சனி, 3 பிப்ரவரி, 2018

கள்ளர்கள் போர்குடிகளா



கள்ளர் குடியினர்க்கு எதிராக எண்ணம் உடைய சில ஆய்வாளர்கள், கள்ளர்கள் என்ற பெயரால், களவை மட்டுமே தொழிலாக கொண்டவர்களாக எழுதுவதை நாம் காணமுடிகிறது. 

கவர்ந்த தொழிலால் கள்வர், கள்ளர் என பெயர் வந்திருக்குமானால், இப்போது உள்ள ஐரோப்பிய அரசர்கள் அனைவரும் கள்ளர் மரபினரவே இருப்பார்கள் என்று ஐயா வேங்கடசாமி நாட்டார்  குறிப்பிடுகிறார்.


கள்ளர்கள் போர்குடிகள் என்பதற்கு சங்க இலக்கியக்கங்கள், கல்வெட்டுகள், பட்டயங்கள், பிறநாட்டவர் குறிப்புகளில் ஏதும் சான்றுகள்  உள்ளதா என்று ஆய்வோமானால்.
  • அம்பல்
  • கொற்றவை
  • கள்வர் 
  • கள்ளப்படை
  • கள்ளப்பற்று
  • கள்ளர்த்தடி
  • கள்ளர்நாடு
  • ஏறுதழுவுதல்
  • நடுகல்
  • பிறநாட்டவர் குறிப்பு
சங்ககால இலக்கியங்களில் ஐவகை திணைகளில், ஐவகை நிலங்களின் தன்மையை ஒட்டியனவாக, அந்த அந்த சூழல்களொடு பின்னி பிணைந்து நிகழ்வனவாக, அவற்றின் பகுதிகளாக மேலும் பலப்பல துறைகளையும் வகுத்துக்கொண்டு செய்யுள் செய்வது பண்டை தமிழ் புலவர்களின் மரபாகும். ஐவகை திணைகளில் "கள்ளர்கள்" எந்த திணைக்குடி மக்கள் என்பதை அறிய இங்கே சொடுக்கவும் (click here)👉 கள்ளர் - பெயர்க்காரணம்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால் நிலமும் ஐந்திணையும் பகுத்த நாகரிகம் பெற்ற தமிழர் சேர, சோழ, பாண்டிய குடிப் பிரிவுகளுடன் விளங்கியது.

மிகப்பழைய பண்டைய குடியினர் என்பதால் பாண்டியர் என்றும்; ஆறுகண்டு சோறு கண்டவர் சோழர் என்றும்; கடற்கரை சேர்ந்தவர் சேரர் என்றும் அழைக்கப்பட்டதாக கூறுவர். 

உலகில் முதன்முதல் மனிதன் தோன்றிய தெற்கே இருந்த குமரிக்கண்டம் நிலம் கடலில் படிப்படியே மூழ்கத் தொடங்கியது. இதன் தென்பகுதி பொதியமலை. தென்னவன் என்னும் பாண்டியன் இதனை ஆண்ட காலமும் உண்டு. இவனது பொதியில் நாட்டில் நீர் கொட்டிய அருவி குற்றாலம். பொதியமலையில் இருந்துகொண்டு அகத்தியர் தமிழ் வளர்த்ததாகக் கதைகள் கூறுகின்றன.  



காவிரிப்பூம் பட்டணத்தில் இருந்த சோழ வேந்தன் காந்தன், அகத்தியர் அருளால் காவிரி தன் நாட்டில் வரப்பெற்றவன் என ஒரு குறிப்பு மணிமேகலையிற் காணப்படுகிறது. சேர மன்னர் மலைநாட்டில் மலைகளிலும், காடுகளில் வேட்டம் புரிவதையே தொடக்கத்தில் மேற்கொண்டிருந்தனர். சேர நாடு மேலைக் கடலைச் சார்ந்து கிடத்தலின்’ சேரர்கள் கடலிற் கலஞ் செலுத்துதலிலும் சிறந்திருந்தனர்.

குறிஞ்சி மற்றும் முல்லை நிலங்களில் நாடு என்று அமைப்பு தோன்றி அதன் தலைவன் நாடன் என்று அழைக்கப்பெறுகிறான். குமரிமலையும், குமரி ஆறும் பஃறுளி ஆறும் இருந்த குமரிக்கண்டப் பகுதி குமரிநாடாகச் சுருங்கிய போதும் 700 காதம் பரப்புடையதாய் இருந்தது. அதில் ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின் பாலைநாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ் குணகரை நாடு, ஏழ் குறும்பனை நாடு என 49 நாடுகள் இருந்தன.

