வெள்ளி, 13 மார்ச், 2020

சின்னதம்பி சாணையர்



சமயத்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் காணப்படுகிறது. மருதப்பிரவீகவல்லி எனும் குதிரை முகமுடைய சோழ இளவரசி முருகப்பெருமானை வழிபட்டு, முருகன் அருளால் குதிரை முகம் நீங்கி மகா பேரழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது. அதன் காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம் (மா + விட்ட + புரம்) என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.

முதலியார் இராசநாயகம் கதிரமலையை வலி. மேற்கில் உள்ள கந்தரோடை என அடையாளப்படுத்தி, அதுவே நாக நாட்டில் தோன்றிய முதலாவது தமிழ் அரசு எனவும் அவ்வரசின் தலைநகர் சிங்கை நகருக்கு இடம்மாறியதற்கு சோழர் வருகையே காரணம் எனவும் குறிப்பிடுகின்றார். இவரின் கருத்தை ஆமோதிக்கும் சுவாமி ஞானப்பிரகாசர் இவ்வரசின் தோற்ற காலத்தை கி.பி. 8ஆம் நூற்றாண்டு என குறிப்பிடுகின்றார்.

ஏறத்தாழ இதே காலப்பகுதியில் கதிர மலையிலிருந்து ஆட்சி புரிந்த உக்கிரசிங்க மன்னன் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலை தோற்றுவித்த சோழ இளவரசியான மாருதப்புரவல்லியை பட்டத்தரசியாக்கி அக்கோயிலின் வளர்ச்சிக்கு பல பணிகளை செய்தான் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.

சோழ சாசனம் ஒன்று வட இலங்கையில் வலிகாமத்தை வெற்றி கொண்டு அங்கிருந்து பெருமளவு யானைகளை தமிழகம் கொண்டு சென்றதாகக் கூறுகின்றது. மாவிட்டபுரம் அமைந்த சுற்றாடலில் காணப்படும் வளவர்கோன் பள்ளம் காங்கேசன்துறை சோழக் கல்வெட்டுக்களில் அதிலும் குறிப்பாக பராந்தக சோழன் காலக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்படும் பெயராகும். இவற்றை நோக்கும் போது மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலின் தோற்றத்தை சோழருடன் தொடர்புபடுத்துவது பொருத்தமாகத் தெரிகின்றது.

ஆயினும் கி.பி16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் கடைப்பிடித்த கலையழிவுக் கொள்கையால் யாழ்ப்பாணத்தில் 500 ற்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன. அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் ஒன்றாக இருக்கலாம்.




1782 ஆம் ஆண்டு தீட்சிதர் சபாபதிகுரு அவர்களால் மீண்டும் நிர்மாணித்து தேரோட்டமும் நடந்தது. 1927 ஆம் ஆண்டில் இருந்து மாவிட்டபுரம் கொல்லங்கலட்டி சின்னதம்பி சாணையர் குமாரர்கள் கந்தையா சாணையர், சரவணமுத்து சாணையர் தொடர்ந்து, இத்தேரோட்டத்தை நடத்தி வந்தார்கள். சாணையர் பட்டமுடையவர்கள் கந்தர்வக்கோட்டை கள்ளர் பாளையத்தில் உள்ள கள்ளர் நாடுகளில் வாழ்ந்தெ வருகின்றனர்.





















வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்