திங்கள், 25 பிப்ரவரி, 2019

உசிலம்பட்டி "‘தங்க மகன்" கணேசன் தேவர்




கருமாத்தூர் நாட்டின் மூனுசாமி என்று அழைக்கப்படும் மூனு கோயிலில் இரண்டாவது கோயிலான பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கும் கரிசல்பட்டி ஆறு பங்காளிகளின் சகோதரி வாரிசுகளான (பிச்சம்பட்டி செட்டிகுளம்) தடியன் மக்கள் இரண்டு தேவர் வகையரா சேர்ந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையை சேர்ந்த கணேசன்தேவர் கனடாவில் நடந்த, உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான, சர்வதேச தடகள போட்டிகளில், குண்டு, வட்டு, ஈட்டி எறிதலில் 2017 ஆம் ஆண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

உயரம் குன்றியவர்களுக்கான 7-வது உலக தடகள போட்டிகள் ஆகஸ்ட் 2017 ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்றது. இதில் 62 நாடுகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தடகளம், நீச்சல், கால்பந்து, ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தியா சார்பில் 18 பேர் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில், கணேசன் ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்தார்.

இவர், சராசரி மனிதர்களை விட உயரம் குறைவானவர். கனடாவின் டொராண்டோவில் நடந்த சர்வதேச தடகள போட்டிகளில் குண்டு, வட்டு, ஈட்டி எறிதலில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

தற்போது 2019 பிப்ரவரியில் இல் ஷார்ஜாவில் நடந்த 'ஐ வாஸ்' மாற்றுத்திறனாளிகளுக்கான 48 நாட்டு வீரர்கள் பங்கேற்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் கணேசன் மூன்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.


ஷார்ஜாவில் நடந்த 'ஐ வாஸ்' மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் 40 வீரர்களும், அதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற 7 வீரர்களில் கணேசனும் ஒருவர்.

கணேசன் கூறியதாவது: “பத்தாம் வகுப்பு வரை படித்தேன். விவசாயம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தேன். சில ஆண்டுகளுக்கு முன், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சியாளரின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம் தடகள பயிற்சிகளை, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பெற்றேன். தொடர்ந்து, சர்வதேச தடகள போட்டிகளில் கலந்து கொள்ள பணம் திரட்டுவதே, கடினமாக இருந்தது. ஒரு வழியாக கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளேன்.

கனடாவில் நடந்த சர்வதேச போட்டிகளில் வீரர்களை அவர்களது உடல் தகுதியைக் கொண்டு மூன்று பிரிவுகளாக பிரித்து அதில் கிடைக்கும் புள்ளிகளை கொண்டு பதக்கங்கள் கொடுத்தனர். ஷார்ஜாவில் ஒரே பிரிவாக கணக்கிட்டு புள்ளிகள் கொடுத்ததால் போட்டி கடுமையாக இருந்தது. அதனால் வெண்கலப்பதக்கங்கள் தான் கிடைத்தன. அடுத்து டோக்கியோவில் நடக்கும் பாராஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள பயிற்சி எடுக்கிறேன். இதற்கு நிறைய செலவாகிறது. அரசுஉதவி செய்தால் வசதியாக இருக்கும் என்றார்.

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்