நாடர், நாட்டார் , நாட்டாழ்வான் என்ற பட்டங்களுடைய கள்ளர் மரபினர் இன்றும் பெரும் செல்வந்தர்களாகவும், அதிகாரமுடையவரகவும் வாழ்ந்து வருகின்றனர்.






இன்று கள்ளர் நாட்டிலுள்ள தொகுதிகளுக்கு நாடுகள் என்று பெயர்கள் உண்டு. நாடுகளைச் சீமைகள் என்றும் வழங்கியுள்ளனர். சிற்றூர்களுக்கு மங்கலம், சமுத்திரம், குடி, ஊர், புரம், குளம், குறிச்சி, பட்டி எனவும் பெயர்கள் வழங்கின.

பாலை :- 
(போர்குடிகள் வாழும் பகுதி )  


பாலை திணையில் 

"முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ்படப்பை 
புள்ளி வெருகுதன் குட்டிக் கிரைபார்க்கும் 
கள்ளர் வழங்குஞ் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி "

வழிச்செல்வோரை எதிர்பார்த்திருக்கும் கள்ளர்கள் என்று தலைவியின் கருத்தாக பாடல் அமைத்துள்ளது. இதில் கள்ளர்கள் கொள்ளை தொழில் செய்பவராக அதாவது வழிச்செல்வோரை எதிர்பார்த்திருக்கும் கள்வர் திரிகின்ற பாலை  நிலம் என்கிறார்.

ஆனால் வீரச்செயல்புரியும் ஆர்வத்துடன் பிறந்துவிட்டவர் உள்ளத் தில், பாலையின் அழைப்பு, ஒர் எதிரொலியை ஏற்படுத் திற்று. கொடுவிலங்குகளை வேட்டை யாடுதலில், ஈர்ப்புற்று அவற்றைப் பின்தொடர்ந்து செல்லும் பொழுது, பாலைநிலத்தில் தற்காலிக வாழிடத்தை வகுத்துக்கொள்ள வற்புறுத்தப்படுவான்.  ஒருசிறு காலமோ, அல்லது வாழ்நாள் முழுவதுமோ பாலையில் வாழ்ந்த மனிதர், மறம்வாய்ந்த, வீரம் வாய்ந்த , வலிமை வாய்ந்த கள்வர் என்போராவார். (கள்வர், கள் வலிமை அதிலிருந்து விலங்குகளிலெல்லாம் வலிமை வாய்ந்த யானையைக் குறிக்கும் களிறு என்ற சொல்லும், வலிமைதரும் குடிவகைகளாகிய மதுவைக்குறிக்கும் கள் என்ற சொல்லும், போர் நிகழ் இடத்தைக் குறிக்கும் களம் என்ற சொல்லும் பிறக்கும்).

போர்க்களத்தை சங்கநூல்கள் பறந்தலை என்று குறிப்பிடுகின்றன். பாலை ஊர்ப்பெயர் - பறந்தலை ஆகும். பாலைநிலம் முற்காலத்திற் போர்க்களத்திற்குப் பயன் படுத்தப்பட்டது. அதனால், போர்க்களத்தைக் குறிக்கும் பறந்தலை யென்னும் பெயர் பாலைநிலத்தூரின் பெயராகவுமிருந்தது. பாலைநிலத்தில் கொள்ளை யையும் போரையும் குலத்தொழிலாகக் கொண்டிருந்ததனால், மறஞ்சிறந்து மறவர் எனப்பட்டனர் "கள்ளர்கள்" .



அகநானூற்றில் இடம் பெறும் சங்க இலக்கியப் போர்களங்கள் ஆமூர்ப் பறந்தலை, கழுமலப் பறந்தலை, குறுக்கைப் பறந்தலை, கூடற் பறந்தலை, தலையாலங்கானப் பறந்தலை, பருவூர்ப் பறந்தலை, பாழிப் பறந்தலை, பெருந்துறைப் பறந்தலை, மணவாயிலுறத்தூர்ப் பறந்தலை, முசிறிப் பறந்தலை, வல்லப் பறந்தலை, வாகைப் பறந்தலை, வெண்ணிப் பறந்தலை என்று அழைக்கப்படுகின்றன. 


கொற்றவை 
போர் வெற்றிக்காக வணங்குதல்)


குறிஞ்சிநிலமக்கள் வேட்டைத் தொழிலிலிருந்து புராதனப் பயிர்த்தொழிலுக்குத் திரும்பிய காலத்தில் புன்புலப் பயிர் செய்யத் தொடங்கினார்கள். அக்காலத்தில் பெண்கள் ஆதிக்கம் பெறத் தொடங்கினார்கள். தாய்வழி சமூகம் தோன்றுகிறது. ஆகவே காட்டில் பெண்கள் பயிர்செய்யத் தொடங்கிய காலத்தில் கொற்றவை தோன்றினாள். காடுகளை காப்பதால் “காடுகிழாள்’ என்ற மறு பெயரும் அவளுக்கு உண்டு. கொற்றவை தமிழகத்தின் பண்டைய தாய்த்தெய்வம். 

