வெள்ளி, 17 ஜூலை, 2020

வன்னியர் மரபினர்




மன்னர்கட்குப் படைகளை அனுப்பி உதவியமைக்காக வன்னியப்பற்று என்னும் நிலங்களைப் பெற்றுள்ளனர். வன்னியர் என்ற பட்டம் குறிப்பிட்ட சாதிக்கானதாக இல்லாமல், பல சாதிகளின் பட்டமாகவே உள்ளது.

வன்னியப்பற்று - படையில் பணிபுரியும் வீரர்கட்கு அளிக்கப்பெற்ற நிலம் அல்லது ஊர். (வன்னியர் - படை வீரர்)

கள்ளர் மரபினரில் வன்னியன், வன்னிகொண்டான், வன்னிமுண்டான், வன்னியனார் என்ற பட்டங்கள் உள்ளன.

வன்னியன் பட்டம் உள்ள சாதிகள் தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், வலையர் மக்களுக்கும், குறவர், இருளர்கள், பள்ளி (வன்னியர் சாதி), அகமுடையர், கொங்கு வெள்ளாளர், பார்க்கவ குலத்தார் மக்களுக்கும்.

கள்ளர் மரபினரின் ஈசநாட்டு கள்ளர் பிரிவில், திருமண முறையில் ஒரே பட்டமுடையவர்கள் சகோதரர்களாக கருதப்படுவார். ஆனால் நாட்டார் மற்றும் வன்னியர் பட்டமுடைய கள்ளர்களில், இந்த முறையில்லை. இவர்கள் ஒரே பட்டங்களில், அதாவது வன்னியர் பட்டமுடையவர் மற்றொரு வன்னிய பட்டமுடையவர்களில் திருமணம் செய்வார்கள். இவர்களின் திருமணம் குலதெய்வத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது.

கள்ளர் மரபில் வன்னியர் பட்டமுடைய கள்ளர் மரபினரின் ஊர்கள்

வன்னியர் பட்டம் உடைய கள்ளர்கள்  விசங்கிநாட்டு கள்ளர்களோடு தொடர்புடையவர்கள் (கொள்வினை, கொடுப்பினை). வன்னியர்களிலே பண்டாரத்தார் வன்னியர், கோட்டயபுரம் வன்னியன் என இருபிரிவுகள் இருந்துள்ளது. 


வன்னியம்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டத்தில் , வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.

வன்னியம்பட்டி :-தஞ்சாவூர் மாவட்டம்,  பூதலூர் வட்டத்தில் செங்கிப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

வன்னியன்விடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், அரையப்பட்டி ஊராட்சியில் வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

நல்லவன்னியன்குடிகாடு :- தஞ்சாவூர் மாவட்டம்,   அம்மாப்பேட்டை வட்டத்தில் வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

மன்னார்குடி பகுதி வடுவூர் நாட்டில் வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர்கள் அதிகம். இங்குள்ள கள்ளர்கள் வாழும் தெருக்கள் பெயர்.

வன்னியர் தெரு 
காகா வன்னியர் தெரு 
செருக்க வன்னியர் தெரு 
குஞ்சான் வன்னியர் தெரு 
எழுவநாச்சி வன்னியர் தெரு

கீழபழையாறை வன்னியதெரு

நாட்டாணி' காட்டுநாவல்' மஞ்சைபேட்டை' நெப்புகை' கந்தர்வக்கோட்டை, முத்துவீரபட்டி, நந்தவனம்பட்டி, மனையேறிபட்டி, ஆவாரம்பட்டி, புங்கலூர், கக்கரை, பின்னையூர், மண்டலக்கோட்டை, நெல்லுப்பட்டு, ஆர்சுற்றிப்பட்டு, மன்னார்குடி பைங்காநாடு, தலையாமங்கலம், எடமேலையூர், வடுவூர், திருக்களர், பெருகவாழ்ந்தான், கருவாக்குறிச்சி, சொக்களாவூர், கீராலத்தூர், சோழபாண்டி, பட்டுக்கோட்டை ஆவிக்கோட்டை, பெரியகோட்டை, அதிராம்பட்டிணம், திருவையாறு திருச்சின்னம்பூண்டி, மகாராசபுரம், புதுக்கோட்டை கீழக்கரைமீண்டார்கோட்டை, புதுக்கோட்டை விடுதி, பாச்சுக்கோட்டை, கீழாத்தூர் முதலிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர்.

