புதன், 20 பிப்ரவரி, 2019

சோழர்கால மன்னார்குடி கள்ளப்பற்று



மன்னார்குடி மதிலழகு, மண்ணில் மிக்கது மன்னார்குடி, மறையோர் மிகுந்தது மன்னார்குடி, கோயில் பாதி... குளம் பாதி' எனும் பழமொழிகளால் இவ்வூர் பெருமை பெறுகிறது. 

இவ்வூருக்கு 

சுத்தவல்லி வளநாடு, 
ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம், 
குலோத்துங்க சோழ விண்ணகரம், 
ராஜேந்திர சோழ விண்ணகரம், 
செண்பகாரண்ய சேத்திரம், 
வாசுதேவபுரி, 
தட்சிணதுவாரகா, 
வண்டுவராபதி, 
சுயம்புத்தலம், 
மன்னவர்குடி, 
ராஜமன்னார்குடி, 
மன்னை என பலபெயர்.

இங்கு இராசகோபாலஸ்வாமி திருக்கோவில், செயங்கொண்டநாதர் கோவில், அண்ணாமலை நாதர் கோவில் ஆகியவை சிறப்புடையவை.

சோழ பெருவேந்தர்களில் முதலாம் இராசாதிராசன் காலத்தில் இவ்வூர் தனிசிறப்புடன் வளர்ந்திருக்கிறது. சோழர் கல்வெட்டுகளில் இவ்வூர் சுத்தவல்லி வளநாட்டுத் தனியூர் இராஜாதிராஜச்சதுர்வேதி மங்களம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.


இராசகோபாலஸ்வாமி திருக்கோவில் இராசாதிராசன் விண்ணகரம் என்ற பெயரிலும்,

செயங்கொண்டநாதர் திருக்கோவில் முதலாம் இராசாதிராசனின் பெயரில் "ஜெயங்கொண்ட சோழீஸ்வரம்" என்ற பெயரிலும்,

கைலாசநாதர் கோவில் " ஸ்ரீ கைலாசமுடையாரான ராஜாதிராஜூசுவரமுடையார்" என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளன.


கள்ளப்பற்று:

இந்த ஊர் கள்ளர் நாடு என்பதற்கும், கள்ளப்பற்று இருந்ததற்கும் ஆதாரமாகா, இராசகோபாலசாமி கோவில் பெயர் " இராசாதிராசா விண்ணகர்" என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுவதால் சோழப் பெருவேந்தன் இராசாதிராசான் பெயரால் ஏற்படுத்தப்பட்டவொன்று என்பது தெளிவானது, முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இந்த கோவிலின் கருவறைப் பகுதி திருப்பணி செய்து கட்டப்பட்டதைத் தொடர்ந்து "குலோத்துங்க சோழ விண்ணகரம்" என்று பெயர் மாற்றி வழங்கப்பட்டதையும், தன் வைணவப் பற்றை இக்கோவில் கட்டுமானப்பணியால் தெளிவுபடுத்தினான். 

இவன் காலத்தில் இக் கோவில் இறைவனுக்கு " வண்டுவராபதி ஆழ்வார் " என்ற பெயர் வழங்கி வருகிறது. இக்கோவில் முன் மாமரம் இருந்துள்ளது. 1018 ஆம் ஆண்டு இராசாதிராசச் சதுர்வேதிமங்கலத்து சபையோர் கூடி காடு, நாடு, நகரம், கள்ளப்பற்று ஆகியவற்றில் இருந்து 30,000 காசுகள் வசூலித்துக் கோவிலுக்குக் கொடுக்க முடிவு செய்தனர். கள்ளப்பற்றிலுருந்தும் காசுகள் வசூலிக்கப்பட்டுள்ளன.




இங்கு இருந்த நாடு என்ற அமைப்பு "நாட்டார் " என்றழைக்கப்பட்ட நாட்டவை மூலமாக நிர்வகிப்பட்டுவந்தன. நாடுகள் சோழ அரசர்களின் பெயர்களைக் கொண்டு விளங்கின. மன்னார்குடி உள்ள திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் எட்டு வளநாடுகள் இருந்துள்ளன. விசய நகர, நாயக்கர் காலத்தில் நாடுகள் படிப்படியே தமது சமூகத் தன்மையை இழக்கத் தொடங்கின. புதிய ஆட்சியாளர்கள் சீமை, பாளையம், மாகாணம் என்றும், ஆங்கிலேய, முகமதிய காலத்தில் மாவட்டம், தாலுகா என்று பிரிவுகள் தோன்றின. கள்ளர்கள் வாழும் பகுதிகள் மட்டும் இன்றும் நாட்டு அமைப்பில் உள்ளன.