"வெட்சி தானே குறிஞ்சியது புறனே
உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே" 

வெட்சி என்னும் ஆநிரை கவர்தல் குறிஞ்சி நிலத்துக்குரியதாகும். ஆநிரை கவர்ந்துவரக் கொற்றவையை வழிபட்டனர். கொற்றவை என்ற பெண் தெய்வமே வெட்சிப் போர் மரபினர் தெய்வமாகும். ஆநிரை கவர்தல் என்பது திருடுதல் ஆகாது. போரின் ஒரு வகை மட்டுமே.


கொற்றவை, பாலை நில தெய்வமாக காட்டப்பட்டாலும் முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்த நிலமாதலால், குறிஞ்சி, முல்லை, பாலை என்ற மூன்று நிலத்திற்கும் பொது தெய்வமாகும். கொற்றவை, குறிஞ்சி முதல்வன் சிவன் மனைவியாகவும், முருகன் தாயாகவும் ("கொற்றவை சிறுவ"), முல்லை முதல்வன் திருமால் சகோதரியாகவும் காட்டப்படுகிறாள்.

பிறகு முல்லையிலேயே எளிய ஆட்சியமைப்பு முதலில் தோன்றிவிட்டது. அதாவது ஒரு சிறு கூட்டத்தை வழிநடத்தும் தலைவர்கள் தோன்றிவிட்டனர். முல்லை நிலம் என்பது ஆளுமைக் குடிகளின் தோற்றத்தைக் கொண்டது. தனிநபர் சொத்துரிமை, கற்புமணம் ஆகியவை தந்தை வழிச் சமுதாயம் உருவாக வழிவகுத்தது. பெரிய குடும்பத்தின் தலைவன் நாளடைவில் "சிற்றரசன்" ஆனான். பிறகு கொற்றவை போருக்கு உரிய தெய்வமானால்.


போருக்குச் செல்வோர் கொற்றவையின் பெருமைகளைக் கூறி அத் தெய்வத்தை வழிபட்டுச் செல்லுதலே கொற்றவை நிலை எனப்படுகின்றது. 

உடைமைச் சமுதாயமாக மாறிய சேர, சோழ, பாண்டிய வேந்தர் சமுதாயத்தில் வழிபடு தெய்வமாக வணங்கப்பட்டு வந்துள்ளது. கொற்றவை ஒரு வெற்றித் தெய்வமாகப் போர்த்தெய்வமாக வழிபடப்பட்ட வழக்கம் இருந்ததைப் பதிற்றுப்பத்து காட்டுகிறது. 






கள்ளர்களுக்கு கொற்றவர் என்றும் பெயர். கள்ளர் பட்டங்களாக  கொற்றங்கொண்டான், கொற்றப்பிரியன் என்றும் உள்ளது. கள்ளர்களின் முதன்மை தெய்வமாக கொற்றவை இருக்கிறாள்.


சோழ பாண்டியர் மன்னர்களின் குலதெய்வம் " கொற்றவை " யே

கொற்றவை, பிடாரி (பீடா=துயரம், ஹாரி=நீக்குபவள்) என்று பண்டை நாளில் வணங்கப்பட்டாள். பிடாரிக்கோயில்கள் பற்றி ஏராளமான கல்வெட்டு குறிப்புகள் பல்லவ, சோழர், பாண்டியர், சாசனங்களில் கிடைக்கின்றன. உடலுக்கும், ஆன்மாவுக்கும் ஏற்படும் துயரங்களை நீக்கும் அதிதேவதையாக சாமுண்டா தேவி போற்றப்பட்டாள். அக்னி கிரீடத்துடன் கூடிய இவ்வம்மையே மாரியம்மன் உள்பட பல்வேறு கிராம தேவதையாக உள்ளாள்.

