுதியில் உள்ள அம்மாப்பேட்டை அருகில் உள்ள இராசேந்திர சோழர் காலத்தில் மூலகுடியாகிய திருபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்ட ஊர் புத்தூர். அருள்மிகு சவுந்தரநாயகி அம்பாள் சமேத புற்றிடங் கொண்டீஸ்வரர், இங்கு உள்ள பழமையான ஆலயமாகும்.  

முகப்பில் மூன்று நிலை கோபுரம் உள்ளது, அதனை அடுத்து பெரிய மண்டபம் உள்ளது அதில் கொடிமரம் உள்ளது. வலது புறம் கிழக்கு நோக்கிய விநாயகர் சன்னதியும் இடது புறம் முருகர் சன்னதியும் உள்ளன.

கருவறை துவிதள விமானமாக உள்ளது. அதில் தென்முகன் லிங்கோத்பவர், துர்க்கை பிரமன் உள்ளனர். பிரகாரத்தில் மேற்கு நோக்கிய மண்டபம் உள்ளது அதில் ஒன்பது கோள்கள் , பைரவர், சரஸ்வதி ஆகியோர் உள்ளனர். சூரியனுக்கு தேர் போன்ற ஒரு கருவறை உள்ளது

இறைவன்- புற்றிடம்கொண்டீஸ்வரர்

இறைவி- சௌந்தரநாயகி



புத்தூர் கோவிலில் 2011 ஆம் ஆண்டு திருப்பணிக்கு நன்கொடையளித்த சோழநாட்டு கள்ளர்பெருங்குடிகளின் பட்டங்கள்:-

பாண்டியர்
அஞ்சாத்தேவர்
வாண்டையார்


இதில் உள்ள பாண்டிய பட்டம் உடைய கள்ளர்கள் பாண்டிய மன்னன் பராக்ரமா பாண்டியனின் அதிகாரிகளின் சந்ததியினர் ஆவார்கள்.













ராணி பாரடைஸ் திரையரங்கு உரிமையாளர் திரு. நந்தகுமார் பாண்டியர் ஆவார். மிக பழமையான திரையரங்கு என்றாலும் தஞ்சையின் தற்போதைய சிறந்த திரையரங்கு என்று இதனை தான் சொல்கிறார்கள். சென்னைக்கு சத்யம் தியேட்டர் மாதிரி தஞ்சைக்கு ராணி பேரடைஸ்.


முதலாம் ராஜேந்திரன்-கரந்தை செப்பேடு (கி.பி.1020 ). புத்தூரில் கண்டுபிடிக்கப்பட்டது. கரந்தை தமிழ் சங்கத்தில் வைத்து பாதுகாத்தமையால் அப்பெயரில் அழைக்கப்படுகிறது. ஐம்பத்தியேழு இதழ்கள் கொண்டவை.





புத்தூர் பகுதியில் வாழ்ந்த ஐயா. சேவு பாண்டியர் என்பவரிடம் இருந்து கரத்தை செப்பேடு கிடைத்தன.

கரந்தை செப்பேடுகள் முதல் இராசேந்திர சோழனால் பிராமணருக்கு அளிக்கப்பட்ட கொடை ஊராகிய திருபுவனமாதேவி சதுர்வேதி மங்களத்தின் தலைமை ஊராகும். கரந்தை செப்பேடுகளில் எட்டாவது ஏட்டின் பத்தொன்பதாவது வரி குறித்திடும் " மூலகுடியாகிய திருபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்" என்பது இப்புத்துரேயாகும். இச்சதுர்வேதி மங்கலத்தின் ஊர்ச்சபையும் இவ்வூரிலேதான் இருந்துள்ளது. எனவே, இச்சாசனத்தொகுதி ஊர்ச்சபையாரால் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது புலனாகின்றது.

இச்செப்பேட்டினை வெளியிட்ட முதல் இராசேந்திர சோழனின் ஆட்சியாண்டு எட்டிலிருந்து ( கி பி 1020 ) இரண்டாம் சோழனின் ஆட்சியாண்டு இருபத்திரண்டு வரையில் ( கி. பி 1168 ) இவ்வூர்ச்சபை தொடர்ந்திருந்தற்குக் கல்வெட்டுச் சான்றுள்ளது.

இதனை,

"ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ 
தேவற்குயாண்டு 22 ஆவது நித்த விநோத வளநாட்டு

வீரசோழ வளநாட்டு பேரமதேயம் ஸ்ரீபுத்தூரான

திருபுவனமாதேவிச் சருப்பேதி மங்கலத்துப் பெருங்குறி

மகாஸவையோம்"
என்னும் கல்வெட்டுத் தொடர்கள் உணர்த்துகின்றன.

