மன்னர்கட்குப் படைகளை அனுப்பி உதவியமைக்காக வன்னியப்பற்று என்னும் நிலங்களைப் பெற்றுள்ளனர். வன்னியர் என்ற பட்டம் குறிப்பிட்ட சாதிக்கானதாக இல்லாமல், பல சாதிகளின் பட்டமாகவே உள்ளது.
வன்னியப்பற்று - படையில் பணிபுரியும் வீரர்கட்கு அளிக்கப்பெற்ற நிலம் அல்லது ஊர். (வன்னியர் - படை வீரர்)
கள்ளர் மரபினரில் வன்னியன், வன்னிகொண்டான், வன்னிமுண்டான், வன்னியனார் என்ற பட்டங்கள் உள்ளன.
வன்னியன் பட்டம் உள்ள சாதிகள் தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், வலையர் மக்களுக்கும், குறவர், இருளர்கள், பள்ளி (வன்னியர் சாதி), அகமுடையர், கொங்கு வெள்ளாளர், பார்க்கவ குலத்தார் மக்களுக்கும்.
கள்ளர் மரபினரின் ஈசநாட்டு கள்ளர் பிரிவில், திருமண முறையில் ஒரே பட்டமுடையவர்கள் சகோதரர்களாக கருதப்படுவார். ஆனால் நாட்டார் மற்றும் வன்னியர் பட்டமுடைய கள்ளர்களில், இந்த முறையில்லை. இவர்கள் ஒரே பட்டங்களில், அதாவது வன்னியர் பட்டமுடையவர் மற்றொரு வன்னிய பட்டமுடையவர்களில் திருமணம் செய்வார்கள். இவர்களின் திருமணம் குலதெய்வத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது.
கள்ளர் மரபில் வன்னியர் பட்டமுடைய கள்ளர் மரபினரின் ஊர்கள்
வன்னியர் பட்டம் உடைய கள்ளர்கள் விசங்கிநாட்டு கள்ளர்களோடு தொடர்புடையவர்கள் (கொள்வினை, கொடுப்பினை). வன்னியர்களிலே பண்டாரத்தார் வன்னியர், கோட்டயபுரம் வன்னியன் என இருபிரிவுகள் இருந்துள்ளது.
வன்னியம்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டத்தில் , வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.
வன்னியம்பட்டி :-தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் செங்கிப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
வன்னியன்விடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், அரையப்பட்டி ஊராட்சியில் வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்
நல்லவன்னியன்குடிகாடு :- தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை வட்டத்தில் வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
மன்னார்குடி பகுதி வடுவூர் நாட்டில் வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர்கள் அதிகம். இங்குள்ள கள்ளர்கள் வாழும் தெருக்கள் பெயர்.
வன்னியர் தெரு
காகா வன்னியர் தெரு
செருக்க வன்னியர் தெரு
குஞ்சான் வன்னியர் தெரு
எழுவநாச்சி வன்னியர் தெரு
கீழபழையாறை வன்னியதெரு
நாட்டாணி' காட்டுநாவல்' மஞ்சைபேட்டை' நெப்புகை' கந்தர்வக்கோட்டை, முத்துவீரபட்டி, நந்தவனம்பட்டி, மனையேறிபட்டி, ஆவாரம்பட்டி, புங்கலூர், கக்கரை, பின்னையூர், மண்டலக்கோட்டை, நெல்லுப்பட்டு, ஆர்சுற்றிப்பட்டு, மன்னார்குடி பைங்காநாடு, தலையாமங்கலம், எடமேலையூர், வடுவூர், திருக்களர், பெருகவாழ்ந்தான், கருவாக்குறிச்சி, சொக்களாவூர், கீராலத்தூர், சோழபாண்டி, பட்டுக்கோட்டை ஆவிக்கோட்டை, பெரியகோட்டை, அதிராம்பட்டிணம், திருவையாறு திருச்சின்னம்பூண்டி, மகாராசபுரம், புதுக்கோட்டை கீழக்கரைமீண்டார்கோட்டை, புதுக்கோட்டை விடுதி, பாச்சுக்கோட்டை, கீழாத்தூர் முதலிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர்.
மேலூர் நாட்டில் கள்ளர் மரபினரில் கரை (பட்டம்) முறையே பயன்படுத்துவார்கள். ஒரே கரையை சேர்ந்தவர்கள் சகோதரர்கள். இவர்களில் வன்னியன் கரை பிரிவு உள்ளது.
காசவளநாட்டு கண்டிதம்பட்டு மிராசு, கள்ளர் குல வன்னியர்கள் ( கிபி 1838 ல்)
A manual of the district of tanjore in the madras presidency/ k venkasamy row / 1883
தஞ்சையில் பொங்கல் தினத்தன்று கள்ளர் மரபினரின் வன்னியர் அரசுக்காரர்களாக, ஊர் மக்களால் மரியாதை செய்யப்படுகின்றனர்.
Source : Martial race of undivided India
Source : Martial race of undivided India
1951மக்கள் தொகை கணக்கெடுப்பின். Source:-Census of India 1951
குறுநில மன்னர்களின் பதவியைக் குறிக்கும் வன்னிமை, வன்னியம், வன்னியன், வன்னிராசன் என்னும் சொற்கள் சோழர்களின் ஆட்சிக் காலத்திலே தொண்டை மண்டலத் தொடர்பின் காரணமாக இலங்கையில் வழக்கில் நிலவின. வேளைக்காரப் படைகளின் தலைவர்கள் பிரதேசங்களின் தலைவர்களாகியதன் விளைவாகவே குறுநில அரசுகளை வன்னிமைகள் என்று குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.