பொன்னமராவதியில் ஊரின் ஒதுக்குப்புறமாய் ஒரு பழங்காலத்துக் கொற்றவை கோயிலும் உள்ளது. கையில் திரிசூலத்தோடு காட்சியளிக்கும் இந்த தேவதையின் திருப்பெயர் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் என்பதாகும். இது அம்பலகாரர்கள் என்னும் கள்ளர் சமூகப் பிரிவினரால் பேணப்பட்டு வருகிற திருக்கோயிலாக விளங்குகின்றது. இந்த ஸ்ரீ அழகு நாச்சியாம்மன் மயில்ராயன் கோட்டை நாட்டு குண்டேந்தல்பட்டி கள்ளர் வம்சத்தின் பாண்டியன் கூட்டத்து பங்காளிகள் அனைவருக்கும் குலதெய்வம் ஆடி மாதம் விரதம் இருந்து கிடா வெட்டி சாமி கும்பிடுவது கால காலமாய் நடந்து வருகிறது. (அம்பலக்காரராக இருப்பவர் மறவர் ஆவார்)
.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், கள்ளர் பசுபதி கோயிலில் சாமுண்டா தேவிக்கு, சோழர் காலத்தில் மிகப்பெரிய தனித்த ஆலயம் இருந்திருக்கிறது.

வெறியாட்டில் களவுத்தெய்வமாக இடம்பெற்ற முருகன் பின்னர் அரசு உருவாக்க காலத்தில் சூரனைக் கொன்ற வீரநிலைத் தெய்வமாக, ஆறுமுகங்களை உடையவனாக, வடபுலக் கந்தனின் கூறுகளைத் தாங்கியவனாகின்றனர். போர்த்தெய்வமான கொற்றவை வீரநிலைத் தெய்வமாய் உயர்ந்த முருகனுடன் தாயாய் இணைக்கப் பட்டதைப் போல் முருகனின் தந்தையாய்க் காட்டப்பட்ட சிவனுடன் மனைவியாய் இணைக்கப் பட்டுள்ளாள்.


செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் வரதராஜ பெருமாள் கோயிலின் வெளியே கேட்பாரற்றுக் கிடந்த ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் மேல் பழமையான, இரண்டாம் நந்திவர்மன் கால தமிழ் கல்வெட்டும், பல்லவர் கால கொற்றவை புடைப்புச் சிற்பமும் இன்று மத்திய தொல்லியல் துறையின்(Archeological Survey of India) மாமல்லபுரம் துணை வட்ட (Mamallapuram Sub-Circle) அலுவலர்களால் மாவட்ட வருவாய்துறை உதவியுடன் கைப்பற்றப்பட்டு அருகில் உள்ள ASI கட்டுபாட்டில் உள்ள பொன்விளைந்தகளத்தூர் முன் குடுமீஸ்வரர் திருக்கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.


சேரமன்னர் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் - கொற்றவை வழிபாடு




அம்பல் :- (போரின் தொடக்கம் - உளவறிதல்)

"ஒரு விசயம் சிலருக்கு மட்டும் தெரிவது அம்பல், ஊரே அறிந்தால் அலர்". அம்பல் என்றால் காதோடு காதாகப் பேசும் பேச்சு. காதல் ஒழுக்கம் பற்றி ஊர்மகளிர் வாய்க்குள் பேசிக்கொள்வது அம்பல் எனவும், வெளிப்படையாகப் பேசுவது அலர் எனவும் அகத்திணை இலக்கியம் பேசும். பரவாத களவை அம்பல் என்றும் களவை, அலர்’ என்றும் கூறுவர் பேராசிரியர்

" அம்பலும் அலருங் களவு"

அம்பலும் அலரும் களவு என்பது-அவ்விரண்டும் நிகழ்ந்தன என்பது தாம் அறியினல்லது யாவரும் அறிவாரில்லை; இன்மையின், அவை களவு என்றவாறு; களவு என்பது, செய்தாரே அறிந்து மற்றொருவர் அறியாததாகலான் என்பது.

அம்பல் என்றால் ஒற்றாடல் என்று பொருள். அதாவது உளவறிதல். ஒற்றுவேலை செய்து மன்னருக்கு தகவல் அனுப்புவது. இது போர் மறவர்களின் பணிகளில் ஒன்று. இதனை செய்ததால் கள்ளர்களுக்கு அம்பலகாரர் என்று பெயர். கள்ளர்கள் என்பதற்கு "மறைத்தல்" என்றும் பெயர். ஆக்கல்,காத்தல், அருளல்,மறைத்தல், அழித்தல் என்ற ஐந்தொழில்களைப் புரிபவன் இறைவன். உயிர்களைப் பக்குவப்படுத்துவதற்காகக் கள்ளனைப்போல மறைந்து நின்று தியானம் - மந்திரம் - சைவ வேடம் இவற்றால் உயிர்களை நல்வழிப்படச் செய்வது. அதனால் தான் இறைவனை, கள்வன் என்று அழைப்பது சைவமரபு. 