கிபி 1320 அளவில் திருபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலத்திலமைந்த சோழநாட்டுப் பகுதிகளில் " பராக்ரம பாண்டியன்" என்பவன் ஆட்சி புரிந்துள்ளான். அவனது பாண்டியநாட்டரசியலதிகாரிகள் புரிந்த அதிகாரத்தின் விளைவாக இப்பகுதி மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. புத்தூருக்கு அருகில் வெட்டாற்றின் வடகரையிலமைந்த "பத்துரில்" அழிந்து புதைந்துள்ள சிவன் கோவில் கல்வெட்டு இதனைக் குறிக்கின்றது.

""ஸ்வஸ்திஸ்ரீ கோமாற பன்மரான திருபுவன சக்கர

வர்த்திகள் ஸ்ரீபராக்ரம பாண்டிய தேவருக்கு ...........

இவ்வூர் மேலை மங்கல வீதியில் வடதுண்டம் கீழ்

சிறகில் ஒரு மனையைப் பற்றி வழக்கு உண்டென்று
இரண்டு கோவிலிலும் பூசை முட்டிக்கிடந்த"


தொடர்ந்து கி. பி. 1325 இல் புத்தூரிற்கு நேர் மேற்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவிலமைந்த "திரிபுவன வீரபுரத்தில் பாண்டிய மன்னன் பராக்ரமா பாண்டியனின் அதிகாரிகள் இப்பகுதி மக்களிடத்தில் பாடிகாவல், மெய்க்காவல், மகமை ஆகிய உரிமை களைப் பெற முற்பட்டுள்ளனர். இந்நிலையில் நிலவுரிமையாளராகிய வைணவர்களோடு பூசல்கள் மிகுந்து, ஒருவரையொருவர் அழிக்கும் கொடுமைகளும், பொருழிவுகளும் நடந்திருக்கின்றன. வைணவர் சிலர் கொல்லப்பட்டதுடன் அவர்கட்குரிய விக்ரம சோழ விண்ணகரமும் அழிக்கப்பட்டுள்ளது.

திருமால் கோயில் கல்வெட்டுகள் கலகத்தின் முடிபாக அமைதிபெற்ற பாண்டி நாட்டத்திகரிகள் நடுக்காவல் பெற்று உறுதி செய்தமையைக் குறிக்கும் கல்வெட்டில்,

"திருக்கோயில் திருமுற்றத்திலுள்ளாரை நலிதல் அரங்க

வரை வெட்டுதல் செய்யக் கடவோமல்லமாகவும்

தங்கள் நாடு தந்தபடி இவ்வூர் பூர்ஷித்த நாள் முதல்

காவல் பேற்றுக்கு முற்பிலாண்டுகள் எங்கள் தேவரை
நோக்க ஒரு அன்னியாயம் அடுத்துச் செய்யமால்
காவற் சொற்படாமல் ........... கடவோமானமைக்குச்
சேனைப் பெருமாளான சோழ சோழமூவரையர்தம்
வாசலிலே பெறவும் படுவோமாக"


என்பர் குறிக்கப்பட்டிருக்கிறது அறியத்தக்கதாகவும். இவாறான குழப்பம் மிகுந்த காலத்திலேயே, பிராமணரின் தான நிலங்களுக்குரிய சாசனமான இச் செப்பேடுகள் பாதுகாக்கும் முயற்சியாகக் கிணற்றினுள் மறைக்கப்பட்டுள்ளன.





கரந்தை செப்பேடுகள் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. பெரிய அளவில், 57 செப்பேடுகளில் சாசனம் எழுதப் பெற்று ராஜேந்திரன் முத்திரையுடன், அது காணப்படுகிறது. ராஜேந்திரசோழன், தன் தாய் திருபுவனமாதேவி பெயரில், மிகப் பிரமாண்டமான ஏரியை அமைத்ததோடு, அதனருகில் இருந்த, 51 ஊர்களிலிருந்து அரசுக்கு வருவாயாகக் கிடைக்கும், 51 ஆயிரத்து ஐம்பது கலம் நெல்லை, பல்வேறு சாத்திரங்களில் உள்ள அறிஞர்களின் உணவுக்காக அளித்தான் என்பதை, அந்த செப்பேட்டு சாசனம் விவரிக்கிறது. அதில், பெரிய ஏரி பற்றிய பல செய்திகளும், சுற்றுப்புற ஊர்களின் நிலஅளவை, பல்வேறு சமயம் சார்ந்த கோவில்கள் பற்றிய விவரங்களும் குறிக்கப் பெற்றுள்ளன.

ஆய்வு: திரு. பரத் கூழாக்கியார்

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்