திங்கள், 16 ஆகஸ்ட், 2021

தங்கமகன் பா.ராகவேந்திரன் அம்பலம்



மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் வெள்ளலூர் நாடு, கோட்டந்தம்பட்டியை சேர்ந்த வேங்கைப்புலி கரை ஆ. பாலசுப்பிரமணியன் அம்பலம் அவர்களின் மகன் பா.ராகவேந்திரன், 17-03-2021 சர்வதேச அளவில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.


நாட்டிற்காக தங்கம் வென்ற வீரருக்கு கிராம மக்கள், பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



பாலசுப்பிரமணி அம்பலம் - அமுதா தம்பதியரின் மகனான ராகவேந்திரன், நேபாளில் நடைபெற்ற இந்தோ நேபால், இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகிய இரண்டு போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார்.

இந்நிலையில் இவர் தனது சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் நாட்டை சேர்ந்த கோட்டநத்தம்பட்டி கிராமத்திற்கு வருகை புரிந்தார். இதனால் அந்தக் கிராம மக்கள் ஒன்று கூடி ராகவேந்திரருக்கு பட்டாசு வெடித்தும் மாலைகள், பொன்னாடைகள் உள்ளிட்டவை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.

ராகவேந்திரன் நமது நாட்டுக்காக தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளது நமது நாட்டிற்கான பெருமை மட்டுமல்லாது தங்கள் கிராமத்தையே உலகறியச் செய்துள்ளதாகவும், இதேபோன்று எங்கள் கிராம பகுதிகளில் இருந்து அதிகமான இளைஞர்கள் ராகவேந்திரரை போன்று சாதனைகள் புரிய இவர் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் கூறி அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்