திங்கள், 20 பிப்ரவரி, 2023

கிருஷ்ணசாமி சேனை நாட்டார் (சேனைநாட்டார்)



ஆழங் காணமாட்டாத அலைகடலில் அளவிறந்த மடுகவுள் உள்ளன . இருண்டு சூழ்ந்திருக்கும் அவற்றின் அடியில் விலை வரம்பில்லாத பேரொளி  படைத்த மணிகள் பல கிடக்கின்றன’ என்ற கருத்தமைந்த  ஆங்கிலக் கவியொன்று சிறு வகுப்பில் ஆங்கிலம் பயிலும்  மாணவர்கள் படிப்பதுண்டு. நல்லறிவு படைத்த பேரறிஞர் பலர் ஏனை  மக்கட் கூட்டத்தின் இடையே ஒளிமழுங்கிக் கிடக்கின்றனர்  என்பது இவ்வாங்கிலப் பொருண்மொழியின் உள்ளுரை இதற்குப் போதிய எடுத்துக்காட்டாக நம் தமிழ்நாட்டில் பேரறிஞர் பலர் இருந்து மறைந்திருக்கின்றனர். அவருள் யான் பேரறிஞர் பள்ளியூர், ஆசிரியர், திரு. க. கிருஷ்ணசாமி சேனை நாட்டார்  ஒருவராவர்.

பள்ளியூர் என்பது, தஞ்சை ஜில்லாவில் உள்ள சாலிய மங்கலத்திலிருந்து பாபநாசத்துக்குப்    போகும் சாலையில், விண்ணாற்றங்கரையில்  இருக்கும் இருப்புதலை  என்ற ஊருக்கு  கிழக்கில், அரை மைல் தொலைவில் இருக்கிறது. இவ்வூரில் வாழும் தமிழ் மக்கள் பலரும் தமிழன்பும்  ,

நல்லொழுக்கமும் , தமிழறிஞர்பால் பேரார்வமும்  உடைய  கள்ளர் மரபினராவர் . நவில் தொறும் நூல் நயம்போலப் பயில்  தொறும் பெருநயம்சுரக்கும் பண்புஇவர்பால் இலங்கக் காணப்படும்  * தமிழ்க்கிலக்காகிய சான்றேர் தலைவ' என எம்போல்வார் விறு  கொண்டு பேசும் தக்கோராகிய திரு. பண்டித ந. மு. வேங்கடச நாட்டார் அவர்களைப் பயந்த பெறலரும் பேறு, இம்மரபிற்குரிய எனின் அதனைப்பற்றி வேறு கூறல் மிகையெனக் கருதுகின்றேன்

இவ்வூர்க்குச் சென்ற பதின்மூன்றாண்டுகட்குமுன்  என்கண் திரு. இராமையா மழவராயருடன் யான் சென்றிருந்தபோது உடல்  தளர்ந்தும், உளம் சிறந்து தமிழ் நலம் வயங்கத் தோன்றிய அவர்  நேரிற்காணும் பேறுபெற்றேன். அதுபோது, அவர் நிகண்டொன்றினைத்  தாமே யெழுதிவந்தனர். சிலநாள் அவ்வூரிற்றங்கி அவரெ அளவளாவியபோது, அவரது புலமை நலம் என் உள்ளத்தை  கவருவதாயிற்று. யான் பலயாண்டுகளாகச் செய்துவந்த ஐங்குறுநூறு  நூற்றாறிச்சிக்கு  அவர் உதவிய சில குறிப்புக்கள் பெருந்துனை  செய்தன வாகலின், அந்நன்றி குறித்து அவரது வரலாற்றினைச்  சிறிது  எடுத்துத் தமிழுலகுக்கு அறிவிக்க எண்ணி அவரது உறவினரும்  என் நண்பரும் ஆகிய திருவாளர் இராமையா மழவருக்கு  எழுதியதில் , ஆசிரியர் அவர்கள் மைந்தர் திரு. நாராயணசாமி சேனை நாடாரே அவரைப்பற்றிய குறிப்புக்கள் சில உதவினர். அவற்றைத்  தொகுத்துத் தமிழுலகுக் கறிவிக்கத் தொடங்குகின்றேன்.

