வெள்ளி, 17 ஜூலை, 2020

வரலாற்றில் கொடுமையான செயல்கள்



நன்னன்

சங்கபாடல் வாயிலாக நன்னன் என்ற பெயரில் பல வேளிர் இருந்ததை அறியலாம். அதில் கொங்கு பகுதியையாண்ட நன்னன் என்ற ஒருவன் இருந்துள்ளான். அக்காலத்தில் தம் வீரத்திற்கு அடையாளமாகவும், பகை மன்னர்களிடம் மானம் பாராட்டவும் அடையாளமாய் காவல்மரத்தை (ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு மரம்) போற்றி பாதுகாத்துவந்துள்ளனர்.

இதில் நன்னனின் காவல்மரமான மாமரத்திலிருந்து கோசர்குடியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருத்தி தன் மசக்கை ஆசையால் நன்னனின் காவல்மரத்திலிருந்த மாங்கனியை தின்ன, பெருங்கோவம் அடைகிறான் நன்னன், இத்துணைக்கும் கோசரும், நன்னரும் பகைகுடியினர் அல்ல. தன் காவல்மரத்தில் கைவைத்தது நன்னனுக்கு மானப்பிரச்சினை ஆகிறது. அவள் கர்ப்பிணி என்பதையும் அவன் மனம் நினைக்கவில்லை,

கோசர்கள் ஒன்றுகூடி அப்பெண்ணின் தவறுக்கு  ஈடாய் 99 யானைகள், அவள் எடைக்குஎடை பொன் தருவதாய் கூறி மன்னிப்பு கேட்டும், நன்னன் அப்பெண்ணை இரக்கமில்லாது கொள்கிறான்.

இந்நிகழ்வை குறுந்தொகை பாடல் 292ல் பரணர் ஆவணப்படுத்தியுள்ளார். 

"மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை
 பனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பிற்கு
 ஒன்பதிற்று  ஒன்பது களிற்றொடு அவள் நிறை
 பொன்செய்பாவை கொடுப்பவும் கொள்ளான்
 பெண்கொலை பரிந்த நன்னன் போல
 வரையா நிலத்துச் செலீஇயரோ அன்னை!
ஒருநாள் நகை முக விருந்தினன் வந்தென
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே"

இப்பாடல் வழியே நன்னனை "பெண்கொலை புரிந்த நன்னன்" என நன்னனை வசைபாடியுமுள்ளார் பரணர்.

தன் இனப் பெண்ணைக் கொலை புரிந்ததற்காக நன்னனைப் பழிவாங்க ஒரு சூழ்ச்சியைச்செய்தனர் கோசர்கள். சில பாடல் மகளிரை அஃதை என்ற மன்னனிடம் அனுப்பகின்றனர். அவர்களுக்கு அம்மன்னன் நிறைய யானைகளையும் பரிசுப் பொருள்களையும் தருகின்றான். அவ்வாறு புறப்பட்ட யானைகளைக் கோசர்கள் நன்னனின் காவல் மரமான மாமரத்தில் கட்டி வைக்க ஏற்பாடு செய்கின்றனர். இவ்யானைகள் அந்த மாமரத்தை வேரொடு சாய்த்து விடுகின்றன. இதனால் கோபமுற்ற நன்னன் உடனே கோசர்  மீது போர் தொடுக்க,  அப்போரில் நன்னன் உயிர் விடுகின்றான்.

கோசர் சூழ்ச்சி செய்து நன்னனை கொன்றதை  குறுந்தொகை 73 ல் பரணர் குறிப்பிடுகிறார்.
"மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்று மொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே"
கோசர்கள் சொன்ன சொல்லை மீறாதவர்கள், தம் இனப்பெண்ணை கொன்ற நன்னனை, கோசர்கள் சூழ்ச்சி செய்து வஞ்சினத்தை நிறைவேற்றுவதைப் போல், தலைவனை இனி சந்திக்க முடியாது என்று கூறி, உறுதியுடன் சொன்ன சொல்லைக் காப்பாற்றினால், தலைவன் திருமணத்திற்குத் தேவையான முயற்சிகளைச் செய்வான் என்று தோழி தலைவியிடம் தெரிவிப்பதாய் இப்பாடல் உள்ளது.


