சனி, 3 பிப்ரவரி, 2018

கள்ளர்கள் போர்குடிகளா



கள்ளர் குடியினர்க்கு எதிராக எண்ணம் உடைய சில ஆய்வாளர்கள், கள்ளர்கள் என்ற பெயரால், களவை மட்டுமே தொழிலாக கொண்டவர்களாக எழுதுவதை நாம் காணமுடிகிறது. 

கவர்ந்த தொழிலால் கள்வர், கள்ளர் என பெயர் வந்திருக்குமானால், இப்போது உள்ள ஐரோப்பிய அரசர்கள் அனைவரும் கள்ளர் மரபினரவே இருப்பார்கள் என்று ஐயா வேங்கடசாமி நாட்டார்  குறிப்பிடுகிறார்.


கள்ளர்கள் போர்குடிகள் என்பதற்கு சங்க இலக்கியக்கங்கள், கல்வெட்டுகள், பட்டயங்கள், பிறநாட்டவர் குறிப்புகளில் ஏதும் சான்றுகள்  உள்ளதா என்று ஆய்வோமானால்.
  • அம்பல்
  • கொற்றவை
  • கள்வர் 
  • கள்ளப்படை
  • கள்ளப்பற்று
  • கள்ளர்த்தடி
  • கள்ளர்நாடு
  • ஏறுதழுவுதல்
  • நடுகல்
  • பிறநாட்டவர் குறிப்பு
சங்ககால இலக்கியங்களில் ஐவகை திணைகளில், ஐவகை நிலங்களின் தன்மையை ஒட்டியனவாக, அந்த அந்த சூழல்களொடு பின்னி பிணைந்து நிகழ்வனவாக, அவற்றின் பகுதிகளாக மேலும் பலப்பல துறைகளையும் வகுத்துக்கொண்டு செய்யுள் செய்வது பண்டை தமிழ் புலவர்களின் மரபாகும். ஐவகை திணைகளில் "கள்ளர்கள்" எந்த திணைக்குடி மக்கள் என்பதை அறிய இங்கே சொடுக்கவும் (click here)👉 கள்ளர் - பெயர்க்காரணம்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால் நிலமும் ஐந்திணையும் பகுத்த நாகரிகம் பெற்ற தமிழர் சேர, சோழ, பாண்டிய குடிப் பிரிவுகளுடன் விளங்கியது.

மிகப்பழைய பண்டைய குடியினர் என்பதால் பாண்டியர் என்றும்; ஆறுகண்டு சோறு கண்டவர் சோழர் என்றும்; கடற்கரை சேர்ந்தவர் சேரர் என்றும் அழைக்கப்பட்டதாக கூறுவர். 

உலகில் முதன்முதல் மனிதன் தோன்றிய தெற்கே இருந்த குமரிக்கண்டம் நிலம் கடலில் படிப்படியே மூழ்கத் தொடங்கியது. இதன் தென்பகுதி பொதியமலை. தென்னவன் என்னும் பாண்டியன் இதனை ஆண்ட காலமும் உண்டு. இவனது பொதியில் நாட்டில் நீர் கொட்டிய அருவி குற்றாலம். பொதியமலையில் இருந்துகொண்டு அகத்தியர் தமிழ் வளர்த்ததாகக் கதைகள் கூறுகின்றன.  



காவிரிப்பூம் பட்டணத்தில் இருந்த சோழ வேந்தன் காந்தன், அகத்தியர் அருளால் காவிரி தன் நாட்டில் வரப்பெற்றவன் என ஒரு குறிப்பு மணிமேகலையிற் காணப்படுகிறது. சேர மன்னர் மலைநாட்டில் மலைகளிலும், காடுகளில் வேட்டம் புரிவதையே தொடக்கத்தில் மேற்கொண்டிருந்தனர். சேர நாடு மேலைக் கடலைச் சார்ந்து கிடத்தலின்’ சேரர்கள் கடலிற் கலஞ் செலுத்துதலிலும் சிறந்திருந்தனர்.

குறிஞ்சி மற்றும் முல்லை நிலங்களில் நாடு என்று அமைப்பு தோன்றி அதன் தலைவன் நாடன் என்று அழைக்கப்பெறுகிறான். குமரிமலையும், குமரி ஆறும் பஃறுளி ஆறும் இருந்த குமரிக்கண்டப் பகுதி குமரிநாடாகச் சுருங்கிய போதும் 700 காதம் பரப்புடையதாய் இருந்தது. அதில் ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின் பாலைநாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ் குணகரை நாடு, ஏழ் குறும்பனை நாடு என 49 நாடுகள் இருந்தன.

நாடர், நாட்டார் , நாட்டாழ்வான் என்ற பட்டங்களுடைய கள்ளர் மரபினர் இன்றும் பெரும் செல்வந்தர்களாகவும், அதிகாரமுடையவரகவும் வாழ்ந்து வருகின்றனர்.






இன்று கள்ளர் நாட்டிலுள்ள தொகுதிகளுக்கு நாடுகள் என்று பெயர்கள் உண்டு. நாடுகளைச் சீமைகள் என்றும் வழங்கியுள்ளனர். சிற்றூர்களுக்கு மங்கலம், சமுத்திரம், குடி, ஊர், புரம், குளம், குறிச்சி, பட்டி எனவும் பெயர்கள் வழங்கின.

பாலை :- 
(போர்குடிகள் வாழும் பகுதி )  


பாலை திணையில் 

"முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ்படப்பை 
புள்ளி வெருகுதன் குட்டிக் கிரைபார்க்கும் 
கள்ளர் வழங்குஞ் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி "

வழிச்செல்வோரை எதிர்பார்த்திருக்கும் கள்ளர்கள் என்று தலைவியின் கருத்தாக பாடல் அமைத்துள்ளது. இதில் கள்ளர்கள் கொள்ளை தொழில் செய்பவராக அதாவது வழிச்செல்வோரை எதிர்பார்த்திருக்கும் கள்வர் திரிகின்ற பாலை  நிலம் என்கிறார்.

ஆனால் வீரச்செயல்புரியும் ஆர்வத்துடன் பிறந்துவிட்டவர் உள்ளத் தில், பாலையின் அழைப்பு, ஒர் எதிரொலியை ஏற்படுத் திற்று. கொடுவிலங்குகளை வேட்டை யாடுதலில், ஈர்ப்புற்று அவற்றைப் பின்தொடர்ந்து செல்லும் பொழுது, பாலைநிலத்தில் தற்காலிக வாழிடத்தை வகுத்துக்கொள்ள வற்புறுத்தப்படுவான்.  ஒருசிறு காலமோ, அல்லது வாழ்நாள் முழுவதுமோ பாலையில் வாழ்ந்த மனிதர், மறம்வாய்ந்த, வீரம் வாய்ந்த , வலிமை வாய்ந்த கள்வர் என்போராவார். (கள்வர், கள் வலிமை அதிலிருந்து விலங்குகளிலெல்லாம் வலிமை வாய்ந்த யானையைக் குறிக்கும் களிறு என்ற சொல்லும், வலிமைதரும் குடிவகைகளாகிய மதுவைக்குறிக்கும் கள் என்ற சொல்லும், போர் நிகழ் இடத்தைக் குறிக்கும் களம் என்ற சொல்லும் பிறக்கும்).