மேலூர் நாட்டில் கள்ளர் மரபினரில் கரை (பட்டம்) முறையே பயன்படுத்துவார்கள். ஒரே கரையை சேர்ந்தவர்கள் சகோதரர்கள். இவர்களில் வன்னியன் கரை பிரிவு உள்ளது.




தமிழ் அகராதி தரும் விளக்கங்கள்








காசவளநாட்டு கண்டிதம்பட்டு மிராசு, கள்ளர் குல வன்னியர்கள் ( கிபி 1838 ல்)


A manual of the district of tanjore in the madras presidency/ k venkasamy row / 1883


தஞ்சையில் பொங்கல் தினத்தன்று கள்ளர் மரபினரின் வன்னியர் அரசுக்காரர்களாக, ஊர் மக்களால் மரியாதை செய்யப்படுகின்றனர்.
Source : Martial race of undivided India



1951மக்கள் தொகை கணக்கெடுப்பின். Source:-Census of India 1951



குறுநில மன்னர்களின் பதவியைக் குறிக்கும் வன்னிமை, வன்னியம், வன்னியன், வன்னிராசன் என்னும் சொற்கள் சோழர்களின் ஆட்சிக் காலத்திலே தொண்டை மண்டலத் தொடர்பின் காரணமாக இலங்கையில் வழக்கில் நிலவின. வேளைக்காரப் படைகளின் தலைவர்கள் பிரதேசங்களின் தலைவர்களாகியதன் விளைவாகவே குறுநில அரசுகளை வன்னிமைகள் என்று குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.

வன்னியர் என்ற சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.

வன்னியக் கள்ளர் மரபினர் பன்றிக் குட்டிக்குப் பாலூட்டிய திருவிளையாடற் புராணத்தினைத் தங்கள் குலத் தொன்மமாகக் குறிப்பிட்டு உரிமை கோருகின்றனர். பள்ளி (வன்யர்) குலத்தவரோ வலைவீசிய திருவிளையாடற் புராணத்திற்கு உரிமை கோருகின்றனர். (கி.பி. 18ஆம் நூற்றாண்டைய குற்றாலம் செப்பேடு)

பள்ளி (வன்யர்) குலத்தவருக்கும், வன்னியர் என்ற பட்டம் புனையும் கள்ளர் மரபினருக்கும் இதுவரை தொடர்பு ஏதுமில்லை.

இன்றைய தமிழகத்தில் வன்னியர் என்பது ஒரு சாதியின் பெயராக அழைக்கப்படுகிறது. ஆனால் “வன்னியர்” என்பதும் அரசர் படைத்தலைவர்க்கு வழங்கப்பட்ட பெயர் (த.கு.வே., ப.120). இதனைக்

கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற்
றரிதரு குட்டி யாயபன் னிரண்டினைச்
செங்கோன் முளையிட் டருணீர் தேக்கிக்
கொலைகள வென்னும் படர்களை கோலித்
தருமப் பெரும்பயி ருலகுபெற விளைக்கு
நாற்படை வன்னிராக்கிய பெருமாமன்

எனும் அடிகளின் மூலம் அறியலாம்.

