செவ்வாய், 10 மார்ச், 2020

பெண்டிர் பண்டாரம்



ஒரு மன்னர் (அ) இளவரசர் எதிரிகள் மீது அதீத கோபம் கொண்டாலும் போர்தர்மங்களுக்கு உட்பட்டு செய்யக்கூடாத கொடும் செயல்கள் என்று சில உண்டு. 

தன் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்துத் திறை செலுத்தாத பகைவர் புலத்தை அழித்து அவர்களின் நிலத்தில் கழுதை கொண்டு உழவு செய்து அதில் வரகும், கொள்ளும் விதைத்துள்ளதை,

“ கொடாஅ உருகெழு மன்ன  ராரெயில் 
கடந்து நிணம்படு குருதி பெரும்பாட்டீரத்
தணங்குடை மரபி னிருங்களந் தோறும்           (புறம்.392: 5-8)1

என்ற புறப்பாடல் எடுத்துரைக்கின்றது.

பல்யானை செல்கெழு குட்டுவனின் அரசாதிக்கத்தால் அவனின் காலாட்படைகள் ஊர் மன்றங்களை அழித்தும் கழுதை ஏர்பூட்டியும் பாழ்செய்யப்பட்டுள்ளதை,

“நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி” (ப.ப.25:4)  என்ற பாடலடி மூலம் அறியமுடிகின்றது. 

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியினைப் பகைத்துக் கொண்ட மன்னர்களின் நாட்டிலுள்ள தேரோடும் வீதிகளை அழித்துக் கீழ்த்தன்மை விலங்கெனக் கருதப்பட்ட கழுதைகளைப் பூட்டி உழுது பாழாக்கும் வன்செயலில் ஈடுபட்டுள்ளமையை, 

" கடுந்தேர் குழித்த ஞள்ள லாங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனையவர்……”        (புறம்.15:1-3)2 என்ற பாடல் வரிகள் வெளிப்படுத்துகின்றன.

திலங்குவளை மகளிர் தெற்றி யாடும்
விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்ற களங்கொள் யானைக் கருமான் பொறைய”        (புறம்.53:3-5)

என்ற பாடலின் வழி அறியமுடிகின்றது. மகிழ்ச்சியாகத் தெற்றி விளையாடிக் கொண்டிருந்த பெண்களின் மகிழ்வைக் குலைக்கும் வன்செயல்களில் பகைவரின் படைவீரர்கள் ஈடுபட்டிருந்ததையும் அப்பகைவரை பொறையன் கொன்றழித்துள்ளதையும் காணமுடிகின்றது.

ஆனால் இதை விட அதிகமாக போரில் தோல்வியுற்ற நாட்டில் உள்ள பெண்களே பதிப்புக்கு உள்ளானார்கள்.



பகைமன்னனின் மனைவியின் கூந்தலை மழித்து, அதனையே கயிறாகத் திரித்து, அக்கயிறு கொண்டு அப்பகைவரின் யானைகளைப் பிடித்துக் கட்டுவர். பகைமன்னரின் யானைகளைக் கட்டுவதற்கு சங்கிலி, கயிறு போன்ற பிற பொருட்கள் இருந்தும் பகைமன்னரின் உரிமை மகளிரின் அழகிய கூந்தலைக் கயிறாக்கியது அப்பெண்களின் மீது நிகழ்த்திய ஒரு வன்செயலாகும். இச்செயலினைச் நன்னன் செய்ததாக குறிப்பிடும் பாடல்

“வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன் கூந்தல் முரற்சியின் கொடிதே” - (நற்.270:9-10)

ஆதித்த கரிகால சோழதேவர் 

தான் வெட்டிய வீரபாண்டியர் தலையைத் தஞ்சைநகர் வாயில் மரத்தில் நட்டு வைத்தார் என்பதற்கு திருவாலங்காட்டுச் செப்பேட்டில் வரும் 68 ஆம் வடமொழி ஸ்லோகமும், எசாலம் செப்பேட்டில் வரும் 14 ஆம் வடமொழி ஸ்லோகமும் நேரடிச் சான்று.