தஞ்சை ஜில்லாவிலே இடையிருப்பு என்பதோரூர் ஆவ்வூரில் , இற்றைக்குச் சற்றேறக்குறைய அறுபத்தைந்து யாண்டுகட்குழு கள்ளர் மரபில் எளிய குடும்பமொன்று தமிழறிவிலும், தமிழிசையிலும்  சிறப்புற்றிருந்தது. அதன் தலைவர் திரு. கரும்பாயுதச் சேனை  நாட்டாராவர். அவர் இசையிலும் நாடகத்திலும் நல்ல புகழ் பெற்றிருந்தார்  . அவர் இயற்றியவற்றைப் பள்ளியூர் திரு. முருகை சேனை நாட்டார் என்ற தமிழன்பர் எனக்கு மிக்க இனிமையாக  பாடிக் காட்டுவது வழக்கம்.

நாடகாசிரியராக விளங்கிய கரும்பாயுகச் சேனே நாட்டாருக்கு  மணமாகிய பல ஆண்டுகள் கழித்தே ஆசிரியர் கிருஷ்ணசாமி நாடார் பிறந்தனர். கரும்பாயுதச்சேனே நாட்டார் தமக்குப் பிள்ளை  இல்லாமல் இருப்பதை நினைத்து வருந்துகையில், பெரியாரொரு

இவர் என் நண்பர் திரு இராமையாவுக்கு மாதுலர்  அவரை நோக்கி, ' நீவிர் ஞானசம்பந்தர் ஆண்பனையைப் பெண் பனயாக்கிய பதிகத்தை இசையொடும் பாடிப் பாராயணம் செய்தவரின்  உமக்குப் பிள்ளைப்பேறு உண்டாகும் ' என்று சொல்லி அப்பதிகத்தையும் எழுதித்தந்தார். அதன்பிறகு மூன்றாண்டுகள்  கழித்தே அதாவது 1818 ஆம் ஆண்டில் ஆசிரியர் கிருஷ்ணசாமி சேனோட்டார் தோன்றினார் . இதனைக்கேட்டதும், யான் கிருஷ்ணசாமி சேனநாட்டார் அவர்களே நோக்கி, " உங்கட்கு அப்பதிக சம்பந்தமான பெயர் ஏன்  வைக்கவில்லையோ? " என்றேன். அதற்கு அவர் தம் பெயர் தந்தைக்குத் தந்தை பெயர் என் பெயர்  என்றார் .யானும்  அதற்கு மேல் அதனை வற்புறுத்தவில்லை .

கிருஷ்ணசாமி சேனநாட்டார் சிறுவயதில் தம்மூர்க் கருகிலுள்ள கரம்பத்தூரில் இருந்த 

திரு. கண்ணுசாமிப் பிள்ளையவர்களிடம்  சின்னூல்களும், திவாகரம், நிகண்டு முதலியனவும் பயின்று வந்தார். சில ஆண்டுகட்குப் பின்னர், பள்ளியூருக்கு வந்து தங்கி அருகிலேயுள்ள கனஞ்சேரியில் வாழ்ந்துவந்த முத்தமிழ்வித்வான் திரு. வா. அண்ணுசாமி பண்டிதர்பால் பேரிலக்கிய இலக்கணங்களைக் கற்றுப்   புலமை சிறக்கலானார் .

நம் ஆசிரியர், சேனைநாட்டார்  தொடக்கத்தில் இருப்பையூரிலே சிலகாலம் கிராம முனிசீபாக  இருந்து வந்தார். அதற்குப்பின், பள்ளியூரிற் பள்ளிக்கூடம் ஒன்று சாரதாவிலாச பாடசாலை யென்ற பெயரால் நிறுவிப்பலமானவர்கட்குத் தமிழறிவு கொளுத்தி வந்தனர் . இவர் பல ஆயிரக்கணக்கினவாய பண்டைத்தமிழ்ப்பாட்டுகளைக் குறித்தும் ,மனப்பாடம் செய்துமிருந்தார்.இவருடைய நண்பர்களும் இவரை   யொப்பத் தமிழ்ப்புலமையும் சைவ மாண்புமுடையவர்கள் ,சாலிய மங்கலத்தில் வாழ்ந்திருந்த செந்தமிழ்ப் புலவரும்,சிவநேயச் செல்வருமான திரு. சாம்பசிவம் பிள்ளையவர்களும்,பூண்டியில்  பிறந்து, நாகையில் வாழ்ந்துவந்த தமிழ்ப்பெரும் புலவரும் , "நீலலோசனி " ஆசிரியருமாகிய சதாசிவம் பிள்ளையவர்களும் இவர்பால் பெருநட்புடையராய்  இருந்தனர்.

