திங்கள், 23 மார்ச், 2020

செம்பியன்களரி



களர் நிலம் என்னும் பயன்படாத நிலத்தில் பயிற்றுவிக்கப்படும் போர் பயிற்சியே ‘களரி’ ஆயிற்று எனக்கொள்ளலாம். களம் என்னும் சொல்லின் அடிப்படையிலும் ‘களரி’ என்னும் சொல் உருப் பெற்றதாகவும் கொள்ள இடமுண்டு. இதை ‘களரிப் பயிற்று என்றும் அழைப்பர். (களரி - போர் பயிற்சி செய்யும் களம். பயிற்று - பயிற்றுவித்தல்) களரி பயிற்றுவித்தல் என்ற தமிழ் சொல்லே மருவி களரி பயிற்று ஆயிற்று.



“தூதணம் புறவொடு துச்சில் சேக்கும்
முது மரத்த முரண் களரி
வரிமணல் அகன்திட்டை’’

என உருத்திரங்கண்ணனார் தனது பட்டினப்பாலையில் கூறுவதன் மூலம் ‘களரி’ என்ற சொல் சங்கத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதை அறியமுடிகிறது.

‘முது மரத்த முரண் களரி’ என பட்டினப்பாலைத் தமிழ் வர்ணித்தாலும், இன்றைக்கு இக்களரிக்கலை கேரளாவுக்குச் சொந்தமானதைப் போல ஆயிற்று. கேரளாவிலும், தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் சில இடங்களிலும் இக்கலை பயிற்றுவிக்கப்படுகிறது. கேரளாவின் களரி ‘வடக்கன் களரி’ என்றும் தமிழகத்தின் களரி ‘தெக்கன் களரி’ என்றும் அழைக்கப்படுகிறது. தெக்கன் களரி என்ற கலை தமிழகத்தின் பிற பகுதிகளில் ‘சிலம்பம்’ என்ற பெயரில் வழங்கி வருகிறது.

தஞ்சையில் நெம்மக்கோட்டை பகுதியில் களரி பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்கின்றனர்.

தஞ்சை மாவட்டம், மேகளத்தூர் - ஒரத்தூர் வழியில் உள்ள செம்பியன்களரி எனும் ஊரில் 

கள்ளர்களில்
சேப்பிளையார்,
நாட்டார், 
அம்பலகாரர் 

ஆகிய மூன்று பட்டத்தார் வாழ்கின்றனர்.







கல்லணைக்குக் கீழே சற்றே உள்ளடங்கிய கிராமம் செம்பியன்களரி. ஒரு காலத்தில் வரலாற்றுப் புகழ் பெற்றிருந்த இந்த ஊரிலிருந்துதான்சொழ அரசின் சில நிர்வாக அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டன. அச்சமயம், அரசின் நிர்வாக அலுவலகங்களும் இங்கு இருந்துள்ளன. ராஜராஜசொழனின் தாய் செம்பியன் மாதேவி கட்டியது, இந்த அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில். கருவறை மூலவர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கியும், அம்பாள் காமாட்சியம்மன் தெற்கு நோக்கி தனிச்சன் னிதியிலும் அருள்பாலிக்கின்றனர்.

நேத்ரபதீஸ்வரர் கோவிலில் கள்ளர்களுக்கு இணையாக சைவ பிள்ளைமார்களுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது. செம்பியன் களரியில் உள்ள நேத்ரபதீஸ்வரர் ஆலயம், அங்குள்ள வெள்ளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டது. வெள்ளாளர் 10 தலைக்கட்டுக்கும் மேல் உள்ளனர். இங்குள்ள வெள்ளாளர்கள் கோவில்மரியாதைக்காக சொரக்குடிப்பட்டியில் உள்ள கள்ளர்களின் செம்பியமுத்தரசு பட்டம் உடையவர்களை அழைத்துவருகின்றனர்.