வெட்சி போர் மற்றும்  :- 
(போரின் ஆரம்பநிலை ) 

ஆரம்ப காலங்களில் போர் நிகழ்கையில் ஒருவர் மற்றொருவரின் ஆ நிரைகளைக் கவருவதே இயல்பு, இதுவே பிற்காலப் பேரரசுகளின் போர் முறையிலும் தொற்றிக்கொண்டுவிட்டது. நாட்டின் பொருளாதாரம் பெரும்பான்மை இவற்றைச் சார்ந்தே இருந்தது, ஆ நிரைகளை கவருவது அந்நாட்டை பொருளாதார வகையில் தாக்குவதாகும். ஆக்களை எதிரிகள் கவர்வது அல்லது பற்றிச்செல்வது "ஆபத்து" - அடுத்து முழுப்போர் வெடிக்கும். 

புறத்திணைகளுள் வெட்சிக்கு அடுத்து வைக்கப்படுவது, வெட்சிக்கு எதிரான அல்லது மாறான, கரந்தைத் திணையாகும். பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆ நிரைகளை மீட்டுவருவதே இத்திணையாகும்.

இப்படிக் கவர்ந்து செல்வதையும், மீட்டு வருவதையும்  " கள்ளர்" செய்தனர். 


ஆ நிரைகளை கவர்ந்து வருவம் கள்ளர்கள்

ஆ நிரைகளை மீட்டு வருவம் கள்ளர்கள்


அஞ்சி மழவர் கோமான். மழவர் ஆநிரைக்கவர்தலை அகநானூற்றில் பாடல்கள் குறிப்பிடுகின்றன. கள்ளர்களின் மழவராயர் என்ற பட்டம் உள்ளவர்கள் இன்றும் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். 






 மழவர் தெய்வம் கொற்றவை

கள்ளர்த்தடி :- (போரில் கள்ளர் எறியும் வளைதடியாயுதம்)



1817-இல் திரு.டி.டர்ன்புல்“கள்ளர்கள் பொதுவாக ஈட்டி எறிவதிலும், வளரி எனப்படும வளை தடியினை எறிவதிலும் திறமை மிக்க அஞ்சா செஞ்சர்கள். இந்தப் போர்க் கருவி இச் சாதியாரிடையே பெருவழக்கினதான ஒன்றாகும். சுமார் 30 அங்குலம் உள்ள வளைவுடையதான ஒரு கருவியாகும் இது.




ஏழுகிளை கள்ளர் நாட்டார்கள் தங்களது திருமண நிச்சயத்தின் போது இருவீட்டார்களும் வளரியை மாற்றிக் கொள்கிறார்கள்


கள்ளர் சமூகத்தவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியதைக் கண்ட ஒரு ஆங்கிலேயர் அதற்கு கள்ளர் ஆயுதம் (collery weapon) எனப்பெயரிட்டான் கும்பினி ஆவணங்களிலும் அவ்வாறே இடம் பெற்றது.

சொடுக்கவும் (click here) 👉 வளரி : திகிரி / கள்ளர் தடி / வளரி

நடுகல் : - (போரில் உயிர்நீத்த வீரனுக்கு )

கல் நடுதல் என்பதை இது குறிக்கும். போரில் உயிர்நீத்த வீரனுக்கு, அவனுடைய பெயரையும் வீரப்புகழையும் கல்லில் பொறித்து அவன் நினைவாகப் பலரும் வழிபடுமாறு கல் நடுவதை நடுகல் என்பர். இவ்வழக்கம் பற்றிச் சங்க இலக்கியத்துள் தொல் காப்பியர் நடுகல் எடுத்தலின் நிலைகளை வெட்சித் திணையில் குறிப்பிட்டுள்ளார். நடுகல்லைச் சுற்றிக் கோயில் எடுத்துச் சிறப்பித்தமையை ‘வாளுக்குப் பலிஊட்டி மணி ஒலிக்க, வீரர் பலரும் கோயிலினுள் வீரக்கல்லை இருக்கச் செய்தார்’ என்கிறது.


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் கண்டறியப்பட்ட பிராமி எழுத்துகளில் அமைந்த நடுகற்கள் காலம் கி.மு. 2-3ஆம் நூற்றாண்டு என அறிஞர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடுகல்லில் "கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்" என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. கூடலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள், மாட்டு மந்தைகளை (ஆனிரையை)க் கவர்ந்து செல்ல முயன்ற போது தீயன் அந்தவன் என்பவன் ஆனிரையை மீட்டு அந்தப் பூசலில் இறந்து போன செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்வர் குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர் . கல்வியறிவும் படிப்பறிவும் உள்ள மக்கள் புரிந்து கொள்வதற்குத் தக்க வகையில் அதனைக் கல்லில் பொறித்து வைப்பது என்பது, சமூக அமைப்பும் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களும் பெருமளவு வளர்ச்சி பெற்ற நிலையில் இருந்தால்தான் சாத்தியமாகும்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பாலவாடி எனும் ஊரில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு உள்ளது. (நடு. பக்.227)