மாமன்னர் இராஜராஜ சோழதேவர்

இவரது மெய்கீர்த்தியில் வன்முறை விளைவிக்கும் வரிகள் இல்லையென்றாலும் இவரது சமகாலத்தில் வாழ்ந்த மேலைச் சாளுக்கிய மன்னரான சத்யாஸ்ரயரின் ஹோட்டூர்க் கல்வெட்டில் மாமன்னர் ராஜேந்திர சோழதேவர் 9 லட்சம் வீரர்களுடன் படையெடுத்து வந்து செய்த அட்டூழியங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ( இதைச் செய்தது மாமன்னர் ராஜேந்திர சோழதேவர் அல்ல மாமன்னர் ராஜராஜ சோழதேவர் தான் என்று குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா தனது புதிய ஆராய்ச்சி நூலான ராஜேந்திரசோழனில் சான்றுகளோடு குறிப்பிட்டுள்ளார்).

பெண்கள், குழந்தைகள் & மறையவர்கள் என்று கூட பாராமல் கொலைசெய்து பெண்டிர் பண்டாரம் கவர்ந்து சென்றது சொல்லப்பட்டுள்ளது. சோழர்கள் பெண்களைக் கவர்ந்த முதல் நேரடிக் குறிப்பு அநேகமாக Rajaraja The Great காலத்தில் இருந்துதான் கிடைக்க ஆரம்பிக்கிறது.
(Epigraphia indica vol.16,Page No.75)


ஒற்றரை சேரமன்னர் பாஸ்கர ரவிவர்மன் பிடித்துச் சிறையிலிட்ட குற்றத்திற்கு சேரநாடு ராஜராஜரால் எரிகொளுவிச் சூறையாடப்பட்டது என்பதை சோழரது நான்கு உலாக்களும் புகழ்பாடும்.

மாமன்னர் ராஜேந்திரர் சோழதேவர்

சோழ வரலாற்றில் முதன்முதலாக பெண்டிர் பண்டாரம் என்ற வார்த்தை வருவது இவரது மெய்கீர்த்தியில் தான்.

கரந்தைச் செப்பேட்டில் உள்ள 58 ஆவது வடமொழி ஸ்லோகத்தில் வருவதுபோல் ஈழத்தரசரின் மொத்த குடும்பத்தையும் இம்மன்னர் கவர்ந்து கொண்டார் (சிறை வைத்தார்). ஈழத்தரசரும் 12 ஆண்டுகள் சோணாட்டில் கைதியாகவே இருந்து மாண்டுபோனார் (மகாவம்சம்). ஜெயங்கொண்ட மூவேந்தவேளார் என்ற சோழத்தளபதி தான் ஐந்தாம் மகிந்தரை சிறைப்பிடித்து சோணாட்டிற்கு அனுப்பி வைத்தார் என்ற கல்வெட்டை ஏற்கனவே நான் முகநூலில் பதிவிட்டுள்ளேன்.

கங்கைப் படையெடுப்பில் பாலவம்சத்துப் பேரரசர் மகிபாலனோடு நடந்த யுத்தத்திலும் மாமன்னர் ராஜேந்திரர் சோழதேவர் பெண்டிர் பண்டாரம் கவர்ந்துள்ளார் ( மகிபாலனை வெஞ்சமர் விளாகத்து அஞ்சுவித்தருளி ஒண்டிறல் யானையும் பெண்டிர் பண்டாரமும்.... ) அவரது திருமன்னிவளர என்ற மெய்கீர்த்தியே சான்று பகர்கிறது.

முதலாம் ராஜாதிராஜ சோழதேவர்

கன்னியாகுப்ஜம் (கன்னக்குச்சி) Kannauj district in U.P வேந்தனாகிய வீரசலாமேகன் என்பவர் தன்னாட்டை வீட்டு ஈழத்தைக் கைப்பற்றி ஆண்டபோது ராஜாதிராஜ சோழதேவருடன் ஏற்பட்ட போரில் தோற்றோட உடனே ராஜாதிராஜ சோழதேவர், அந்த மன்னரின் மனைவி, தாய் மற்றும் தமக்கையைப் பிடித்து அதில் தாயை மூக்கரிந்தார் (S.i.vol 5,No.978) என்று திருவெண்காட்டுச் சாசனம் கூறுகிறது.