செம்பியன்களரியில் அமைந்துள்ள அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில். ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை நாளன்று இந்த ஈஸ்வரருக்கு தசாவனி தைலக்காப்பிட்டு, சாம்பிராணி தூபம் காட்டி, அத்திப் பழம் நிவேதனம் செய்து வழிபட, கண் தொடர்பான அனைத்து நோகளும்
நீங்கி, பூரண நலம் பெறலாம் என்பது பக்தர்களின் அனுபவக் கூற்றாகத் திகழ்கிறது.






கோயிலின் எதிர்ப்புறம் வீடுகள் அமைந்திருக்க, மூன்று புறங்களிலும் பசுமை போர்த்திய வயல்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளிக்கின்றன. கோயிலின் நுழைவாயிலில் நந்தி, கருவறைக்கு வலது புறம் விநாயகரும், இடது புறம் சிவசுப்பிரமணியரும் வீற்றிருக்கின்றனர். பிராகார கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, ருத்ர துர்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். தனிச் சன்னிதியில் சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கிறார். ஸ்தல விருட்சம் வில்வ மரத்தடியில் நாகர்சிலைகள்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அடுத்து வருகின்ற மூன்றாம் பிறை நாளன்று, அந்தியும் இரவும் சந்திக்கின்ற பொழுதினில் மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அச்சமயம், கண் பார்வை தொடர்பான நோகளோடு வரும் பக்தர்களின் குறைபாட்டினைக் களைந்து அருள் பாலிக்கிறார் இத்தல ஈசன்.

மூன்றாம் பிறையன்று மூலவருக்கு, ‘தசாவனி தைலம்’ காப்பிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப் படுகின்றன. அது என்ன தசாவனி தைலம்? நீலி பிருங்காதி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, மருதாணி, செம்பருத்தி, தேங்கா எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெ, விளக் கெண்ணெய், வேப்பெண்ணெய் ஆகிய பத்து வித பொருட்களை அதனதன் சரிவிகிதத்தில் கலந்து உருவாக்குவதே, ‘தசாவனி தைலம்.’ இந்த தசாவனிதைலக் காப்பே மூலவருக்குச் சாத்தப்படுகிறது. பிரார்த்தனைக்காக மூலவருக்குத் தைலக்காப்பிட விரும்புவோருக்கு இந்தத் தைலக்காப்பை கோயில் நிர்வாகமே ஏற்பாடு செய்து தருகிறது.
அன்று மாலை, இரவு கவிழும் சமயம், வானில் மூன்றாம் பிறை தெரியத் தொடங்கும் நேரம் பக்தர்கள் கோயிலின் கருவறை பின்புறம் உள்ள பிராகாரத்தில் சூழ்ந்து நின்று வானத்தையே பார்க்கின்றனர். வானில் மெல்லியக் கீற்றாகக் காட்சி தருகிறது மூன்றாம் பிறை நிலவு. பக்தர்கள் சூழ்ந்து நின்று மூன்றாம் பிறையினைத் தரிசித்து வணங்குகின்றனர். அதன் பின்னரே மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு தீபாராதனைகள் தொடங்குகின்றன.
அமாவாசை கழித்து, மூன்றாம் நாளின் இரவு 6.30 மணிக்கு மேல் 7.10 மணிக்குள் மூன்றாம் பிறை தெரியத் தொடங்கிவிடும். மழை நாட்கள் மற்றும் கருமேகம் சூழ்ந்த நாட்களில் மூன்றாம் பிறை தெரிய வாய்ப்பு கிட்டாது. அப்போது மேற்குறிப்பிட்ட நேரத்தைக் கணக்கில் கொண்டு, கோயிலில் மூன்றாம் பிறை வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