இது நிற்க ,அரித்துவாரமங்கலம் என்னுமூரில் அக்காலத்தே தமிழ்ப்பெரும்  புலமையும், தமிழ் வள்ளன்மையும் ஒருங்குபெற்ற பெருநலக்குரிசில்  ஒருவர் வாழ்ந்திருந்தார். அவர் பெயர் காணும் போதே உடல் சிலிர்த்து மெய்ம்மயிர் பொடித்து உள்ளம் ரெக்குருகும் தமிழ்ப்புலவர் பெருமக்கள் இன்றும் பலர் உள்ளனர் . அவர் பெயர் கோபாலசாமி இரகுநாத இராசாளியார் என்பது. இவர்  புகழைக் கூறத்தொடங்கின் இக்கட்டுரை வரம்பின்றிப் பெருகுமாதாலின்,இப்பெருமான் புலவர்பாடும் பொன்ராய்  புகழ்பெற்ற புலை பெருந் திருவள்ளல் என்ற தொடரொன்றைக் கூறி மேற்செல்கின்றேன். இவர் ஒருகாலத்தே ஒரு பெருங்கழகத்தைக் கூட்டி  அரசஞ் சண்முகனார் என்ற இருந்தமிழ்ப் புலவர் பெருந்தகையின் தலைமையின்கீழ்ப் பல பெருமக்களைச் சொற்பொழிவாற்றித்  தமிழ் நலத்தைத் தமிழுலகுபெற உதவினார் .  சொற்பொழிவாற்றிய பெரு  மக்களுள் நம் ஆசிரியர், திரு. க. கிருஷ்ணசாமி சேனே நாட்டார்  மொருவர் எனின், இவரது புலமை நலம் அக்காலத்தே அறிஞர்  பெருமக்களால்  எந் நிலையில் பாராட்டப்பட்டுள்ளதென்பது இனிது 

விளங்கும்.

இவர் மிகப்பல பழந்தமிழ்ப் பாட்டுக்களை நெட்டுருச் செய்திருந்தார்  என்று முன்பே கூறினேன். பழைய நூல்கள் பலவற்றில்  எழுத்துப்  பிரதிகள் இவர்பால் இருந்தன. யான், கரந்தைத் தமிழ் சங்கத்தில் தொண்டுபுரிந்து வருங்காலத்தில் , தமிழ்ச்சங்கம், தொல்காப்பியச் சொல்லதிகாரத் தெய்வச்சிலையார் உரை ஆராய்ச்சி  செய்யப்பெற்று வந்தது. டாக்டர் திரு. உ. வே. சாமிநாதையர் அவர்களிடமிருந்து சங்கத்திற்கு வந்த எட்டுப் பிரதியைப் படித்துப்படியெழுதும் துறையில் யான் பழகியிருந்தமையால்,இவர்பால் இருந்த  எழுத்ததிகார இளம்பூரணருரையைப் படியெடுத்துக்கொள்வதற்கு  எனக்கு வேட்கையுண்டாயிற்று. ஆகவே, யான் பள்ளியூரிலே பல  நாள் தங்கி இளம்பூரணாருரைப்  பிரதிக்குப் படியெடுக்கலானேன் . அதுபோது இவரை நெருங்கி அளவளாவியபோது இவரைப்   புணர்ந்துகொள்வதற்கு எனக்கு வாய்ப்புண்டாயிற்று.

குறிப்பு:-புலவர் பெருமக்களின் அருங்கவித்தனி மணிகளை சேமித்தலும், அன்னார்  வரலாற்றினைப்  போற்றலும் நாட்டின் நிலைநிலைநாட்டற்குரிய நெறிகளாம். தமிழ்ப் பேரறிஞர்கள் இத்துறைகளில் வழங்குங் கட்டுரைகளின் வாய்ப்பை நத்தமிழணங்கு தனக்கினிய வைப்பென வரவேற்கின்றேன் .

ஒருநாள் இவரோடு பேசிக்கொண்டிருக்கையில், இவர் பிறப்பைப் பற்றி   முன்னே கூறிய வரலாற்றைப்பற்றிப் பேச்சு நடந்தது. அது போது அப்பதிகத்தை அவர் பாடிப் பொருள் கூறிவந்தார்.