ஸ்ரீ புருச பருமற்கு யா / ண்டு பத்தாவது பெரும்(பா) / ண முத்தரைசர் கங்கரை(சா)ள்ப் பாகற்றூர்த் தொறு அருங்கள்வர் கொண்ட ஞான் / று மீட்டுப் பட்டார் நொ / ச்சி சாத்தன் க(ல்)

கட்டாணை எனும் ஸ்ரீ புருசனுடைய பத்தாவது ஆட்சி ஆண்டில் முத்தரையரான பெரும் பாண கங்க அரைசர் ஆளும் பாகற்றூர் ஆநிரைகளை அருங்கள்வர் எனும் கூட்டத்தார் கவர்ந்து கொண்ட போது அவற்றை மீட்டு வீரசாவடைந்த நொச்சி சாத்தன் நினைவில் நட்ட நடுகல் இது. நொசசி சாத்தன் எவ் ஊரன், எந் நாடன், எவருடைய படைஆள் போன்ற செய்திகள் கல்வெட்டில் இல்லை

அருங்கள்வர் என்பதற்கு அருமையான திருடன் என்று பொருள் கொள்ள முடியாது. இது இனத்தை மட்டுமே குறிக்கும்.


கிபி899 ஆம் ஆண்டு பல்லவர் காலத்தில் வாணியம்பாடி வட்டத்தில் உள்ள சமணக் குப்பம் என்கிற ஊரில் “தங்களுடைய ஊரில் உள்ள ஆநிரைகளை விண்டபாடிக் கள்ளர்கள் கவர்ந்து செல்கின்றனர், அவர்களுடன் போராடி உயிர் நீத்த சாகூழன் வேளாளன் என்பருக்கு நடுகல் எடுத்துள்ளனர்”


இதில் ஆ நிரைகளை கவர்ந்து செல்பவர்கள் “விண்டபாடிக் கள்ளர்கள்” என்றே குறிக்கப்பட்டுள்ளது, விண்டபாடி என்பது ஒரு நாட்டையோ,கோட்டத்தையோ குறிக்கும் சொல் அதனை தொடர்ந்து வரும் கள்ளர் என்பது இனத்தை குறிக்கும் சொல்லாக வருகிறது.

கள்ளப்பற்று / கள்ளப்படை : - (படைவீடு / படைநிலை)

பேரரசுகள் தோன்றிய பின் எல்லைகளையும் குடிமக்களையும் பாதுகாப்பதற்காக மன்னர்கள் பலவகை போர்ப் படைகளைக் கொண்டிருந்தனர். 

போர்க்காலத்துப் பெரும்படை அமைதிக் காலத்து வேண்டா வாதலின், போர் முடிந்த பின் மூலப்படையொழிந்த பிறவெல்லாம் கலைக்கப்படுவது மரபு. அன்று மூலப்படைப் பகுதிகள் தலைநகரிலும், பிற கோநகர்களிலும் எல்லைப் புறங்களிலும், புதிதாய் வெல்லப்பட்ட பகைவர் நாட்டிலும் நிறுத்தப் பெறும். அங்ஙனம் நிறுத்தப் பெற்றவை நிலைப்படை எனப் பெயர்பெறும். கலைக்கப்பட்ட படையினர் தம் மரபுத் தொழிலைச் செய்து வருவர். 

நிலைப்படை நிறுத்தப்பட்ட நகர் படைவீடு என்றும், அது நிறுத்தப்பட்ட நிலப்பகுதி படைப்பற்று என்றும், அது குடியிருக்கும் வீட்டுத் தொகுதி படைநிலை என்றும் பெயர்பெறும். நிலைப் படையினர் மனைவி மக்களுடன் கூடிவாழ்வர். 

தமிழ் அகராதி  


கள்ளர் வாழ்கின்ற பகுதிகள், இப்பொழுது நாடுகள் என்று வழங்கப்படுகின்றன. சோழர்காலத்தில் நாடுகள், கூற்றம் என்று குறிப்பிட்டிருந்தாலும், கள்ளர் நிலைப்படைகள் தங்கிய பகுதிகள் கள்ளப்பற்று என்றும், நாயக்க , மராட்டிய காலத்தில் கள்ளபத்து என்றும் வழங்கப்படுகிறது.

