செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

சீர்காழி கள்ளர்படைப்பற்று

 



சோழ மண்ணின் நுழைவாயில் சீர்காழி. பசுமை தொடங்குகிற இடம் அது. ஒருபுறம் காவிரியில் இருந்து கிளை நதியாகப் பிரிந்து வாய்க்காலாகப் பாய்கிற கொள்ளிடம் கொடுக்கும் வளம் மறுபுறம் திருமுல்லைவாயல் கடற்கரை, பச்சைப் பசேல் விவசாயம், அபிராமி அந்தாதி வழிந்தோடும் ஒலிப்பெருக்கிகள் சூழ்ந்த கோயில் கோபுரங்கள் என சீர்காழி  அழகு.

சோழர்கள் சைவம் வளர்த்தவர்கள் என்பதால் அவர்கள் சிவனுக்கென்றே கோயில் நிறுவினர். அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதில் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரர் கோயில்கள் சிறந்த சான்றுகள் ஆகும்.

சீர்காழி அருகில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் கள்ளர் குடியில் திருமங்கையாழ்வார் பிறந்தார்.

"ஸ்ரீ காழி நகரம்' அதுவே தமிழில், "சீகாழி' என்றானது. சீ= மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்று தவறாக அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், "காழி நகரம்" என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர்.

கிபி பதினேழாம் நூற்றாண்டில் இருந்து தஞ்சையில் மராத்தியர்களின் ஆட்சி உதித்தது.  கிபி 1684ல் தஞ்சை தஞ்சையில் பட்டுக்கோட்டை கள்ளர் சீமை மீது படையெடுத்து திருபுவனம் வரை அறந்தாங்கி உள்ளிட்ட கள்ளர் சீமையை மராத்தியர் கைப்பற்றியதாக பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தஞ்சையில் பட்டுக்கோட்டை சீமையில் கள்ளர்கள் வரி கொடுக்க மறுத்து கலகங்கள் செய்ததாகவும் கள்ளர்களை அடக்க பட்டுக்கோட்டையில் படை ஒன்றை நிரந்தரமாக நிறுத்தியும் பலன் அளிக்கவில்லை என தஞ்சை மராத்தியர் மோடி ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.  தஞ்சையில் இருந்த பதிமூன்று ஜமீன்தார்களும் கள்ளர் மரபினர் என மராத்திய மோடி ஆவணம் குறிப்பிடுகிறது.  தஞ்சையில் இருந்த வளமான விவசாய நிலங்கள் கள்ளர்களின் வசமே இருந்துள்ளதை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.



பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு மோடி ஆவணம் தஞ்சை சமஸ்தானம் வாங்கிய கடன் பற்றிய தகவலை தருகிறது.  அதாவது  அரண்மனைக்கு கடன் கொடுத்தவர்களாக கோதண்டராமய்யங்கார், ஆனந்தய்யா,  கோபால ராவ்,  சின்னையாமுதலி, பச்சையாமுதலி, முத்துமுதலி, வெங்கடாசலமுதலி, ரங்கசாமி நாயக், ரகுமத்கான், மேஸ்தர் கேபர் டானர் முதலோனோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவர்கள் வாங்கிய கடனுக்கு கொடுக்க வேண்டிய தொகை  சீர்காழி கள்ளர்பற்று மகசூல் ஐவேஜி "   என மோடி ஆவணம் குறிப்பிடுகிறது.

தஞ்சை சமஸ்தானம் வாங்கிய கடனை அடைப்பதற்கு சீர்காழியில் இருந்த கள்ளர்களின் விவசாய நிலங்களின் மகசூல் மூலம் வரும் தொகையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டதை இது குறிப்பிடுகிறது.

இதன் மூலம் கள்ளர்கள் வசம் பெருமளவான விவசாய நிலங்கள் இருந்ததையும் , அதன் மூலம் அரசுக்கு பெருமளவிலான வருமானம் வந்ததையும்,   அந்த வருமானம் சமஸ்தானத்தின் கடனை அடைக்கும் அளவுக்கு இருந்ததையும் ஆவணங்கள் உணர்த்துகின்றன.

காவல் உரிமைக்காக தஞ்சை கள்ளர்கள் சீர்காழியில் உள்ள பிரிட்டிஸ் அரசின் சிப்பாய்களை கொன்று குவித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்தப்பகுதியில் உள்ள கள்ளர்களுக்கு சோழ கடற்படையில் முக்கிய பங்கு வகித்தனர். இங்கு உள்ள கள்ளர்களுக்கு பட்டங்கட்டியார் என்ற பட்டமுடையவர்களாக உள்ளனர்.

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்