வருகையில் "உள்வேர்போல் "எனத் தொடங்கும் பாசுரத்தைப் பாடிக்காட்டி ஒரு திருத்தம் லாலதே என்று குறித்துக் கொண்டேன் . இது நிகழ்ந்த யாண்டுகட்குப் பின் யான்  அக்கிருப்பதிகமெழுந்த திருவோத்தூரிலே தங்கி வாழத் திருவருள் கூட்டிவைத்தது. அன்றியும்,யான் , அங்கேயிருந்து அத்திருப்பதிகத்துக்கு உரையெழுதும் திருவருணீயமுண்டாயிற்று. அவ்வுரையை வெளியிட்ட காலத்துக் கிடைத்த பிரதி அனைத்திலும் ' உள்வேர் ' என்ற பாடமே   காணப்பட்டதே யன்றி  "உள்வீர்” என்ற பாடமுண்டென எவரும் கூறவுமில்லை அதனால் இதனை அந்நூலுட் காட்டாது அங்கு நடந்த ஒளவைத் தமிழக மாணவர் கழக ஆண்டுவிழாவின் அறிக்கையில் மட்டில்  குறிப்பாய்க் காட்டியிருந்தேன். சென்ற திங்களில் யான் திருச்சி சேர்ந்த பூவாளுர் ஜில்லாவைச்   சேர்ந்த பூவாளூர் சைவ சித்தாந்த சபையின் ஆண்டுவிழாவுக்குச்  சென்று திருச்சி வழியாகத் தஞ்சாவூர்க்கு  வருகையில் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் என்பார் ஒருவரைக்  கண்டேன். இவர் இப்பதிகத்தைப் பாடுகையில், ' உள்வீர் ' என்று  பாடத்தையே பாடி, " அதுவே பொருத்தமானது? என்று வற்புறுத்தினார்.

சங்கத் தொகை நூல்களின் சுவை காண்பதில் இவருக்கு ஆர்வமுண்டு. ஒருமுறை, யானும் சில நண்பரும் கூடி திருக்கருகாவூருக்குச் சிவபெருமானே பரவ விரும்பிச் சென்றோம் . அதுசமயம்,ஆசிரியர் சேனநாட்டவர்கள் சங்க நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை முதலிய  

நூல்களிலிருந்து சிலவற்றைக் காட்டி எங்களை மகிழ்வித்ததே ஐங்குறுநூற்றின்மேல் எனக்கு ஆர்வமுண்டாகுமாறு  அவரது உரைத்திறத்தையும் விரைவிற் கவிபாடும் வளமையையும் சொல்லிக் களிப்பூட்டினார்கள்.

நாங்கள் திருக்கருகாவூரிலிருந்து திரும்புங்கால் திரு. அ. நாராயணசாமி அய்யரோடு பயின்முெழுகிய  அவரது சங்க நூலாராய்ச்சியின் மாண்பையும் பாராட்டிப் பேசி    வந்தார்கள். அக்காலையில், வெளியாகியிருக்கும் சங்க நூல்களில்  காணப்படும் பாட வேறுபாடுகளும், கருத்து வேறுபாடுகளும் அய்யர்  அவர்கள் சொல்ல நாம்  குறித்துவைத்திருக்கும் குறிப்புகளும் அவர்கள் எங்கட்குக் கூறி வழிநடை வருத்தத்தை மாற்றும் திறம் இன்றும் என் நெஞ்சில் நிலவுகிறது.

1927-ஆம் ஆண்டில் திரு வவளிவநல்லூரில்   நடந்த விழா  வொன்றிற்கு யான் சென்றிருந்த காலத்து அங்கே வாழ்ந்திருந்த பெருந்தமிழ்ப் புலவர் ஒருவரைக் கண்டு, அவர்பால்  பாடியருளிய கோயிற்புராண மூலப் பிரதியிருப்பது அறிந்தேன். அதனைப்  படியெடுத்துக்கொள்ள விரும்பி, அவ்யாண்டின் கோடை விடுமுறையிலே பள்ளியூருக்குச் சென்றிருந்தேன். அவ்வூரிலுள்ள மடம் இத்தகைய தொண்டிற்கு ஏற்றது; எனக்கு வேண்டிய உண்டி, உறையுள் யாவும் அங்குள்ள நண்பர்கள் இனிது உதவ  அவர் தம் நன்றி என் நெஞ்சைவிட்டு என்றும் அகலாது .