மன்னார்குடி வட்டத்தில் அருள்மொழிதேவ வளநாடு, சுத்தவல்லி வளநாடு, நித்தவிநோத வளநாடு இருந்துள்ளது. இன்றும் இந்த பகுதியில் கள்ளர் நாடக மன்னார்குடி பகுதியில் உள்ள கள்ளர் நாடுகளாக ராஜவளநாடு (நடுவக்கோட்டை முதல் கரை), பைங்கநாடு ( பைங்கா நாடு முதற்கரை), தென்பத்து நாடு மற்றும் அருகிலுள்ள வடுகூர் நாடு ( தென்பாதி முதற்கரை) உள்ளன. வணிகர் சமூக ஊர்கள் (புரம்) நகரம் என்று அழைக்கப்பட்டன. வேளாண் சமூக கிராமம் "ஊர் " என்று அழைக்கப்பட்டன.

மன்னையை சுற்றி கள்ளர்கள் வாழும் பகுதிகள் சில:

காடு: புள்ளராயன் குடிகாடு, மரவாகாடு, சம்பட்டியான் குடிகாடு, வெட்டிகாடு, இராசாளி குடிகாடு, சின்னபுலி குடிகாடு மற்றும் வல்லான் குடிகாடு.

நாடு: 

ராஜவளநாடு 
(நடுவக்கோட்டை முதல் கரை), 

பைங்கநாடு 
( பைங்கா நாடு முதற்கரை), 

தென்பத்து நாடு (முதற்கரை பேரையூர்) 

அருகிலுள்ள வடுகூர் நாடு 
( தென்பாதி முதற்கரை) 

கோட்டை: நெடுவாக்கோட்டை, வடுவூர் புதுக்கோட்டை, பரித்திக்கோட்டை, அத்திக்கோட்டை, மூவர்கோட்டை, ஆவிக்கோட்டை, பெரியக்கோட்டை, காரக்கோட்டை, கரிக்கோட்டை.

ஊர்: கள்ளர் எம்பேதி, பேரையூர், எடமேலையூர், எடகீழையூர், கட்டக்குடி பேரையூர், மூவாநல்லூர், பழையனூர், பனையூர், கோட்டூர், பூவனூர், முக்குலம் சாத்தனூர், ரிஷியூர், மேலமருதூர், மழவராயன் நல்லூர். கண்ணாரபேட்டை, சோழப்பாண்டி, சேரன்குளம், ராதாநரசிம்மபுரம், குமரப்புரம், துளசேந்திரபுரம், ராயபுரம், தலையாமங்கலம், புள்ளமங்கலம், செருமங்கலம், குறிச்சி, கருவாக்குறிச்சி, கீழக்குறிச்சி, ஒட்டகுடி, நெம்மேலி, பாமணி, சவளக்காரன், சேனைகரை, அதங்குடி, களஞ்சிமேடு, கருணாவூர், தட்டங்கோயில், அரவத்தூர், அசேஷம், மகாதேவப்பட்டிணம், செட்டிசத்திரம், சேரி, காவரப்பட்டு, மேலநத்தம், எளவனூர்.

கள்ளர்களுக்கு இராசகோபாலசாமி கோயிலுரிமை:

இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள் திருவிழாவும், அதனை தொடர்ந்து 12 நாள் விடையாற்றி விழாவும் நடைபெறுவது வழக்கம்.

ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலில், பங்குனி பெருவிழாவில் சிறப்பு அம்சமாக கள்ளர் சமூகத்தார் சார்பில் மதியம் "செட்டி அலங்காரமும்", இரவு ஏழு மணியளவில் "தங்க வெட்டுங்குதிரை" நடைபெறும். கள்ளர் சங்கத்தால் தங்கமுலாம் பூசி செய்யப்பட்ட தங்கக்குதிரையில் ராஜகோபாலனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, வாணவேடிக்கை முழங்க, வீதிகளில் தோன்றி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.