போர்க்களத்தை சங்கநூல்கள் பறந்தலை என்று குறிப்பிடுகின்றன். பாலை ஊர்ப்பெயர் - பறந்தலை ஆகும். பாலைநிலம் முற்காலத்திற் போர்க்களத்திற்குப் பயன் படுத்தப்பட்டது. அதனால், போர்க்களத்தைக் குறிக்கும் பறந்தலை யென்னும் பெயர் பாலைநிலத்தூரின் பெயராகவுமிருந்தது. பாலைநிலத்தில் கொள்ளை யையும் போரையும் குலத்தொழிலாகக் கொண்டிருந்ததனால், மறஞ்சிறந்து மறவர் எனப்பட்டனர் "கள்ளர்கள்" .



அகநானூற்றில் இடம் பெறும் சங்க இலக்கியப் போர்களங்கள் ஆமூர்ப் பறந்தலை, கழுமலப் பறந்தலை, குறுக்கைப் பறந்தலை, கூடற் பறந்தலை, தலையாலங்கானப் பறந்தலை, பருவூர்ப் பறந்தலை, பாழிப் பறந்தலை, பெருந்துறைப் பறந்தலை, மணவாயிலுறத்தூர்ப் பறந்தலை, முசிறிப் பறந்தலை, வல்லப் பறந்தலை, வாகைப் பறந்தலை, வெண்ணிப் பறந்தலை என்று அழைக்கப்படுகின்றன. 


கொற்றவை 
போர் வெற்றிக்காக வணங்குதல்)


குறிஞ்சிநிலமக்கள் வேட்டைத் தொழிலிலிருந்து புராதனப் பயிர்த்தொழிலுக்குத் திரும்பிய காலத்தில் புன்புலப் பயிர் செய்யத் தொடங்கினார்கள். அக்காலத்தில் பெண்கள் ஆதிக்கம் பெறத் தொடங்கினார்கள். தாய்வழி சமூகம் தோன்றுகிறது. ஆகவே காட்டில் பெண்கள் பயிர்செய்யத் தொடங்கிய காலத்தில் கொற்றவை தோன்றினாள். காடுகளை காப்பதால் “காடுகிழாள்’ என்ற மறு பெயரும் அவளுக்கு உண்டு. கொற்றவை தமிழகத்தின் பண்டைய தாய்த்தெய்வம். 

"வெட்சி தானே குறிஞ்சியது புறனே
உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே" 

வெட்சி என்னும் ஆநிரை கவர்தல் குறிஞ்சி நிலத்துக்குரியதாகும். ஆநிரை கவர்ந்துவரக் கொற்றவையை வழிபட்டனர். கொற்றவை என்ற பெண் தெய்வமே வெட்சிப் போர் மரபினர் தெய்வமாகும். ஆநிரை கவர்தல் என்பது திருடுதல் ஆகாது. போரின் ஒரு வகை மட்டுமே.


கொற்றவை, பாலை நில தெய்வமாக காட்டப்பட்டாலும் முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்த நிலமாதலால், குறிஞ்சி, முல்லை, பாலை என்ற மூன்று நிலத்திற்கும் பொது தெய்வமாகும். கொற்றவை, குறிஞ்சி முதல்வன் சிவன் மனைவியாகவும், முருகன் தாயாகவும் ("கொற்றவை சிறுவ"), முல்லை முதல்வன் திருமால் சகோதரியாகவும் காட்டப்படுகிறாள்.

பிறகு முல்லையிலேயே எளிய ஆட்சியமைப்பு முதலில் தோன்றிவிட்டது. அதாவது ஒரு சிறு கூட்டத்தை வழிநடத்தும் தலைவர்கள் தோன்றிவிட்டனர். முல்லை நிலம் என்பது ஆளுமைக் குடிகளின் தோற்றத்தைக் கொண்டது. தனிநபர் சொத்துரிமை, கற்புமணம் ஆகியவை தந்தை வழிச் சமுதாயம் உருவாக வழிவகுத்தது. பெரிய குடும்பத்தின் தலைவன் நாளடைவில் "சிற்றரசன்" ஆனான். பிறகு கொற்றவை போருக்கு உரிய தெய்வமானால்.


போருக்குச் செல்வோர் கொற்றவையின் பெருமைகளைக் கூறி அத் தெய்வத்தை வழிபட்டுச் செல்லுதலே கொற்றவை நிலை எனப்படுகின்றது. 

உடைமைச் சமுதாயமாக மாறிய சேர, சோழ, பாண்டிய வேந்தர் சமுதாயத்தில் வழிபடு தெய்வமாக வணங்கப்பட்டு வந்துள்ளது. கொற்றவை ஒரு வெற்றித் தெய்வமாகப் போர்த்தெய்வமாக வழிபடப்பட்ட வழக்கம் இருந்ததைப் பதிற்றுப்பத்து காட்டுகிறது. 






கள்ளர்களுக்கு கொற்றவர் என்றும் பெயர். கள்ளர் பட்டங்களாக  கொற்றங்கொண்டான், கொற்றப்பிரியன் என்றும் உள்ளது. கள்ளர்களின் முதன்மை தெய்வமாக கொற்றவை இருக்கிறாள்.


சோழ பாண்டியர் மன்னர்களின் குலதெய்வம் " கொற்றவை " யே

கொற்றவை, பிடாரி (பீடா=துயரம், ஹாரி=நீக்குபவள்) என்று பண்டை நாளில் வணங்கப்பட்டாள். பிடாரிக்கோயில்கள் பற்றி ஏராளமான கல்வெட்டு குறிப்புகள் பல்லவ, சோழர், பாண்டியர், சாசனங்களில் கிடைக்கின்றன. உடலுக்கும், ஆன்மாவுக்கும் ஏற்படும் துயரங்களை நீக்கும் அதிதேவதையாக சாமுண்டா தேவி போற்றப்பட்டாள். அக்னி கிரீடத்துடன் கூடிய இவ்வம்மையே மாரியம்மன் உள்பட பல்வேறு கிராம தேவதையாக உள்ளாள்.

பொன்னமராவதியில் ஊரின் ஒதுக்குப்புறமாய் ஒரு பழங்காலத்துக் கொற்றவை கோயிலும் உள்ளது. கையில் திரிசூலத்தோடு காட்சியளிக்கும் இந்த தேவதையின் திருப்பெயர் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் என்பதாகும். இது அம்பலகாரர்கள் என்னும் கள்ளர் சமூகப் பிரிவினரால் பேணப்பட்டு வருகிற திருக்கோயிலாக விளங்குகின்றது. இந்த ஸ்ரீ அழகு நாச்சியாம்மன் மயில்ராயன் கோட்டை நாட்டு குண்டேந்தல்பட்டி கள்ளர் வம்சத்தின் பாண்டியன் கூட்டத்து பங்காளிகள் அனைவருக்கும் குலதெய்வம் ஆடி மாதம் விரதம் இருந்து கிடா வெட்டி சாமி கும்பிடுவது கால காலமாய் நடந்து வருகிறது. (அம்பலக்காரராக இருப்பவர் மறவர் ஆவார்)
.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், கள்ளர் பசுபதி கோயிலில் சாமுண்டா தேவிக்கு, சோழர் காலத்தில் மிகப்பெரிய தனித்த ஆலயம் இருந்திருக்கிறது.

வெறியாட்டில் களவுத்தெய்வமாக இடம்பெற்ற முருகன் பின்னர் அரசு உருவாக்க காலத்தில் சூரனைக் கொன்ற வீரநிலைத் தெய்வமாக, ஆறுமுகங்களை உடையவனாக, வடபுலக் கந்தனின் கூறுகளைத் தாங்கியவனாகின்றனர். போர்த்தெய்வமான கொற்றவை வீரநிலைத் தெய்வமாய் உயர்ந்த முருகனுடன் தாயாய் இணைக்கப் பட்டதைப் போல் முருகனின் தந்தையாய்க் காட்டப்பட்ட சிவனுடன் மனைவியாய் இணைக்கப் பட்டுள்ளாள்.


செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் வரதராஜ பெருமாள் கோயிலின் வெளியே கேட்பாரற்றுக் கிடந்த ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் மேல் பழமையான, இரண்டாம் நந்திவர்மன் கால தமிழ் கல்வெட்டும், பல்லவர் கால கொற்றவை புடைப்புச் சிற்பமும் இன்று மத்திய தொல்லியல் துறையின்(Archeological Survey of India) மாமல்லபுரம் துணை வட்ட (Mamallapuram Sub-Circle) அலுவலர்களால் மாவட்ட வருவாய்துறை உதவியுடன் கைப்பற்றப்பட்டு அருகில் உள்ள ASI கட்டுபாட்டில் உள்ள பொன்விளைந்தகளத்தூர் முன் குடுமீஸ்வரர் திருக்கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.


சேரமன்னர் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் - கொற்றவை வழிபாடு




அம்பல் :- (போரின் தொடக்கம் - உளவறிதல்)

"ஒரு விசயம் சிலருக்கு மட்டும் தெரிவது அம்பல், ஊரே அறிந்தால் அலர்". அம்பல் என்றால் காதோடு காதாகப் பேசும் பேச்சு. காதல் ஒழுக்கம் பற்றி ஊர்மகளிர் வாய்க்குள் பேசிக்கொள்வது அம்பல் எனவும், வெளிப்படையாகப் பேசுவது அலர் எனவும் அகத்திணை இலக்கியம் பேசும். பரவாத களவை அம்பல் என்றும் களவை, அலர்’ என்றும் கூறுவர் பேராசிரியர்

" அம்பலும் அலருங் களவு"

அம்பலும் அலரும் களவு என்பது-அவ்விரண்டும் நிகழ்ந்தன என்பது தாம் அறியினல்லது யாவரும் அறிவாரில்லை; இன்மையின், அவை களவு என்றவாறு; களவு என்பது, செய்தாரே அறிந்து மற்றொருவர் அறியாததாகலான் என்பது.

அம்பல் என்றால் ஒற்றாடல் என்று பொருள். அதாவது உளவறிதல். ஒற்றுவேலை செய்து மன்னருக்கு தகவல் அனுப்புவது. இது போர் மறவர்களின் பணிகளில் ஒன்று. இதனை செய்ததால் கள்ளர்களுக்கு அம்பலகாரர் என்று பெயர். கள்ளர்கள் என்பதற்கு "மறைத்தல்" என்றும் பெயர். ஆக்கல்,காத்தல், அருளல்,மறைத்தல், அழித்தல் என்ற ஐந்தொழில்களைப் புரிபவன் இறைவன். உயிர்களைப் பக்குவப்படுத்துவதற்காகக் கள்ளனைப்போல மறைந்து நின்று தியானம் - மந்திரம் - சைவ வேடம் இவற்றால் உயிர்களை நல்வழிப்படச் செய்வது. அதனால் தான் இறைவனை, கள்வன் என்று அழைப்பது சைவமரபு. 

வெட்சி போர் மற்றும்  :- 
(போரின் ஆரம்பநிலை ) 

ஆரம்ப காலங்களில் போர் நிகழ்கையில் ஒருவர் மற்றொருவரின் ஆ நிரைகளைக் கவருவதே இயல்பு, இதுவே பிற்காலப் பேரரசுகளின் போர் முறையிலும் தொற்றிக்கொண்டுவிட்டது. நாட்டின் பொருளாதாரம் பெரும்பான்மை இவற்றைச் சார்ந்தே இருந்தது, ஆ நிரைகளை கவருவது அந்நாட்டை பொருளாதார வகையில் தாக்குவதாகும். ஆக்களை எதிரிகள் கவர்வது அல்லது பற்றிச்செல்வது "ஆபத்து" - அடுத்து முழுப்போர் வெடிக்கும். 

புறத்திணைகளுள் வெட்சிக்கு அடுத்து வைக்கப்படுவது, வெட்சிக்கு எதிரான அல்லது மாறான, கரந்தைத் திணையாகும். பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆ நிரைகளை மீட்டுவருவதே இத்திணையாகும்.

இப்படிக் கவர்ந்து செல்வதையும், மீட்டு வருவதையும்  " கள்ளர்" செய்தனர். 


ஆ நிரைகளை கவர்ந்து வருவம் கள்ளர்கள்

ஆ நிரைகளை மீட்டு வருவம் கள்ளர்கள்


அஞ்சி மழவர் கோமான். மழவர் ஆநிரைக்கவர்தலை அகநானூற்றில் பாடல்கள் குறிப்பிடுகின்றன. கள்ளர்களின் மழவராயர் என்ற பட்டம் உள்ளவர்கள் இன்றும் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். 






 மழவர் தெய்வம் கொற்றவை

கள்ளர்த்தடி :- (போரில் கள்ளர் எறியும் வளைதடியாயுதம்)



1817-இல் திரு.டி.டர்ன்புல்“கள்ளர்கள் பொதுவாக ஈட்டி எறிவதிலும், வளரி எனப்படும வளை தடியினை எறிவதிலும் திறமை மிக்க அஞ்சா செஞ்சர்கள். இந்தப் போர்க் கருவி இச் சாதியாரிடையே பெருவழக்கினதான ஒன்றாகும். சுமார் 30 அங்குலம் உள்ள வளைவுடையதான ஒரு கருவியாகும் இது.




ஏழுகிளை கள்ளர் நாட்டார்கள் தங்களது திருமண நிச்சயத்தின் போது இருவீட்டார்களும் வளரியை மாற்றிக் கொள்கிறார்கள்


கள்ளர் சமூகத்தவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியதைக் கண்ட ஒரு ஆங்கிலேயர் அதற்கு கள்ளர் ஆயுதம் (collery weapon) எனப்பெயரிட்டான் கும்பினி ஆவணங்களிலும் அவ்வாறே இடம் பெற்றது.

சொடுக்கவும் (click here) 👉 வளரி : திகிரி / கள்ளர் தடி / வளரி

நடுகல் : - (போரில் உயிர்நீத்த வீரனுக்கு )

கல் நடுதல் என்பதை இது குறிக்கும். போரில் உயிர்நீத்த வீரனுக்கு, அவனுடைய பெயரையும் வீரப்புகழையும் கல்லில் பொறித்து அவன் நினைவாகப் பலரும் வழிபடுமாறு கல் நடுவதை நடுகல் என்பர். இவ்வழக்கம் பற்றிச் சங்க இலக்கியத்துள் தொல் காப்பியர் நடுகல் எடுத்தலின் நிலைகளை வெட்சித் திணையில் குறிப்பிட்டுள்ளார். நடுகல்லைச் சுற்றிக் கோயில் எடுத்துச் சிறப்பித்தமையை ‘வாளுக்குப் பலிஊட்டி மணி ஒலிக்க, வீரர் பலரும் கோயிலினுள் வீரக்கல்லை இருக்கச் செய்தார்’ என்கிறது.


