திங்கள், 4 பிப்ரவரி, 2019

தஞ்சை மாவட்ட தளகர்த்தர் மன்னை ப.நாராயணசாமி ஓந்திரையர்


 ( 19/10/1919 - 17/10/1993 )

தஞ்சைப் பெரியார்,
தஞ்சை மாவட்ட தளகர்த்தர்,


தன்மாணத் தளகர்த்தர், 

பகுத்தறிவு பண்பாளர்,

சுயமரியாதைச் சுடரொளி,


என அடை மொழிகள் பலவற்றால் அன்பு தவழ அழைக்கப் பெற்றவர் மன்னை நாரயணசாமி.

100 ஆண்டுகளுக்கு மேலாக இவருடைய குடும்பத்தின் சார்பாக இன்றும் இயங்கி வரும் "அன்னச் சத்திரம் இவருடைய குடும்ப பாரம்பரியத்தை பறைசாற்றி கொண்டிருக்கும் அகல் விளக்காகும்.



மன்னை நாராயணசாமி தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சரவையில் கூட்டுறவு, விவசாயம், உள்ளாட்சி துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகித்தவர்.


50 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் ஈடுபட்டு பேரறிஞர் அண்ணாவின் இளவளாய் இருந்து மக்கள் பணியாற்றியவர். இளமை காலம் தொட்டு தமிழினத்திற்காகவும், மொழிக்காகவும் பல போராட்டங்களை வழி நடத்தி பலமுறை சிறை சென்றவர்.


முண்டாசு நடராஜன், கலைஞர் & மன்னை நாராயணசாமி
தமிழக அரசின் உணவு, உள்ளாட்சித்துறை, விவசாயம், வீட்டுவசதி துறை கூட்டுறவுத் துறை போன்ற பல துறைகளுக்கு அமைசராக இருந்து திறம்பட பணியாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பெருமை இவரைச் சாரும்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினராகவும் ஒருங்கினைந்த தஞ்சை மாவட்ட செயலாளராகவும் பணியாற்றிய பெருமை இவருக்குண்டு

"அரசியல் என்றால் நாணயம், நாணயம் என்றால் மன்னை" என்று பேரறிஞர் அண்ணாவால் புகழப் பெற்றவர்.



திராவிடநாடு வார இதழலில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முகப்பு அட்டையில் "மன்னை "படத்தைப் போட்டு
"எறும்பனையர் எம் மறவர்
இன்னனையர் நம் மன்னை "

என போற்றிப் புகழப்பட்டவர்!



கவிஞரங்கங்களில் கலைஞரால்
"அன்னை வயிற்றில் பிறந்தேன்
மன்னை மடியில் வளர்ந்தேன் "

என பெருமையோடு பாராட்டப் பட்டவர்!

அண்ணாவின் மறைவை தொடர்ந்து, கருணாநிதி பொறுப்பிற்கு வந்த பின்னர், திமுக சந்தித்த சோதனைகள் பலப்பல. அண்ணாவுடன் திமுகவை கட்டிக்காத்தவர்களில் ஒருசிலர் மட்டுமே கருணாநிதியுடன் அந்த இக்கட்டான நேரத்தில் துணை நின்றவர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அன்பில் தர்மலிங்கம், காஞ்சி சி.வி.எம், மண்ணை நாராணயசாமி மு.சாதிக்பாட்ஷா . முதல் மூவரும் தமிழக அமைச்சர்களாக இருந்தவர்கள்.


1972-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு. கருணாநிதி தனது பிறந்த ஊரான திருவாரூரில் அரசுக் கல்லூரி அமைக்க முயன்றபோது, அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மன்னார்குடியை சேர்ந்த திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான மன்னை ப. நாராயணசாமி, கருணாநிதியிடம் வற்புறுத்தியதன் பயனாக மன்னார்குடியிலும் ஓர் அரசுக் கல்லூரி தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. மன்னை இராசகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி 1971 ஆவது ஆண்டில் மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் நிலத்தைப் பெற்று தொடங்கப்பட்டது.


தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு ஒன்றியத்தில் "மன்னை நாரயணசாமி அரசு உயர்நிலை பள்ளி என்று அரசானை வழங்கி தமிழக அரசு இவருக்கு புகழ் சேர்த்திருக்கிறது.











ஆன்மீக வாதிகள் நாத்திக வாதிகள் சொற்போர் நடத்துபவர்கள் மன்னார்குடியின் அரசியல் நாகரீகத்தை தெரிந்து கொள்ள வேண்டும். மன்னை நாராயணசாமி, தீவிர நாத்திகர். அவர் தலைவர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை ஏற்றுக்கொள்பவராக இருந்தார். அவரது சீடரான மன்னை நாராயணசாமி தீவிர கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். மன்னை நாராயணசாமி தலைமை ஏற்று நடத்தி வைக்கும் சீர்திருத்த திருமணங்களில் மூடநம்பிக்கை பற்றியும் கடவுள் வணங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேசுவார். ஆனால் அவரது மூதாதயர்கள் ஏற்படுத்திய அறக்கட்டளை மூலம் நடத்தி வந்த "தைப்பூசம்" திருவிழாவை அவரது இல்லம் வளாகத்தில் ஒவ்வொரு வருடமும் நடத்தி வந்தார். தைப்பூச நாளில் தைப்பூசத் திருவிழாவின்போது அன்று பாமணி கிராமத்தில் உள்ள நாகநாதசுவாமி கோவிலில் இருந்து உற்சவர் மன்னார்குடியில் உள்ள மன்னை நாராயணசாமி இல்லத்தின் சத்திரத்திற்கு வருவது வழக்கம். அங்கு மன்னை நாராயணசாமி சாமி தரிசனம் செய்யாவிட்டாலும், அவரது உறவினர்கள் நண்பர்கள் தெருவாசிகளை வைத்து தைப்பூசத் திருவிழாவை சிறப்பாக நடத்தியவர் இன்றும் அவரது குடும்பத்தினர் வருட வருடம் தைப்பூசத் திருவிழாவை நடத்தி வருகிறார்கள்.

மன்னை நாராயணசாமி பிராமணர்கள் பலர் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்தார். நான்,பிராமணர்களுக்கு எதிர்பானவன் அல்ல, ஆனால் பிராமணியம் கொள்கைக்குதான் எதிர்பானவன் என்று விளக்கம் கூறுவார்.

மன்னை நாராயணசாமியை பெரிதும் மதிக்கின்ற மன்னார்குடி மக்களால் மனிதநேய மருத்துவர் என்று அழைக்கப்படும் டாக்டர் சி. அசோக்குமார் தனது புதிய பாலி கிளினிக் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆன்மீக வாதி கிருபானந்த வாரியார் சுவாமிகளையும் தீவிர நாத்திகரான மன்னை நாராயணசாமியையும் அழைத்திருந்தார்.

விழா மேடையில் கிருபானந்தவாரியர் சுவாமிகளும், மன்னை நாராயணசாமியும் அருஅருகே அமர்ந்து இருந்தனர். கிருபானந்தவாரியார் சுவாமிகளும் வழக்கம் போல் தனது சொற்பொழிவில் ஆன்மீக கருத்துகளை கூறினார். தீவிர நாத்திகரான மன்னை நாராயணசாமி பொறுமையாக வாரியர் சுவாமிகள் ஆன்மீகபேச்சை கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் பேசிய மன்னை நாராயணசாமி,வாரியார் ஆன்மீக பேச்சுக்கு மறுப்பு எதுவும் தெரிவித்து பேசாமல், புதிய மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வாழ்த்து மட்டும் கூறி பேசினார். 


இராஜ மன்னார்குடி - மன்னை நாராயணசாமி ஓந்திரியர் பெயரில் உள்ள பள்ளி மற்றும் நகர்.









வீரத்தின் விளைநிலமாம் தொண்டர்களுக்கு முன் உதாரணமாம் அய்யா மன்னை நாராயணசாமி அவர்களின் வழித்தோன்றல் (பேத்தி) திருமதி.மீனாட்சி சூரியபிரகாஷ் 







வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்