இலங்கை வன்னியர்கள் பாண்டிய நாட்டில் இருந்து போனவர்களாக குறிப்பிடப்படுகிறது. அவர்கள் எந்த சாதியினர் என்பதற்கு சான்றுகள் இல்லை. ஆய்வாளர்கள் , அறிஞர்கள் தங்களது கருத்தாக பல சாதியானரை குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். சிலர் மறவர்களையும், சிலர் கள்ளர் மரபினரையும்,  சிலர் இன்று வன்னியர் சாதி என்று அரசாணை பெற்ற பள்ளி, படையாச்சி சாதியினரை குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். 



கள்ளர் மரபினரின் வன்னியர் பட்டமுடைய குறிப்பிடத்தக்க நபர்கள்

கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற இரண்டாம் ஆண்டு முதல், மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த’ என்னும் பாடல் சங்கத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கத் தொடங்கியது. முதன்முதலில் இந்தப் பாடலை மேடையில் பாடியவர் இசைவாணர் கூடலூர் வே. இராமசாமி வன்னியர்.


இசைவாணர் கூடலூர் வே. இராமசாமி வன்னியர்

நான்காம் தமிழ் சங்கத்தில் பங்கு :- திரு. இராமசாமி வன்னியர், மிராசுதார், புலவர்நத்தம், தஞ்சை
நூல்: கருணாமிர்தசாகரம் (கிபி 1917ல் எழுதப்பட்டது) 






இந்திய மக்களவைத் தேர்தலில், தஞ்சாவூர் தொகுதியிலிருந்து ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு எஸ்எஸ் பழனிமாணிக்கம் வன்னியர்



சூரக்கோட்டை வையாபுரி வன்னியர்




தற்போதைய திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் G.சுந்தரராச வன்னியர் அவர்களின் மகன் கல்யாணசுந்தரம் வன்னியர்




கள்ளர் மரபினரின் வன்னியர் பட்டமுடையவர்களின் இறை தொண்டு

திருக்கண்டிவளநாடு (கண்டியூர்), அருள்மிகு பிரம்மசிரக்கண்டீஸ்வரர் திருக்கோவில் திருப்பணிக்குழுவில் கள்ளர் மரபினரின் வன்னியர்.



அருள்மிகு காரி அழகர் அய்யனார் ஆலயம்:- உபயதாரராக கள்ளர் மரபினரின் வன்னியர்




கள்ளர் மரபினரின் திருமண பத்திரிகை.






கள்ளர் மரபினரின் நிகழ்ச்சிகள்.









கோவிலூர்‌, மேலமாகாணம் பெரிய பிள்ளை, வடக்குக்கோட்டை மாப்பிள்ளையா என்கின்ற தெய்வத்திரு அ.அருணச்சல வன்னியர்




கள்ளர் மரபினரின் இரங்கல் செய்தி.



ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியார்



ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியார் அவர்கள் அக்டோபர் 3 , 1945 இல்  அய்யம்பேட்டையில் பிறந்தார்.

ஓய்வுபெற்ற மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், கடந்த 40 ஆண்டுகளாக வரலாறு மற்றும் தொல்பொருளியல் ஆராய்ச்சி செய்து வருகிறார். Life member INTACH,Archeological society of Tamil நாடு மற்றும் Pricipal,Star Lions Matric Hr Sec School, அய்யம்பேட்டை.

தமிழ்நாட்டின் தொல்பொருள் சமூகம், பத்திரிகை ஊடகங்களில் கண்டுபிடிப்புகள் மற்றும் கோயில்கள் பற்றிய கட்டுரைகளை எழுதுவது, 

கலாச்சாரங்கள், மரபுகள், நமது கோயில் கலைகள் மற்றும் கட்டிடக்கலைகளை பாதுகாத்தல், கோவில்கள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இவரது நோக்கம். 



ஐயா அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 2019 ஆண்டுக்கான இராஜராஜன் விருது, சதய விழா(06.11.2019) அன்று மாலை 6.00 மணியளவில் தஞ்சை பெரிய கோவிலில் வழங்கப்பட்டது.