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் கண்டறியப்பட்ட பிராமி எழுத்துகளில் அமைந்த நடுகற்கள் காலம் கி.மு. 2-3ஆம் நூற்றாண்டு என அறிஞர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடுகல்லில் "கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்" என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. கூடலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள், மாட்டு மந்தைகளை (ஆனிரையை)க் கவர்ந்து செல்ல முயன்ற போது தீயன் அந்தவன் என்பவன் ஆனிரையை மீட்டு அந்தப் பூசலில் இறந்து போன செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்வர் குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர் . கல்வியறிவும் படிப்பறிவும் உள்ள மக்கள் புரிந்து கொள்வதற்குத் தக்க வகையில் அதனைக் கல்லில் பொறித்து வைப்பது என்பது, சமூக அமைப்பும் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களும் பெருமளவு வளர்ச்சி பெற்ற நிலையில் இருந்தால்தான் சாத்தியமாகும்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பாலவாடி எனும் ஊரில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு உள்ளது. (நடு. பக்.227)

ஸ்ரீ புருச பருமற்கு யா / ண்டு பத்தாவது பெரும்(பா) / ண முத்தரைசர் கங்கரை(சா)ள்ப் பாகற்றூர்த் தொறு அருங்கள்வர் கொண்ட ஞான் / று மீட்டுப் பட்டார் நொ / ச்சி சாத்தன் க(ல்)

கட்டாணை எனும் ஸ்ரீ புருசனுடைய பத்தாவது ஆட்சி ஆண்டில் முத்தரையரான பெரும் பாண கங்க அரைசர் ஆளும் பாகற்றூர் ஆநிரைகளை அருங்கள்வர் எனும் கூட்டத்தார் கவர்ந்து கொண்ட போது அவற்றை மீட்டு வீரசாவடைந்த நொச்சி சாத்தன் நினைவில் நட்ட நடுகல் இது. நொசசி சாத்தன் எவ் ஊரன், எந் நாடன், எவருடைய படைஆள் போன்ற செய்திகள் கல்வெட்டில் இல்லை

அருங்கள்வர் என்பதற்கு அருமையான திருடன் என்று பொருள் கொள்ள முடியாது. இது இனத்தை மட்டுமே குறிக்கும்.


கிபி899 ஆம் ஆண்டு பல்லவர் காலத்தில் வாணியம்பாடி வட்டத்தில் உள்ள சமணக் குப்பம் என்கிற ஊரில் “தங்களுடைய ஊரில் உள்ள ஆநிரைகளை விண்டபாடிக் கள்ளர்கள் கவர்ந்து செல்கின்றனர், அவர்களுடன் போராடி உயிர் நீத்த சாகூழன் வேளாளன் என்பருக்கு நடுகல் எடுத்துள்ளனர்”


இதில் ஆ நிரைகளை கவர்ந்து செல்பவர்கள் “விண்டபாடிக் கள்ளர்கள்” என்றே குறிக்கப்பட்டுள்ளது, விண்டபாடி என்பது ஒரு நாட்டையோ,கோட்டத்தையோ குறிக்கும் சொல் அதனை தொடர்ந்து வரும் கள்ளர் என்பது இனத்தை குறிக்கும் சொல்லாக வருகிறது.

கள்ளப்பற்று / கள்ளப்படை : - (படைவீடு / படைநிலை)

பேரரசுகள் தோன்றிய பின் எல்லைகளையும் குடிமக்களையும் பாதுகாப்பதற்காக மன்னர்கள் பலவகை போர்ப் படைகளைக் கொண்டிருந்தனர். 

போர்க்காலத்துப் பெரும்படை அமைதிக் காலத்து வேண்டா வாதலின், போர் முடிந்த பின் மூலப்படையொழிந்த பிறவெல்லாம் கலைக்கப்படுவது மரபு. அன்று மூலப்படைப் பகுதிகள் தலைநகரிலும், பிற கோநகர்களிலும் எல்லைப் புறங்களிலும், புதிதாய் வெல்லப்பட்ட பகைவர் நாட்டிலும் நிறுத்தப் பெறும். அங்ஙனம் நிறுத்தப் பெற்றவை நிலைப்படை எனப் பெயர்பெறும். கலைக்கப்பட்ட படையினர் தம் மரபுத் தொழிலைச் செய்து வருவர். 

நிலைப்படை நிறுத்தப்பட்ட நகர் படைவீடு என்றும், அது நிறுத்தப்பட்ட நிலப்பகுதி படைப்பற்று என்றும், அது குடியிருக்கும் வீட்டுத் தொகுதி படைநிலை என்றும் பெயர்பெறும். நிலைப் படையினர் மனைவி மக்களுடன் கூடிவாழ்வர். 

தமிழ் அகராதி  


கள்ளர் வாழ்கின்ற பகுதிகள், இப்பொழுது நாடுகள் என்று வழங்கப்படுகின்றன. சோழர்காலத்தில் நாடுகள், கூற்றம் என்று குறிப்பிட்டிருந்தாலும், கள்ளர் நிலைப்படைகள் தங்கிய பகுதிகள் கள்ளப்பற்று என்றும், நாயக்க , மராட்டிய காலத்தில் கள்ளபத்து என்றும் வழங்கப்படுகிறது.

கல்வெட்டில்
1225  இல் சுந்தரபாண்டியன் தேவர், புதுக்கோட்டை குளத்தூர் பகுதியில் கள்ளர் படைப்பற்றில் விற்படை வீரர்கள். குளத்தூர் பகுதி விசங்கி நாடு, உஞ்சனை நாடு கள்ளர்கள் வாழும் பகுதியாகும்.

கள்ளப்பற்றில் எல்லா வகை போர் வீரர்களும் இருந்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக வில் ஏந்திய வீரர்கள் பற்றிய கல்வெட்டாக இது  உள்ளது.



       சொடுக்கவும் (click here) 👉   சோழர்கால மன்னார்குடி கள்ளப்பற்று


மதுரை வீரன் அம்மானை" எனும் ஒலைச்சுவடிகளில்


அறந்தாங்கி தொண்டைமான்கள்

மராட்டிய "மோடி" ஆவணங்களில் பல இடங்களில்  "கள்ளபத்து " என்று கள்ளர்பற்று குறிக்கப்பட்டுள்ளது.

The Proceeding of the Indian History congress seventh session by Mr.Tara Chand (1944)


“stroming of the Kallar barrier” மணப்பாறை 
(நூல்: Saints,goddesses and kings)




ஏறுதழுவுதல் :- போரில்லாத காலங்களில் விளையாட்டு

முல்லை நில மகளிர் தம்மால் விரும்பி வளர்க்கப்பெற்ற வலிய எருதுகளைப் பிடித்து அடக்கும் அஞ்சா நெஞ்சமும் ஆற்றலுமுடைய காளையரையே மணக்க விரும்பினர்.