கல்வெட்டில்
1225  இல் சுந்தரபாண்டியன் தேவர், புதுக்கோட்டை குளத்தூர் பகுதியில் கள்ளர் படைப்பற்றில் விற்படை வீரர்கள். குளத்தூர் பகுதி விசங்கி நாடு, உஞ்சனை நாடு கள்ளர்கள் வாழும் பகுதியாகும்.

கள்ளப்பற்றில் எல்லா வகை போர் வீரர்களும் இருந்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக வில் ஏந்திய வீரர்கள் பற்றிய கல்வெட்டாக இது  உள்ளது.



       சொடுக்கவும் (click here) 👉   சோழர்கால மன்னார்குடி கள்ளப்பற்று


மதுரை வீரன் அம்மானை" எனும் ஒலைச்சுவடிகளில்


அறந்தாங்கி தொண்டைமான்கள்

மராட்டிய "மோடி" ஆவணங்களில் பல இடங்களில்  "கள்ளபத்து " என்று கள்ளர்பற்று குறிக்கப்பட்டுள்ளது.

The Proceeding of the Indian History congress seventh session by Mr.Tara Chand (1944)


“stroming of the Kallar barrier” மணப்பாறை 
(நூல்: Saints,goddesses and kings)




ஏறுதழுவுதல் :- போரில்லாத காலங்களில் விளையாட்டு

முல்லை நில மகளிர் தம்மால் விரும்பி வளர்க்கப்பெற்ற வலிய எருதுகளைப் பிடித்து அடக்கும் அஞ்சா நெஞ்சமும் ஆற்றலுமுடைய காளையரையே மணக்க விரும்பினர்.

கள்ளர்களின் திருமணம் பற்றித் திரு எம்.எஸ்.நடேசசாஸ்திரி குறிப்பிட்டுள்ள (இந்து விழாக்கள், விரதங்கள், சடங்குகள், 1903, Hindu Feasts, Fasts and Ceremonies, 1903)

மாட்டுப் பொங்கல் நாளன்று மாலை நேரம் நெருங்கும்போது கற்றாழை நார்க் கயிற்றிலும், துணியிலும் காசுகளை முடிந்து அவற்றைக் காளைகள் பசுக்கள் ஆகியவற்றின் கொம்பில் கட்டித் தொங்க விட்டபின் அவற்றைத் தப்பட்டை மற்றும் இன்னிசை முழக்கத் தோடு தெருவில் துரத்தி விடுவர். மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களைச் சார்ந்த ஊர்களில் - சிறப்பாகக் கள்ளர்கள் வாழும் ஊர்களில் - கன்னியர் எத்தகைய தீங்குக்கும் உள்ளாகாதவாறு காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்ட துணியினை அவிழ்த்துக் கொண்டு வந்து தங்களிடம் தரும் வீரமிக்க இளைஞர்களேயே தங்களுக்குரிய கணவராக வரிப்பர். ஒரு காளையினைத் துரத்தி அடக்கும் செயலின் போது காயம் அடைவதைக் கள்ளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பெரிய இழிவாகக் கருவர்.“


கிறிது சகாப்தத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த புலவர் ஒருவரின் பாடலை எடுத்துக் காட்டித் திரு.கனகசபைபிள்ளை (ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் 1904) ஆயர்கள் இடையே அந்நாளில் நிலவிய இந்தப் பழக்கத்தைப் பின்வருமாறு விவரித்துள்ளார்:- “பெரிய நிலப்பரப்பு கூர்முட்களிட்டும், கம்பங்கள் நட்டும் வளைக்கப்படும். அவ் வளைவினுள் கொம்புகள் சீவிக் கூராக்கப்பட்ட வெறி கொண்ட காளைகளைத் துரத்தி வீடுவர். முரசு முழக்கம் ஏறு தழுவுதல் தொடங்க இருப்பதை அறிவித்தவுடன் அந்த இளைஞர்கள் வலைவினுள் குதித்து முரசு முழக்கத்தால் மிரண்டு அவர்கள் மேல் பாய்வதற்காக முனைபோடு சீறிய இளைஞனும் தான் தழுவி அடக்கத் தேர்ந்தெடுத்துள்ள காளையினை நெருங்குவான். வெற்றி பெற்றவர்களும் அவர்களை மணக்க உள்ள கன்னியரும் அருகே உள்ள சோலைக்குச் சென்று மண ஏற்பாடுகள் நிகழும் வரை கூடியாடி மகிழ்வர்.

