திங்கள், 16 ஆகஸ்ட், 2021

மாவீரர் சோலைமலை அம்பலகாரர்

 


🏇🏾சிவகங்கை சீமையின் இருண்ட காலமாக இருந்த் 1772-1780 மறைக்கப்பட்ட வரலாறு
ஆறூர் வட்டகை நாட்டின்
காஞ்சிரங்கால் கிராமம்.



வரலாற்றில் இடம்பெற்ற ஊர் 250ஆண்டுகளுக்கு   முன்பு 1772 ல்  நவாப் படைகளால் ராஜா முத்து வடுகநாததேவர் கொல்லப்படுகிறார். சிவகங்கை சூறையாடபடுகிறது அந்த போரில் ராணி வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் விருப்பாட்சி சென்று தலைமறைவு ஆகினார்கள் பல்லாயிரம் கள்ளர்கள் கொல்லப்பட்டனர் அந்த போரின் முடிவில் காரியக்காரர்களாக திகழ்ந்த சோலைமலை  அம்பலகாரர்
மற்றும் கருப்பணன் அம்பலகாரர்களிடம் சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை கொடுத்துவிட்டு நவாப் படைகள் சென்னை பட்டினம் சென்றனர் எட்டு ஆண்டுகள் சிவகங்கை உசைன் நகராக மாற்றப்பட்ட காலம் அது இந்த காலத்தில் வெள்ளைகுதிரை மேல்  வேட்டை நாய்கள் பின் தொடர சோலைமலை அம்பலகாரர் சோலை அரசனாக நாட்டில் வலம் வந்துள்ளார் திருமணம் ஆகாதவர், நேர்மையின்சிகரம், வீரத்தின் அடையாளம், தெய்வீக மனம் படைத்தவர் சோலைமலை அம்பலகாரர் ஆகையால் தான் ராணி வேலுநாச்சியார்கு சிவகங்கை மீட்க பெரு உதவி செய்துள்ளார் இது அறிந்த நவாப் படைகள் சோலைமலை அம்பலக்காரரை சூழ்ச்சியால் கொன்று விடுகிறார்கள்   சோழைமலை அம்பலகாரர் அவர்கள் வீர மரணமடைந்த வீர🤺 வரலாறு மற்றும் எட்டு ஆண்டுகள் சிவகங்கை சீமை ஆட்சி செய்த சோலைமலை அம்பலகாரர்  வீர நடுக்கல் வழிபாட்டு மரபு  அவர்களின் பரம்பரையினர் ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர் அம்பலகாரரின் வழிபாட்டு தளம் சிவகங்கையில் இருந்து  மேலூர் செல்லும் சாலையில்   சோலைநகர் அருகில் அமைந்துள்ளது கோயில் அருகில் சோலையப்பன் ஊரணியும் அமைந்துள்ளது.

சோலை நகரும் அமைந்துள்ளது.

சோலை திருமண மண்டபமும் அமைந்துள்ளது.

கோவில் 🙏🏿மூலஸ்தானத்தில் 🙏காவல்தெய்வமாக தத்ரூபமாக காட்சி தருகின்றார்           சோலைமலை அம்பலகாரர்  மேலும் அவர்பன்படுத்திய ஆயுதமான வளரி பலவிதமாகவும்,    வேல்கம்பும் ,  ⚔️🗡️           உள்ளது. 




இன்றும் காஞ்சிரங்கால் கிராமத்தில் அவரது பரம்பரையினர், சோலையப்பன் வகையறா  என்று அழைக்கபடுகிறார்கள்.

குழந்தைகள் பிறந்தால் ஆண் குழந்தையாக இருந்தால் சோலைமலை, சோலை அரசன், என்றும் பெண் குழந்தைகளுக்கு சோலையம்மாள் , சோலைசெல்வி, சோலைராணி என்றுபெயர்வைத்து வருகிறார்கள், இப்படிப்பட்ட வரலாறுகள் எல்லாம் சிவகங்கை நகர்ப்புற பகுதியில் நடைபெற்றுள்ளது இதை எல்லாம் வரலாற்று ஆய்வாளர் மறைத்துவிட்டார்கள்.
                                          
🔥வீரம் புதைக்க படுவதில்லை!💥
🔥வீரம் விதைக்க படுகிறது!💥

⭐சோலைமலை அம்பலகாரர் அவர்களுடைய வீரம்,இன்று வரலாறாக வெளிவந்து விட்டது...!⭐

✒ஆய்வு தொடரும்✒
வைகை.மு.பத்மநாதன்

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்