கள்ளர் பெண்கள்

“கள்ளர்பெண்கள் சிறிது பழி ஏற்படும்படி நடத்தப்பட்டதாக ஐயுற்ற அளவிலேயே பின் விளைவுகளைப் பற்றிச் சற்றும் எண்ணிப் பாராது கொதித்தெழுந்து தங்களுக்குப் பழி உண்டாக்கியவர்களைப் பழிக்குப்பழி வாங்குவர்.

கள்ளர் பெண்கள் தங்களிடையே உட்பூசலோ மனவேறுபாடோ கொள்வார்களாயின் அருவருப்பானதொரு பழக்கத்தை மேற்கொள்கின்றனர். பழிப்புக்கு உள்ளானவள் தன்னைப் பழித்துச் சாடியவள் வீட்டு வாசலில் தன் குழந்தையைக் கொண்டு வந்து கொன்று போட்டுத் தன் பழியினைத் தீர்த்துக் கொள்கின்றாள். அவளுடைய இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை காட்டுமிராண்டித் தனமானதாயினும் அதனைச் செய்து முடித்தவுடன் அவள் தன் பொருள்களை எடுத்துக் கொண்டு அடுத்த ஊருக்குப் புறப்படுவாள்.

அவளுடைய இந்த நடவடிக்கையினை அண்டை அயலார் தடுத்து நிறுத்த முற்படும்போது ஒரே களேபரமும் ஆர்ப்பாட்டமும் நிகழும். இது பற்றிய குற்றச் சாட்டுப் பின்னர் தலைமை அம்பலக்காரரிடம் சென்று கூறப்படும். அவர் அதனை ஊர்ப் பெரியவர்களிடம் எடுத்துக் கூறி அந்தப் பூசலில் தலையிட்டு அதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு கூறுவார்.


இந்த வழக்கினை ஊர்ப் பெரியவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கையில் குற்றமிழைத்தவளாகக் கருதப்படும் பெண்ணின் கணவன் தன் மனைவியே சண்டையை மூட்டிவிட்டுத் தவறிழைத்தவள் எனக் கருதப் போதுமான சான்றுகள் வெளிப்படக் காண்பானாகில், அவன் சபையோருக்குத் தெரியாதபடி தன் வீட்டுக்குச் சென்று, தன் குழந்தைகளில் ஒன்றினை அழைத்துக் கொண்டு, முன்பு தன் வீட்டுவாசலில் வந்து குழந்தையைப் பலியிட்டவள் முன்பு தன் வீட்டுவாசலில் வந்து குழந்தையைப் பலியிட்டவள் இல்லத்தை அடைந்து, அவள் வீட்டு வாசலில் நாலுபேர் பார்க்கத் தன் குழந்தையைக் கொன்றுபோடுவான். இவ்வாறு செயல்படுவதால் அவன் மீது சபையார் சுமத்த உள்ள தொல்லைகளிலிருந்தும் தண்டச் செலவிலிருந்தும் தன்னைக் காத்துக் கொண்டதாகக் கருதுகிறான். இந்த நிகழ்ச்சி உடனடியாக ஊர் அவையினருக்கு அறிவிக்கப்படும். அவர்கள் இழைக்கப்பட்ட குற்றத்திற்குத் தக்க வகையில் பழி வாங்கும் நிகழ்ச்சி நடந்து விட்டதென அறிவித்துவிடுவர். இவ்வாறு தானே முன் வந்து குற்றத்திற்கு ஆட்பட்டவன் பழி தீர்த்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லையாயின் ஊர்ச்சபைக் கூட்டம் பதினைந்து நாள்களுக்குத் தள்ளி வைக்கப்படும்.

அந்தக் காலக்கொடு முடிவதற்குள்ளாகக் குற்றம் சுமத்தப்பட்டவனின் குழந்தைகளில் ஒன்று கொல்லப்பட வேண்டும். அதோடு அந்தக் காலக்கெடு வரையான நாள்களுக்கு அவையோருக்கான உணவு முதலியவற்றின் செலவுத் தொகையும் அவன் தலைமீது விழும்.

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்