திருவாரூர் மாவட்டம், எடமேலையூர் கிராமத்தில் பிறந்தவர் தெய்வத்திரு. அழகு திருநாவுக்கரசு சேண்டபிரியர்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட அதிமுக செயலாளராக பணியாற்றியவர்.
1991 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று. 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். பின்னர் திமுகவில் இணைந்து அதன் விவசாய தொழிலாளர் அணி செயலாளராக பணியாற்றினார்
பாரத ரத்னா எம்ஜிஆரின் தளபதிகளில் இவரும் ஒருவர். அவருடைய கட்சியில் மாணவர் அணிச் செயலாளராக பணியாற்றியுள்ளார்.
21ம் நூற்றாண்டில் துளிகூட லஞ்சம் வாங்காமல் தன்னுடைய சொத்துக்களை விற்று அரசியல் செய்த உத்தமர்.
எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கியபோது அதில் இணைந்த அழகு திருநாவுக்கரசு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட அதிமுக செயலாளராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றிவர்.
சென்னையில் நேரு ஸ்டேடியம் கட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர்.
கடந்த 1991ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை புரட்சி தலைவி ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்.
எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளித்த உத்தமரின் 2015ம் ஆண்டு காலமானார்