பெருங்காமநல்லூர் அப்பாவி மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. எழுத்தறிவற்ற ஏழை, அப்பாவி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஏற்க இயலாது என்றும், அந்தப் பகுதி மக்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கி நிவாரணம் தேடுங்கள் என்றும் பாராளுமன்றம் அறிவுறுத்தியதின் பேரில், கள்ளர் சமுதாய சீரமைப்புக்கென தனியே ஒரு துறையை உருவாக்கி நலத்திட்டங்கள் நிறைவேற்ற இந்தியாவிலிருந்த ஆங்கில அரசு நடவடிக்கை எடுத்தது. பிரிட்டிஷ் இந்திய அதிகார வர்க்கம் செய்த தவறுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றமும், பிரிட்டிஷ் அரசும் தேடிய பிராயச் சித்தம் இது.
இந்த கொடிய சம்பவத்தை மறைப்பதற்காக கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் கல்வி, விவசாயம், தொழில், கூட்டுறவு, வேலைவாய்ப்பு மையம் போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இந்திய அரசுச்சட்டம், 1919 (Government of india Act, 1919) -ன்படி கள்ளர் சீர்திருத்த திட்டத்தை (Kallar Reclamation Scheme, 1920)-ல் அமல்படுத்தியது
கொட்டாம்பட்டி, நத்தம், சிறுமலை, செம்பட்டி, திண்டுக்கல், அழகர் கோவில், அலங்காநல்லூர், நிலக்கோட்டை, சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி, வாடிபட்டி, திருமங்கலம், ஆண்டிபட்டி, சேடப்பட்டி, கம்பம், உத்தமபாளையம் ஆகிய பிரமலை கள்ளர் பகுதிகள் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டது.
கிபி1933ல் கள்ளர் மீட்பு திட்டத்தின் கீழ், கள்ளர் மக்களுக்காக, கள்ளர் உயர் நிலைப்பள்ளியும், கள்ளர் விடுதியும் ஆங்கிலேயர்களால் கட்டித் தரப்பட்டது.
இதனை திறப்பதற்காக அப்போதைய ஜார்ஜ் மன்னர், லேடி பிட்டிரிக்ஸ் ஸ்டான்லியுடன், கள்ளர் நாட்டின் மையப்பகுதிக்கு வருகை தந்தார்கள்.
அப்போது கள்ளர் நாட்டு சார்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
(Madras administration report : 1932-1933)
திண்டுக்கல், தேனி, உசிலம்பட்டி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத் துறை சார்பில் 260 பள்ளிகள் உள்ளன.
கள்ளர்களுக்கு “சீர் பழங்குடியினர்” (Denotified Tribes) என்று சான்றிதழ் கொடுக்கப்பட்டு வந்தது. இது இந்தியா முழுவதும் குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட சாதி மக்களுக்கு வழங்கப்பட்டது. 1978 இதனை “சீர் மரபினர்” (Denotified Community) என்று மாற்றி விட்டார்.
குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய பிரமலைக் கள்ளர்களைப் பெருங்காமநல்லூரில் படுகொலை செய்த ஆங்கிலேய அரசு, பெருங்காமநல்லூர் கலவரம் நடந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு 20.8.1920இல் அவ்வூரில் கள்ளர் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
அப்பள்ளிக்காக 1925 இல் இரண்டு நீண்ட அறைகளைக் கொண்ட ஓடு வேயப்பட்ட, உடைகற்களால் ஆன வலிமையான சுவருடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் நூற்றாண்டைக் கொண்டாடவிருக்கும் அந்தக் கட்டிடமே தற்பொழுது இடிபடக் காத்துக் கொண்டிருக்கிறது. கட்டடம் வலிமையாகத்தான் இருக்கிறது. இருப்பினும் பள்ளிக் கல்வித்துறையில் வருடந்தோறும் ஒதுக்கப்படும் பணத்தை கணக்குக் காட்டுவதற்காக இவ்வாறான புராதன கட்டடங்கள் கண்மூடித்தனமாக இடித்தழிக்கப்படுகின்றன.
முதல் கள்ளர் பள்ளியான தேனி மார்க்கையங்கோட்டையிலுள்ள பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்ட பொழுது அங்கிருந்த பழமையான கல்வெட்டும் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நக்கலக்கோட்டையிலுள்ள பழைய கள்ளர் பள்ளி கட்டம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது. தற்பொழுது அப்புதிய கட்டடம் பழையதை விட கேவலமாக உள்ளது. கட்டத்தேவன்பட்டி கள்ளர் பள்ளி இடிக்கப்பட்டுவிட்டது. இன்னும் இடிபடுவதற்காகப் பல கட்டடங்கள் அரசின் பட்டியலில் இருக்கலாம். தும்மக்குண்டிலுள்ள பழைய தொடக்கப்பள்ளி கட்டடம்(1921) பழைமையானது. பூட்டி கிடக்கும் அக்ககட்டடத்தை விரைவில் இடித்துவிடுவார்களோ என்று தோன்றுகிறது.