தஞ்சாவூரில் உள்ள பாரம்பரிய நினைவு சின்னங்களை அறிந்து கொள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற நடைபயணம். 
தலைமை. தஞ்சை மராட்டியர் மூத்த இளவரசர் ஶ்ரீ பாபாஜி ராஜா போன்ஸ்லே.



தஞ்சாவூர் ராஜா சரபோஜி அரசு கல்லூரி 1966-69 ...ஆண்டு விழா ..சாம்ராட் அசோகன் நாடகம்....Fine Arts Association... Secretary and Director of that drama....ஐயா செல்வராஜ் நாயக்கவாடியார்.



ஐயாவின் பழையநினைவுகள்

தஞ்சாவூர் பிளேக் உயர் நிலை பள்ளியில் first form ( ஆறாம் வகுப்பு) படித்து கொண்டு இருந்த நாட்கள். உணவு இடை வேளை, பள்ளிக்குப் பக்கத்தில் தஞ்சாவூர் பர்மனெனட் பேங்க். பேங்க் வாசலில் மாலையும் கையுமாக ஒரே கூட்டம். யாரோ முக்கியமானவங்க வருவாங்க போல..யாரு வராங்க. பார்த்து விட்டு போவோமே. வீடும் சாப்பாடும் மறந்து போச்சு....  வேடிக்கை பார்க்கிற புத்தி......கூட்டத்தை விட்டு தள்ளி நின்றேன்...திடீரென ஒரே பரபரப்பு..ஒரு பிளஷர் கார் .....தொடர்ந்து நாலைந்து கார்...முதலில் வந்த காரில் இருந்து ஆஜானுபாகுவான மனிதர் ,சிறுவர்கள் நின்று கொண்டு இருந்த பக்கமாக இறங்குகிறார்...மாலையெல்லாம் அந்த பக்கம்.... நான் முன்னால் ஓடிப்போய் நிற்கிறேன்.. கையை காட்டி கிட்ட வான்னு சிரித்து கொண்டே சைகையால் கூப்பிடுகிறார்.....இன்னும் பக்கமா போனேன்.. பாசமாக தோளில் கைபோட்டு தலையை கோதிக் கொன்டே "  எந்த ஸ்கூல்....என்ன கிளாஸ் படிக்கிற.....சாப்பிட்டியா....நல்லா படீன்னேன்"என்று விசாரித்தப் பின்னர் தான் மாலை மரியாதை வரவேற்பு எல்லாம்.....அவர்தான் அந்நாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர். மாலை மரியாதையை விட மாணவர்களே அம் மாமனிதருக்கு VVIPs.....அவர்தான் காமராஜர்.






























வியாழன், 9 ஜூலை, 2020

பி.என்.வல்லரசு தேவர்



பி.என்.வல்லரசு  தேவர் 1989 மற்றும் 1996ல் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவா். பி. என். வல்லராசு, தனகராஜ் என்றும் அழைக்கப்படுகிறார்,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள ஒட்டு மொத்த விவசாயிகளின் நீண்டகால கனவான 58 கிராம கால்வாய்ப்பணி 1989-ல் பி.என்.வல்லரசு அவர்கள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று இந்த திட்டத்திற்காக 34 கோடி நிதி ஒதுக்கீடு பெற்று கொடுத்தார். பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ.வாக இருந்த பி.என்.வல்லரசு காலத்தில் 4-12-1999 அன்று ஆரம்பிக்கப்பட்டது.