முதன் முதலாக மன்னார்குடிநகர மன்ற தலைவராக செயல்பட்டு மன்னை நகரத்திற்கு சிறந்த சீர்த்திருத்தங்களை செய்தவர் கோபால்சாமி தென்கொண்டார். 1970 வெண்ணெய்தாழி உற்சவத்தன்று இரவு நடக்கும் தங்கக்குதிரை வாகன மண்டகபடியை தொடர்ந்து விடியும் வரை கள்ளர் சமூக மண்டகப்படியாக ஏற்படுத்தினார். கள்ளர் சங்கத்தையும் தோற்றுவித்து அதன் தலைவராக வீற்றிருந்த பெருமை படைத்தவர். கள்ளர் குல மக்களை எல்லாம் ஒன்று திரட்டி மாபெரும் விழாவாக வெண்ணெய்தாழி உற்சவத்தன்று கள்ளர் மண்டகப்படியை ஏற்படுத்தி அதனை இன்று வரை கள்ளர் சங்கத்தால் செயல் படுத்த வித்திட்ட பெருமை இவருக்கு என்றென்றும் உண்டு. இவர் இராசகோபால் ஆலயத்தின் அறங்காவலர் குழு தலைவராக இருந்தபோது தான் ஆலயத்தின் பழுதுகள் செய்யப்பட்டு ஆலயம் புதுப்பொலிவுடன் திகழ்ந்தது. இன்று இந்த பணியை ஆன்மிகச் செம்மல் ஐயா திவாகரன் சாளுவர் செய்து வருகிறார். இவரால் ஆலயத்தின் பழுதுகள் சரி செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இன்றும் அவருடைய பராமரிப்பு மூலம் ஆலயம் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.



மன்னார்குடி, ராஜவளநாடு நெடுவாக்கோட்டையின் தலைமை கள்ளர்களின் நெடுவாண்டார் என்னும் பட்டமுடையோர் கையில் உள்ளது. நெடுவாக்கோட்டையில் பெறும்பான்மை முனையதிரியர் பட்டமுடைய கள்ளர்கள். இவ்வூரிண் நாட்டாண்மைக்காரருக்கு மன்னை இராசகோபாலசாமி கோயிலில் ஆண்டுதோறும் இருமுறை சிறப்பு மரியாதை வழங்கப்படுகிறது. தை மாதம் சங்கராந்தி பெருமாளுக்கு கொண்டாடப்படும். கனு பாரி வேட்டை குதிரை வாகனத்தில் சென்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடந்தேறும். இதில் சிறப்புப் மரியாதை கள்ளர்களில் ஒன்று முனையதிரியருக்கும் மற்றேன்று ஆதித்த உடையவர் என்ற பட்டப்பெயர் கொண்டோருக்குதான்.

மூன்றாம் இராசேந்திர சோழன் கோவில் இறைவனுக்கு விசிறி, சங்கு, பகல்விளக்கு, சின்னம், போன்ற பல திருப்பரிகலன்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மன்னார்குடி இராசகோபால சாமி கோவில் முதல் இராசாதிராசன் காலத்தில் பதினோராம் நூற்றாண்டில் எடுக்கப்பட்டு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் பெயர் மாற்றம் பெற்றது. மூன்றாம் ராசேந்திர சோழன் ஆட்சியில் " வண்டுவராபதிமடம்" என்ற வைணவ மடம் மன்னார்குடியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மடப்புற இறையிலியாய் இக்காலத்தில் நிலங்கள் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை நாயக்கர் காலத்தில் இராசகோபால சாமி கோவில் பெரும் மண்டபங்களும், இராசகோபுரமும் வாகன மண்டபங்களும் கட்டப்பட்டன. தஞ்சை மராட்டியர் ஆட்சியில் கோவில் வளர்ச்சி பெற்றது. இதை போல் மன்னார்குடி வடுவூர் பெருமாள் கோவில் தஞ்சை நாயக்கர் காலத்தில் தோன்றி மராட்டியர் ஆட்சியில் கோவில் வளர்ச்சி பெற்றது.

நாயக மன்னர் ஸ்ரீ இராஜகோபாலசுவாமியையே தனது குல தெய்வமாக கருதினார் மேலும் கோயிலில் பல தெலுங்கு காவியம் இயற்றினார். இன்றும் ஸ்ரீ இராஜகோபாலசுவாமிக்கு விஜயராகவ நாயக்கரின் அலங்காரம் செய்து, அவரது பெயரை கூவி கட்டியம் கூறுகின்றனர்.


ஜெயங்கொண்டநாதர் கோயிலுரிமை!




13 ஆம் நூற்றாண்டில் செயங்கொண்டநாதர் திருக்கோயிலுக்கு போசள மன்னன் வீரராமநாதன் தம் பெயரில் சந்தி ஏற்படுத்தி, தேவதான இறையிலியாக நிலம் வழங்கியுள்ளார்.

