திங்கள், 27 பிப்ரவரி, 2023

திருபுவனம் வரலாறு



திருபுவனம் ஸ்ரீ ரங்கநாதபெருமாள் சந்தனகாப்பு அலங்காரத்தில்

தஞ்சை நாட்டில் கும்பகோணத்துக்கும், திருவிடை மருதுருக்கும் இடையே திரிபுவனம் என்ற ஊர் உள்ளது. மூன்றாம் குலோத்துங்கன் சிறப்புப் ஆ. பெயர்களில் ஒன்று திரிபுவன வீரன் என்பதாகும். அப் பெயரால் அமைந்த ஊர் திரிபுவன வீரபுரம் என்று பெயர் பெற்றுத் திரிபுவன மாயிற்று. அவ்வூரில் சிறந்து விளங்கும் சிவாலயம் குலோத்துங்கனாற் கட்டப்பட்ட தென்று சாசனம் கூறும்.'கட்டுமான முறையில் அது தஞ்சைப் பெரிய கோவிலை ஒத்திருப்பதாக அறிந்தோர் கருதுகின்றார்கள்.

இன்று 'திருபுவனம்' என்னும் பெயருடன் சிற்றூராகக் காட்சியளிக்கும் இவ்வூர் பன்னிரண்டாம் நூற்றாண்டளவில் ஒரு சிறந்த நகரமாக இருந்திருக்கிறது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் ராசேந்திர சோழன் செப்பேடுகளிற் குறிக்கப்பெற்றுள்ள வெண்ணிக் கூற்றத்துள் அடங்கிய ஊர்.

இவ்வூருக்கு வடக்கு எல்லையாக வீரசோழ வடவாறும், தெற்கு எல்லையாக பறவை ஏரி என்னும் பகுதியும் அடைவாயாக அமைந்துள்ளன. இப்பகுதியினுள் எங்கு பார்த்தாலும் சைவ வைணவச் சின்னங்கள் ஆங்காங்கு வரப்பிலும் வாய்க்கால்களில், தரிசிலும் சிதைந்து கிடைக்கும் சிற்பங்களுள், பறவை ஏரி என்னும் பகுதியின் வடபாலுள்ள பெரியதொரு ஆலின் கீழ் வறிதே நிற்கும் ஐந்தடி உயர அளவில், மிகப்பொலிவுடன், அமர்ந்த பாங்கிலுள்ள திருமால் திருமேனியும் குறிப்பிடத்தக்கவாம். 

இத்திருமேனிகள் ஊரினுள்ளிருக்கும் குளமொன்றிற் கிடந்தது எடுக்கப்பெற்றனவாகத் தெரிகிறது.



திருபுவனம் பஞ்சயாத்து தலைவர் கள்ளர் மரபை சேர்ந்த குருமூர்த்தி சாம்பலாண்டியார் 











இங்கு உள்ள கள்ளர் பட்டங்கள் 

1 ) தென்கொண்டார்
2 ) வாண்டையார் 
3 ) சாம்பலாண்டியார் 



இவ்வூரைப்பற்றிய ஒரு சில இன்பச்சுவை பொதிந்த நாட்டுப்பாடல்களில் " திருபுவனம், எண்பது வீதிகளைக்கொண்டது " என்று கூறப்பெறுவதாலும், கல்வெட்டினுள் " நகரம் திரிபுவன வீரபுரம் " என்று குறிக்கப்படுவதாலும், இவ்வூர் பெருநகரமாக இருந்த உண்மை புலனாகிறது. இவ்வூர் நகரமாக இருந்த காலத்தில் வீரசோழ வடவாற்றின் கரையில் சிவன் கோவிலும், ஊர்நடுவே திருமால் கோயிலும் தெற்கே ஐயன் கோயிலுடன், பிடாரி கோயிலும் இருந்திருக்கின்றன. 




இவைகள் இன்று முழுவடிவில் காணக்கிடைக்கவில்லை. சிவன் கோயில் சிதைவுண்டபின்ன்னர், ஆற்றின் அழிவால் புதைந்து கிடக்கின்றது. திருமால்கோட்டம் இருந்த இடமென்பதற்கறிகுறியாகத் திருசுற்று மதிசுவரில் சில பகுதிகளும், கருவறையின் அடித்தளமும் எஞ்சி நின்று காட்சி தருகின்றன. இக்கோயிலே மேற்குறித்த காலகட்டத்திற்கு இலக்காகிச் சிதைந்த விக்கிரம சோழ விண்ணகரமாகும். இச்சிதைந்த பகுதி பிற்காலத்தில் ஆற்றின் அழிவுக்கும் உள்ளாகியுள்ளதுள்ளதென்பதைச் சூழ்நிலையால் அறிவியலுமாகிறது. 

இவ்விண்ணகரத்தினுள் விளங்கிய பெருமாலும், திருமகளும் புதைந்து சீர்கெட்டுக் கிடந்ததைக் கண்ட ஊரார் , சில ஆண்டுகளுக்கு முன்னர் அத்திருமேனிகளை எடுத்து கோயில் திருமுற்றத்திலேயே கீற்றுக் கொட்டகையிட்டு அமைத்தனர். கீற்றுக் கொட்டகை தற்போது மங்களூர் ஓடாக மாற்றம் பெற்றிருக்கிறது.