மூன்றாம் பிறை வழிபாட்டு பூஜையின்போது, மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு அத்திப்பழ நைவேத்யம் சமர்ப்பிக்கப்படுகிறது. வழிபாட்டுக்குப் பிறகு மூலவரின் மீது சாத்தப்படும் தசாவனி தைலக்காப்பு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது கண் பார்வைக் குறைபாடுகளைப் போக்குகிறது. பக்தர்கள் இதனை உச்சந்தலையிலும் இமைகள் மீதும் பூசிக் கொள்கின்றனர். இது, கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்து, பார்வைத்திறனை அதிகரிக்கச் செய்கிறது. கண் நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் தொடர்ந்து மூன்றாம் பிறை வழிபாட்டினில் பங்கேற்று, தசாவனி தைலக் காப்பை உபயோகப்படுத்தி, கண் தொடர்பான பிரச்னைகளிலிருந்து விடுபடுகின்றனர்" என்கிறார் அர்ச்சகர் வைத்தியநாதன் குருக்கள்.





கள்ளர்களுக்கும் சமணத்திற்க்கும் நீண்ட தொடர்பு உள்ளது என்பதற்கு ஏற்ப அடர்ந்த புற்களுக்கு நடுவே காலத்தால் மிகவும் பழமையான சமணர் சிற்பம் உள்ளது. 

இன்னும் சிறிது புதைந்த நிலையில் சிற்பம் இருந்தது. முன்பு வயலில் வேறொரு இடத்தில் இருந்ததாகவும், தற்போது பாதுகாப்பிற்காக முத்தாளம்மன் கோயில் அருகே வைத்திருப்பதாகவும் அங்கிருந்தோர் கூறினர்

ஆய்வு : பரத் இராமகிருஷ்ணன்

நன்றி: 
திரு. ஐயா இராமலிங்கம்
திரு. ஐயா பா.ஜம்புலிங்கம்


அமைவிடம்: கல்லணைக்குக் கிழக்கே 14 கி.மீ., திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 12 கி.மீ., பூதலூரிலிருந்து 12 கி.மீ.தொலைவில் உள்ளது கோயில்.

தெய்வத்திரு. அழகு திருநாவுக்கரசு சேண்டபிரியர்



திருவாரூர் மாவட்டம், எடமேலையூர் கிராமத்தில் பிறந்தவர் தெய்வத்திரு. அழகு திருநாவுக்கரசு சேண்டபிரியர்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட அதிமுக செயலாளராக பணியாற்றியவர்.

1991 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று. 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். பின்னர் திமுகவில் இணைந்து அதன் விவசாய தொழிலாளர் அணி செயலாளராக பணியாற்றினார்


பாரத ரத்னா எம்ஜிஆரின் தளபதிகளில் இவரும் ஒருவர். அவருடைய கட்சியில் மாணவர் அணிச் செயலாளராக பணியாற்றியுள்ளார்.

21ம் நூற்றாண்டில் துளிகூட லஞ்சம் வாங்காமல் தன்னுடைய சொத்துக்களை விற்று அரசியல் செய்த உத்தமர்.

எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கியபோது அதில் இணைந்த அழகு திருநாவுக்கரசு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட அதிமுக செயலாளராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றிவர்.

சென்னையில் நேரு ஸ்டேடியம் கட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர். 
கடந்த 1991ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை புரட்சி தலைவி ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர். 

எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளித்த உத்தமரின் 2015ம் ஆண்டு காலமானார்

ஓ. ஆர். ராமச்சந்திரன் தேவர்




தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் ஆவார். 1991 ஆம் ஆண்டு தேர்தலில் கம்பம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1996 மற்றும் 2001 தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராகவும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஞாயிறு, 15 மார்ச், 2020

நெட்டையர் / நெட்டையார் மரபினர்



வரலாற்றில் நரைமுடி நெட்டையர் என்ற சிறைமுடி நெட்டையர் என்பவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடலாக ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது அகநானூறு 339 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.
அகராதி நெட்டை என்பதற்கு ஒரு படை வகை என்று விளக்கம் தருகிறது. 


இன்றும் நெட்டையர் மரபினர் ணோழ பாண்டிய மன்னர்களின் எல்லையான புதுக்கோட்டை மாவட்டத்தில் வாராப்பூர் கள்ளர் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.


