மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் திருமலை நாயக்கர் செப்பேடு.
மதுரை நாயக்க மன்னர் திருமலை நாயக்கர் வேட்டை மார்க்கமாக நாகமலை புதுக்கோட்டை காட்டு பகுதியில் இருந்த போது, தொட்டியப்பட்டி சனத்தில் ஐந்து பேரை புலி கொன்று விடுகிறது.
அந்த புலியை அடக்க திருமலை நாயக்கர் சீமையெல்லாம் ஓலை அனுப்பினார். விக்கிரமங்கலம் கள்ளர் மரபை சேர்ந்த ஆண்டித் தேவர் அந்த புலியை கொன்றார்.
அதனால் அவருக்கு பரிசாக 6 கிராமங்களும், பொன் காசுகளும் தந்தார் என்கிறது செப்பேடு.
6.12.2020 ஆண்டித்தேவர் வம்சத்தினரின் இளைஞர் குழு சார்பாக விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் இலவச சீருடை காவலர் பயிற்சி வகுப்பு முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
இவ்விழாவினை திரு. கதிரவன் தேவர் தலைமை ஏற்றார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி DSP திரு.P. ராஜன், செல்லம்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் MVP.ராஜா மற்றும் விக்கிரமங்கலம் எட்டு ஊர் கிராம கமிட்டி சார்பாகவும் மற்றும் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் மதுரை மேற்கு மாவட்ட நிர்வாகிகளும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.