கள்ளர் பள்ளிகள் பிரமலைக் கள்ளர்களின் அடையாளங்கள். அவர்கள் சந்தித்த குற்றப் பரரம்பரைச் சட்ட ஒடுக்கு முறையின் வாழும் சாட்சிகள் அவை. பெரும்பான்மையான கள்ளர் பள்ளிகள் 2020இல் நூற்றாண்டை அடைந்துவிடும். கள்ளர் பள்ளிகளின் நூற்றாண்டு விழாவை அரசு நிச்சயம் கொண்டாடாது. நாம்தான் கொண்டாட வேண்டும். அதற்கு கள்ளர் பள்ளி கட்டடங்கள் அதன் பழமை மாறாமல் காப்பாற்றப்பட வேண்டும். கள்ளர் பள்ளிகள் மட்டுமல்லாது குற்றப் பரம்பரைச் சட்டத்தின் நினைவுச் சின்னங்களான கீழக்குயில்குடி நீதி மன்றம், பூசலப்புரம் காவல் நிலையம், சிந்துபட்டி காவல் நிலையம், உசிலை போர்டு ஹைஸ் ஸ்கூல் பழைய கட்டிடடம் முதலியவற்றை பாரம்பரியக் கட்டடங்களாக நாம் பாதுகாக்க வேண்டும். இதன் முதல் படிநிலையாக இடிபடக் காத்திருக்கும் பெருங்காமநல்லூர் பள்ளியைக் காப்போம் வாருங்கள்.
கள்ளர் மாணவிகள் விடுதி
கள்ளர் சீரமைப்புத் துறை உருவாக்கிய மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா செக்கானூரணியில் பிரமலைக் கள்ளர்களின் மாணவிகளுக்கு 1945ஆம் ஆண்டு மாணவிகளுக்கான விடுதிகள் கட்டிக் கொடுக்கப்பட்டது தற்போது உள்ள அந்தக் கட்டடத்தின் படங்கள்.
கள்ளர் கூட்டுறவு விற்பனை சங்கம்
கள்ளர் பள்ளிகள்
அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி கல்லூத்து
பிரமலைக் கள்ளர்கள் முன்னுக்கு வருவதற்காக நிலமும் வழங்கி னார்கள். அப்படி வழங்கப்பட்ட 'கண்டிஷன் ஜாரி நிலங்களை' விற்கவோ வாங்கவோ கூடாது என்பது அரசாணை. சுதந்திரப் போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பிரமலைக் கள்ளர்களும் கணிச மான அளவில் பங்கெடுத்தார்கள். அதனால், அவர்கள் எல்லாம் பிரிட்டீஷ் அரசாங்கத்தால் நாலா திசைகளிலும் விரட்டி அடிக்கப்பட்டனர். அப்படி ஓடியவர்களின் ஜாரி நிலங்கள் எல்லாம் அப்போது பிரிட்டீஷ் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த பிற சாதிக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. காலப்போக்கில் விதிகளை மீறி அந்த நிலங்களுக்கு பட்டா மாறு தலும் செய்திருக்கிறார்கள்.
இப்படி அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டுக் கொடுக்கச் சொல்லி பசும்பொன் தேவர் காலத்திலிருந்தே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. நாங்கள் ஒன்றுகூடினால் வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து விடுவோமோ என்ற பயத்தில் அரசியல் கட்சியினர் சதி செய்து எங்களைப் பிரித்து விடுகிறார்கள். கண்டிஷன் ஜாரி நிலங்கள் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு கொடுத்ததற்கு, பெரியகுளம் தாலுக்காவில் 800 ஏக்கர், தேனியில் 400 ஏக்கர், ஆண்டிபட்டியில் 300 ஏக்கர் நிலங்கள் இருப்பதாக தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இவைகளில் பெரும்பகுதி வேறு சமுதாயத்தினர் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிட்டது'' என்றார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அய்யம்பட்டி தேவர் தெருவில் உள்ள "அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி" மங்காபுரம்.
இப்பள்ளி பிரிட்டிஷ் அரசால் 1992 ஆம் ஆண்டு கட்டப்பட்டு உள்ளது என்பதற்கு சான்றாக பள்ளியின் பின்பகுதி சுவற்றிலும்,இப்பள்ளி காக வெட்டப்பட்ட கிணற்றின் சுற்றுச் சுவற்றிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளது.
கீழக்குயில்குடி