வாராப்பூர் நாட்டு நெட்டையர் இல்ல காதணி விழா அழைப்பிதழ் தான் இது


திருமதி குணவதி நல்லிப்பிரியர்




சென்னை ஆன்மீகப் பேரவை சார்பில் மேற்கு மாம்பலம் பாணிக்ரஹா மண்டப அரங்கில் பிப்ரவரி 15, 2014 (சனிக்கிழமை) அன்று திருமங்கை ஆழ்வார் பற்றிய ஆன்மீக சிறப்பு நிகழ்ச்சி நடத்தப் பட்டது. கவிஞர் ஆனந்த அவர்கள் தொகுத்து வெளியுட்டுள்ள 'திருமங்கை ஆழ்வார்' பற்றிய ஆன்மீகப் புத்தகம் வெளியிடப்பட்டது! ஆன்மீக உள்ளத்தோடு மக்கள் பணி செய்யும் நற்சிந்தனையாளர் திருமதி  குணவதி நல்லிப்பிரியருக்கு ஆன்மீகப் பெருந்தகை எனும் சிறப்பு பட்டத்தை அளித்து 'சென்னை ஆன்மீகப் பேரவை' கவுரவித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்ட தினம்

   
ஜனவரி 14, 1974 இல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் இருந்து சில பகுதிகளை பிரித்து ,இணைத்து உருவாக்கப்பட்டது தான் இப்போதைய புதுக்கோட்டை மாவட்டம்.

வரலாற்றுக்கு முந்தைய கால மனிதா்கள் வாழ்ந்த இடமாக இந்த மாவட்டம் இருந்துள்ளது. இம்மாவட்டத்தின் பல கிராமங்கள் தொன்மை வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இம்மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிக அளவில் கண்டறியப்பட்ட இறந்தோரை புதைக்கும் இடங்களே இதற்குச் சான்று.

இம்மாவட்டம் தமிழா்களின் கடல் வாணிபச் சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. கருக்காகுறிச்சியில் கிடைத்த 500-க்கும் மேற்பட்ட ரோமானிய தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் அடங்கிய புதையல் பானை இம்மாவட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

1947 ஆகஸ்டு 15-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபின் சமஸ்தானங்களை இணைக்கும் நிர்வாக வழிமுறைகள் இறுதி செய்யப்பட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் 03.03.1948-ல் இந்திய நிர்வாகத்துடன் இணைந்து திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய் கோட்டமானது.

புதுக்கோட்டையில் நிலவிய தொண்டைமான் மன்னா்கள் ஆட்சி நிறைவு பெற்று மக்களாட்சி ஏற்பட்டது. நவீன புதுக்கோட்டையின் சிற்பிகள் தொண்டைமான் மன்னா்கள் எனலாம். புதுக்கோட்டை வரலாறு தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறது. 



பல சிறப்பு அம்சங்கள் கொண்ட புதுக்கோட்டை மாவாட்டம் 

புதுகையைப் போற்றுவோம் நிகழ்ச்சியில்........

* தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம்  சங்க காலம் தொட்டு இன்று வரையான வரலாற்றுத் தொடர்ச்சியை கொண்டது

* தமிழகத்தில் அதிகமான வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ள மாவட்டம் புதுக்கோட்டை

* இந்தியா முழுமைக்கும் கண்டெடுக்கப்பட்ட 60,000 கல்வெட்டுகளில் 1500 கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவை.

* புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் வரலாற்று சின்னங்களைப் போற்றிப் பாதுகாத்து வந்தனர்.

* தமிழகத்தின் இரண்டாவது பெரிய அருங்காட்சியம் புதுக்கோட்டையில் தொண்டைமான் மன்னர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

* காஞ்சிபுரத்திற்கு அடுத்து அதிகமான ஏரிகள் உள்ள மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டமாகும்.

