பாண்டிய நாட்டில் இருந்த இவ்வூரை சோழமன்னன் ஒருமுறை கண்டதாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட தஞ்சை நகர் போன்றே செழிப்பான வயல்வெளிகளுடன் திகழ்கிறது என வியந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சோழன் உவந்தான் என்று பெயர் பெற்று அது நாளடைவில் மருவி சோழவந்தான் என்று ஆயிற்று என்பர்.
பழையநாடு என்று அழைக்கப்படும் நடுவிநாடு பதினெட்டாம் குடியை பூர்வீகமாகக் கொண்ட பெரியசாமி அம்பலம் ஏறத்தால 200 வருடங்களுக்கு முன், தனது வலிமையால் சோழவந்தான் பகுதின் காவல் உரிமையை பெற்றார்.
ஆலங்கொட்டாரம் முதல் அணைப்பட்டி வரை இவரது காவல் எல்லையாகும். முப்பது கிலோமீட்டர் பரப்பளவைக் காவல் உரிமையுடன், காவல் வரியும் பெறுகின்ற அதிகாரமுடையவர்களாகவும் இருந்தார். இவருடைய சந்ததியினரில் 15.01.1902 ஆம் ஆண்டு பிறந்த முத்தையா காவல், சோழவந்தான் பேட்டை பகுதியின் காவல் உரிமையை மிகவும் அதிகாரத்துடன், வலிமைமிக்க ஒருவராகவும் இருந்தாலும், இவரை இந்த பகுதி மக்கள் பேட்டைசிங்கம் என்றே அன்புடன் அழைத்தனர்.
பசும்பொன் தேவரின் நெருங்கிய நண்பரான முத்தையா, 1957ல் மதுரை இராமநாதபுரம் டிஸ்டிரிக்ட் போர்டு மெம்பர் ஆனார். இவர் நேதாஜிக்கு சிலை ஒன்றை பசும்பொன் தேவரால் திறந்து வைத்தார். பின்பு அங்கே தேவருக்கும் ஒரு சிலையை மூக்கையா தேவரால் திறந்து வைத்தார். அதே இடத்தில் மூக்கையா தேவர் சிலையை அவர் சந்ததியினர் திறந்து வைத்தனர்.
இவருடைய குடும்பத்திற்கு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சோழவந்தானில் பாயும் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள ஜெனகை மாரியம்மன் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை, பட்டு பரிவட்டம், தேர் திருவிழாவில் வல்லம் வீசும் மரியாதை வாங்கப்படுகிறது.
21.02.1977 ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார். இவரது நினைவாக நினைவு மண்டபமும், அங்கு வருபவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
தகவல்: வழக்கறிஞர் சிவ.கலைமணிஅம்பலம்