 சமயத்தில், யான்,ஐங்குறு நூற்றினைப் படிக்கத் தொடங்கியிருக்கும் செய்தியினைத்   திரு. ஆசிரியர் சேனநாட்டாரவர்கட்குத் தெரிவித்தேன் .அவர்கள்  அச்சமயத்தில்  அந்நூல் குறித்துத் தாம் அய்யரவர்கள் சொல்லக் கேட்டனவெனக் கூறிய குறிப்புக்கள் பல அவற்றில்  ஒன்று வருமாறு:-

"குறு நாற்று முல்லைப் பகுதியில், 'அந்தீங்கிளவி தான்றர வயின் ' என்று தொடங்கும் பாட்டு , அச்சுப் பிரதியில்  இடம்விட்டுக் குறையாகவே காணப்படுகிறது. கிரு. அ.ம. அய்யரவர்கள் 'அப்பாட்டு முழுதுமேயிருக்கிறதெனச்   சொல்லியுள்ளார்கள் என்று, தாம் குறித்துவைத்திருந்த, அந்தீங்கிளவி  கிளவி தான்றா வெம்வயின், வந்தன்று மாதோ காரேயாவதும் யரும்படர்திர, வாய்மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே என்பதனைச் சொன்னார்கள் . பின்னர் யான், இந்நூலே யாராய்வது முயலுங்கால், எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர் திரு.சீர்காழி  கோவிந்தசாமி ரெட்டியார் அவர்கள்பால் இருந்த கையெழுத்துப் பிரதியைப் பார்த்து ஒப்பு நோக்கியபோது , இப் பாட்டு யாவதும் என்பதற்குப் பதிலாக “யாவயின்' என்ற பாட வேறுபாட்டுடன் நிரம்பியிருக்கக்  கண்டு பெரு மகிழ்வுகொண்டேன்.

இதனைப் பின் அறிஞர் பலர்க்குச் சொன்னபோது அவர்கள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை  யென்னலாம்.

திரு . சேனை நாட்டவர்கள் , தமக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியராகிய களஞ்சேரி 

அண்ணுசாமிபிள்ளையவர்கள் சென்ற காளயுக்தி யாண்டு சித்திரை பத்தாம்  நாள் சிவனடி சேர்ந்த செய்தி கேள்வியுற்ற அந்தக்   கணத்திலேயே  ஒர் இனிய பாட்டுப் பாடினர். அதன் பின் , அன்றைய நாள் ,காலம் முதலியவனைத்தும்   கூறப்பட்டிருக்கின்றன .அது வருமாறு :

சீர் கொண்ட தஞ்சைமா நகர் மன்னர் மன்னரின்

திகழ்வைத்ய சாலைமரபில்

சேர்ந்திடும் பிடக நூல் கலைஞர்களிலே வாசு 

தேவன்  தவந்துதித்தோன்



எர்கொண்ட விசய அண்ணுசாமி நாவலன் 

          ஈசன் முதலோர்கள் மீதில் 

 எழிலுறும் பாமாலை குடிப்பல் கவிகளும்

எத்து திருநீலகண்டர்

கார்கொண்ட சரிதை நாடக வுருவமாகவே 

          தந்து விண்ணதித் தென்கரைத் 

தண்களஞ்சேரிசிவ ஞலயத் கருகினில் 

          கருகருப் பக்தி னிழல்

பார்கொண்ட வைம்பா னிரண்டாண்டு சித்திரைப் 

          பத்தெனுந் தேதி திங்கள் ,

பண்புறும் மிதுனலக் கினபூர நாடனில்

          பானடி கலந்தனரோ .

திருவேரகம் சுப்பிரமணியர் நான்மணிமாலை, திருவேரகயம கட்டளைத் கலித்துறை, திருவேரக கட்டளைக் கலித்துறை ,திருவோக நிரோட்டக யமகவந்தாதி முதலியனவும் கிரு. அண்ணாசாமி பிள்ளை பாடியனவாகும். இனி, சேனைநாட்டாரவர்கள், பாலபோத விளக்கம் தொகைப் பொருள்  கண்டு, மாதர் இலக்கணம், பழஞ் செய்யுட்டிரட்டு என்பவற்றைச் செய்திருக்கிறார்கள்.

இவ்வண்ணம் தமிழ்ப்பணியால் நலமுற வாழ்ந்த இப்பெரிது  சென்ற சுக்கில ஆண்டு தைத்  திங்கள் எட்டாம் நாள் இறை திருவடிப் பேறு பெற்றார் . இவர் மகன் கிரு நாராயணசாமி நாட்டார் தம் தந்தை செய்துபோந்த பணியினையே ஆற்றி வருகின்றார்,

தமிழ்த்தொண்டு புரியும் தக்கோர் வாழ்க

திரு. இ. வை. அனந்தராமையரவர்கட்குக் கலித்தொகையாராச்சிக்கு வேண்டிய சில குறிப்புக்களை யுதவிய நண்பர்கள் இவரும் ஒருவரென்றும் கூறப்பெறுகின்றார்.


நன்றி: ஐயா. ஒளவை நடராசன்

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்