வல்லரசு 1984 தேர்தலில் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அந்த நேரத்தில் அவர் திமுக மற்றும் ஃபார்வர்ட் பிளாக் (FB) வேட்பாளர் என பல்வேறு விதமாக விவரிக்கப்பட்டுள்ளார்.  எம். ஜி. ராமச்சந்திரனை எதிர்கொண்டார். வல்லரசு இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்.ஜி.ஆரை எதிர்த்து தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த பி.என்.வல்லரசு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனு பரிசீலனையின்போது, எம்.ஜி.ஆரின் மனுவுக்கு வல்லரசு சில ஆட்சேபனைகளை தெரிவித்தார். எம்.ஜி.ஆர். வேட்பு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறினார். முடிவில் அந்த ஆட்சேபனைகளை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். "எம்.ஜி.ஆர். வேட்பு மனு, முறைப்படி உள்ளது" என்று கூறி எம்.ஜி.ஆர் மனு ஏற்கப்பட்டதாக அறிவித்தார்.

பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு நமக்காக மூன்று கல்லூரிகளை அமைத்துக்கொடுத்தார்.

உசிலம்பட்டி தேவர் கல்லூரி கள்ளர் கல்வி கழகத்தின் சொத்துமதிப்பினை வைத்து அமைக்கப்பட்டது. உசிலம்பட்டி தேவர் கல்லூரியின் தலைவராக பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் இருந்தார். அதன்பின் அரசு வசமாக்கப்பட்ட கல்லூரியை பார்வர்டுபிளாக்கின் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.என்.வல்லரசு அவர்கள் அரசிடமிருந்து மீட்டு மீண்டும் கள்ளர் கல்வி கழத்திடம் ஒப்படைத்தார்.

கல்லூரி தற்போது கள்ளர் கல்வி கழகம் வசம் உள்ளது. கள்ளர் பள்ளிகளில் முறையான ஆசிரியர் ஒதுக்கீட்டினை பெற்றுக்கொடுத்தவர் .


2000 -07- 09  ல் மதுரை கரிமேடு சண்முகம் பிள்ளை காளியம்மாள் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் கூட்டத்தில்  பி.என்.வல்லரசு அவர்களுக்கு மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டது. கரிமேடு ஆ.பெ.அரசு. மீனாம்பாள்புரம்  ஆர்.ஏ.எம்.மணிகண்டன்‌, எஸ்‌.பி‌மகாராஜன்‌, வீ.எஸ்.நவமணி, உசிலை வக்கீல் சுகுமாறன், கீரிபட்டி அன்னக்கொடித்தேவர்.

இவர் 21 அக்டோபர் 2000 அன்று விண்ணுலகம் அடைந்தார். அந்த ஆண்டு பிப்ரவரியில் ஃபார்வர்ட் பிளாக் இன் தொழிற்சங்க பிரிவின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பி.வி.கதிரவன் தேவர்


பி.வி.கதிரவன் தேவர் என்பவா் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினராகஉசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.  இவா் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு சாா்ந்தவா். 14 May 1954 இல்  செல்லம்பட்டியில் பிறந்தவர்.

இவா் பி.என்.வல்லரசுவின் மருமகன் ஆவாா். பி.என்.வல்லரசு 1989 மற்றும் 1996ல் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவா்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடத்தினார் அதில் 7 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர். அதற்கு பரிசாக மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள கட்சி தலைமை இவரை அகில இந்திய துனை தலைவராய் அறிவித்தது. தமிழக அரசு இவரை "பொது கணக்கு குழு" - வின் தலைவராக அறிவித்துவிட்டது.

அம்பத்தூர் அலெக்ஸாண்டர் தேவர்



அம்பத்தூர் அலெக்ஸாண்டர் தேவர், பாப்பாபட்டி ஐத்தது பூசாரி, கருமாத்தூர் கரிசல்பட்டி ஆறுபங்காளி கூட்டத்தை சேர்ந்தவர்சேர்ந்தவர்.  அம்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக வி. அலெக்ஸாண்டர் நிறுத்தப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் மதுரை உசிலம்பட்டி. அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

உசிலம்பட்டி பா.நீதிபதி தேவர்


உசிலம்பட்டி பா.நீதிபதி தேவர் பூசலப்புரம் மூனுசாமி என்று அருள்பெயர் விளங்கும் பொன்னாங்கன் வாசலை குலக்கோயிலாக கும்பிடுபவர். கருமாத்தூர் கரிசல்பட்டி ஆறுபங்காளி கூட்டத்தை சேர்ந்தவர். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை சார்ந்தவர். 2016 ஆம் ஆண்டுஉசிலம்பட்டி  தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்பட்டார். உசிலம்பட்டி அதிமுக ஒன்றிய செயலர். 2001 முதல் 3 முறை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்.