இக்கோயிலில் விக்கிரம பாண்டியன் " விக்கிரம பாண்டியன் திருமண்டபம்" என்ற திருமுன் மண்டபம் சந்தி ஏற்படுத்தி, தேவதான இறையிலியாக நிலம் வழங்கியுள்ளார்.

கள்ளர் அரையர் பாப்பாநாடு விசையா தேவர் : "இராசராசவளநாடு ராசேந்திர சோழ வளநாடு, பொய்யூர்க் கூற்றத்துப் பாப்பாக்குடிநாடு, பாப்பாகுடிநாடு, செறுநல்லிக்கோட்டை நென்மேலி வாடியிலிருக்கும் நல்லவன் விசையதேவரவர்கள் குமாரர் இராமலிங்க விசையா தேவர்வர்கள் பாப்பாநாட்டவர் களுக்குக் காணியாக இருக்கிற செயங்கொண்டனாத சுவாமி" என்று குறிப்பிடுகிறது. செயங்கொண்டநாதர் கோவிலில் பாப்பாநாடு விசையா தேவர்வர்கள் ஒருவரின் சிற்பம் வழிபாட்டிலிருந்து வருவதும், இராமலிங்க விசையாத்தேவர் அவர்கள் சுவாமியின் அர்த்தசாம பூசைக்காக 46 பொன் இராசகோபாலச் சக்கரத்தை மூலப்பொருளாக வழங்கி இருக்கிறார். (1757 )

கள்ளர் அரையர் "ஸ்ரீசவாய் விஜயரகுநாத வாளாசி கிருஷ்ணக்கோபாலர்":
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப்சிங்கின் காலத்தில்({1758 } மன்னார்குடி ஜெயங்கொண்டநாத ஸ்வாமி கோயிலுக்கு இறையிலியாக கொடைகள் அளித்த செய்திக்குறிப்புகள் உள்ளன. அக்கோயிலின் இறைவனுக்கு காலைச்சந்திக்கு நாள் ஒன்றிற்கு இரண்டு பணம் வீதம் ஆண்டிற்கு 720 பணம் என்ற கணக்கின் கீழ் 72 பொன் ராசகோபால சக்கரமும், வெள்ளிக்கிழமைகளில் வரும் சுக்கிரவாரகட்டளைக்காக மாதமொன்றிற்கு 6- பணம், 1-பொன், ஆகமொத்தம் வருடமொன்றிற்கு 19 பொன், இரண்டு பணமும் அளித்துள்ளார், இதே மன்னரின் மற்றொரு 1760 ஆம் ஆண்டைச் சேர்ந்த செப்பேட்டில் சாயரட்சை வழிபாட்டிற்காக {மாலைநேர பூஜை} ஆண்டிற்கு 40 பொன் வழங்கியமையையும் அறியமுடிகிறது.


மன்னார்குடி இந்த நூற்றாண்டின் கள்ளர் குல மாமனிதர்கள்:

தியாகி. கோபால்சாமி தென்கொண்டார்
புலமை வேங்கடாசலம் வன்னியர்
பெரும்பேராசிரியர் அ.தட்சணாமூர்த்தி நெடுவாண்டார்
முனைவர் மு.இளமுருகன்
மன்னை ப. நாராயணசாமி ஓந்திரியர்
ஆச்சி மனோரமா கிளாக்குடையார்.
சின்னம்மா வீ.கே. சசிகலா சாளுவர்
ஆன்மிகச் செம்மல் திவாகரன் சாளுவர்
மக்கள் செல்வர் . T.T.V. தினகரன் முனையந்திரியர்

மன்னார்குடி சிறப்புக்கள்

மராட்டி மன்னர்கள் தங்கள் ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதியை ஐந்து பிரிவுகளாக பிரித்தனர். பிரிவு "சுபா" எனப்பட்டது. அதில் மன்னார்குடியும் ஒன்று (மன்னார்குடி, பட்டுக்கோட்டை, கும்பகோணம், மயிலாடுதுறை, திருவையாறு)

ராஜாதி ராஜ சோழனால் கட்டப்பட்டதால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் சென்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், உற்சவருக்கு ராஜமன்னார் என்றும் பெயர் உண்டு. இப்பெயரே பிரசித்தி பெற்றதால், ஊருக்கும் "ராஜமன்னார்குடி'.என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர்அழைக்கப்படுகிறது.