தொல்லியல் கழக பொது செயலர் ( சு. ராஜவேலு) / 02-03-2020 / தினமணி 


# சியாம் சுந்தர் சம்பட்டியார் #



வெள்ளி, 13 மார்ச், 2020

சின்னதம்பி சாணையர்



சமயத்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் காணப்படுகிறது. மருதப்பிரவீகவல்லி எனும் குதிரை முகமுடைய சோழ இளவரசி முருகப்பெருமானை வழிபட்டு, முருகன் அருளால் குதிரை முகம் நீங்கி மகா பேரழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது. அதன் காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம் (மா + விட்ட + புரம்) என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.

முதலியார் இராசநாயகம் கதிரமலையை வலி. மேற்கில் உள்ள கந்தரோடை என அடையாளப்படுத்தி, அதுவே நாக நாட்டில் தோன்றிய முதலாவது தமிழ் அரசு எனவும் அவ்வரசின் தலைநகர் சிங்கை நகருக்கு இடம்மாறியதற்கு சோழர் வருகையே காரணம் எனவும் குறிப்பிடுகின்றார். இவரின் கருத்தை ஆமோதிக்கும் சுவாமி ஞானப்பிரகாசர் இவ்வரசின் தோற்ற காலத்தை கி.பி. 8ஆம் நூற்றாண்டு என குறிப்பிடுகின்றார்.

ஏறத்தாழ இதே காலப்பகுதியில் கதிர மலையிலிருந்து ஆட்சி புரிந்த உக்கிரசிங்க மன்னன் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலை தோற்றுவித்த சோழ இளவரசியான மாருதப்புரவல்லியை பட்டத்தரசியாக்கி அக்கோயிலின் வளர்ச்சிக்கு பல பணிகளை செய்தான் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.

சோழ சாசனம் ஒன்று வட இலங்கையில் வலிகாமத்தை வெற்றி கொண்டு அங்கிருந்து பெருமளவு யானைகளை தமிழகம் கொண்டு சென்றதாகக் கூறுகின்றது. மாவிட்டபுரம் அமைந்த சுற்றாடலில் காணப்படும் வளவர்கோன் பள்ளம் காங்கேசன்துறை சோழக் கல்வெட்டுக்களில் அதிலும் குறிப்பாக பராந்தக சோழன் காலக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்படும் பெயராகும். இவற்றை நோக்கும் போது மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலின் தோற்றத்தை சோழருடன் தொடர்புபடுத்துவது பொருத்தமாகத் தெரிகின்றது.

ஆயினும் கி.பி16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் கடைப்பிடித்த கலையழிவுக் கொள்கையால் யாழ்ப்பாணத்தில் 500 ற்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன. அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் ஒன்றாக இருக்கலாம்.




1782 ஆம் ஆண்டு தீட்சிதர் சபாபதிகுரு அவர்களால் மீண்டும் நிர்மாணித்து தேரோட்டமும் நடந்தது. 1927 ஆம் ஆண்டில் இருந்து மாவிட்டபுரம் கொல்லங்கலட்டி சின்னதம்பி சாணையர் குமாரர்கள் கந்தையா சாணையர், சரவணமுத்து சாணையர் தொடர்ந்து, இத்தேரோட்டத்தை நடத்தி வந்தார்கள். சாணையர் பட்டமுடையவர்கள் கந்தர்வக்கோட்டை கள்ளர் பாளையத்தில் உள்ள கள்ளர் நாடுகளில் வாழ்ந்தெ வருகின்றனர்.





















காமராஜர் ஜப்தி!



இறந்தோர் எல்லாரும் சிறந்தோரே!
போன காலமெல்லாம் பொற்காலமே!
என்ற விமர்சனத்தில்
எனக்கு உடன்பாடில்லை!

நான்பிறந்த ஆறாவயலில்
வானம்பார்த்த இரண்டு
மானாவாரிக் கண்மாய்கள்!

பேய்ந்து அழுகினாலும்
காய்ந்து சாவியறுத்தாலும்
நெரித்து வரிவாங்கிய அரசாங்கம்!

1957 இல் இருந்து 1967 வரை
பத்தாண்டுகளில் நானறிந்து
என் வீட்டில்
மூன்றுமுறை ஜப்தி செய்தார்கள்!