செல்லூர் கே. ராஜூ தேவர்



செல்லூர் ராஜூ தேவர் கொக்குளம் ஆதிசிவன் கோயிலை குலக்கோயிலாக கும்பிடுபவர். 7 October 1952 வைரவி அம்மாபட்டியில்  பிறந்தார். பெற்றோர்  K. ஒச்சம்மாள் , காமாட்சி  தேவர் . மனைவி ஆர்.ஜெயந்தி, மகன் R தமிழ்மணி. இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை சார்ந்தவர். 2011 ஆம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார். தொடர்ந்து 2016 ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

திண்டுக்கல் சீனிவாசன் தேவர்


திண்டுக்கல் சீனிவாசன் தேவர்,  உச்சபட்டி தென்கரை கருப்புக் கோயிலை குலக்கோயிலாக கும்பிடுபவர். 1 ஏப்ரல் 1948 இல் பிறந்தார் . உடன் பிறந்தவர்கள்  சி.நாராயணன், சி.வெங்கடச்சலம். இவர் திண்டுக்கல்லில் உள்ள ஆர்.எம்.காலனியில் வசித்து வருகிறார். தொழில் அதிபரான இவர் எம்.ஏ. வரை படித்துள்ளார். மனைவி கண்ணாத்தாள். 1989ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு மூன்று முறை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக. தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆண்டு அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் தமிழக வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஆண்டிபட்டி மகாராஜன் தேவர்


2016 ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக சார்பில் லோகிராஜன், திமுக சார்பில் மகாராஜன் போட்டி போட்டனர்.  இதில் திமுக வேட்பாளரான மகாராஜன்  வெற்றி பெற்றார். அதன் மூலம் அதிமுக கோட்டையாக இருந்த ஆண்டிபட்டி தொகுதியை திமுக தக்கவைத்தது.

ஆஸ்திரேலியாவின் அரசியல் தலைவர் பழனிச்சாமி ஒச்சாத்தேவர்


கள்ளர் மரபில் பிறந்த கருமத்தூர் கோவிலை வணங்கி வரும் பழனிச்சாமி ஒச்சாத்தேவர் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் முதல் தமிழர்.




ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வசித்து வரும் பழனிச்சாமி ஒச்சாத்தேவர், அவரை அரசு அதிகாரியாகவும் இந்தியா மற்றும் தமிழ் சமூகங்களின் முக்கிய தலைவராக பணிபுரிந்து வருகிறார். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தலைநகர் பிரிஸ்பேன் நகரில் 31- 10 -2020 பாராளுமன்றத் தேர்தலில் ஆஸ்திரேலியாவில் இருபெரும் கட்சிகளில் ஒன்றான ஆளும்கட்சி லேபர் கட்சியின் தொகுதியின் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார் பழனிசாமி ஒச்சாத்தேவர். அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர்.தற்போது ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் தமிழர் என்ற பெருமையையும் சேர்த்துள்ளார். அவர் வெற்றி பெற்றால் நமது இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமையாகும்.

இவரைப்பற்றி முழுவிவரங்கள் அறிய http://www.palanithevar.com/Palani/About_Me.html



 பழனிச்சாமி ஒச்சாத்தேவர் தயார் : முத்துப்பிள்ளையம்மாள் 

பிரத்தான  ,  பழனிச்சாமி ஒச்சாத்தேவர் , பிரியா , தேவி  & காவியா 


கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்