கள்ளர்களின் திருமணம் பற்றித் திரு எம்.எஸ்.நடேசசாஸ்திரி குறிப்பிட்டுள்ள (இந்து விழாக்கள், விரதங்கள், சடங்குகள், 1903, Hindu Feasts, Fasts and Ceremonies, 1903)

மாட்டுப் பொங்கல் நாளன்று மாலை நேரம் நெருங்கும்போது கற்றாழை நார்க் கயிற்றிலும், துணியிலும் காசுகளை முடிந்து அவற்றைக் காளைகள் பசுக்கள் ஆகியவற்றின் கொம்பில் கட்டித் தொங்க விட்டபின் அவற்றைத் தப்பட்டை மற்றும் இன்னிசை முழக்கத் தோடு தெருவில் துரத்தி விடுவர். மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களைச் சார்ந்த ஊர்களில் - சிறப்பாகக் கள்ளர்கள் வாழும் ஊர்களில் - கன்னியர் எத்தகைய தீங்குக்கும் உள்ளாகாதவாறு காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்ட துணியினை அவிழ்த்துக் கொண்டு வந்து தங்களிடம் தரும் வீரமிக்க இளைஞர்களேயே தங்களுக்குரிய கணவராக வரிப்பர். ஒரு காளையினைத் துரத்தி அடக்கும் செயலின் போது காயம் அடைவதைக் கள்ளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பெரிய இழிவாகக் கருவர்.“


கிறிது சகாப்தத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த புலவர் ஒருவரின் பாடலை எடுத்துக் காட்டித் திரு.கனகசபைபிள்ளை (ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் 1904) ஆயர்கள் இடையே அந்நாளில் நிலவிய இந்தப் பழக்கத்தைப் பின்வருமாறு விவரித்துள்ளார்:- “பெரிய நிலப்பரப்பு கூர்முட்களிட்டும், கம்பங்கள் நட்டும் வளைக்கப்படும். அவ் வளைவினுள் கொம்புகள் சீவிக் கூராக்கப்பட்ட வெறி கொண்ட காளைகளைத் துரத்தி வீடுவர். முரசு முழக்கம் ஏறு தழுவுதல் தொடங்க இருப்பதை அறிவித்தவுடன் அந்த இளைஞர்கள் வலைவினுள் குதித்து முரசு முழக்கத்தால் மிரண்டு அவர்கள் மேல் பாய்வதற்காக முனைபோடு சீறிய இளைஞனும் தான் தழுவி அடக்கத் தேர்ந்தெடுத்துள்ள காளையினை நெருங்குவான். வெற்றி பெற்றவர்களும் அவர்களை மணக்க உள்ள கன்னியரும் அருகே உள்ள சோலைக்குச் சென்று மண ஏற்பாடுகள் நிகழும் வரை கூடியாடி மகிழ்வர்.

(இந்தியத் தொல்லியல், II, 1847 Ind, Ant. III 1874 : 72:3-B). “சல்லிக் கட்டு விளையாட்டில் தீரமிக்க சாதியார்கள் - சிறப்பாகக் கள்ளர்கள் - மிகுதியான ஆர்வம் காட்டுகின்றனர். பல ஊர்களில் தனியே இதற்காகவென்றே சாதிக் காளைகளை வளர்க்கின்றனர். கள்ளர்கள் வாழும் பகுதியான திருமங்கலத்திலேயே மிகச் சிறந்ததான சல்லிக்கட்டைக் காணலாம். இதற்கு அடுத்தபடியாக மேலூரிலும் மதுரை மாவட்டங்களிலும் நடைபெறும் சல்லிக்கட்டைக் கூறலாம்“ என மதுரை மாவட்ட விவரக் குறிப்பில் பதியப்பட்டுள்ளது

காளைகளைக் கட்டி வீழ்த்துவதில் கள்ளர்கள் மிகுந்த ஆர்வம் உடையவர்கள் எனத் திரு.ஹெமிங்வே கூறுகின்றார். இந்த விளையாட்டு, தொழுமாடு எனப்படும். இந்த விளையாட்டுக்கான சிறந்த காளைகள் மதுரை மாவட்டத்தில் உள்ள புலிகுளம் ஊரைச் சேர்ந்தனவாகும். மற்றொரு வகை விளையாட்டு பாய்ச்சல் மாடு எனப்படும். இதில் காளைகளை நீண்ட கயிற்றால் கட்டிப் பின் அவற்றைக் கீழே வீழ்த்தப் பார்ப்பர். இந்த விளையாட்டின் நோக்கம் காளையைக் கீழே வீழ்த்தி அதனை மீண்டும் எழ முடியாதபடி கட்டிப் பிடிப்பதாகும்.

பிற நாட்டவர் குறிப்புகள் :- கள்ளர் போர் திறன்

கள்ளர் நாடுகளில் (தொண்டமான்,நத்தம்,மதுரை,மேலூர்) 30 முதல் 40000 கள்ளர்கள் ஆயுதங்களுடன் ( சிவகங்கை கள்ளர்களை சேர்க்காமல்) பல கள்ளர் தலைவர்களின் கீழ் இருந்துள்ளார்கள் என்று குறிக்கிறார்கள்.
ENGLISH INTEREST IN INDIA 1767 by WILLIAM (Member of parliament) and late commander of southern army on the coast of coromandel




சமூகவியலாளரும்,எழுத்தாளருமான பத்மஶ்ரீ இராதாகம்மால் முகர்ஜி அவர்கள் தன்னுடைய புத்தகமான Democracies Of Eastல் விளக்கியுள்ளார். அதில் காவல்குடி சமூகங்களாக கிபி1923ல் இந்தியாவில் இருந்த சமூகங்களை குறித்துள்ளார்






1891  இந்திய இராணுவ இனம்



The First War Of Independence

தென்னிந்திய புரட்சியில் தன்னரசு கள்ளர் நாட்டுக் கள்ளர் பெருமக்கள் தமிழ் நாட்டின் புரட்சி அமைப்பு கூட்டணிக்கு மையமாக செயல்பட்டார்கள்

கள்ளர் நாடுகள் (சுதந்திர பழங்குடிகள்)

1) மதுரை கள்ளர் நாடு 
2) திண்டுக்கல் கள்ளர் நாடு 
3) சிவகங்கை கள்ளர் நாடு 
4) புதுக்கோட்டை அம்பு நட்டு கள்ளர்கள் ( புதுக்கோட்டை கள்ளர் குல மன்னன் தொண்டைமான் மன்னருக்கு கட்டுப்படாத கள்ளர்கள்)




கள்ளர் குல மாமன்னன் ககரிகாலன் காலத்தில் எயினர், நாகர், ஒளியர், பொதுவர், இருங்கோவேள், அருவாளரும் , பின்னர் பிற்கால சோழர்களின் காலத்திற்குப் பிறகு அதியமான், மலையமான், சம்புவரையர், முத்தரையர், வல்லத்தரசுகள் கள்ளர் முதுகுடியில் கலந்துவிட்டார்கள். பிற்கால சோழர்கள் ஒரு குடையின் கீழ் தங்களது ஆட்சியைக் கொண்டு வந்தனர். இதனால் தான் கள்ளர்கள் இடத்திற்கு இடம் பழக்கவழக்கங்களில் பெரிதும் வேறுபாடு காணப்படுகிறது (கள்ளர் ஆண்கள் காது வளர்க்கும் பழக்கம் மட்டும், எல்லா கள்ளர் பிரிவிலும் உள்ளது ) .


ஆய்வு : 


சியாம் சுந்தர் சம்பட்டியார், 
சிவம் சேர்வை, 
பரத் ராமகிருஷ்ணன் கூழாக்கியார்

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

கள்ளர் குலத்தினரின் மக்கள் தொகை

முக்குலோத்தோரில் கள்ளர் குல மக்கள் அதிகமாக வாழும் பகுதிகள் 

1) தஞ்சாவூர்

2) மதுரை 



3) புதுக்கோட்டை 


4) திருநெல்வேலி 



5) இராமநாதபுரம்

முக்குலத்தோர் மக்கள் தொகை பொதுவாக



இந்திய நாட்டின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அப்போதைய பிரிட்டிஸ் கவர்னர் ஜென்ரல் ஆப் இந்தியா ரிப்பன் பிரபுவால் கிபி1881ல் வெளியிடப்பட்டது.





முதன் முதலாக இந்தியாவில் எத்தனை பழங்குடிகள்,சாதிகள் மற்றும் அவர்களின் உட்பிரிவுகள் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டது.