சைவம், வைணவ, சமண, பௌத்த சமயங்கள் எல்லாம் இங்கு சிறப்பாக இருந்துள்ளது. சோழர்கள் ஆதரவும் தந்துள்ளனர்.



மன்னார்குடித் தாலுகாவின் தலைநகர். பண்டைக் காலத்தில் இவ்வூரில் சமணர் அதிகமாக இருந்தனர். இப்போதும் சில சமணர் உள்ளனர். ஒரு சமணக் கோயிலும் இருக்கிறது. மன்னார்குடி பக்கத்தில் உள்ள பள்ளகோவில் பகுதியில் சுந்தரசோழன் காலத்தில் சமணப்பள்ளி இருந்துள்ளது. இப்பள்ளி சுந்தரசோழப்பெரும்பள்ளி என்று அக்கால அரசனின் பெயரால் அழைக்கப்பட்டது. இங்குள்ள ராஜகோபால சுவாமி கோயில் துவஜஸ்தம்பம், ஜைனருடைய மானஸ்தம்பம் போன்றிருக்கிறபடியால் இஃது ஆதியில் சமணக் கோயிலாக இருந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர்

பௌத்த சமய நூல்களை எழுதிய புத்ததத்தர் என்ற பௌத்த துறவி மன்னார்குடி பக்கத்தில் உள்ள பூதமங்கலத்தில் வாழ்ந்துவந்துள்ளார். வேணுதாசர் என்பவர் கட்டிய புத்தவிகாரம் இங்கு இருந்துள்ளது. மன்னார்குடி சமணர் கோவிலில் புத்தரின் சிற்பம் ஒன்று இருந்துள்ளது.

அச்சுதப்ப நாயக்கரின் சிற்பமும், மனைவி மூர்த்தியம்மாளின் சிற்பமும் , மராட்டிய மன்னர் பிரதாப்சிங் கல்வெட்டும் மன்னார்குடியில் காணப்படுகின்றன.

சாரிகைக்கோட்டை என்று அழைக்கப்படும் வணிகர் குடியிருப்பு இருந்துள்ளது. இதில் புவனேகவிரன் மடிகை என்ற பெயரில் சரக்கு மண்டி இருந்துள்ளது. இது விக்கிரமபாண்டியன் மடிகை என்றும் பெயர் பெற்று விளங்கியது.

சாரிகைக் கோட்டைக்குள் வரும் ஒவ்வொரு சரக்கிற்கும் குறிப்பிட்ட அளவு பணம் வரியாக வசூல் செய்யப்பட்டது என்று மன்னார்குடி செயங்கொண்ட சோழீஸ்வரர் கோவிலில் உள்ள விக்கிரம பாண்டியன் கல்வெட்டு கூறுகிறது.

முதலாம் இராசராசன் காலத்தில் நன்னிலம் வட்டத்து கிரானுரில் இருந்து துர்க்கை கோவிலுக்கு அர்ச்சனா போகமாக நிலமளிக்கப்பட்டுள்ளது. வலங்கைமான் வட்டத்து முனியூரில் சோழர் காலத்தில் துர்க்கையம்மன் கோவில் இருந்துள்ளது. கொற்றவை வழிபாடு சோழர்காலத்தில் தனிக்கோவிலாக வைத்து வழிபடப்பட்டாள்.

ராஜகோபால சுவாமி கோயில் கொடிமரம் தமிழ் நாட்டு கோவில்களில் அறியமுறையில் காணப்படும் நாயக்கர்காலக் கலைபடைப்பாகும்.

1866-லேயே மன்னார்குடியை நகராட்சியா வெள்ளைக்காரர்கள் அறிவித்தனர்.

சுதந்திரபோராட்ட காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து வீறு கொண்ட நகரமாக விளங்கிய மன்னார்குடி நகரத்தில் ரயில்வே நிலையம், நகராட்சி ஆகியவற்றை ஆங்கில அரசுக்கு எதிராக அடித்து உடைத்து சுதந்திரத்தை பெற போராடிவர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருந்ததை குறிப்பிட்டு தென்னகத்தின் பர்தோலி என பாராட்டப்பட்ட நகரம்.

மாஸ்கோவில் மழைபெய்தால் மன்னார்குடியில் குடைபிடிப்பார்கள் என்று சொல்கின்ற அளவிற்கு இடதுசாரி இயக்கம் ஆழமாக வேரூன்றிய பகுதி.