(இந்தியத் தொல்லியல், II, 1847 Ind, Ant. III 1874 : 72:3-B). “சல்லிக் கட்டு விளையாட்டில் தீரமிக்க சாதியார்கள் - சிறப்பாகக் கள்ளர்கள் - மிகுதியான ஆர்வம் காட்டுகின்றனர். பல ஊர்களில் தனியே இதற்காகவென்றே சாதிக் காளைகளை வளர்க்கின்றனர். கள்ளர்கள் வாழும் பகுதியான திருமங்கலத்திலேயே மிகச் சிறந்ததான சல்லிக்கட்டைக் காணலாம். இதற்கு அடுத்தபடியாக மேலூரிலும் மதுரை மாவட்டங்களிலும் நடைபெறும் சல்லிக்கட்டைக் கூறலாம்“ என மதுரை மாவட்ட விவரக் குறிப்பில் பதியப்பட்டுள்ளது

காளைகளைக் கட்டி வீழ்த்துவதில் கள்ளர்கள் மிகுந்த ஆர்வம் உடையவர்கள் எனத் திரு.ஹெமிங்வே கூறுகின்றார். இந்த விளையாட்டு, தொழுமாடு எனப்படும். இந்த விளையாட்டுக்கான சிறந்த காளைகள் மதுரை மாவட்டத்தில் உள்ள புலிகுளம் ஊரைச் சேர்ந்தனவாகும். மற்றொரு வகை விளையாட்டு பாய்ச்சல் மாடு எனப்படும். இதில் காளைகளை நீண்ட கயிற்றால் கட்டிப் பின் அவற்றைக் கீழே வீழ்த்தப் பார்ப்பர். இந்த விளையாட்டின் நோக்கம் காளையைக் கீழே வீழ்த்தி அதனை மீண்டும் எழ முடியாதபடி கட்டிப் பிடிப்பதாகும்.

பிற நாட்டவர் குறிப்புகள் :- கள்ளர் போர் திறன்

கள்ளர் நாடுகளில் (தொண்டமான்,நத்தம்,மதுரை,மேலூர்) 30 முதல் 40000 கள்ளர்கள் ஆயுதங்களுடன் ( சிவகங்கை கள்ளர்களை சேர்க்காமல்) பல கள்ளர் தலைவர்களின் கீழ் இருந்துள்ளார்கள் என்று குறிக்கிறார்கள்.
ENGLISH INTEREST IN INDIA 1767 by WILLIAM (Member of parliament) and late commander of southern army on the coast of coromandel




சமூகவியலாளரும்,எழுத்தாளருமான பத்மஶ்ரீ இராதாகம்மால் முகர்ஜி அவர்கள் தன்னுடைய புத்தகமான Democracies Of Eastல் விளக்கியுள்ளார். அதில் காவல்குடி சமூகங்களாக கிபி1923ல் இந்தியாவில் இருந்த சமூகங்களை குறித்துள்ளார்






1891  இந்திய இராணுவ இனம்



The First War Of Independence

தென்னிந்திய புரட்சியில் தன்னரசு கள்ளர் நாட்டுக் கள்ளர் பெருமக்கள் தமிழ் நாட்டின் புரட்சி அமைப்பு கூட்டணிக்கு மையமாக செயல்பட்டார்கள்

கள்ளர் நாடுகள் (சுதந்திர பழங்குடிகள்)

1) மதுரை கள்ளர் நாடு 
2) திண்டுக்கல் கள்ளர் நாடு 
3) சிவகங்கை கள்ளர் நாடு 
4) புதுக்கோட்டை அம்பு நட்டு கள்ளர்கள் ( புதுக்கோட்டை கள்ளர் குல மன்னன் தொண்டைமான் மன்னருக்கு கட்டுப்படாத கள்ளர்கள்)




கள்ளர் குல மாமன்னன் ககரிகாலன் காலத்தில் எயினர், நாகர், ஒளியர், பொதுவர், இருங்கோவேள், அருவாளரும் , பின்னர் பிற்கால சோழர்களின் காலத்திற்குப் பிறகு அதியமான், மலையமான், சம்புவரையர், முத்தரையர், வல்லத்தரசுகள் கள்ளர் முதுகுடியில் கலந்துவிட்டார்கள். பிற்கால சோழர்கள் ஒரு குடையின் கீழ் தங்களது ஆட்சியைக் கொண்டு வந்தனர். இதனால் தான் கள்ளர்கள் இடத்திற்கு இடம் பழக்கவழக்கங்களில் பெரிதும் வேறுபாடு காணப்படுகிறது (கள்ளர் ஆண்கள் காது வளர்க்கும் பழக்கம் மட்டும், எல்லா கள்ளர் பிரிவிலும் உள்ளது ) .


ஆய்வு : 


சியாம் சுந்தர் சம்பட்டியார், 
சிவம் சேர்வை, 
பரத் ராமகிருஷ்ணன் கூழாக்கியார்

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்