ஒருமுறை
கட்டுத்துறையில் கட்டியிருந்த
உழவு மாடுகளை
அவிழ்த்து ஓட்டிப் போனார்கள்!

இன்னொருமுறை,
நல்லதண்ணீரை
மாட்டுக் குழிதாழியில் கொட்டிவிட்டு
இரண்டு பித்தளைத் தவலைகளை
எடுத்துச் சென்றார்கள்!

அடுத்தொருமுறை,
புதிதாக வாங்கிவந்து
கசாலையில் வைத்திருந்த
போஸ்கலப்பையை, நுகத்தை,
பூண்கணை போட்ட 
டாடா மண்வெட்டியை
கொண்டு போனார்கள்!

அய்யோ ஜப்தி செய்துவிட்டார்களே
குடும்ப மரியாதையெல்லாம் 
போயேபோச்சே!
பங்காளி பகுத்தாளி துப்புவார்களே
என்று கூனிக்குறுகி
பானையில் சோறிருந்தும் எனையீன்றோர்
பட்டினி கிடந்த நாட்கள் பலப்பல!

ஏழையர் வீடுகளில் தான்
ஜமாபந்திகளின் ஜப்திகள் நடந்தன!

சுட்டசெங்கல் சுவர்வைத்த
ஓட்டு வீடுகள்,
கரண்ட் இழுத்த வீடுகள்
ரேடியோ பெட்டி உள்ள வீடுகள்,
சங்கிலித் தாலி அணிந்த
தலைவியர் வீடுகள்,
வில் வண்டியும், அதை ஓட்டுவதற்கு
பண்ணையாளும் 
இருந்த வீடுகள், இவைகள்
பணக்கார வீடுகள்!

பல வருட வரிப்பாக்கி இருந்தாலும்
பணக்கார வீடுகளுக்குள்
ஜப்தி என்று
தலையாரி நுழைந்ததில்லை!

அன்றைய அரசு காங்கிரஸ் அரசு!
அன்றைய காலம் காமராஜர் காலம்!

அதைத் தான் பொற்காலம் என்றும்
புண்ணியவான்கள் ஆட்சி என்றும்
இன்றைக்குப்
போற்றிக் கொண்டிருக்கிறார்கள்!

கட்டுரை: ஆறாவயல் பெரியய்யா

கள்ளரும் வலையர் சமூகமும்



தொண்டைமான் அரசர்கள் வேட்டைக்கு செல்லும் போது வேட்டை சமூகமான வலையர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர். மற்றும் அரசரின் வனப்பகுதிகளையும் பாதுகாத்துள்ளனர்.


அதன் மூலமாக பல நிலங்களை, அரசரிடமிருந்து இனாமாக பெற்றுள்ளனர்.

ஆரம்ப காலத்தில் இருந்தே அரசருடன் நல்ல உறவு முறையில் வலையர் சமூகம் இருந்துள்ளது.

இன்றும் புதுக்கோட்டையில் பல கோவில்களில் தொண்டைமான் அரசரால் காவலுக்கு வைக்கப்பட்ட வலையர்கள் இன்றும் கோவில் காவல் பணியில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




தஞ்சை மாவட்டம் ஆம்பலப்பட்டு கிராமத்தில் "செல்லையா நினைவு குழு" நடத்தும் 53 ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடக்கிறது. 

இந்த போட்டியை நடத்தும் குழுவினர், அணியினர் அனைவருமே "கள்ளர்"சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆனால் அந்த "செல்லையா"மட்டும் வலையர் சமூகத்தை சேர்ந்தவர்,

53 வருடங்களுக்கு முன்பு இந்த கிராமத்து அணிக்கு கோல்கீப்பராக இருந்தபோது மாரடைப்பால் காலமானார் செல்லையா அன்று முதல் அந்த கிராமத்து அணியின் பெயராக இன்றுவரை தொடர்கிறார்



நன்றி
The hollow crown 👑 by Nicolas B. Dirks 

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்