இந்த தொகுதியின் முதல் பகுதியின் முதல் பாகத்தில் கள்ளர்,மறவர்,அகம்படியர்களை பற்றிய தகவல்

கள்ளர். : 3,97,873
மறவர் : 2,56,304
அகம்படியர்: 3,02,338

மொத்தம் : 9,56,515

அப்போதைய இந்திய மக்கள் தொகை : 25,38,91,121

அதில் சதவீத அடிப்படையில்

கள்ளர். : 1.567%
மறவர். :1.009%
அகம்படியர் : 1.190%

மொத்தம் : 3.766%


1891 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மறவர் அதிகபடியாக கூடியும், அகம்படியர்கள் அதிகப்படியாக குறைந்தும் ஆவரேஜாக உள்ளனர். அதேபோல் கள்ளர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைந்து அந்த கணக்கு அப்படியே அகம்படியர்களுக்கு கூடுகிறது.

நன்றி
Census of British India 1881

1921 சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி.

தஞ்சை , திருவாரூர் , நாகப்பட்டினம்.
கள்ளர் - 207,684.
மறவர் - 3,758.
அகமுடையார் - 117,686.

மதுரை, தேனி , திண்டுக்கல்.
கள்ளர் - 186,732.
மறவர் - 55,691.
அகமுடையார் - 62409.

புதுக்கோட்டை.
கள்ளர் - 51,111.
மறவர் - 6,670.
அகமுடையார் - 12,306.

தூத்துக்குடி, திருநெல்வேலி.
கள்ளர் - 12,583.
மறவர் - 231,853.
அகமுடையார் - 1,724.

இராமநாதபுரம்,சிவங்கை,விருதுநகர்.
கள்ளர் - 45,407.
மறவர் - 146,854.
அகமுடையார் - 95,717.

கள்ளர். : 3,97,873.
மறவர் : 2,56,304.
அகம்படியர்: 3,02,338.

மொத்தம் : 9,56,515.


நன்றி 

உயர் திரு. சியம் குமார் சம்பட்டியார் 
உயர் திரு. சோழபாண்டியன் - ஏழுகோட்டை நாடு

புதன், 24 ஜனவரி, 2018

விசங்குநாட்டுக்கள்ளர் / ஈசநாட்டுக்கள்ளர் / ஈசங்க நாட்டுக் கள்ளர் / ஈசநாட்டு கள்ளர்


ஈசநாட்டுக்கள்ளர் (கூத்தைப்பார் கள்ளர், பெரிய சூரியூர் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர்) என்போர் கள்ளரில் ஓரு பிரிவினர்.

இவர்கள் சோழ மண்டலமாகிய தஞ்சாவூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் ஆவர். 

கள்ளர்களே இந்த சோழ மண்டலத்தின் பூர்வகுடிகள் என்பதற்கு ஆதாரமாக முல்லை நிலமான மன்னார்குடியின் இராஜகோபாலசுவாமி கோயிலின் இராஜாதிராஜ சோழங்கதேவரின் கல்வெட்டில் குறிப்பிடப்படும் கள்ளப்பற்றும், நாயக்க, மராட்டிய கல்வெட்டில் காணப்படும் கள்ளப்பத்தும் மற்றும் தஞ்சையில் உள்ள பழமையான கள்ளர் நாடுகளும், சோழர்கள் கள்ளர்களே என்பதற்கு ஏற்ப கள்ளர் பட்டங்களும் மற்றும் தஞ்சையில் உள்ள 12 பாளையக்காரர்களும் கள்ளர்களே ஆவார்கள். இதை தவிர ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களுடைய பூண்டி வாண்டையார்கள், உக்கடை தேவர்கள், அய்யம்பேட்டை சாவடி நாயக்கர், அரித்துவாரமங்கலம் ராசாளியார்கள்  கள்ளர்களே.

சோழமன்னர்களின் பங்காளிகள் எனவும் தமது முன்னோர்களாக கரிகாலனையும் கூறிக் கொள்கின்றனர் - என்று கொழுமம் குமரலிங்கம் ஐவர்மலை நூலில் குறிப்பிடுகிறார்.


இவர்களில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும், பல்லவராய மன்னர்களும் 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தில் வேங்கடத்திலிருந்து இருந்து சோழ மண்டலத்தில் குடியேறினர்.

அறந்தாங்கி தொண்டைமானாரின் முன்னோர் வாள்விட்ட பெருமாள் தொண்டைமானார் தன்னை விசங்க நாட்டு தொண்டைமானாக குறித்துள்ளார்.


ஈசநாட்டுக்கள்ளர்களுடைய குலப்பட்டம் -

தேவர்
விஜயதேவர்
சிவலிங்கதேவர்
தொண்டைமான் (புதுக்கோட்டை சமஸ்தானம்), 
சிங்கம்புலியார்
சோழங்கதேவர், 
கோபாலர்,
கடாரம்கொண்டார்
ஈழங்கொண்டர்
கொல்லத்தரையர்
இராசாளியார், 
பல்லவராயர், 
மழவராயர், 
நாட்டார், 
வன்னியர், 
அம்பலகாரர், 
வாண்டையார், 
சேர்வைகாரன், 
சோழகன், 
பழுவேட்டரையர், 
கொங்கரையர், 
முத்தரையர், 
ஒண்டிப்புலியார், , கொடும்பாளுர்ராயர், 
சேனைகொண்டார், 
சேதுராயர், 
சேனாபதியார், தக்கோலாக்கியார், தஞ்சைராயர், 
தென்னவன், 
நரசிங்கதேவர்
நாடாவி 

என்று ஈராயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பட்டங்களை பெற்றுள்ளனர்..

உதாரணமாக ஒரு ஈசநாட்டு கள்ளர்கள் நிகழ்ச்சி பத்திரிகை



சம்பட்டியார் என்பது ஒரு சாராருக்கு பட்டமென்றால், அவர்கள அதே சம்பட்டியார் வீட்டில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய மாட்டார்கள். ஒரே பட்டம் உள்ளவர்கள் பங்காளிகள்.

குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும். அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள். எடுத்துகாட்டு பல்லவராயன் (பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன்), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை. 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்:

பெயர் விளக்கம்:

விசங்கு  / ஈசங்க / ஈசநாட்டு கள்ளர்  என்றும், தஞ்சை கள்ளர்கள் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். இந்த பெயருக்கான சரியான விளக்கங்கள் , ஆதாரங்கள் தெளிவாக  இல்லை. 

கொடி விளங்கும் தேரினையுடையவன் பாண்டிய மன்னன் ஆவான். அவனுடைய மலையென்று உரிமையுடன் போற்றப்பெறுவது பொதியமலை ஆகும். அகத்தியனார் இருந்து தமிழ்வளர்த்த பெருமை உடையது அது. சங்க காலத்தில் பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகைமலை என்றும் கூறுவர். சங்க காலத்தில் பொதியமலை நாட்டை ஆய், திதியன், ஆகிய குறுநில மன்னர்கள் ஆண்டுவந்தனர். 