சாளுக்கியர்களுடனான மூன்றாம் போரில் பூண்டூர் என்னுமிடத்தில் தெலுங்க விச்சையன் என்ற சாளுக்கிய படைத்தலைவரின் தந்தை & தாய் மற்றும் எண்ணற்ற மகளிரையும் சிறைகொண்டார்.
(S.I.Vol 5 No.520&641)

பின்னர் மேலைச் சாளுக்கிய மன்னர் ஆகமவல்லனின் ஒற்றர்களைப் பிடித்து அன்னோர் மார்பில் "ஆகமவல்லன் யாங்கணும் அஞ்சினன்" என்றெழுதி அவமானப்படுத்தி துரத்தினார்.
(கூழமந்தல் சாசனம்) S.I.Vol.7 No.1046

பின்னர் திருக்கழுக்குன்றம் கல்வெட்டில், ஆகமவல்லரின் இரு ஒற்றர்களைப் பிடித்து ஒருவனுக்கு குடுமி வைத்து ஆகமவல்லன் என்று பெயரிட்டும் மற்றவனுக்குப் பெண்ணுடை தரிப்பித்து ஆகமவல்லி என்று பெயரிட்டும் அவமானப்படுத்தி திருப்பியனுப்பினார்(S.I.Vol 5 No.465)

இரண்டாம் ராஜேந்திரர் சோழதேவர்

கொப்பம் போரில் மேலைச் சாளுக்கிய மன்னர் ஆகமவல்லரின் சத்தியவ்வை சாங்கப்பை என்ற இரண்டு மனைவிகளையும் & பெண்டிர் பண்டாரமும் கைக்கொண்டார் (S.I.Vol 5 No.644)

ராஜமகேந்திரர் சோழதேவர்

இந்த இளவரசர் (சோழபாண்டியன்) கர்நாடகத்து பெள்வோலா நாட்டில் இரண்டாம் பூதுகர் நினைவாக எழுப்பப்பட்ட ஜைனகோயில்களை எரித்த காரணத்தால் ஆகமவல்லரால் போரில் கொல்லப்பட்டவர் என்று இரண்டாம் சோமேஸ்வரர் கல்வெட்டு கூறுகிறது (E.I.Vol 15,No.23)

சண்டாளசோழன் & மகாபாதகன் போன்ற வசைச்சொற்களுக்கு ஆளானவர். ( இது முதலாம் ராஜாதிராஜர் என்று சதாசிவ பண்டாரத்தார் சொன்னாலும் குடந்தை என்.சேதுராமன் ஐயா ராஜமகேந்திரராக இருக்கலாம் என்கிறார் )

வீரராஜேந்திர சோழதேவர்

வேங்கை நாட்டில் நடந்த போரில் மேலைச் சாளுக்கிய தளபதி சாமுண்டராயர் தலை கொய்யப்பட்டு அவரது மகள் நாகலை என்பவர் மூக்கரியப்பட்டார்.

கூடல்சங்கமத்துப் போரில் ஆகமவல்லரின் மனைவியோடும் வஸ்து வாகனங்களைக் கைக்கொண்டவர்.

சக்கரக்கோட்டத்துப் போரில் தேவநாதன் முதலிய சாளுக்கிய தளபதிகளின் மனைவிகளைக் கவர்ந்தவர் & பெண்டிர் பண்டாரமும் கொண்டவர் (அரிவையர் குழாம்)

ஈழத்துப்போரில் மன்னர் முதலாம் விஜயபாகுவின் மனைவியைக் கவர்ந்தவர்.

கொண்டை என்னுமிடத்தில் மேலைச் சாளுக்கியரோடு நடந்த போரில் பெண்டிர் பண்டாரம் கொண்டவர்
(தோகையர் ஈட்டம்)

மேற்கூறிய ஐந்தும் (E.I.Vol No.21,Inscription No.38) ல் உள்ளது.

திருச்சிராப்பள்ளி கோட்டையை கைப்பற்ற நிசாமின் படை கடுமையான தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.அந்த சமயத்தில் தஞ்சாவூரிலுள்ள குண்ணம்பட்டி ( புதுக்கோட்டை, தஞ்சை எல்லை)மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கள்ளர்கள், நிசாமின் போர்படை பற்றில் இரவு தாக்குதல்களை நடத்தினர். கள்ளர்களின் இந்த திடீர் தாக்குதலை எதிர்ப்பாராத நிசாமு படையினர் நிலைகுலைந்தனர். நிசாம் படையில் இருந்த மாடுகள், ஒரு யானை, 133 குதிரைகள் மற்றும் 40 ஒட்டகங்களை கொள்ளையடித்து சென்றனர். 

பெரிய சூரியூர் கள்ளர்நாட்டை பார்வையிட வந்த ஆங்கிலேயர் படைத்தளபதி, அவருடைய குதிரை மற்றும், அவருடைய மனைவி இரண்டையும் கவர்ந்து சென்றார்கள்.

நன்றி : திரு. கோபால் பாலகிருஷ்ணன்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்