பெரியார் அறிவித்து நடத்தி முடிக்காமல் விட்ட ஒரே போராட்டம் மன்னார்குடிராஜகோபாலசுவாமி கோயிலில் ஆலயநுழைவு போராட்டம்.

மன்னார்குடியில் ஓரிரவு தங்கினால் ஒரு கோடியாண்டுகள் தவமியற்றியதற்கு சமம் என்கிறார்கள்.

இந்தியாவிலேயே நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட நகரங்களில் ஒண்ணு மன்னார்குடி. பாமணி ஆறு கைபோல அரவணைச்சு இருக்க, மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி அமைக்கப்பட்ட தெருக்கள், வடக்கில் இருந்து தெற்கு நோக்கி அமைக்கப்பட்ட வீதிகள்னு கச்சிதமா அமைக்கப்பட்ட ஊர்.

அந்தக் காலத்தில் மன்னார்குடியோட பரப்பளவு வெறும் ஆறு சதுர கி.மீ-தான். ஆனா, இந்தச் சின்ன ஊரில், திரும்பின பக்கம் எல்லாம் குளங்கள். மொத்தம் 98 குளங்கள் இருந்தது

ஊரோட பெரிய குளமான ஹரித்ரா நதி, நாட்டிலேயே பெரிய குளங்களில் ஒண்ணு. 1,158 அடி நீளம், 847 அடி அகலம், 22.516 ஏக்கர் பரப்புடைய அதைக் காவிரியோட மகள்னு சொல்வாங்க

நூற்றாண்டைக் கடந்த கோட்டூர் அரங்கசாமி முதலியார் அறக்கட்டளை நடத்தும் நூலகம், புலவர் - வேத மன்றங்கள். இன்னொண்ணு, நாட்டிலேயே முதல்முறையா எஸ்.வி. கனகசபை பிள்ளையால் மாட்டு வண்டியில தோற்றுவிக்கப்பட்ட நடமாடும் நூலகம்.

பழமையான திருவிழாக்களில் ஒண்ணான ஆருத்ரா தரிசனமும் வழக்கொழிஞ்சுபோச்சு. இப்ப திவாகரன் அது ரெண்டையும் மீட்டுக்கொண்டு வந்திருக்கார்

கலையும் மேதமையும் செழிச்ச பூமி இது. எழுத்துக்குக் கரிச்சான்குஞ்சு, நாகஸ்வரத்துக்கு சின்ன பக்கிரி, தவிலுக்கு ராஜகோபால் பிள்ளை, கொன்னக் கோலுக்கு நடேசப் பிள்ளை, கோட்டுவாத்தியத்துக்கு சாவித்திரி அம்மாள், நடிப்புக்கு மனோரமானு மன்னார்குடிக் கலைஞர்களைச் சொல்லிக்கிட்டே போகலாம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 'பாரத ரத்னாவுக்கு இணையா மதிக்கப்பட்ட 'மஹா மஹோபாத்யாய பட்டம் வாங்கிய வேத குரு ராஜு சாஸ்திரிகள், மன்னார்குடி மண்ணின் மைந்தர்.

கல்வியிலும் சிறந்த ஊர் மன்னார் குடி. கிட்டத்தட்ட 150 வருஷ பாரம்பரியம்மிக்க பின்லே பள்ளி, நூற்றாண்டு கண்ட தேசியப் பள்ளி, பெண் கல்வியில் சிறந்த புனித வளனார் பள்ளி மூன்று பள்ளிக்கூடங்களும் இன்னைக்கும் இந்த மாவட்டத்தின் சிறந்த பள்ளிகள்.

நாடகங்கள் நடந்த காலத்தில் 'பத்மா கொட்டகை. சினிமா வந்த பிறகு, பல டாக்கீஸ்கள் வந்துச்சு. நிலைச்சது சாந்தி தியேட்டரும் சாமி தியேட்டரும்தான்.

சாப்பாடு:

டெல்லி ஸ்வீட்ஸ்ல அல்வா - மணி காரபூந்தி,
உடுப்பி ஹோட்டல்ல ரவா தோசை - காபி,
குஞ்சான் கடை பக்கோடா - வடை,
கிருஷ்ணா பேக்கரி இனிப்பு பப்ஸ்,
அஞ்சாம் நம்பர் கடை லஸ்ஸி,
மாமா கடை பிரியாணி
அன்வர் கடை புரோட்டா

நன்றி:
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு. பரத் கூழாக்கியார்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்