இங்கு மலையில் தோன்றிய குறிஞ்சி நாகரிகமே குமரி நாகரிகம். இந்த பகுதியில் வாழ்ந்த  கள்ளர்கள், அங்கு மட்டுமே வாழ்ந்த அன்னத்தின் பெயரால் விகங்கம் / விசங்கம் மலை கள்ளர் என்றும் மருவி பின்  விசங்குநாடு, ஈசங்கநாடு, ஈசநாடு கள்ளர் என்று ஆனது என்ற கருத்தும், சோழமண்டலத்தில் இன்றும் வாழ்ந்து வருகின்ற ள்ளர்களின் பட்டங்களான பொதியர், அகத்தியர் என்பது அகத்தியரின் பொதியமலையின்,  பழைய எச்சங்களின் மிச்சமாக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர். இவையெல்லாம் ஒரு செவி வழிச் செய்தியாகவே உள்ளன.

அரித்துவாரமங்கலம் தமிழ்ப்பேரறிஞரும், கொடை வள்ளலும், மூதறிஞருமான மதிப்பிற்குரிய திரு. V. கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் 1911ல் டிசம்பர் திங்களில் மேதகு ஐந்தாம் ஜியார்ஜ் மன்னர் இந்தியாவில் பேரரசராக புது டில்லியில் முடி சூட்டிக் கொள்ள வந்தபொழுது ஒரு மகஜரை அளித்து ஒன்றுபட்ட தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்த கள்ளர்களுக்கு குற்றப்பரம்பரை சட்டத்திலிருந்து நீக்கும் படி கேட்டுக்கொண்டார். இம்மாவட்டங்களில் இருந்த கள்ளர்களே குற்றப்பரம்பரை சட்டத்திலிருந்து விடுபட்ட சீர் பழங்குடியினர் Denotified Kallar Tribe என்பதற்கு பதிலாக ஈசநாட்டுக் கள்ளர்கள் என்று (Esanattu Kallars) அழைக்கப்பட்டனர் என்கிறார்கள் ஆனால் S. Winfred - 1874 ல் எழுதிய சாண்றோர்குல மரபுகாத்தல் நூலில் 


"ஈந்து விருகூடித்துக்கு ஈச்ச விருகூடிம் என நூல்க ளில்ப் பெயர் ... ஈந்து மரத்தில் இருந்து மதுவிறக்கி குடிப்பதால் ஈந்த நாட்டு கள்ளர் மருவி ஈசநாட்டு கள்ளர் ஆனதாக 1874 ஈசநாட்டு கள்ளரை குறிப்பிடுகிறார்.

சென்னைப்‌ பல்கலைக்கழக சங்க இலக்கியம், ஆய்வேடு என்ற நூலில் சங்க இலக்கியத்தில்‌ விளையாட்டுக்‌ கலை என்ற பகுதியில் "பண்டைக்‌ காலத்தே இயற்கையை எதிர்த்துப்‌ போராட வேண்டிய சூழல்‌ ஏற்பட்டது. செங்குத்தான பாறைகளில்‌ ஏறுதலும்‌, வழுக்கலான பாதைகளில்‌ ஏறுதலும்‌ அவர்தம்‌ வாழ்க்கைக்குத்‌ தேவையாக இருந்தது. அத்தகைய நிகழ்வுகளுக்கு இத்தகைய விளையாட்டுகள்‌ ஆடவர்க்குப்‌ பயன்பட்டன. பகைவர்‌ மலையின்‌ ஆநிரை கவரும்‌ வெட்சிப்‌ போர்க்கும்‌,

குறிஞ்சி நிலத்தில்‌ தேன்‌ கிழங்கு எடுப்பதற்கும்‌ இப்பயிற்சி தேவை. குறிஞ்சி நிலக்கள்‌(தேன்‌)ளினைப்‌ பிற நிலங்களில்‌ கொடுத்துத்‌ தமக்குரிய பண்டங்களைப்‌ பெற்ற மக்கள்‌ 'கள்ளர்‌' எனப்‌ பெற்றனர்‌. களவு செய்தல்‌ தமிழர்‌ தொழிலன்று. " என்று குறிப்பிடுகின்றார் .




கருணாமிர்த சாகரம் என்பது தமிழிசையை ஆழமாக ஆய்ந்து, தஞ்சாவூர் ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூல் ஆகும். இந்த நூல், கி.பி. 1917 ஆம் ஆண்டு 1346 பக்கங்களுடன் வெளிவந்தது அதில் ஈசநாட்டுக்கள்ளர் பற்றி :



பூர்வம் சோழராஜ்யத்தை ஆண்டுகொண்டு வந்தவம்சத்தவர்கள் நாளதுவரையும் சோழர், சோழதேவர், சோழங்கத்தேவர், விஜயர், விஜயதேவர், முடிகொண்டான் என்றபெயர்களுடன் ஜமீன்தாராகவும் சிலர் பெருத்த சமுசாரிகளாகவும் பலர் மிக ஏழைகளாகவு மிருக்கிறார்களென்பதை சோழநாட்டில் காண்போம். பூர்வ சோழராஜாக்கள் அடிக்கடி பாண்டியராஜ்யத்தை ஜெயித்து சொந்தப்படுத்திக்கொண்ட காலத்தில் பாண்டியராஜவம்சத்தவர் ஆண்டுகொண்டிருந்த பல சிறுகோட்டைகளையும் ஊர்களையும் தாங்கள் பிடித்துக்கொண்டு பாண்டியராஜ்யத்திலும் பரவினார்களென்று தோன்றுகிறது. இவர்களும் ஒருவருக்கொருவர் பொறாமையினால் ஒற்றுமை இழந்து குறைந்தநிலைக்கு வந்தார்கள். சேரராஜ்யம்ஒன்றுமாத்திரம் இவ்வாபத்துகளுக்கெல்லாம் தப்பி முன்போலவே ஆண்டுவந்தராஜாக்களில் கரிகால்சோழனையே முதல்வனாகச் சொல்லவேண்டு.





The Ancient Heroes Of South India Peninsula

தென்னிந்திய தீபகற்பத்தின் பண்டைய ஹீரோக்கள்

The title of “ Chola” is still borne by a section of the Kallars. Thus, if the real name of a member of that clan were Vira, his full name would be Vira chola. Persons of that clan can be found by scores in the Tanjore territory.



"சோழன்" என்ற பட்டம் கள்ளர்களில் ஒரு பிரிவினரால் இன்னும் சுமக்கப்படுகிறது. எனவே, அந்த குலத்தைச் சேர்ந்த ஒருவரின் உண்மையான பெயர் வீர என்றால், அவரது முழுப் பெயர் வீர சோழன். அந்த குலத்தை சேர்ந்தவர்களை தஞ்சை பிரதேசத்தில் மதிப்பெண்கள் மூலம் காணலாம்.




ஈசநாட்டு கள்ளர் பிரிவு ஜமீன்கள்

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டம் பகுதியில் இருந்த ஈசநாட்டு கள்ளர் மரபினரின் ஜமீன்கள்

பாப்பா நாடு சமீன் - விஜயதேவர்,
கந்தர்வகோட்டை ஜமீன் - அச்சுதப்பண்டாரத்தார்,
பாளையவனம் ஜமீன் - வணங்கமுடிப் பண்டாரத்தார்,
சிங்கவனம் ஜமீன் - மெய்க்கன் கோபாலர்,
புனல்வாசல் ஜமீன் - மழவராய பண்டாரத்தார்,
நெடுவாசல் ஜமீன் பன்றிகொண்டார்,
பாதரங்கோட்டை ஜமீன் - சிங்கப்புலியார்,
கல்லாகோட்டை ஜமீன் - சிங்கப்புலியார்,
சில்லத்தூர் ஜமீன் - பணிபூண்டார்,
மதுக்கூர் ஜமீன் - கோபாலர்,
சேந்தங்குடி ஜமீன் - வணங்காமுடி வகுவடையார்,
அய்யம்பேட்டை சாவடி ஜமீன் - நாயக்கர்,
உக்கடை ஜமீன் - தேவர்,
பூண்டி ஜமீன் - வாண்டையார்.