மங்களூர் ஓடு போட்ட கொட்டகைக்குள் ஒன்பதடி அளவில் நெடிதாக அரிதுயில் கொண்டுள்ள பெருமாள் திருமேனியும், நான்கடி அளவில் அமர்ந்த நிலையிலுள்ள திருமகள் திருமேனியும் சிற்பத்தால் சிறந்து உயிர்ப்புடன் விளங்குகின்றன. இச்சிதைந்த கோயிலுக்குள் கிடந்த நரசிங்கமூர்த்தி, இராமபிரான், சீதா பிராட்டியார் ஆகிய தெய்வத் திருமேனிகளுடன், நம்மாழ்வார், இராமானுஜர், இரண்டு சேனை முதல்வர்கள் ஆகியோருடைய படிமங்களும் ஒரு சேர எடுக்கப்பட்டு மூலவருடனேயே வைக்கப்பட்டுள்ளனர்.





பிற்காலச் சோழர் காலத்தின் ஒரே கலையமைப்பு கொண்ட கோயில்களாக தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் ஆகிய நான்கு கோயில்களைக் கூறுவர்.

இரணியனை அழித்த நரசிம்மத்தினை இறைவன் சரபமூர்த்தியாக வந்து அடக்கிய தலம் திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில். வரகுண பாண்டியன் தனக்கு நேர்ந்த பிரமகத்தி பழி நீங்கிச் செல்லுங்கால், அப்பழி பின்னும் தொடருமோ என, அவனுக்கு உண்டாகிய நடுக்கத்தைத் தீர்த்து வைத்தமையால் சுவாமிக்கு கம்ப ஹரேஸ்வரர் என்று பெயர். (கம்பம் - நடுக்கம்).

கிழக்கு நோக்கிய அகன்ற வடிவ ராஜகோபுரம் பிரம்மாண்டமாய் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கோபுரம் முழுவதும் பல்வேறு புராணங்களை நினைவுபடுத்தும் சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் கடந்ததும் மூன்று நிலை கோபுரம் காட்சி தருகிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் சுவாமி, அம்பாள் சன்னிதியை தரிசனம் செய்யலாம்.

ஆலயம் தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், கங்கை கண்டசோழபுரம் கோவிலோடு ஒப்பிடும் விதத்தில் பிரம்மாண்டமாகவும், விசால மானதாகவும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் கருவறை விமானம் ‘சச்சிதானந்த விமானம்’. அது அமைதியையும், ஆனந்தத்தையும் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது, லிங்கோத்பவர் சிலா வடிவமும், பிச்சாடனர் உலா வடிவமும் ஆகும்.


இத்தலத்தில் இறைவன் பெயர் ‘நடுக்கந்தீர்த்த நாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இவரே ‘கம்பகரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாண்ட வடிவில் கிழக்கு முகமாய் ஒளிவீசும் திருமேனியில் இறைவன் காட்சி தருகின்றார். இத்தல இறைவனுக்கு திரிபுவனமுடையார், திரிபுவன ஈஸ்வரர், திருபுவன மகாதேவர் என்ற பெயர்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாமி சன்னிதியின் இடதுபுறம் தனி சன்னிதியாக அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அதில் தர்மசவர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். தேவர்களின் நடுக்கத்தை இறைவன் தீர்த்த பின், அறங்களை வளர்ப்பவளாக இத்தல அன்னை இருக்கிறாள்.

அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேஸ்வரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. இதுவே ஆதிசரபேஸ்வரர் சன்னிதியும், திருக்கோவிலும் ஆகும். மூலவர் கலைநயத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரின் அருகில் உற்சவமூர்த்தியாக சரபேஸ்வரர் அமர்ந்துள்ளார்.

சரபேஸ்வரர் கருவறையின் முகப்பில் இரண்டு அழகிய பெண்கள் துவார சக்திகளாக அமைந்துள்ளனர். இச்சிலைகள் மிகவும் கலைநயம் கொண்டதாக உள்ளது. சிவன், விஷ்ணு, துர்க்கை, சூலினி சக்தி களின் வடிவமான சரபருக்கு இப்பெண்கள் காவல் புரிகின்றனர்.

இது சரபேஸ்வரருக்குரிய சிறப்பு வாய்ந்த தலமாகும்.  கலைச் சிறப்புடைய சிற்பங்கள் இங்கு உள்ளன.  சோழர்கள் ஆட்சி காலத்தில் தான் சரபேஸ்வரர் வழிபாடு அறிமுகமாகியது.  சரப மூர்த்தி வடிவத்தினைக் கோயில்களில் அமைப்பதாலும் வழிபடுவதாலும் எதிரிகள் அழிக்கப்படுவார்கள், போர்களில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சோழர்கள் சரபேஸ்வரர் வழிபாட்டினைத் துவங்கினார்கள்.





போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய பெரிய கோவில், தீவினை நீக்கும் ஆதிசரபேஸ்வரர் சன்னிதி கொண்ட ஆலயம், சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்



திருபுவனம் திருக்கோவிலில் மூன்றாம் குலோத்துங்க சோழன் நினைவுகளுடன் ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியர்





















நன்றி  : 

வித்துவான், சி .கோவிந்தராசன் ,
விரிவுரையாளர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சை

முனைவர் ஜம்புலிங்கம் 

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்