செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

இந்திய கபடி வீரர் ராஜகுரு புள்ளவராயர்



ஆசிய விளையாட்டு போட்டியில், ஆண்களுக்கான கபடி போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்த அணியில் இடம் பெற்றிருந்த தஞ்சையை சேர்ந்த ராஜகுரு பள்ளவராயர். 

ராஜகுரு கூறியதாவது: ஆசிய விளையாட்டில், கபடி இறுதிப் போட்டியில் வலுவான, ஈரான் நாட்டு அணியுடன் மோத வேண்டி இருந்தது. ஒட்டு மொத்த அணியினரும் சிறப்பாக விளையாடி ஈரானை வீழ்த்தி தங்க பதக்கத்தை கைப்பற்றினோம். இது எங்கள் அணியின் ஒட்டுமொத்த கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கும், கபடி வீரர்களுக்கும் போதிய வேலை வாய்ப்புகள் இல்லை. நான் தஞ்சையை சேர்ந்த தமிழன் என்றாலும், வேலை நிமித்தமாக வெளிமாநிலத்துக்கு சென்று அந்த மாநிலத்துக்காக விளையாடும் வீரராக உள்ளேன். இது வருத்தத்தை அளிக்கிறது.இங்கு அனைத்து வீரர்களுக்கும் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். அடுத்து நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கபடி போட்டியை சேர்க்க பரிசீலனை செய்ய இருக்கின்றனர். அவ்வாறு சேர்த்தால் இந்தியாவுக்கு நிச்சயமாக தங்கப் பதக்கம் உறுதி. அடுத்த ஆண்டு உலக கோப்பைக்கான கபடி போட்டி நடைபெற உள்ளது. இதில், உறுதியாக இந்திய அணி கோப்பை கைப்பற்றும். 

ந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி, தமிழர்களின் தேசிய விளையாட்டு கபடி. இந்தியர்களிடம் ஹாக்கியும், தமிழர்களிடம் கபடியும் இன்று மதிப்பை இழந்து நிற்கின்றன. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கிரிக்கெட் ஆதிக்கம்தான் இப்போது நடக்கிறது.



கபடி ஆர்வத்தை கொண்டு வர உருவாக்கப்பட்டதுதான் புரோ கபடி லீக் தொடர். இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிவருகிறேன்.
 
 '' சின்ன பிள்ளையா இருக்கும் போது எனக்கு விளையாட்டுன்னா ரொம்ப பிடிக்கும்.  எங்க ஊருல ஏராளமான கபடி பிளேயர்ஸ் இருக்காங்க. பள்ளி கூடத்துல முதல்ல  வாலிபால் டீமுக்குதான் நான் செலக்ட் ஆனேன். திருச்சி ஸ்போர்ட்ஸ் ஸ்கூல்ல படிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்பதான் கபடிக்கு நான் வந்த கத  நடந்துச்சி. ஒரு முறை ஊருக்கு லீவுக்கு வந்தப்ப , பசங்கல்லாம் சேர்ந்து வயக்காட்டுல கபடி விளையாடினோம்.

ரைடு போன என்னை உடனே கவுத்துட்டாங்க.  என்னால யாரையும் பிடிக்கவும் முடியல. ரொம்ப ஃபீலா இருந்துச்சு. எல்லா பயல்களும் ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அப்பதான் வெறி வந்துச்சி.  இவ்ளோ கபடி பிளேயர்ஸ் இருக்கும் ஊர்ல என்னால் கபடி சரியா ஆட முடியவில்லையேனு மனசுல வருத்தம் உருவாச்சு. அந்த வெறிதான்

தோனி எப்படி புட்பால்ல இருந்து கிரிக்கெட்டுக்கு வந்தாரோ... அப்படி நான் வாலிபால்ல இருந்து கபடிக்குள் புகுந்தேன்.அந்த வருட லீவுக்கு ஊருக்கு வந்தேன். எங்க ஊர்ல தடுக்கி விழுந்தா கபடி டீம் மேலதான் விழணும். அந்தளவுக்கு கபடி பாப்புலர்.  ஊர்ல இருந்த அத்தனை கபடி பிளேயர்சுட்டயும் போய் ட்டிரிக்ஸ் கத்துட்டேன். சின்ன வயசுல என்னோட கோச் சேகர் சார், நல்லா என்கரேஜ் பண்ணுவார்.
 
ஸ்கூல் படிப்பு முடிந்த நேரத்தில் திருச்சி நேரு ஸ்டேடியத்தில் பிராக்டிஸ் எடுக்க ஆரம்பித்தேன். அங்கிருந்த கோச் ஜெயராஜ், மதியழகன் ரொம்ப ப்ரீயா பழகுவாங்க. அதனால நல்லா கத்துக்க முடிஞ்சுது.  தொடர்ந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. 2005ஆம் ஆண்டு  ஈரானில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கபடி போட்டியில் தங்கம்  வென்றேன். இது போல நிறைய போட்டிகள் எனக்கு அடுத்தடுத்து அமைந்தது. அதை சரியா பயன்படுத்திக்கிட்டேன்.

கபடியில் ரைட் போறது ஒரு வகையென்றால், பாடி வர்றவங்கள பிடிக்கறது இன்னொரு வகை. நான் ப்ராக்டிஸ் பண்ணுறது பிடிக்கிறதுல. நானே உள்ள வர்ற எல்லாரையும் பிடிக்கணும்னா முடியாதுங்க. சக வீரர்களும் அதற்கு கைகொடுக்கணும். நான் ரைடர அட்டாக் பண்றதுக்குல பக்கத்துல இருக்குற நம்மாளு அவரை தூக்கிடணும். அதுக்கேத்த மாதிர சக வீரர்களையும் உருவாக்குனேன்.  அதனால டிபென்ஸ்ல நான் கலக்க

எங்க ஊர்ல ஏகப்பட்ட கபடி கிளப்புகள் இருக்கு.  ஜோதி மெமோரியல் கிளப், செவென் கொப்ராஸ் , ஏஎம்சி, வொய்ஆர்சி, போஸ் நினைவு, சிவானந்தம் நினைவு என்று அந்த அணிகள் நீண்டு கொண்டே  போகும். ஒவ்வொரு அணியில் உள்ள டாப் வீரர்கள்தான் எனது வழிகாட்டிகள். திருவாரூர் ராஜா ராஜேந்திரன் சார்தான் என்னை 'சாய்' க்கு கூட்டி போய் சேர்த்து விட்டார்.  'சாய்' எனக்கு இந்தியாவின் 'பெஸ்ட் டிஃபன்டர்' என்ற விருதையும் வழங்கியிருக்கு '' என்றார்.

தற்போது மைசூரில் வசித்து வருத் ராஜகுரு, கர்நாடக மாநில அணிக்கும் விளையாடியுள்ளார்.  ராஜகுருவின் கபடித் திறமையை மெச்சி கர்நாடக அரசு 50 லட்ச ரூபாய் பரிசாக வழங்கியுள்ளது. புரோ கபடி போட்டியை பொறுத்தவரை,  ராஜகுரு தெலுங்கு டைடன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். இந்த முறை தெலுங்கு டைட்டன்ஸ் அணியை கோப்பையை வெல்ல வைப்பதே அவரது ஒரே இலக்காக இருக்கிறது.

தற்போது மும்பை(Mumbai) கபடி அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார்.



கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்