வன்னியர் என்ற சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.
வன்னியக் கள்ளர் மரபினர் பன்றிக் குட்டிக்குப் பாலூட்டிய திருவிளையாடற் புராணத்தினைத் தங்கள் குலத் தொன்மமாகக் குறிப்பிட்டு உரிமை கோருகின்றனர். பள்ளி (வன்யர்) குலத்தவரோ வலைவீசிய திருவிளையாடற் புராணத்திற்கு உரிமை கோருகின்றனர். (கி.பி. 18ஆம் நூற்றாண்டைய குற்றாலம் செப்பேடு)
பள்ளி (வன்யர்) குலத்தவருக்கும், வன்னியர் என்ற பட்டம் புனையும் கள்ளர் மரபினருக்கும் இதுவரை தொடர்பு ஏதுமில்லை.
இன்றைய தமிழகத்தில் வன்னியர் என்பது ஒரு சாதியின் பெயராக அழைக்கப்படுகிறது. ஆனால் “வன்னியர்” என்பதும் அரசர் படைத்தலைவர்க்கு வழங்கப்பட்ட பெயர் (த.கு.வே., ப.120). இதனைக்
கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற்
றரிதரு குட்டி யாயபன் னிரண்டினைச்
செங்கோன் முளையிட் டருணீர் தேக்கிக்
கொலைகள வென்னும் படர்களை கோலித்
தருமப் பெரும்பயி ருலகுபெற விளைக்கு
நாற்படை வன்னிராக்கிய பெருமாமன்
எனும் அடிகளின் மூலம் அறியலாம்.
இலங்கை வன்னியர்கள் பாண்டிய நாட்டில் இருந்து போனவர்களாக குறிப்பிடப்படுகிறது. அவர்கள் எந்த சாதியினர் என்பதற்கு சான்றுகள் இல்லை. ஆய்வாளர்கள் , அறிஞர்கள் தங்களது கருத்தாக பல சாதியானரை குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். சிலர் மறவர்களையும், சிலர் கள்ளர் மரபினரையும், சிலர் இன்று வன்னியர் சாதி என்று அரசாணை பெற்ற பள்ளி, படையாச்சி சாதியினரை குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.
கள்ளர் மரபினரின் வன்னியர் பட்டமுடைய குறிப்பிடத்தக்க நபர்கள்
இலங்கை வன்னியர்கள் பாண்டிய நாட்டில் இருந்து போனவர்களாக குறிப்பிடப்படுகிறது. அவர்கள் எந்த சாதியினர் என்பதற்கு சான்றுகள் இல்லை. ஆய்வாளர்கள் , அறிஞர்கள் தங்களது கருத்தாக பல சாதியானரை குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். சிலர் மறவர்களையும், சிலர் கள்ளர் மரபினரையும், சிலர் இன்று வன்னியர் சாதி என்று அரசாணை பெற்ற பள்ளி, படையாச்சி சாதியினரை குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.
கள்ளர் மரபினரின் வன்னியர் பட்டமுடைய குறிப்பிடத்தக்க நபர்கள்
கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற இரண்டாம் ஆண்டு முதல், மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த’ என்னும் பாடல் சங்கத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கத் தொடங்கியது. முதன்முதலில் இந்தப் பாடலை மேடையில் பாடியவர் இசைவாணர் கூடலூர் வே. இராமசாமி வன்னியர்.
இசைவாணர் கூடலூர் வே. இராமசாமி வன்னியர் |
நான்காம் தமிழ் சங்கத்தில் பங்கு :- திரு. இராமசாமி வன்னியர், மிராசுதார், புலவர்நத்தம், தஞ்சை
நூல்: கருணாமிர்தசாகரம் (கிபி 1917ல் எழுதப்பட்டது)
இந்திய மக்களவைத் தேர்தலில், தஞ்சாவூர் தொகுதியிலிருந்து ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு எஸ்எஸ் பழனிமாணிக்கம் வன்னியர்
சூரக்கோட்டை வையாபுரி வன்னியர்
தற்போதைய திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் G.சுந்தரராச வன்னியர் அவர்களின் மகன் கல்யாணசுந்தரம் வன்னியர்
கள்ளர் மரபினரின் வன்னியர் பட்டமுடையவர்களின் இறை தொண்டு
திருக்கண்டிவளநாடு (கண்டியூர்), அருள்மிகு பிரம்மசிரக்கண்டீஸ்வரர் திருக்கோவில் திருப்பணிக்குழுவில் கள்ளர் மரபினரின் வன்னியர்.
கள்ளர் மரபினரின் திருமண பத்திரிகை.
திருக்கண்டிவளநாடு (கண்டியூர்), அருள்மிகு பிரம்மசிரக்கண்டீஸ்வரர் திருக்கோவில் திருப்பணிக்குழுவில் கள்ளர் மரபினரின் வன்னியர்.
அருள்மிகு காரி அழகர் அய்யனார் ஆலயம்:- உபயதாரராக கள்ளர் மரபினரின் வன்னியர்
கள்ளர் மரபினரின் திருமண பத்திரிகை.
கள்ளர் மரபினரின் நிகழ்ச்சிகள்.
கோவிலூர், மேலமாகாணம் பெரிய பிள்ளை, வடக்குக்கோட்டை மாப்பிள்ளையா என்கின்ற தெய்வத்திரு அ.அருணச்சல வன்னியர்
கள்ளர் மரபினரின் இரங்கல் செய்தி.