குறிப்பிடத்தக்க நபர்கள்

  • பாப்பா நாடு ஜமீன் ஸ்ரீ ராவ் பகதூர் சாமினாத விஜயத்தேவர்.
  • உக்கடை ஜமீன் ஸ்ரீ ராவ் பகதூர் அண்ணாசாமி தேவர்.
  •  பாலையவனம் ஜமீன் வணங்கமுடி பண்டாரத்தார் .
  • கந்தர்வக்கோட்டை ஜமீன் அச்சுதப்பண்டாரத்தார்.
  • பூண்டி ஸ்ரீ ராவ் பகதூர் வி. அப்பசாமி வாண்டையார்.
  • பெருங்கமருத்துத பல்லவராயர், புதுக்கோட்டை சமஸ்தானம் அரசப் பிரதிநிதி.
  • ஸ்ரீமான் பெ.ந. குப்புசாமி கடாரத் தலைவர், தேவஸ்தான ஸ்தாபகர் அருள்மிகு ஸ்ரீ முனீசுவரர் திருக்கோயில், பர்மா
  • அய்யம்பேட்டை சாவடி ஜமீன் கிருஷ்ணசாமி நாயக்கர்[10]
  • மதுக்கூர் ஜமீன் ஆர். கிருஷ்ணசாமி கோபாலர்
  • அத்திவெட்டி பெரியதம்பி மழவராயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
  • க. முத்துசாமி வல்லத்தரசு, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அரசியல்வாதி.
  • கோபால்சாமி தென்கொண்டார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அரசியல்வாதி.
  • ஆர். சுவாமிநாத மேற்கொண்டார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அரசியல்வாதி.
  • நடராஜன் குமராண்டார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
  • வைரக்கண்ணு மாளுசுத்தியார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
  • பட்டுராசு களப்பாடியார், தொழிற்சங்கப் போராட்டவாதி.
  • ரத்னசாமி காளிங்கராயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
  • ஏ. தியாகராஜன் காடுவெட்டியார் , தமிழக அரசியல்வாதி.
  • சோமசுந்தர் காடவராயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
  • ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மாதூரார், தொழிற்சங்கப் போராட்டவாதி.
  • சி. நாராயணன் வாணதிராயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
  • ச. சாமிவேலு நரங்கியர், முன்னாள் மலேசிய இந்திய காங்கிரசு தலைவர், ஊராட்சி வீடமைப்புத் துறை மற்றும் பொதுப்பணி அமைச்சராக இருந்தவர்.
  • ராமசாமி ஓந்திரியர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
  • திருச்சி பிரேமானந்தா மழவராயர், ஆன்மீக குரு மற்றும் பிரேமானந்தா மடம் நிறுவியவர்.
  • சிவாஜி கணேசன் மன்றாயர், திரைப்பட நடிகர்.
  • ஆர். முத்துராமன் ஓந்திரியர் , திரைப்பட நடிகர்
  • பிரபு  மன்றாயர், திரைப்பட நடிகர்
  • கார்த்திக் ஓந்திரியர் , திரைப்பட நடிகர்
  • மனோரமா கிளாக்குடையார், திரைப்பட நடிகை.
  • சினேகன் கொடும்புரார் , பாடலாசிரியர்.
  • பசுபதி ஆர்சுத்தியார் , திரைப்பட நடிகர்
  • காசிநாதன் பாஸ்கரன் சிட்டாச்சியார் , இந்திய கபடி விளையாட்டு வீரர் மற்றும் பயிற்சியாளர்.
  • தர்மராஜ் சேரலாதன்சோழகர் , இந்திய கபடி வீரர் மற்றும் 2016 இல் நடந்த கபடி உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் உறுப்பினர்.
  • ப. அனுராதா உத்தமுண்டார் , தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை.[13]
  • கேப்டன் பவித்ரா சேதுராயர், தமிழ்நாடு பெண்கள் கபடி அணியின் கேப்டன்.[14]
  • சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கை அரசியல்வாதி.
  • இரா. தமிழ்ச்செல்வன், மராட்டிய அரசியல்வாதி.
  • ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான், தமிழக அரசியல்வாதி
  • வி. இராமையா சேப்பிளார் , தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் பொதுப்பணித்துறை, உணவுத்துறை அமைச்சர்
  • மன்னை நாராயணசாமி ஓந்திரையர் , தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு முன்னாள் கூட்டுறவு, விவசாயம், உள்ளாட்சித் துறை அமைச்சர்.
  • எஸ். டி. சோமசுந்தரம் கோபாலர் , தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர்.
  • டி. என். அனந்தநாயகி வாண்டையார் , இந்திய அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர்.
  • ஆறுமுகன் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி மற்றும் முன்னாள் கால்நடைவள, கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர்
  • வி. கே. சசிகலா சாளுவர், தமிழக அரசியல்வாதி மற்றும் அஇஅதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர்.[15]
  • டி. டி. வி. தினகரன் முனையதரையர், அஇஅதிமுக முன்னாள் பொருளாளரும் மற்றும் அம்முக நிறுவனர்
  • ஸ்ரீதர் வாண்டையார், தலைவர் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
  • ஜீவன் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி மற்றும் தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராசாங்க அமைச்சர்.
  • அன்பில் பி. தர்மலிங்கம் நாட்டார் , தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் உள்ளாட்சி நிர்வாகம், வேளாண் அமைச்சர்.
  • எல். கணேசன் கண்டபிள்ளை , தமிழக அரசியல்வாதி மற்றும் மொழிப்போர் தியாகி.
  • தா. வீராசாமி அதிகைமான் , தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னால் உணவுத்துறை, வணிகவரித்துறை அமைச்சர்.
  • எஸ். எஸ். பழனிமாணிக்கம் வன்னியர் , தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர்.
  • சி. விஜயபாஸ்கர் மழவராயர் , தமிழக அரசியல்வாதி மற்றும் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர்.
  • ஆர். காமராஜ் காளிங்கராயர், தமிழக அரசியல்வாதி மற்றும் உணவுத்துறை அமைச்சர்.
  • ஆர். வைத்திலிங்கம் சேதுராயர் , தமிழக அரசியல்வாதி மற்றும் தொழில்துறை, வனம், சுற்றுச்சூழல் வீட்டுவசதி மற்றும ஊரக வீட்டுவசதித் துறை அமைச்சர்.
  • அழகு. திருநாவுக்கரசு சேண்டபிரியர் , தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர்.
  • துரை. விஜய ரகுநாத பல்லவராயர், தமிழக அரசியல்வாதி.
  • நா. சுந்தர்ராஜ் சேப்ளார், தமிழக அரசியல்வாதி.
  • துரை சந்திரசேகரன் பாண்டுரார், தமிழக அரசியல்வாதி.
  • ஜி. முருகையா சேதுரார், தமிழக அரசியல்வாதி.
  • கோவிந்தராசு கலிங்கராயர், தமிழக அரசியல்வாதி.
  • கே. என். சேகரன் கார்கொண்டார் , தமிழக அரசியல்வாதி
  • கி. அய்யாறு வாண்டையார், தமிழக அரசியல்வாதி
  • அன்பில் பெரியசாமி நாட்டார், தமிழக அரசியல்வாதி
  • செந்தில் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி.


கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்